Published on : 05 Jun 2020 18:02 pm

பேசும் படங்கள்... (05.06.2020)

Published on : 05 Jun 2020 18:02 pm

1 / 35
2 / 35
கடந்த மார்ச் 3-ம் தேதி வரையில் ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்திருந்தோர், தங்கள் டிக்கெட்டை இன்று முதல் (5.6.2020) ரத்து செய்துகொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் - எக்மோர் ரயில்வே நிலைய முன்பதிவு மையத்தில் தங்கள் டிக்கெட்டை ரத்து செய்வதற்காக முக்கவசத்துடன் வந்திருந்த பயணிகள். படங்கள்: க , ஸ்ரீபரத்
3 / 35
4 / 35
5 / 35
6 / 35
ஏக்க விழி வாசல்: வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரம் இப்போது... கரோனா தொற்றின் கொள்ளிடமாக திகழ்கிறது. ’ 500 பேர் 1,000 பேர் இன்று கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர்’ என்று தொடர்ந்து வரும் செய்தி.... மனதை வாட்டுகிறது. பொதுவாக - பண்டிகைக் காலத்தில்தான் வீட்டின் முன்பு வேப்பிலைத் தோரணம் தொங்க விடுவது வழக்கம். ஆனால், இன்றோ... வேப்பிலைத் தோரணம் வாடிக்கையாகிவிட்டது. ’எப்போ கரோனா போகுமோ...’ ஏக்கத்துடன் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஒரு வீட்டிலிருந்து - வேப்பிலைத் தோரணம் தொங்கும் வாசல் வழி பார்க்கும் ஒரு பெண்மணி. படம்: க.ஸ்ரீபரத்
7 / 35
மத்திய அரசின் புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரியும், வேளாண் மின் இணைப்பு வழங்கக் கோரியும்... தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் - சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். படம்: எஸ்.குரு பிரசாத்
8 / 35
ஐ.நா. சபையின் நல்லெண்ணத் தூதராக நியமனம் செய்யப்பட்ட... கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் மதுரையைச் சேர்ந்த மாணவி நேந்திராவுக்கு... தமிழக - கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
9 / 35
ஐ.நா.சபை நல்லெண்ணத் தூதுவர்: கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் மதுரையைச் சேர்ந்த மாணவி நேந்திரா... ஐ.நா. சபையின் நல்லெண்ணத் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
10 / 35
கல்லூரிகளில் சுழற்சி முறையை ரத்து செய்யும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி - இந்திய மாணவர் சங்கம் சார்பில்... மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (5.6.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: எஸ் கிருஷ்ணமூர்த்தி
11 / 35
சென்னை புறநகர் பகுதிகளின் முக்கியமான ஏரிகளில் ஒன்று... மாடம்பாக்கம் ஏரி. கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி நிலையில்கூட இந்த ஏரி வற்றவே இல்லை. இந்த ஆண்டு ஏரியின் நீர் இருப்பை உத்தேசித்து... அப்பகுதியின் ஏரிப்பாசன விவசாயிகள் 10 ஆண்டுகளுக்கு பின்பு... இப்போது - இரண்டாம் போகத்துக்கு நடவு நட்டுள்ளனர். இந்நிலையில் ஏரியின் மதகுகளும், கலங்களும் உடைந்து போய் நீர்கசிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து - அந்தப் பகுதி விவசாயிகள் கூறும்போது ‘’பொதுப்பணித் துறையினர் ... இந்த ஏரியில் மண் அள்ளுவதில் காட்டிய அக்கறையில் சிறிதளவைக்கூட இந்த ஏரியின் மதகுகளை சீர் செய்வதில் அக்கறை காட்டவில்லை. ஏரி மதகுகளில் இருந்து நீர் கசிந்து செல்வதை பார்த்தால் அடுத்த போக விவசாயத்துக்கு நீர் இல்லாமல் போய்விடுமோ என்று கலக்கமாக உள்ளது. பொதுப்பணித் துறையினர் மதகுகளையும், கலங்கல் பகுதிகளையும் உடனடியாக சரிசெய்தால் பயிர்களையும், விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்’’ என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். படங்கள்: எம்.முத்துகணேஷ்
12 / 35
13 / 35
இந்திய நாட்டின் நிலப்பரப்பை கையகப்படுத்த முனையும் - சீனாவின் நடவடிக்கையை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சி காந்தி மார்க்கெட் முன்பு சீன நாட்டு உற்பத்தி பொருட்களை சாலையில் போட்டு உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
14 / 35
கல்லூரிகளில் சுழற்சி முறையை ரத்து செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இந்திய மாணவர் சங்கத்தினர். படம்: எஸ்.குரு பிரசாத்
15 / 35
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி மாணவ - மாணவியருக்கு தேர்வு கூட நுழைவு சீட்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு வழங்குவதற்கான தேர்வு கூட நுழைவு சீட்டுகளை இணையத்தில் இருந்து - பதிவிறக்கம் செய்யும் ஆசிரியர்கள். படம்: எஸ்.குரு பிரசாத்
16 / 35
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்ததால் பொதுபோக்குவரத்தான - ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏற்கெனவே - ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் இன்று முதல் (5.6.2020) ரயில் கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது. இந்நிலையில் -தாம்பரம் ரயில்நிலையத்தில் 15 நாட்களுக்கு உரிய ரயில்களுக்குரிய கட்டணத்தை அடுத்தடுத்து திருப்பி கொடுக்கும் வகையில் - அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. படங்கள்:எம்.முத்துகணேஷ்
17 / 35
18 / 35
19 / 35
திமு.க பிரமுகர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைக் கண்டித்து... இன்று (5.6.2020) கோவையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் ; ஜெ .மனோகரன்
20 / 35
கோவையை அடுத்த வெள்ளலூர் குப்பை கிடங்கில்... பழைய குப்பைகளை பயோ மைனிங் முறையில்... கழிவாக்கும் திட்டதை இன்று (5.6.2020) அமைச்சர் எஸ்.பி வேலுமணி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். படம் : ஜெ .மனோகரன்
21 / 35
கோவை - சித்திரைச்சாவடியில் நொய்யல் ஆற்றை புனரமைக்கும் பணிகளை... ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார். உடன் கோவை ஆட்சியர் ராஜாமணி உள்ளிட்டோர். படம் : ஜெ .மனோகரன்
22 / 35
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15-ம் தேதி தொடங்க உள்ளதால், கோவை துணிவணிகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்... இன்று (5.6.2020) மாணவிகளுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. படம் : ஜெ .மனோகரன்
23 / 35
24 / 35
25 / 35
கோவை - உக்கடம் பேருந்து நிலையத்துக்குள் உள்ள ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தில் குடிநீர் வராததால்... ஏமாற்றத்துடன் திரும்பும் நடத்துநர். படம்: ஜெ.மனோகரன்
26 / 35
கோவை - உக்கடம் பெரியகுளம் குளக்கரையில்... ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ்... ’ஐ லவ் கோவை’ என்ற வாசகம் வைக்கப்பட்டுள்ளது. படம்: ஜெ.மனோகரன்
27 / 35
இயற்கையின் கூடு: இன்றைய அவசர யுகத்தில் - தூக்கணாங்குருவிகளையும்... அதன் கூடுகளையும் காண்பது அரிதாகிவிட்டது. இயற்கையின் மிக விசித்திரமான... ஆச்சர்யமான நன்கொடையாக விளங்கும் இப்பறவை கூட்டின் அழகே தனிதான். சேலம் கோரிமேடு பகுதியில் கூடு கட்டுவதற்காக காய்ந்த சருகுகளை எடுத்துச்செல்லும் தூக்கணாங்குருவி. படம் : எஸ்.குரு பிரசாத்
28 / 35
29 / 35
வேலூரில் - கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பதை தொடர்ந்து... மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மூட உத்தரவிட்டார். இதையொட்டி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையம் இன்று (ஜூன் 5) மூடப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்
30 / 35
பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில்... உலக சுற்று சூழல் (5.6.2020) தினத்தை முன்னிட்டு... உறுதிமொழி ஏற்புடன்.... மரக்கன்றுகளும் நடப்பட்டன. இதில் - மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் மகாலிங்கமூர்த்தி கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். படங்கள்: மு. லெட்சுமி அருண்
31 / 35
32 / 35
33 / 35
திருநெல்வேலி - பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில்... துப்புரவுப் பணியாளர்கள் 500 பேருக்கு - காங்கிரஸ் கட்சி சார்பாக அரசி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் - காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு... உதவி பொருட்களை வழங்கினார். படம்: மு.லெட்சுமி அருண்
34 / 35
தமிழகத்தில் கரோனா தடுப்புக்காக அமலில் இருந்த ஊரடங்கில் - சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் - விரைவில் ஆலயங்களையும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் - ஆலயங்களை திறந்தால்... அங்கே பக்தர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில்... திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நுழைவுவாயிலின் முன்பு வட்டம் போட்டுள்ளனர். படம்: ம.பிரபு
35 / 35

Recently Added

More From This Category

x