1 / 55
மதுரை - தெற்குவாசலில் உள்ள மஞ்சனக்காரர் தெருவில் அமைந்துள்ள முடித்திருத்தம் ஒன்றில்... மாநில அரசின் அறிவுறுத்தலின்படி - ஆதார் அட்டையுடன் வந்து... அந்த எண்ணை காண்பிப்பவருக்கு மட்டுமே இன்று (6.6.2020) முடித்திருத்தப்பட்டது.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 55
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர் ஒருவரின் சகோதரிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து... கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இன்று (6.6.2020) பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
படங்கள்: வி.எம்.மணிநாதன்
3 / 55
4 / 55
5 / 55
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளைத் தவிர... சரக்கு வாகனங்கள், லாரிகள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உள்ளே வருவதற்கும், நிறுத்துவதற்கும் அனுமதி இல்லை என மாநகராட்சி சார்பில் அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பேருந்துகளைத் தவிர்த்து உள்ளே வரும்... மற்ற வாகனங்களுக்கு இன்று (6.6.2020) மாநகராட்சி ஊழியர்களால் அபராதம் விதிக்கப்பட்டது.
படங்கள்: வி.எம்.மணிநாதன்
6 / 55
7 / 55
சென்னையில் நாளுக்கு நாள் தொடர்ந்து கரோனா தொற்று அதிகளவில் பரவிக் கொண்டிருக்கும் நிலையில்... சமூக இடைவெளியை மறந்து பொருட்கள் வாங்குவதற்காக இன்று (6.6.2020) காலையில் என்.எஸ்.சி போஸ் சாலையில் திரண்டிருந்த மக்கள் கூட்டம்.
படங்கள்: க,ஸ்ரீபரத்
8 / 55
9 / 55
10 / 55
சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி... பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து இன்று (6.6.2020) மயிலாப்பூர் அன்னை மீனாம்பாள்புரம் பகுதியில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
படங்கள்: க.ஸ்ரீபரத்
11 / 55
12 / 55
வண்ணத்துப்பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும்:
சேலம் - குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில்... வண்ணத்துப்பூச்சி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சேலத்தில் மழை பெய்து வருவதால்... குளிர்ச்சியான வானிலை நிலை நிலவுகிறது. இதனால்... ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் வன உயிரியல் பூங்காவை சுற்றிலும் பறந்து பறந்து தன் நிறங்களைக் கொண்டு அலங்கரித்து வருகிறது. இதைப் பார்க்கும்போது...
’வண்ணத்துப்பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும்?’ - என்ற எஸ்.ராஜகுமாரனின் கவிதை நினைவுக்கு வரும்.
படங்கள்: எஸ்.குரு பிரசாத்
13 / 55
14 / 55
15 / 55
16 / 55
கோவை - முத்தண்ண குளம் அருகே உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் இன்று (6.6.2020) கோவை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளால் அகற்றப்பட்டன.
படம் : ஜெ .மனோகரன்
17 / 55
18 / 55
19 / 55
கோவை - முத்தண்ண குளம் அருகே உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் இன்று (6.6.2020) கோவை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளால் அகற்றப்பட்டபோது... தங்கள் வீட்டு பொருட்களை அப்புறப்படுத்தும் அப்பகுதிவாசிகள்.
படம் : ஜெ .மனோகரன்
20 / 55
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமலில் இருக்கும் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில்.. கோவை வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து வளாகக் கட்டுமானப் பணிகள் மீண்டும் துரிதமாக நடபெறத் தொடங்கியுள்ளன.
படம் : ஜெ .மனோகரன்
21 / 55
கோவை - உக்கடம் வீட்டுவசதி வாரிய வீட்டுச் சுவர்களில்... கோவை மாநகராட்சியினர் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வூட்டும் ஓவியங்களை வரைந்து வைத்துள்ளனர். அனைத்து வண்ண ஓவியங்களும் பார்ப்பவரின் கண்ணுக்கு அழகியல் விருந்தளிக்கின்றன.
படம் : ஜெ .மனோகரன்
22 / 55
23 / 55
24 / 55
கோவை - வாலாங்குளக்கரையில் ‘நாங்களும் சமூக இடைவெளியை கடைபிடிப்போம்ல’ என்று சொல்லாமல் நிற்கும் பறவைகள்.
படம் : ஜெ .மனோகரன்
25 / 55
மதுரை மாவட்ட ஆட்சியர் ஆலோசனைப்படி... மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு... மருத்துவப் பரிசோதனை மற்றும் இலவச கபசுரக் குடிநீர் ஆகியவற்றை செஞ்சிலுவை அமைப்பைச் சேர்ந்தோர் இன்று (6.6.2020) வழங்கினர்.
படம் ; எஸ். கிருஷ்ணமூர்த்தி
26 / 55
மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து.... இன்று (6.6.2020) முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் - புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டி... இடைவெளி விட்டு - வட்டம் வரையும் பணியில் மீன்வளத் துறையினர் ஈடுபட்டனர்.
படம்: எம்.சாம்ராஜ்
27 / 55
சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்தாலு ம்... விழுப்புரம் மாவட்டம் - கல்த்திராம்பட்டு பகுதியில் இன்று (6.6.2020) கொளுத்தும் மதிய வெயிலில்...
’இந்த வெயில் எங்கள் தொழிலுக்குத் துணையாக உள்ளது’ என செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
படம்: எம்.சாம்ராஜ்
28 / 55
29 / 55
படம் 27 கதிரவன் தனது வெயில் சாட்டையால் மனிதர்களை... சுழற்றிச் சுழற்றி அடித்தாலும்... விழுப்புரம் மாவட்டம் - கல்த்திராம்பட்டு பகுதியில் இன்று (6.6.2020 )கொளுத்தும் மதிய வெயிலில்...
காய்ந்த செங்கற்களை சூளையில் அடுக்கி வைக்கும் தொழிலாளர்கள்.
படம்: எம்.சாம்ராஜ்
30 / 55
வெயில் வாட்டி வதைக்காலும்... இயற்கையின் நன்கொடையாக மனிதகுலத்துக்குக் கிடைக்கும் எந்தப் பொருளுக்கும் மவுசு அதிகம்தான். புதுச்சேரி - ஊசுட்டேரி பகுதியில் சாலையோரம் நுங்கு விற்னை சூடு பிடித்து வருகிறது.
படம்: எம்.சாம்ராஜ்
31 / 55
வேலூர் மாவட்டம் - அமிர்தி வழியாக ஜமுனாமரத்தூர் மலைக் கிராமத்துக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்கக் கோரி மலைக்கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ]
படங்கள்: வி.எம்.மணிநாதன்
32 / 55
33 / 55
34 / 55
தூங்காமல் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்:
கரோனா தொற்றுப் பரவலை தடுக்க தமிழக அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட நிலையில்... பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில் - தூய்மைப் பணியாளர்கள்.. .
அரசு அலுவகங்கள், அரசு தேர்வு நடக்கும் பள்ளிகள் , சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் , ஒவ்வொரு தெருக்களின் மூலை முடுக்குகளிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி - வண்ணாரப்பேட்டை மற்றும்... பாளையங்கோட்டை செந்தில் நகர் பகுதிகளில் மாலைப்பொழுதில் தொட்ங்குகிற இவர்களின் பணி... இரவு முழுவதும் விடிய விடிய தொடர்கிறது.
தகவல் + படங்கள் : மு. லெட்சுமி அருண்
35 / 55
36 / 55
37 / 55
38 / 55
39 / 55
நேற்று முன் தினம் (5.6.2020) இரவு பவுர்ணமி மற்றும் பெனும்பிரல் சந்திர கிரகணம் 'ஸ்ட்ராஃபெரி சந்திர கிரகணம்' நிகழ்வு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்... இந்தியாவில் இதற்கான வானிலை தெரியாவிட்டாலும் நள்ளிரவு 2 மணிக்கு மேல் சந்திரன் பிரகாசமாகவும் அதனைச் சுற்றி வட்டவடிவில் வளையம் போன்றும் வானில் காட்சித் தோன்றியது.
படங்கள்: ம.பிரபு
40 / 55
41 / 55
கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க மத்திய அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்த நாள் முதல்... இன்று வரை 75 நாட்களுக்கு பின்பு... இன்றுதான் (6.6.2020) புதுச்சேரி - துணைநிலை ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்து காரில் இருந்தபடியே நகரப் பகுதிகளைப் பார்வையிட்ட புதுச்சேரி - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.
42 / 55
கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க மத்திய அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்த நாள் முதல்... இன்று வரை 75 நாட்களுக்கு பின்பு... இன்றுதான் (6.6.2020) காரில் இருந்தபடியே நகரப் பகுதிகளை புதுச்சேரி - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பார்வையிட்டார். அப்போது காவல்துறை அதிகாரிகளிடம் கரோனா பணி குறித்து கேட்டறிந்தார்.
43 / 55
மதுரை - அலங்காநல்லூர் செல்லும் சாலையில்... சிக்கந்தர் சாவடிப் பகுதியில் - புதிதாக மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து... இன்று (6.6.2020) அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
படங்கள்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
44 / 55
45 / 55
அந்தி வானம்.... செவ்வரளி கோலம்:
சென்னை நகரத்தில் இன்று (6.6.2020) பகல் முழுவதும் கதிரவன் தனது வெயில் பதாகையை விரித்து... சுடச் சுட தனது கோடை பரப்புரையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தான். இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப் பொழுதில்.... ஆகாயம் செஞ்சிவப்பாய் சிரித்து - வண்ண வித்தைக் காட்டியது.
படம்: ம.பிரபு
46 / 55
47 / 55
48 / 55
சென்னையில் - இன்று (6.6.2020) மாலையில்... வானம் கருஞ்சிவப்புடன்
தோன்றியதுடன்... மின்னல் கீற்றும் உருவாகி வண்ணக் கோலம் பூண்டது
படங்கள்: ம.பிரபு
49 / 55
50 / 55
வானில் ஒரு தீபாவளி:
ஒரே நாளில்… வெவ்வேறு பொழுதுகளில்…. வானில் தோன்றிய ஆனந்த அதிசயங்களை என்னவென்று சொல்வது!
நேற்று முன் தினம் (5.6.2020) இரவு நள்ளிரவு 2 மணிக்கு மேல் சந்திரன் பிரகாசமாகவும் அதைச் சுற்றிலும் வளையம் போன்றும் வானில் காட்சித் தோன்றியது.
இன்று (6.6.2020) சாயங்காலப்பொழுதிலோ.... ஆகாயம் செஞ்சிவப்பில் வண்ண வித்தைக் காட்டியது.
அதைத் தொடர்ந்து… வானம் கருஞ்சிவப்புடன் தோன்றியதுடன்... மின்னல் கீற்றும் உருவாகி வண்ணக் கோலம் பூண்டது. இவ்வேளையில் -
இயற்கையை… எண்ணி எண்ணி வியக்கிறேன்…’ என்று கவிப்பேரரசு வைரமுத்து வரிகள்தான் நினைவில் நீச்சலடிக்கிறது.
படங்கள்: ம.பிரபு
51 / 55
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடனான சண்டையின்போது... உயிரிழந்த ராணுவ வீரர் மதியழகனின் உடல் இன்று (6.06.2020) அவரது சொந்த கிராமமான சேலம் மாவட்டம் - எடப்பாடியை அடுத்த சித்தூர், வெத்தலைக்காரன் காடு கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.20 லட்சத்துக்கான காசோலையை ராணுவ வீரர் மதியழகனின் குடும்பத்தினரிடம் சேலம் ஆட்சியர் ராமன் வழங்கினார்.
படங்கள் : எஸ். குருபிரசாத்
52 / 55
53 / 55
54 / 55
55 / 55