Published on : 07 Jun 2020 16:44 pm

பேசும் படங்கள்... (07.06.2020)

Published on : 07 Jun 2020 16:44 pm

1 / 35
வேலூர் - சத்துவாச்சாரி பகுதியில் செவிலியர் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து... இன்று (7.6.2020) அவர் வசிக்கும் தெருவில் சுகாதாரத் துறையினர் வீடு வீடாக சென்று வேறு யாருக்காவது காய்ச்சல், சளி இருமல் உள்ளதா என ஆய்வு செய்தனர். படம்: வி.எம்.மணிநாதன்
2 / 35
வேலூர் - சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு... கரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பணிபுரிந்த ஆரம்ப சுகாதார நிலையம் இன்று (7.6.2020) மூடப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்
3 / 35
ரேஷன் கடையில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்தும், ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரியும்... மதுரை பொன்னகரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையின் முன்பு - இன்று (7.6.2020) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்.... கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
4 / 35
மதுரை - எல்லிஸ் நகர் 70 அடி சாலையில்.... திடீர் என பள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து..மாநகராட்சியினர் வந்து பள்ளத்தை சீர் செய்யு வரை காத்திருக்காமல்... பொதுமக்கள் - தற்காலிகமாக கற்கள் மூலம் பள்ளத்தை மூடி வைத்துள்ளனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 35
6 / 35
மதுரை - பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுரா மேல்நிலைப் பள்ளியில் இன்று (7.6.2020) செருப்பு தைக்கும் தொழிலாளர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிய வருவாய்த் துறை மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
7 / 35
வேலூர் - சைதாப்பேட்டைப் பகுதியில்... தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான பி.டி.சி சாலையில் காவலர் ஒருவர் - குடிபோதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாகக் கூறி... இன்று (7.6.2020) அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். படம் : வி.எம்.மணிநாதன்
8 / 35
ஞாயிற்றுக் கிழமை என்பதால் இன்று (7.6.2020) சென்னை காசிமேடு மீன் மார்கெட்டில் மீன் வாங்கும் இடத்தில் அதிகம் பேர் கூடுவதால்... கரோனா தொற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளதால், மீன் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன படங்கள்: க.ஸ்ரீபரத்
9 / 35
10 / 35
11 / 35
ஞாயிற்றுக்கிழமை என்பதால்... இன்று (7.6.2020) சென்னை காசிமேடு மீன் மார்கெட்டில் மீன் வாங்க திரண்டிருந்த மக்கள் கூட்டம்>. படம்: க.ஸ்ரீபரத்
12 / 35
நாவல் பழம் சீசன் அமோகமாக தொடங்கி விட்டதை அடுத்து - மயிலாப்பூர் பகுதியில் விற்பனைக்காக குவிந்திருக்கும் நாவல் பழத்துடன் வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் ஒரு வியாபாரி. படம்: க.ஸ்ரீபரத்
13 / 35
கரோனா தொற்று பரவல் கரணமாக சென்னை கொத்தவால் சாவடி மார்கெட்டில் இருக்கும் காய்கறிகள் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. படங்கள்: க.ஸ்ரீபரத்
14 / 35
15 / 35
16 / 35
17 / 35
18 / 35
வேலூரை - அடுத்த அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ... பிணவறை அருகே கரோனா தொற்று சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு பயன்படுத்திய உடைகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை கொட்டி எரித்து வருகின்றனர். இதனால், ஏற்படும் நச்சுப் புகையால், மருத்துவமனை அருகில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், மருத்துவக் கழிவுகளை எரிப்பதை தொடர்புடைய நிர்வாகத்தினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் + படங்கள்: வி.எம்.மணிநாதன்
19 / 35
20 / 35
ஜூன் - ஜூலை வந்தால்: கோடைக் காலத்தில்... அதாவது ஜூன் - ஜூலை மாதங்களில் பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை பூக்கள்... மரத்தில் பூத்து குலுங்கினாலும் அழகு. உதிர்ந்து தரையில் கிடந்தாலும் அழகுதான். இந்நிலையில் இன்று (7.6.2020) வேலூர் - மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரத்தில் மலர்ந்து... பாதையில் உதிர்ந்து அழகாக காட்சியளித்த சரக்கொன்றைப் பூக்கள்! படம்: வி.எம்.மணிநாதன்
21 / 35
கரோனா தடுப்பு ஊரடங்கில் - கட்டுமானப் பணிகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து... சேலத்தில் பாலப் பணி, சாலைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகினறன. இந்நிலையில் - சேலம் ஆற்றோர காய்கறி சாலையில் இருந்து மேட்டு மக்கான் தெருவுக்கு செல்வதற்காக திருமணிமுத்தாற்றின் குறுக்கே நடைபாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படம் எஸ். குருபிரசாத்
22 / 35
23 / 35
தமிழகத்தில் சில தளர்வுகளின் அடிப்படையில் கோயில்கள் விரைவில் திறக்கப்படும் நிலையில்... கோயிலைச் சுற்றி பூஜைப் பொருட்கள் விற்பனை செய்து வந்த சில்லரை வியாபாரிகள் முகக்கவசம் விற்பனை செய்து வருகின்றனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
24 / 35
கரோனா தடுப்புக்காக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்... தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதையின் (இரும்புலியூர் பகுதியில்) 3-வது தடத்தில் தண்டவாள சீரமைப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படங்கள்: எம்.முத்துகணேஷ்
25 / 35
26 / 35
தமிழகத்தில் - ஒரு சில மாவட்டங்களில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் - புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. காலை முதல் வெயில் வாட்டி வதைத்தாலும்... மாலையில் குளிர்ந்த காற்றுடன் லேசான சாரல் மழை பெய்தது. படம்: எம்.சாம்ராஜ்
27 / 35
கரோனா தடை உத்தரவு மற்றும் மீன்பிடித் தடை காலத்துக்குப் பிறகு.. புதுச்சேரி - தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய 40 கிலோ எடை கொண்ட மயில் மீன். படம்: எம்.சாம்ராஜ்
28 / 35
கரோனா தடை உத்தரவு மற்றும் மீன்பிடித் தடை காலத்துக்குப் பிறகு.. புதுச்சேரி - தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் மீன் பிடிக்கச் சென்றபோது தங்கள் வலையில் சிக்கிய மீன்களை கூடைகளில் நிரப்பி ஏலத்துக்கு எடுத்துச் செல்லும் மீனவர்கள். படம்: எம்.சாம்ராஜ்
29 / 35
திருநெல்வேலி - மாநகர காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (7.6.2020) நடைபெற்றது . சாலைகளில் முகக்கவசம் இல்லாமல் பயணிக்கும் பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி... ஆலோசனைகளை வழங்கினார் திருநெல்வேலி - மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கு ஆணையர் சரவணன். படங்கள்: மு லெட்சுமி அருண்
30 / 35
31 / 35
கோவை முத்தண்ணன் குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் தலைமையில் இன்று (7.6.2020) சாலைமறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள். படம் : ஜெ .மனோகரன்
32 / 35
இன்று (7.6.2020) ஞாயிற்றுக்கிழமையானபோதும் - கரோனா அச்சத்தில் யாரும் மீன் வாங்க வராததால் கோவை உக்கடம் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. படம் ; ஜெ .மனோகரன்
33 / 35
34 / 35
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ்... திருநெல்வேலி டவுன் காய்கறி மார்க்கெட்டில் சீரமைப்புகளை மேற்கொள்ள... அங்கு செயல்பட்ட கடைகளை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. அதற்கு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (7.6.2020) அங்குள்ள சில வியாபாரிகள்... ஒரு கடையை பூட்டிக்கொண்டு உள்ளிருந்தவாறு போராட்டம் செய்து வருகின்றனர். வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தாங்கள் போராட்டம் நடத்துவதாக அவர்கள் குறிப்பிட்டனர். படங்கள்: மு லெட்சுமி அருண்
35 / 35

Recently Added

More From This Category

x