Published on : 09 Jun 2020 16:25 pm

பேசும் படங்கள்... (09.06.2020)

Published on : 09 Jun 2020 16:25 pm

1 / 33
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார திருத்தச் சட்ட மசோதாவை ரத்து செய்யும் வகையில்... தமிழக அரசு உடனே உரிய பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், இலவச மின்சார உரிமையைத் தொடர்ந்து காப்பாற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... இன்று (9.6.2020) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த விவசாயிகள். படம்: வி.எம்.மணிநாதன்
2 / 33
ஆந்திர மாநிலம் - சித்தூர் மாவட்டத்தில் உள்ள (தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகில் ) தலகோனா மலைப் பகுதியில்... கோடை வெப்பம் காரணமாக கடந்த 2 நாட்களாக காட்டுத் தீ பரவி... எரிமலை போன்று காட்சியளிக்கிறது. படங்கள்: ம.பிரபு
3 / 33
4 / 33
சென்னையில் - கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் - இடம்பெற்றுள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கரோனா கட்டுப்படுத்தல் சிறப்பு அதிகாரி ஜெ.ராதா கிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள்... இன்று (9.6.2020) திரு.வி.க மண்டலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கபசுரக் குடிநீர், சத்து மாத்திரைகள், இலவச முகக்கவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டுப் பிிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். படங்கள்: ம.பிரபு
5 / 33
6 / 33
7 / 33
8 / 33
வேலூர் மாவட்டத்தில், கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, இன்று (9.6.2020) வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் தீயணைப்பு வாகனம் மூலம்... கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. படங்கள்: வி.எம்.மணிநாதன்
9 / 33
10 / 33
11 / 33
தமிழகத்தில் - அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கரோனா காலம் முடியும் வரை மாதம் ரூ. 7,500 வழங்கிடக் கோரி ... மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து... மதுரை - செல்லூர் பகுதியில் மதுரை - நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தலைமையில்... இன்று (9.6.2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
12 / 33
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் ... மதுரை - காளவாசல் பகுதியில் நிறுவப்பட்ட 'தமிழ் தென்றல் திரு.வி.க சிலை, அப்பகுதியில் பாலம் கட்டுமான பணியின்போது அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. தற்போது பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததால்... மீண்டும் அச்சிலையை நிறுவ வேண்டும் என... வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (9.6.2020) மனு கொடுத்தார். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
13 / 33
திருநெல்வேலி அருகே - கங்கைகொண்டான் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி பயிருக்கிடையே முளைத்துள்ள களைகளை அகற்றும் பணியில் இன்று (9.6.2020) பெண்கள் ஈடுபட்டனர். வரும் கார்த்திகை மாதத்தில் நெற்பயிர் செய்வதற்கு வசதியாக... நிலத்தையும் மண்வளத்தையும் பாதுகாப்பதற்கு இந்தப் பருத்தி பயிரை தற்போது பயிரிட்டுள்ளதாகவும், மேலும்... பருத்தி பயிரால் தங்களுக்கு சிறிது வருமானமும் கிடைப்பதாகவும் அப்பெண்கள் தெரிவித்தனர். தகவல் மற்றும் படங்கள்: மு. லெட்சுமி அருண்
14 / 33
சேலத்தில் ரூ. 320 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வந்த இரண்டடுக்கு மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இப்பாலத்தை வரும் 11-ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. திறப்பு விழா காண... தயார் நிலையில் உள்ள இந்தப் பாலம் தமிழகத்திலேயே 7.8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட முதல் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. படம் : எஸ்.குரு பிரசாத்
15 / 33
கோவை -சிஎஸ்ஐ பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு முடிந்து வெளியே வரும் பெற்றோர்களுடன் மாணவர்கள். படம் :ஜெ மனோகரன்
16 / 33
6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்திய கோவை -சிஎஸ்ஐ பள்ளிக்கு இன்று (9.6.2020) பள்ளிக்கல்வித் துறையினர் சீல் வைத்தனர். கோவை ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. படம் :ஜெ மனோகரன்
17 / 33
தமிழகத்தில் - நாளுக்குநாள் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில்... இன்று (9.6.2020) கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்டிருந்த பொதுமக்கள். படம் :ஜெ மனோகரன்
18 / 33
கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை - எளியக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.7.500 நிதியுதவி வழங்க - வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஜீவா இல்லம் முன்பு... ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர். படம் :ஜெ மனோகரன்
19 / 33
கோயில்களைத் திறந்து - தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும், நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள பூசாரிகளுக்கும்... நலவாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாத பூசாரிகளுக்கும் இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் நலத்திட்டங்கள் வழங்க வேண்டும் என்பன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி....கோவை ஆட்சியரிடம் மனு அளிக்கவந்த கோவை மாவட்ட பூசாரிகள் கூட்டமைப்பினர். படம்: ஜெ .மனோகரன்
20 / 33
அனைத்து வாகன கடன்களுக்கான 6 மாதத் தவணை தொகைக்கான வட்டிக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்... மற்றும் 2021-ம் ஆண்டு வரை வாகனக் காப்பீட்டுக் கட்டணம் வசூலை நிறுத்தி வைக்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (9.6.2020) கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே கோவை மாவட்ட சாலை போக்குவரத்துத் தொழிலாளர்கள்... பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம் :ஜெ மனோகரன்
21 / 33
22 / 33
சேலத்தில் - கத்திரி வெயில் நிறைவடைந்தாலும் மதிய நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை... இதனால் உடல் சூட்டைப் போக்க உதவும் இயற்கையின் கொடையான இளநீர், நுங்கு போன்றவற்றை மக்கள் அதிகளவில் வாங்கி உண்கின்றனர். இதற்காக பொள்ளாச்சியில் இருந்து சேலம் அஸ்தம்பட்டி பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட இளநீர். படம்: எஸ்.குரு பிரசாத்
23 / 33
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கரோனா தொற்று அதிகளவில்... பரவிவருகிறது. இந்நிலையில் இன்று (9.6.2020) பல்லாவரம் பகுதியில் சாலையில் வாகனங்களில் செல்வோரை சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்தனர் . தில் 4 பேருக்கு வெப்பநிலை அதிகமாக இருந்ததால் மேலும் - கரோனா பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். படங்கள்:எம்.முத்துகணேஷ்
24 / 33
25 / 33
26 / 33
27 / 33
28 / 33
கரோனா பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு மத்திய அரசு ரூ.7,500-ம், மாநில அரசு ரூ.5,000-ம் நிவாரண நிதியாக வழங்கக் கோரி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் க.பீம்ராவ் தலைமையில் - இன்று (9.6.2020) பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: எம் முத்து கணேஷ்
29 / 33
30 / 33
சுழன்றும் ஏர் பின்னது உலகம்: ’’ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்... ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்... மண்ணிலே தங்கம் உண்டு மணியும் உண்டு வைரம் உண்டு... கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு’’ - என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, எழில் நிறைந்த இன்றைய (9.6.2020) காலைப் பொழுதில் தங்களின் விளைநிலைத்தில் ஏர் உழுவதற்கு... வேலூரை அடுத்த துத்திக்காடு கிராமத்தில் நாகநதி ஆற்றின் கரையில்... தோளில் கலப்பையை சுமந்து எருதுகளை ஓட்டி செல்லும் விவசாயி. படம்: வி.எம்.மணிநாதன்.
31 / 33
கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரை நல்லடக்கம் செய்தபோது... உடலை குழிக்குள் வீசிய... மூன்று பேரை புதுவை அரசு பணியிடைநீக்கம் செய்துள்ளது. இதை கண்டித்தும்... பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 பாரையும் மீண்டும் பணியில் அமர்த்தக் கோரியும்... இன்று (9.6.2020) சுகாதார ஊழியர்கள் புதுவை அரசு பொது மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எம்.சாம்ராஜ்
32 / 33
ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு.. தமிழகத்தில் - தங்குவதற்கும், உணவுக்கும் வழியில்லாமல் தவிக்கும் புலம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள்... தங்களின் சொந்த மாநிலமான ஒடிசா, பிஹாருக்கு அனுப்பி வைக்கக் கோரி... வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே அமர்ந்து உள்ளனர். படம்: வி.எம்.மணிநாதன்
33 / 33

Recently Added

More From This Category

x