1 / 46
ஊரடங்கு அமலில் இருந்த 60 நாட்களுக்கும் மேலாக முடங்கிப்போயிருந்த ரயில் சேவை இன்று (1.6.2020) முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் -
திருச்சியில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் திருநெல்வேலி சந்திப்புக்கு வந்தபோது... அதில் இருந்து இறங்கி வரும் பயணிகள்.
படம்: மு. லெட்சுமி அருண்
2 / 46
3 / 46
நாகர்கோவிலுக்கு பேருந்து இயக்கப்படவில்லை என்பதால் ரயில் மூலம் ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் எடுத்து செல்லும் இளைஞர். பார்ப்பதறகு முன்பதிவு டிக் கெட் போன்று இருக்கும் இந்த டிக்கெட்.. பெயர், வயது மற்றும் அடையாள அட்டை போன்ற தகவலை தெரிவித்த பிறகுதான் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.
படம்: மு. லெட்சுமி அருண்
4 / 46
தியாகராய நகரில் உள்ள ரெங்கநாதன் தெருவுக்கு வருவோருக்கு... கிருமிநாசினி திரவம் வழங்கப்பட்டு... காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்யும் மாநகராட்சி ஊழியர்கள்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
5 / 46
6 / 46
7 / 46
கரோனா தடுப்பு முன்னேச்சரிக்கைக்காக ஊரடங்கு அமலில் இருந்தாலும் - கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன்... இன்று முதல் (1.6.2020) சில நகைக்கடைகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் - சென்னையில் பிரபலமான நகை கடையொன்றில் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள்
படம்: க.ஸ்ரீபரத்
8 / 46
9 / 46
10 / 46
11 / 46
கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமலில் இருக்கும் ஊரடங்கால்... பல நாட்களாக செயல்படாமல் இருந்த பெரிய கடைகள் இன்றுமுதல் (!.6.2020) செயல்படத் தொடங்கியுள்ளன. தியாகராய நகரில் உள்ள மிகவும் பிரபலமான ஜவுளி கடை ஒன்றில் ஆர்வத்துடன் துணிகள் வாங்கும் மக்கள்.
படம்: க,ஸ்ரீபரத்
12 / 46
13 / 46
14 / 46
15 / 46
16 / 46
27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன்... உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கூறி சமூக நலப் போராளிகள் மற்றும் தமிழ் இயக்கங்களைச் சேர்ந்தோர்... திருநெல்வேலி - மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்: மு. லெட்சுமி அருண்
17 / 46
பட்டியல் இன மக்களை அவமதித்துப் பேசிய... திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியைக் கண்டித்து - தேனாம்பேட்டையில் அதிமுகவினர் இன்று (!.6.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்: க.ஸ்ரீபரத்
18 / 46
கடந்த 60 நாட்களுக்கும் மேலாக அமலில் இருந்த ஊரடங்குக்குப் பிறகு தமிழகத்தில் சில மண்டலங்களில் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் -
திருநெல்வேலி - புதிய பேருந்து நிலையத்தில்... பயணிகளுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா... என பரிசோதனை செய்கிறார் போக்குவரத்துத் துறை அலுவலர் ஒருவர்..
படம் . மு. லெட்சுமி அருண் .
19 / 46
பட்டியலின மக்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாக கூறி
திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதியைக் கண்டித்து... அதிமுக-வினர் மதுரையில் இன்று (!.6.2020) ஆர்ப்பாட்டம் செய்தனர்.
படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
20 / 46
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழக அரசின் உத்திரவுப்படி... பல நாட்களாக இயங்காமல் இருந்த சலூன் கடைகளை... சில விதிமுறைகளைப் பின்பற்றி மீண்டும் இன்றுமுதல் (!.6.2020) இயங்க அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில் - சென்னை - திருவல்லிக்கேணி பகுதியில் பாதுகாப்புடன் செயல்படத் தொடங்கியுள்ள முடி திருத்தகங்கள்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
21 / 46
22 / 46
பொதுவாக - கோடைக்காலங்களில் பனை ஓலை விசிறிக்கு மவுசு அதிகரிக்கும். இந்நிலையில் - வேலூர் அண்ணா பஜாரில்
இரண்டு விசிறிகள் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
படங்கள்: வி.எம்.மணிநாதன்
23 / 46
24 / 46
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் அனுமதியுடன் கடந்த சில நாட்களாக - திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் தற்காலிக காய்கறி சந்தையாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் அரசு உத்தரவுபடி - இன்று முதல் (1.6.2020) மீண்டும் பேருந்துகள்... இயக்கப்படுவதால்... தங்கள் காய்கறிகளை ஏற்றிச் செல்ல சரக்கு வாகனங்கள் பேருந்து நிலையத்துக்குள் வரயியலாத சூழலில்... காய்கறி வியாபாரிகளும் சுமை தூக்கும் தொழிலாளர்களும் சோகமுடன் உட்கார்ந்துள்ளனர்.
படங்கள்; மு. லெட்சுமி அருண்
25 / 46
26 / 46
கரோனா தடுப்புக்காக அமலில் இருந்து வரும் ஊரடங்கு - சில கட்டுபாடுகளுடன் தளர்த்தப்பட்ட நிலையில்... இன்று முதல் (!.6.2020) பொதுமக்களுக்கான ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் - கோவையில் இருந்து 21 பெட்டிகளைக் கொண்ட இன்டர்சிட்டி விரைவு ரயில் 287 பயணிகளுடன் கோவையில் இருந்து வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்துக்கு இன்று வந்தது. அந்த ரயிலில் வந்த அனைத்து பயணிகளுக்கும் காய்ச்சல் உள்ளதா என வெப்பநிலை கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
படங்கள்: வி.எம்.மணிநாதன்
27 / 46
28 / 46
29 / 46
30 / 46
31 / 46
32 / 46
ஊரடங்கால் பாதிக்கப்பட்டு தங்களின் சொந்த மாநிலமான பிஹாருக்கு... தங்களை அனுப்பக் கோரி... இன்று (1.6.2020) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த... வடமநிலத்தோரிடம் ’’144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் இதுபோல் கூட்டமாக திரண்டு வந்தால்... கைது செய்வோம்’’ எனக் கூறி அவர்களைத் திருப்பியனுப்பி வைத்த காவல் துறையினர்.
படம்: வி.எம்.மணிநாதன்
33 / 46
34 / 46
35 / 46
திருநெல்வேலி -
பாளையங்கோட்டை மார்க்கெட்டில் இருந்து திருநெல்வேலி டவுன் செல்லும் பிரதான சாலையில் வண்ணாரப்பேட்டைப் பகுதியில்... 2 மாதங்களுக்குப் பிறகு... இன்று (1.6.2020) பல்வேறு வாகனங்களுக்கு இடையில்... நகரப் பேருந்துகள் சென்றது வித்தியாசமாக தெரிந்தது.
படம் : மு. லெட்சுமி அருண்
36 / 46
கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... அமலில் இருந்த ஊரடங்கில் - சில கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அறிக்கப்பட்டுள்ளதைத் தொடந்து--- 70 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் (1.6.2020) வேலூர் - அண்ணா சாலையில் உள்ள பர்மா பஜாரில் கடைகள் திறக்கப்பட்டன.
படம்: வி.எம்.மணிநாதன்
37 / 46
ஜூன் மலருக்கு கொண்டாட்டம்:
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்... செங்கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம்.
தற்போது - சேலம் மல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம்... கண்களுக்கு விருந்தாக... மரம் முழுவதும் பூத்துக்குலுங்கும் செங்கொன்றை மலர்கள்.
படம்: எஸ்.குருபிரசாத்
38 / 46
அமலில் இருந்த ஊரடங்கால் முடங்கிப்போயிருந்த பொதுப்போக்குவரத்து 2 மாதங்களுக்குப் பிறகு... இன்று முதல் (1.6.2020) இயங்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் - மதுரையில் அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில்... குறைந்த பயணிகளுடன் உள்ளூர் பேருந்துகள் இயங்கின.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
39 / 46
மீன் பிடித் தடைக்கால ஓய்வு நேரத்தில் புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ள தங்கள் படகுகளை சீர்செய்து,,, செப்பனிட்டுத் தயாராக வைத்துள்ள மீனவர்கள். படங்கள்; எம்.சாம்ராஜ்
40 / 46
41 / 46
தமிழக அரசின் உத்தரவுப்படி சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து... பிற மாவட்டங்களில் இன்று முதல் (1.6.2020) பேருந்துகள் இயங்க தொடங்கின. இந்நிலையில் - சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோவைக்கு செல்லும் பேருந்து ஒன்றில் சீரான இடைவெளியுடன் அமர்ந்து பாதுகாப்புடன் பயணம் மேற்கொண்ட பயணிகள்.
படம் : எஸ்.குரு பிரசாத்
42 / 46
தமிழக அரசின் உத்தரவுப்படி சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து... பிற மாவட்டங்களில் இன்று முதல் (1.6.2020) பேருந்துகள் இயங்க தொடங்கியதையடுத்து... சேலம் புதிய பேருந்து நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா வைரஸ் தடுப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளின் உடல் வெப்ப நிலை கண்டறியப்பட்டது. படம்: எஸ்.குரு பிரசாத்
43 / 46
தமிழகத்தில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் தவிர்த்து... பிற மாவட்டங்களில் நேற்று முதல் பேருந்துகள் இயங்க தொடங்கின. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் கிருமி நாசினி திரவத்தை கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே... பேருந்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
படம் : எஸ்.குரு பிரசாத்
44 / 46
இன்று முதல் (1.6.2020) கரோனா தடை உத்தரவில் சில கட்டுபாடுகல்.... தளர்த்துள்ளதையடுத்து - இன்று காலை முதல் புதுச்சேரி கடற்கரை சாலை முழுவதும் பொது மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. இருந்தும்கூட பொதுமக்கள் கட்டுப்பாடு காத்து... அங்கு வருவதை நிறுத்தியுள்ளனர். ஆட்கள் நடமாட்டமி ன்றி வெறிச்சோடி காணப்பட்ட புதுச்சேரி கடற்கரை சாலை.
படம்: எம்.சாமராஜ்
45 / 46
கத்திரி வெயில் முடிந்தும்... வெயிலின் தாக்கம் குறைாயாமல் அனல் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி - கடலுார் கிழக்குக் கடற்கரை சாலையில்... கன்னிக்கோவில் பகுதியில் மதியநேர வெயிலில் சாலையில் காணப்படும் கானல் நீர்.
படம்: எம்.சாமராஜ்
46 / 46
மத்திய அரசு யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறைகள்... தனியார்மயமாக்கப்படும் என உத்தரவு பிரப்பித்துள்ளது . இதையடுத்து புதுச்சேரி மின்துறை அலுவகத்தில் இன்று (1.6.2020) அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்.
படம்: எம்.சாமராஜ்