1 / 52
பகலெல்லாம் தனது வெப்பக் கையெழுத்தால் மண்ணை சுட்டெரித்த ஆதவன்.... வேலூர் - புதிய பேருந்து நிலையம் அருகே - பாலாற்றுப் பகுதியில்... நேற்று (2.6.2020) இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப் பொழுதில் - வானில் திரண்ட கருமேகங்களுக்கு அரிதாரம் பூசியது போல் வர்ணஜாலம் காட்டினான்.
படங்கள்: வி.எம்.மணிநாதன்
2 / 52
3 / 52
4 / 52
5 / 52
6 / 52
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு... மதுரை காளவாசலில் சிறுமியர் மரியாதை செலுத்தினர்.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
7 / 52
தமிழ்நாடு - தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில்... 'கரோனாவை வெல்வோம் ' என்ற தலைப்பில் மதுரை மாவட்ட மாணவ - மாணவியருக்கான கரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி... மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில்... தலைமை தீயணைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கு - தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தென் மண்டல துணை இயக்குநர் சரவணகுமார் தலைமை வகித்தார்.
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி
8 / 52
9 / 52
10 / 52
11 / 52
ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை சீர்செய்யக் கோரி... மதுரை - காளவாசல் அருகே சம்மட்டிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று (3.6.2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
12 / 52
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர்... வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நிலையில்... பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை மாவட்ட நிர்வாகத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் அளிக்க மறுப்பதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து சி.எம்.சி மருத்துவமனைக்கு வரும் வாகனங்களைத் தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டிருந்தார். இதையொட்டி, வேலூர் பேலஸ் கஃபே வழியாக சி.எம்.சி மருத்துவமனைக்கு செல்லும் ஆற்காடு சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும்படி... காவல்துறையினர் தடுப்பு அமைத்து, வருவாய் மற்றும் மருத்துவக் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவல் + படம்: வி.எம்.மணிநாதன்
13 / 52
கடைவிரிப்போம் கொள்வாருண்டு:
ஆண்டுதோறும் ஜூன் மாதத் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படும்.
அதே சமயம் பள்ளி மாணவ -மாணவியருக்குத் தேவையான புத்தகப் பைகள் விற்பனையும் விறுவிறுப்பாக இருக்கும்.
தற்போது கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால்... பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்படாமலே உள்ளதால்... புத்தகப் பைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை முற்றிலும் முடங்கிவிட்டது. எனினும் - இந்நிலை மாறி விற்பனை விறுவிறுப்படையும் என்ற நம்பிக்கையுடன்... சேலம் - ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே புத்தகப் பைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
தகவல் + படங்கள்: எஸ்.குரு பிரசாத்
14 / 52
15 / 52
ஏற்காடு காபி தோட்டத்தில் பணிபுரிந்து வந்த வட மாநிலத் தொழிலாளர்கள்... அவர்களது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்துக்கு இன்று (3.6.2020) சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் சேலம் மரவனேரியில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டு... அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
படம் : எஸ்.குருபிரசாத்
16 / 52
புன்னகை நிழல் விரிக்கும் புளியமரங்கள்:
வேலூரை அடுத்த பென்னாத்தூரில் இருந்து அரியூர் வழியாக பயணிக்கும்... பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நிழல்முகம் காட்டும்விதமாக - சாலையின் இருபுறங்களையும் அலங்கரித்து... பச்சை பசேலென காட்சியளிக்கும் புளியமரங்கள்.
படம்: வி.எம்.மணிநாதன்
17 / 52
புதிய பாலத்தை திறங்கய்யா:
ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தாலும்... சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இன்று (3.6.2020) காலையில் பல்லாவரம் - புதிய பாலம் அருகே இடியாப்ப சிக்கலாய் அரை மணி நேரத்துக்கும் மேலாக... போக்குவரத்து ஸ்தம்பித்து காணப்பட்டது. இந்நிலையில் - போக்குவரத்து நெரிசல் குறைய புதிய பாலத்தை விரைந்து திறக்க வேண்டும்... என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
படம்: எம்.முத்து கணேஷ்
18 / 52
காத்திருந்த கண்கள்:
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும்... ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அச்சமயத்தில் பயணம் மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்தோருக்கு கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து இன்று (3.6.2020 )சேலம் - ரயில் நிலையத்தில் தங்களது முன்பதிவு தொகையைtஹ் திரும்பப் பெற காத்திருந்த முன்பதிவு செய்தோர்.
படம்: எஸ்.குரு பிரசாத்
19 / 52
தாம்பரம் சண்முகம் சாலை பஜார் பகுதியில் கடைகள் ஷிஃப்ட் முறையில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளையும் திறக்காமல் இரு வண்ணங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டி... மாற்றி மாற்றி திறக்க ஆலோசனை கூறப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் அதிக கூட்டம் கூடிவிடாமல் தடுக்க... மரத் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த தடுப்புகளால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி... இன்று (3.6.2020) இப்பகுதி வியாபாரிகள் தங்கள் கடைகளை திறக்கவில்லை. மேலும் - இதுகுறித்து வியாபாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடந்த வருகிறது.
தகவல் + படங்கள்: எம்.முத்துகணேஷ்
20 / 52
21 / 52
அழகின் தரிசனம்:
கோடை காலத்திலும்... சுற்றிலும் பச்சை பசேல் என மரங்கள்... குடியிருப்புகளுக்கு இடையே ஜூன் - ஜூலையில் பூத்துக் குலுங்கும் கொன்றைப் பூக்கள்... மலைகளின் பின்னனியில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் ராஜகோபுத்தின் அழகிய காட்சி.
படம்: வி.எம்.மணிநாதன்
22 / 52
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பயணிகள்... தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய தகவல்களை... படிவங்களில் நிரப்பி போக்குவரத்து அலுவலர்களிடம் கொடுத்த பிறகே பேருந்துகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் - இன்று (3.6.2020) நாகர்கோவிலுக்கு செல்லவேண்டிய பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
படங்கள்; மு. லெட்சுமி அருண்
23 / 52
24 / 52
தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றி வந்த லாரியொன்று , இன்று (3.6.2020) திருநெல்வேலி ரயில் நிலையப் பகுதியில்... பராசக்தி கட்டிடம் அருகே உள்ள ஓடையில் சாய்ந்தது. இதில் - உப்பு மூட்டைகள் சரிந்து சாலையில் விழுந்ததன. இதனால் அப்பகுதியில் - சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. படங்கள்: மு.லெட்சுமி அருண்
25 / 52
26 / 52
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளையொட்டி, திமுகவின் வேலூர் மத்திய மாவட்ட அலுவலகம் முன்பாக... கருணாநிதியின் உருவப்படத்துக்கு... அக்கட்சியினர் இன்று (3.6.2020)மரியாதை செலுத்தினர்.
படம்: வி.எம்.மணிநாதன்
27 / 52
நம்ம தொழிலை நாம பார்ப்போம் சார்:
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் சிறுகுறு தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பணிபுரியும் ஊழிர்கள்.
படம் : ஜெ. மனோகரன்
28 / 52
29 / 52
30 / 52
31 / 52
வானில் ஒரு தீபாவளி:
கோவையில் உக்கடம் பகுதியில்... இன்று (3.6.2020 ) காலைநேரத்தில்... ஒளிச்சிதறல் காரணமாக வானத்தில் சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றியது.
படம் : ஜெ. மனோகரன்
32 / 52
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி... இன்று (3.6.2020) கோவை - சிங்காநல்லூரில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு... கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அருகில் பகுதிச் செயலாளர் எஸ்.எம். சாமி உள்ளிட்டோர்
படம் : ஜெ. மனோகரன்
33 / 52
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு.... இன்று (3.6.2020) புதுச்சேரி தெற்கு திமுக சார்பில்.... அவரது உருவப்படத்துக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மலர் துாவி மரியாதை செலுத்தினார். உடன் - தெற்கு மாவட்ட அமைப்பாளர் சிவா.
படம்: எம்.சாம்ராஜ்
34 / 52
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு.... இன்று (3.6.2020) புதுச்சேரி தெற்கு திமுக சார்பில்.... ஏழை எளியீருக்கு இலவச அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.
படம்: எம்.சாம்ராஜ்
35 / 52
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமலில் இருந்த ஊரடங்கில் - சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில்.... புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த.... மார்க்கெட் மீண்டும் பழைய இடத்துக்கே மாற்றப்பட்டு... பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. ஆனால்... இன்று (3.6.2020) மதியவேளையில் பேருந்துகளில் ஏற பயணிகள் வராததால்... வெறிச்சோடி காணப்பட்ட புதுச்சேரி பேருந்து நிலையம்.
படம்: எம்.சாம்ராஜ்
36 / 52
தமிழ்நாடு - தீயணைப்புத் துறைக்கு புதிதாக 25 இருசக்கர வாகனங்களை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். இதையடுத்து - இன்று (3.6.2020) ராயபுரம் பகுதியில்... அந்த வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பார்த்தனர்.
படம்: க.ஸ்ரீபரத்
37 / 52
38 / 52
சாலை வரி மற்றும் பர்மிட்டுகளைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி... ஷேர் ஆட்டோ மற்றும் லோடு ஆட்டோ ஓட்டுநர்கள்... சென்னை - சேப்பாக்கம் எழிலகம் ஆவின் பாலகம் அருகே... முன்னால் சட்டப்பேரவை உறுப்பினர் பீம்ராவ் தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
39 / 52
40 / 52
புதுச்சேரி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சுற்றுலாத்தளம்தான். கரோனா தடை உத்தரவுக்குப் பின்னர்... திறக்கப்பட்ட புதுச்சேரி - நோணாங்குப்பம், சுண்ணாம்பாறு படகுக்குழாம்... சுற்றுலாப் பயணிகள் யாரும் வருகை தராததால் இன்று (3.6.2020) வெறிச்சோடி காணப்பட்டட்து.
படங்கள்: எம்.சாம்ராஜ்
41 / 52
42 / 52
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி... இன்று (3.6.2020 ) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்... மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். உடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர்.
படங்கள் : க.ஸ்ரீபரத்
43 / 52
44 / 52
45 / 52
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி... இன்று (3.6.2020 ) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்... மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து - நினைவிடத்தில் அக்கட்சியைச் சேர்ந்த அசோக்குமார் - மகாலெட்சுமி திருமணத்தையும் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்தினார்.
படங்கள் : க.ஸ்ரீபரத்
46 / 52
47 / 52
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக - அமலில் இருக்கும் ஊரடங்கு காரணமாக... தாம்பரம் - சானடோரியத்தில் உள்ள முருகன் கோயிலில் இன்று (3.6.2020) மணிகண்டன் - கவுசல்யா ஆகியோரின் திருமணம் எளிய முறையில் நடந்தது. முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் உறவினர்கள் 20 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
படங்கள்: எம். முத்து கணேஷ்
48 / 52
49 / 52
இன்று (3.6.2020) உலக - சைக்கிள் தினத்தையொட்டியும்... சென்னையில் - அதிகளவில் கரோனா தொற்றுப் பரவுவதையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தவும்... வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் - புதுமையான சைக்கிளில் சென்னை நகர் முழுவதும் வலம் வருகிறார்.
பாடி மேம்பாலம் அருகே வலம் வந்த இவரிடம் பேசியபோது
’’தினம் ஒரு பகுதி எனத் தேர்வு செய்து சென்னை நகரம் முழுவதும் சுற்றி வருகிறேன். பழைய உதிரி பாகங்களைக் கொண்டு 5 அடி உயரத்தில் 120 கிலோ எடைகொண்ட புதுமையான சைக்கிளை நானே உருவாக்கினேன்’’ என்றார்.
தகவல் + படங்கள்: ம.பிரபு
50 / 52
51 / 52
52 / 52
கத்திரி வெயில் விடைபெற்றபோதும்... வெயிலின் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை. ஆவடியை அடுத்துள்ள புட்டலூரில் இன்று (3.6.2020) கொளுத்தும் வெயிலில் மாடுகளை மேச்சலுக்கு ஓட்டிச் செல்லும் மூதாட்டி.
படம் : ம.பிரபு