Published on : 08 Jun 2020 16:32 pm

பேசும் படங்கள்... (08.06.2020)

Published on : 08 Jun 2020 16:32 pm

1 / 52
தமிழகத்தில் வரும் 15-ம் தேதி முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இதற்காக பள்ளி மாணவ - மாணவியருக்கு தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் - இன்று (8.6.2020) சேலம் - கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு நகலை பெற்ற மாணவியர். படம் : எஸ்.குரு பிரசாத்
2 / 52
3 / 52
திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ - மாணவியருக்கு இன்று (8.6.2020) தேர்வுக்கூட நுழைவு சீட்டும், முகக்கவசங்களும் வழங்கப்பட்டன. படம்: ஜி.ஞானவேல்முருகன்
4 / 52
திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ - மாணவியருக்கு இன்று (8.6.2020) பள்ளி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட ஹால்டிக்கெட் மற்றும் முகக்கவசத்தைக் காட்டும் மாணவி. படம்: ஜி.ஞானவேல்முருகன்
5 / 52
தமிழகத்தில் வரும் 15-ம் தேதி முதல் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவு சீட்டு அந்தந்தப் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. இதையடுத்து... இன்று(8.6.2020) சென்னை - அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வுக்கூட நுழைவு சீட்டை பெற்றுக்கொண்ட மாணவியர். படம்: ம.பிரபு
6 / 52
தமிழகத்தில் - பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்கு இன்று முதல் (8.6.2020) அழைப்பு விடுக்கப்பட்டு... 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பணிகளை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் - சென்னை, அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகை தந்த ஆசிரியர்கள் மூலம் மாணவியருக்கு தேர்வுக்கூட நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. படம்: ம.பிரபு
7 / 52
தமிழகத்தில் வரும் 15-ம் தேதிமுதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதையொட்டி... சென்னை, அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வுக்கூட நுழைவு சீட்டு வாங்க வந்த மாணவியருக்கு காய்ச்சல் மற்றும் - சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. படம்: ம.பிரபு
8 / 52
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக - மூடப்பட்ட கோயம்பேடு வணிக வளாகத்தை, சுத்தப்படுத்தும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்நிலையில் - பூ கடைகளை சுத்தப்படுத்தும் பணிகள் நிறைவுப் பெற்று - இன்று (8.6.2020) முதல் காய்கறி மற்றும் - உணவு தானியகிடங்கு வளாகத்தை சுத்தம்படுத்தும் பணியில் ஊழியர்கள்ஈடுபட்டு வருகின்றனர். படங்கள்: ம.பிரப்
9 / 52
10 / 52
11 / 52
தமிழகத்தில் உள்ள உணவகங்களில் - தனிமனித இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிட இன்று (8.6.2020) முதல் அனுமதி அளி க்கப்பட்டுள்ளதால்... சென்னை - தியாகராய நகரில் உள்ள சரவணபவன் உணவகத்தில்... கரோனா தடுப்பு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்றும்... உணவு தரத்தையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். படங்கள்: ம.பிரபு
12 / 52
13 / 52
சென்னை நகரில் - இப்போதும் சில தளர்வுகளுடன் - ஊரடங்கு அமலில் இருந்தாலும் இன்று (8.6.2020) காலையில் - வழக்கம் போல் சாலைகளில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வாகனங்கள் சென்றன. படங்கள்: ம.பிரபு
14 / 52
15 / 52
16 / 52
ஊரடங்கு காலத்தில் செலுத்த வேண்டிய தவணைத் தொகைக்கு கூடுதல் வட்டி வசூலிக்கும் சிறு, குறு நிறுவனங்களிடம் இருந்து... தள்ளுபடி பெற்றுத் தரக் கோரி - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (8.6.2020) மனு கொடுக்க வந்த மகளிர் சுய உதவிக்குழுப் பெண்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
17 / 52
திங்கள் கிழமைதோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நாள் என்பதால்... திருச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (8.6.2020) பல்வேறு கோரிக்கைகளுடன் ஏராளமான பெண்கள் திரண்டனர். அப்பெண்களிடம் சமூக இடை வெளியைக் கடைபிடிக்க வலியுறுத்தி போலீஸ்காரர் ஒருவர் அறிவுரை வழங்கினார். படம்: ஜி.ஞானவேல்முருகன்
18 / 52
தமிழகத்தில் வரும் 15-ம் தேதி முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு - இன்னும் சில நாட்களே இருப்பதால்... பள்ளிகளில் தேர்வு மையங்களைத் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் - இன்று (8.6.2020) சென்னை - திருவல்லிக்கேணி, லேடி வெலிங்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்... தேர்வு மையத்தை கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்கின்றனர். படங்கள்: க.ஸ்ரீபரத்
19 / 52
20 / 52
கரோனா தொற்று கட்டுக்குள் உள்ள மாவட்டங்களில் உள்ள உணவங்களில்... 50 சதவீத வாடிக்கையாளர்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்து, உணவு உண்ண அனுமதிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் - சேலம் நகரில் இன்று (8.6.2020) முதல் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண அனுமதிக்கப்பட்டனர். தலைமை தபால் நிலையம் அருகே உள்ள உணவகம் ஒன்றில் டேபிள்களுக்கு நடுவே கண்ணாடித் தடுப்பு அமைக்கப்பட்டு... உரிய பாதுகாப்புடன் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. படம் : எஸ்.குரு பிரசாத்.
21 / 52
ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிடும் முறை இன்று (8.6.2020) முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் - திருச்சியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்த வாடிக்கையாளருக்கு வெப்ப பரிசோதனை செய்யும் ஊழியர்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன் படம் 23 ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன்அமர்ந்து சாப்பிடும் முறை இன்று (8.6.2020) முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து... திருச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் இடை வெளிவிட்டு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து சாப்பிடும் வாடிக்கையாளர்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
22 / 52
ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன்அமர்ந்து சாப்பிடும் முறை இன்று (8.6.2020) முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து... திருச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் இடை வெளிவிட்டு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து சாப்பிடும் வாடிக்கையாளர்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
23 / 52
சென்னை - எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் முன்பு பரப்புவதற்காக... காத்திருக்கும் சிமென்ட் பிளாக்குகள். கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக அமலில் இருக்கும் ஊரடங்கால்... பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படம்: க.ஸ்ரீபரத்
24 / 52
ஓ.பி.சி. பிரிவினருக்கு மருத்துவக் கல்வி மற்றும் தனியார் துறைகளில் இட ஓதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி... விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இன்று (8.6.2020) திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
25 / 52
சேலம் - சின்னக்கடை வீதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிக் கடைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி வியாபாரிகள் -தாங்கள் 50 வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தில் வியாபாரம் நடத்தி வருவதாகவும், அப்பகுதியில் வியாபாரம் நடத்த இடம் ஒதுக்கி தரக் கோரியும்... இன்று (8.6.2020) சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். படம் : எஸ்.குரு பிரசாத்
26 / 52
கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமலில் இருந்த ஊரடங்கால்... திருவிழாக்கள், சுபகாரியங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் பாடுவது போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் - தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மதுரையைச் சுற்றி வாழும் கிராமிய நாட்டுப்புறக் கலைஞர்கள்... தங்களுக்கு நிவாரண நிதியுதவி வழங்கக் கோரி... இன்று (8.6.2020) மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க திரண்டு வந்தனர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
27 / 52
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு உட்பட்ட 51 ஊராட்சிகளில்... இருந்துவரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனிமனித இடைவெளியுடன் வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், வில்வநாதன் உள்ளிட்ட திமுகவினர் இன்று (ஜூன் 8) உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து - 144 தடை உத்தரவை மீறி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், வில்வநாதன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வெளியே சமூக இடைவெளி இல்லாமல் குவிந்த 100-க்கும் மேற்பட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர். படம்: வி.எம்.மணிநாதன்
28 / 52
ஜூன் 8-ம் தேதி முதல் கோயில்களைத் திறக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து... தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் - கோயில்கள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் - வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரக் கதவு பூட்டப்பட்டு... வழக்கமான தின பூஜைகள் நடைபெறுவதற்காக சிறிய கதவு மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது . படம்: வி.எம்.மணிநாதன்
29 / 52
கரோனா தடை உத்தரவுக்குப் பின்னர்... புதுச்சேரியில் மணக்குள விநாயகர் ஆலயத்தில் இன்று (8.6.2020) கைகளை சுத்தம் செய்துகொள்ள கிருமி நாசினி வழங்கப்பட்டு... வெப்பநிலை பரிசோதனையும் செய்யப்பட்டு... பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். படம்: எம்.சாம்ராஜ்
30 / 52
கரோனா தடை உத்தரவுக்குப் பின்னர்... புதுச்சேரியில் மணக்குள விநாயகர் ஆலயத்தில் இன்று (8.6.2020) சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள். படம்: எம்.சாம்ராஜ்
31 / 52
கரோனா தடை உத்தரவுக்குப் பின்னர்... புதுச்சேரியில் மணக்குள விநாயகர் ஆலயத்தில் இன்று (8.6.2020)முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் - தனி மனித இடைவெளியைக் கடைபிடித்து சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் நின்றனர். படம்: எம்.சாம்ராஜ்
32 / 52
வரும் ஜூன் 15-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கவிருக்கும் நிலையில்... புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவு சீட்டை மாணவிகள் பெற்றுக்கொண்டனர். படம்: எம்.சாம்ராஜ்
33 / 52
வரும் ஜூன் 15-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கவிருக்கும் நிலையில்... இன்று (8.6.2020) புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படும் தேர்வுக்கூட நுழைவு சீட்டை வாங்க வரும் மாணவிகளுக்கு... பள்ளி முகப்பிலேயே கிருமிநாசினி திரவத்தால் கைகளை சுத்தம் செய்துகொள்ளும் வசதி செய்யப்பட்டிருந்தது. படம்: எம்.சாம்ராஜ்
34 / 52
கரோனா தடுப்புக்காக அமலில் இருந்த ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு கிறிஸ்தவ தேவாலயங்கள் திறக்கப்பட்ட நிலையில் இன்று (8.6.2020) புதுச்சேரி துாய இருதய ஆண்டவர் ஆலயத்துக்குள் பக்தர்கள்... சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் இருக்கைகளில் கயிறு கட்டப்பட்டுள்ளது. படம்: எம்.சாம்ராஜ்
35 / 52
கரோனா தடுப்புக்காக அமலில் இருந்த ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில்.. இன்று (8.6.2020) புதுச்சேரி - நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளிவாசலில்... சமூக இடைவெளியை கடைபிடி த்து தொழுகையை மேற்கொண்ட முஸ்லிம்கள். படம்: எம்.சாம்ராஜ்
36 / 52
கோவை 100 அடி சாலையில் உள்ள மக்கள் சேவை மையத்தில் இன்று (8.6.2020) வங்கிகளில் அஞ்சலகக் கணக்கு மற்றும் விபத்து காப்பீடு பெறுவதற்கான படிவங்களை வழங்குகிறார் பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன். படம் :ஜெ .மனோகரன்
37 / 52
கேரளாவில் அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்ட யானைக்கு கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள அடுக்ககத்தில் குடியிருப்போர் இன்று (8.6.2020) மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். படம் :ஜெ .மனோகரன்
38 / 52
39 / 52
விவசாயிகளுக்கு வழங்கி வரும் - இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்தி. ..இன்று (8.6.2020) கோவை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். படம் :ஜெ .மனோகரன்
40 / 52
ரயில்வே துறையைத் தனியார்மயமாக்குதல் மற்றும் சம்பளம் பிடித்தம் போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (8.6.2020) கோவை ரயில்வே பணிமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.ஆர்.எம்.யு ஊழியர்கள். படம் :ஜெ .மனோகரன்
41 / 52
தமிழக முதல்வரால் இன்று (8.6.2020) காணொலிக் காட்சி மூலம் திறக்கப்பட்ட... வேலூர் மாவட்டம் - சோழவரத்தை அடுத்த நாகநதி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலம். படம்: விஎம்மணிநாதன்
42 / 52
மாடம்பாக்கம் - சிட்லப்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக மாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் அமைக்கும் பணி நடந்தது. இந்நிலையில் மழை பெய்ததால் சில கிணறுகள் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது தாமதமானது. வரும் மழை காலத்துக்குள்ளாவது... கிணறு அமைக்கும் பணியை முடித்தால் நல்லது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படங்கள்: எம்.முத்துகணேஷ்
43 / 52
44 / 52
தமிழக முதல்வர் இன்று (8.6.2020) கானொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த - மதுரை காளவாசலில் உள்ளபுதிய மேம்பாலம். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
45 / 52
புத்தம் புது காலை: தினந்தோறும் அதிகாலைவேளையில்... தோன்றும் ஆதவனின் எழில் நிறைந்த காட்சி. இடம்: வேலூரை அடுத்த பென்னாத்தூர். படங்கள்: வி.எம்.மணிநாதன்
46 / 52
47 / 52
48 / 52
வேலூர் தோட்டப்பளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில்... வரும் 15-ம் தேதி நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதப் போகும் மாணவிகளுக்கு - இன்று (8.6.2020) தேர்வுக்கூட நுழைவு சீட்டும்... உடன் முகக்கவசமும் வழங்கிய தலைமை ஆசிரியை சரஸ்வதி. படம்: வி.எம்.மணிநாதன்
49 / 52
50 / 52
51 / 52
கரோனா ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி - நகர ஒலி , ஒளி உரிமையாளர்கள் சங்கத் தொழிலாளர்கள்... தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டி... இன்று (8.6.2020) திருநெல்வேலி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். படம்: மு. லெட்சுமி அருண்
52 / 52
வேலூர் மாவட்டம், பொன்னை, புதூர், டி.ஆர்.குப்பம் மலைகளை உடைத்து கனிம வளங்கள் சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி... சமூக இடைவெளியுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையினர். படம்: வி.எம்.மணிநாதன்.

Recently Added

More From This Category

x