Published on : 04 Jun 2020 16:48 pm

பேசும் படங்கள்... (04.06.2020)

Published on : 04 Jun 2020 16:48 pm

1 / 38
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15-ம் தேதி தொடங்க உள்ளதையொட்டி, திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்... தேர்வு அறையில் உள்ள இருக்கைகளை... மஞ்சள், உப்பு கலந்த நீரில் சுத்தம் செய்த ஊழியர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
2 / 38
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15-ம் தேதி தொடங்க உள்ளதால், திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று விடுதி மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கிய தலைமை ஆசிரியர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
3 / 38
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் பெற்றுள்ள கடன்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படி, 3 மாத கால அவகாசம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
4 / 38
சமயபுரம் கண்ணணூர் பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலை வழங்க கோரி, திருச்சி ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று குடும்பத்துடன் வந்து காத்திருந்தனர்.
5 / 38
திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டை ... மீண்டும் காந்தி மார்க்கெட்டில் செயல்பட அனுமதிக் கோரி, திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த காய்கறி மொத்த வியாபாரிகள். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
6 / 38
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் பெற்றுள்ள கடன்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படி, 3 மாத கால அவகாசம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
7 / 38
தமிழ்நாடு தீயணைப்புத் துறைக்கு தமிழக முதல்வர் நேற்று முன் தினம் புதிதாக 15 இருசக்கர வாகனங்கள் வழங்கினார். அதன் மூலம் வியாசர்பாடி பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை ஒத்திகை பார்த்த தீயணைப்பு வீரர்கள். படம்” க.ஸ்ரீபரத்
8 / 38
9 / 38
வங்காளம், அஸ்ஸாம், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்... தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப... புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு திடலில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள நீண்ட வரிசையில் காத்து நின்றனர். படங்கள்.எம்.சாம்ராஜ்
10 / 38
வங்காளம், அஸ்ஸாம், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்... இன்று (4.6.2020) தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப... புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு திடலில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பிறகு.... அருகில் இருந்த விளையாட்டுத் திடலில் ஓய்வெடுத்தனர். படங்கள்.எம்.சாம்ராஜ்
11 / 38
திருநெல்வேலி அருகே - புதுக்கிராமம் பகுதியில் கோடைக் கால கத்திரி வெயில் வெப்பத்தில் கருகிய மண்ணைப் போல் காட்சிதரும் கரிசல் மண்... தனது வண்ணத்தை மாற்றுவதற்கு மழைநீரை எதிர்பார்த்த்துக் காத்திருக்கிறதோ?! படம்: மு.லெட்சுமி அருண்
12 / 38
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில்... ‘12 மணி நேர வேலை திட்டம்’ உள்ளிட்ட அரசின் பல் வேறு நடவடிக்கைகளைக் கண்டித்து... சென்னை கடற்கரை சாலையில் - எழிலகம் வளாகத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. படம்: க.ஸ்ரீபரத்
13 / 38
மேற்குத் தொடர்ச்சி மலையின்... திருக்குறுங்குடி மலைப் பகுதியில் இன்று (4.6.2020) - மழைப் பொழிவதற்கான முன்னோட்டமாக - மழை மேகங்கள் அணி அணியாக திரண்டு நிற்கும் காட்சி. படம்: மு.லெட்சுமி அருண்
14 / 38
வேலூரில் ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாடு தலை நீட்டும் நிலையில் - சிறிய குடம், வாட்டர் பாட்டிலில் குடிநீர் பிடித்து... சைக்கிளில் தள்ளி செல்லும் சிறுமி. படம்: வி.எம்.மணிநாதன்
15 / 38
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் தமிழகம் ழுழுவதும் மாணவர் - மாணவியர் படிக்கும் பள்ளியிலும்... ஆன்லைன் மூலமும் இன்று (4.5.2020) வழங்கப்பட்டது. சென்னை - கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஹால் டிக்கெட்டுடன்... கூடவே முகக்கவசமும் கிருமி நாசினியும் வழங்கப்பட்டன. படம் : ம.பிரபு
16 / 38
சேலம் - சின்னக்கடை வீதியில் உள்ள வ.உ.சி பூ மார்க்கெட்டில்... கட்டிடப் பணிகள் நடைபெறுவதால் - அங்கு இது வரையில் செயல்பட்டு வந்த பூக்கடைகள்... நேரு கலை அரங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் - இன்று (4.5.2020) பூக்கள் வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பூ வாங்கினர். படம் : எஸ்.குருபிரசாத்
17 / 38
சேலம் - பொன்னம்மாபேட்டையில் இயங்கும் - மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ள பெண்கள்... இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி தவணைகளை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கக் கோரி சேலம் - ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். படம்: எஸ்.குரு பிரசாத்
18 / 38
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக - தற்காலிக மார்க்கெட்டாக இயங்கி வந்த புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில்... மீண்டும் பேருந்துகள் இயங்க உள்ளதால்... தற்போது - நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. படம்: எம்.சாம்ராஜ்
19 / 38
20 / 38
21 / 38
வேலூர் - ரயில் நிலையம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ்... கோமாரி நோய் தடுப்பூசி முகாம்... இன்று (ஜூன் - 4) நடைபெற்றது. இம்முகாமை தொடங்கி வைத்து... கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்ட உதவி மருத்துவர் சுப்ரமணியன். படம்: வி.எம்.மணிநாதன்
22 / 38
அலைந்தது மேகம்... கலைத்தது காற்று: வேலூரில் - இன்று (4.6.2020) மாலைவேளையில்... வானில் திரண்ட கருமேகக் கூட்டம்... நிச்சயம் மழை பொழியும் என்று எதிர்பார்த்த மக்களை... ஏமாற்றி சாதாரண காற்றை மட்டும் சிதறிவிட்டு கலைந்து சென்றது. படம்: வி.எம்.மணிநாதன்
23 / 38
வரும் ஜூன் 15-ம் தேதிமுதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதையொட்டி.... தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவு சீட்டுடன் ( ஹால் டிக்கெட்) முகக்கவசங்களையும் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து - வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் தேர்வு எழுதவுள்ள மாணவ - மாணவியருக்கு தேர்வுக்கூட நுழைவு சீட்டுடன் முகக்கவசமும் வழங்கினார். அருகில், வேலூர் மாவட்ட - முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ். படம்: வி.எம்.மணிநாதன்
24 / 38
25 / 38
26 / 38
27 / 38
28 / 38
29 / 38
மழை வரும்மா... மகிழ்ச்சி தருமா: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (4.6.2020) பகல் முழுவதும் 100 டிகிரியைத் தாண்டி... வெயில் வெளுத்து வாங்கியது. எனினும் - அந்திப்பொழுதில்... கருமேகங்கள் கூடி மழையை எதிர்பார்க்க வைத்தது. வழக்கம்போல மழை பொய்த்தது. இந்நிலையில் - தாம்பரத்தை அடுத்த கரிசங்கால் அடையாறு ஆற்றங்கரையில் தண்ணீர் பிடிக்க செல்லும் பள்ளிச் சிறுவன்... பின்னணியில்.. திரண்டு நின்ற மேகக்கூட்டம். படங்கள் : எம்.முத்துகணேஷ்
30 / 38
31 / 38
32 / 38
33 / 38
எப்போது விழுமோ: கோவை - காந்தி நகர் ஹட்க்கோ காலனி அருகே 60 அடி சாலையில்... மின் கம்பம். ஒன்று உடைந்து எந்த நேரமும் எவர் தலையிலும் விழலாம் என்கிற நிலையில் இற்றுப்போய் உள்ளது. மின் வாரியம் உடனடியாக இந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க வில்லையெனில் - பெரும் பாதிப்பு ஏற்படலாம் என இப்பகுதி பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். படம் ஜெ .மனோகரன்
34 / 38
புதுப்பொலிவு பணி... தொடங்கியாச்சு: கோவை மாநகராட்சி சார்பில்... ’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் கோவை - வாலாங்குளத்தின் கரைப்பகுதி சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தும் பணிகள்... கரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக தடைப்பட்டிருந்தது. இப்போது சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு...மீண்டும் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெறத் தொடங்கியிருக்கின்றன. படம் ஜெ .மனோகரன்
35 / 38
36 / 38
37 / 38
கோவையில் - உடற்பயிற்சிக் கூடங்கள் மீண்டும் செயல்பட அனுமதிக்கக் கோரி... கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்க வந்த உடற்பயிற்சி மைய உரிமையாளர்கள். படம் :ஜெ .மனோகரன்
38 / 38
கோவை சொக்கம் புதூர் பகுதியில்... பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்காததால்... செல்வபுரம் குடிநீர் அலுவலகத்தை அப்பகுதி பொது மக்கள் முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர். படம் : ஜெ .மனோகரன்

Recently Added

More From This Category

x