1 / 44
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 188 பேர், பெண் காவலர்களுக்கான 2-ம் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்கள பயிற்சி பெறுவதற்காக - கோவை, தூத்துக்குடி, ஆவடி உள்ளிட்ட பயிற்சி மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதற்கிடையில், கரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்க ஊரடங்கு பிறபிக்கப்பட்டதால்... தேர்ச்சிபெற்ற பெண் காவலர்கள் அவர் அவர் பயிற்சி மையங்களுக்கு செல்ல முடியாத சூழல் உருவானது.
இதைத் தொடர்ந்து, 188 பேருக்கும் வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் செயல்படும் காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஒரு மாத காலமாக ஒருங்கிணைப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது, இத்துடன்.. கரோனா வைரஸ் பரிசோதனை செய்து 28 நாட்கள் கண்காணிக்கப்பட்டும் வந்தனர்.
இந்நிலையில், தற்போது ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாலும், இவர்களில் யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதாலும்... வேலூரில் பயிற்சி பெற்று வந்த 188 பேரும்... அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவை, தூத்துக்குடி, ஆவடி உள்ளிட்ட பயிற்சி மையங்களுக்கு நேற்று (மே - 30) காலை காவல்துறை வாகனங்களில் பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
படங்கள் + தகவல்: எம்.மணிநாதன்
2 / 44
3 / 44
4 / 44
5 / 44
காவல் துறையினருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மன உளைச்சலைப் போக்கவும், வேலூர் கோட்டை சுற்றுச் சாலையில் உள்ள காவலர் நல்வாழ்வு மன்றத்தில் இன்று யோகப் பயிற்சி அளிக்கப்பட்டது.
படங்கள்: வி.எம்.மணிநாதன்
6 / 44
7 / 44
8 / 44
9 / 44
10 / 44
11 / 44
12 / 44
13 / 44
பொதுமக்கள் ஜூன் மாதத்துக்கான ரேஷன் பொருட்களை வாங்க... வேலூர் சலவன்பேட்டைப் பகுதியில் வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யும் ரேஷன் கடை ஊழியர்.
படம்: வி.எம்.மணிநாதன்
14 / 44
வேலூர் கோட்டை அகழி தண்ணீரில் இன்று காலையில்... வானின் பனிப் படலங்கள் போல் வெண் மேகங்கள் பிரதிபலித்த அழகிய காட்சி.
படம்: வி.எம்.மணிநாதன்
15 / 44
வேலூர் கோட்டை அகழி தண்ணீரில் தள்ளாடும் பரிசலில் நின்று.... வலையில் சிக்கிய மீனை எடுக்கும் மீனவர்.
படங்கள்: வி.எம்.மணிநாதன்
16 / 44
17 / 44
கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில்... தமிழக எல்லையான கோவை அடுத்த வாலையார் சோதனைச்சாவடியில்... தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களை சோதனையிடும் கேரள போலீஸார்.
படம்: ஜெ .மனோகரன்
18 / 44
கோவை சி - 2 பந்தயச் சாலை காவல் நிலையத்தில் தனியார் ஹோட்டல் நிர்வாகம் சார்பில் 50-க்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாஜிஸ்திரேட்டு தமிழ் இனியன் கரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார் . உடன் மத்திய துணை ஆணையர் கார்த்திகேயன், சி - 2 காவல் ஆய்வாளர் சக்திவேல், ஐபிஐஸ் ஹோட்டல் மேலாளர் சந்தீப் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
படம்: ஜெ .மனோகரன்
19 / 44
உலக புற்றுநோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் இலவச வாய் புற்றுநோய் பரிசோதனை விழிப்புணர்வு வாகனத்தை.... எஸ் .என். ஆர். சன்ஸ் அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி மற்றும் டாக்டர் குகன் ஆகியோர் இன்று ( மே 30) கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
படம் : ஜெ .மனோகரன்
20 / 44
கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலம் அருகே... ’கரோனா’ நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக காதிருக்கிறார்கள்... பொள்ளாச்சி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறை துணை நடிகர்கள்.
படம்:ஜெ.மனோகரன்
21 / 44
கரோனா வைரஸ் ஊரடங்கால் மனித சமுதாயம் முடங்கிவிட்டது. தொழிற்சாலைகள் செயல்படாததால் ஆறு, குளம், ஏரி ஆகியவை மனிதர்களால் மாசுபடுத்தப்படுவது பெரிதும் குறைந்துள்ளது. கோவை உக்கடம் பெரிய குளத்தில் கண்ணாடி போன்ற தெளிவான தண்ணீரில் குஞ்சுகளுடன் நீந்திச் சென்று இரை தேடும் வாத்து.
படம்: ஜெ.மனோகரன்
22 / 44
23 / 44
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் இணையத்தின் சார்பில் , யு -டியூபில் ’காட்மேன்’ என்ற ஆன்லைன் இணையத்தொடர் (வெப் சீரிஸ்) ஒன்றின் முன்னோட்டம் (டிரைலர்)
சமீபத்தில் வெளியானது.
இந்த முன்னோட்டம் - இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், புண்படுத்தும் விதமாகவும் இருப்பதால் அத்தொடரை தடை செய்ய வேண்டும் என்றும், அந்த இணையத் தொடரின் இயக்குநர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவில் நடவடிக்கை எடுக்கக் கோரியும், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த ஆகம வேத அர்ச்சக ஸாகரம் சங்கத்தினர்.
படம்: வி.எம்.மணிநாதன்
24 / 44
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சரக்கு ஆட்டோவில் வேலூர் மாவட்ட அலுவலகம் வந்த வட மாநிலத்தோர்... தங்கள் சொந்த் மாநிலமான பிஹாருக்கு அனுப்பக் கோரிக்க்வை வைத்து காத்திருந்தனர்.
படம்: வி.எம்.மணிநாதன்.
25 / 44
பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் சார்பில்... ஆட்டோக்களுக்கு மலர் வளையம் வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ மற்றும் டெம்போ ஓட்டுநர்கள்.
படம்: எம்.சாம்ராஜ்
26 / 44
சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்தாலும்... எங்களுக்கு இது பயனாகத்தான் உள்ளது எனக் கூறி... புதுச்சேரி - வீராம்பட்டினம் கடற்கரையில் சுட்டெரிக்கும் வெயிலில் ஓட்டாம்பாறை மீன்களைப் பதப்படுத்தி கருவாடாக காயவைக்கும் மூதாட்டிகள்.
படம்: எம்.சாம்ராஜ்
27 / 44
கரோனா தடை உத்தரவு, மீன்பிடித் தடைக்காலம் என மீனவர்களுக்கு பல்வேறு தடைகள் இருந்து வந்த நிலையில்... நாளையுடன் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைய உள்ளதால் - வரும் ஜூன் 1 முதல் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கத் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.
படம்: எம்.சாம்ராஜ்
28 / 44
மீன் பிடித் தடைக்காலம், கரோனா ஊரடங்கு என கிடைத்த இடைப்பட்ட ஓய்வு காலங்களில்... புதுச்சேரி - தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில்... மீனவர்கள் - தங்கள் விசைப் படகுகளை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
படம்: எம்.சாம்ராஜ்
29 / 44
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு... சிகிச்சை முடித்து பணிக்குத் திரும்பும் ஆயுதப்படை காவலர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ,கே. விசுவநாதன் இன்று ராஜரத்தினம் மைதானத்தில் சந்தித்து வாழ்த்தி, அவர்களுக்கு சான்றிதழுடன்... கபசுர குடிநீரும் வழங்கினார்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
30 / 44
31 / 44
32 / 44
சென்னை 6- வது மண்டலம் கேசவப் பிள்ளை பூங்காப் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடம்... சுமார் 1,400 படுக்கை வசதி கொண்ட கரானோ தொற்று பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு மையமாக செயல்பட இருக்கிறது அதற்கான ஏற்பாடுகள் போர்க்கால அடிப்டையில் நடந்து வருகிறது
படம்: க.ஸ்ரீபரத்
33 / 44
34 / 44
35 / 44
36 / 44
37 / 44
வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் வைகை ஆற்றை வந்தடைந்தது. இந்நிலையில் மதுரை யானைக்கல் பகுதியில் ஏவி பாலம் அருகே இன்று - வைகை ஆற்றில் கோடை வெயிலுக்கு இதமாக குளியலாட்டம் போடு சிறுவர்கள்.
படம்: எஸ் கிருஷ்ணமூர்த்தி
38 / 44
விரைவில் தொடங்கவுள்ள ரயில் சேவையை பயன்படுத்தி ஊர் செல்ல... மதுரை ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்ததை... தனது முன்பதிவு டிக்கெட்டை காட்டுகிறார் திருவாளர் பொது ஜனம்.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
39 / 44
கரோனா தொற்று காரணமாக கடந்த 2 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான முன்பதிவு செய்ய... மதுரை ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள்.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
40 / 44
விரைவில் தொடங்கவுள்ள ரயில் சேவையை பயன்படுத்தி ஊர் செல்ல... மதுரை ரயில் நிலையத்துக்கு வந்து முன்பதிவு செய்ய வந்தோருக்கு... முகக்கவசம் அணிந்த நிலையில் கணினியில் முன்பதிவு செய்து தரும் ரயில்வே ஊழியர் ஒருவர்.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
41 / 44
பயணிகளின் கனிவான கவனத்துக்கு:
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமலில் இருந்த ஊரடங்கு காரணமாக... கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக - இருப்புப்பாதை போக்குவரத்து இயங்காமல் இருந்தது. தற்போது வரும் ஜூன் 1-ம் தேதி முதல் ரயில்கள் இயங்கவிருப்பதால் கோவை ரயில்நிலையத்தில் அதற்கான முன்பதிவு தொடங்கியதை அடுத்து.... முன்பதிவு செய்ய... டிக்கெட்டுகள் வாங்க... வரிசையில் காத்திருக்கும்
பயணிகள்.
படங்கள் : ஜெ .மனோகரன்
42 / 44
43 / 44
44 / 44
விழியில் விரிந்த ஈர வரலாறு:
தாமிரபரணி நதி... மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகி... வழிந்தோடி வந்து - திருநெல்வேலி வழியாக... தூத்துக்குடி மண்ணில் பாய்ந்து... ஆங்கே செழிப்பை உருவாக்கி... வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
இது தாமிரபரணியின் ஈர வரலாறு
இந்நிலையில் - நேற்றும் மற்றும் நேற்று முன்தினமும் பெய்த மழையினால் ... காலநிலை நன்றாக இருந்த காரணத்தினால் மேற்குத் தொடர்ச்சி மலை தெளிவாக தெரிந்தது. அதில் இருந்து உற்பத்தியாகும் தாமிரபரணி நதி... மலையின் அடிவாரத்தில் இருந்து உற்பத்தியாகி நகர்ந்து வருவது போன்று... காட்சியாகத் தெரிந்தது.
இடம்: கொக்கிரகுளம்
படங்கள்: மு. லெட்சுமி அருண்