Published on : 29 May 2020 15:56 pm

பேசும் படங்கள்... (29.05.2020)

Published on : 29 May 2020 15:56 pm

1 / 43
திடீர் தீ: மதுரை - மீனாட்சி கோயில் கிழக்கு கோபுரம் அம்மன் சன்னதி நுழைவாயில் எதிர்புறம் உள்ள கடையில்.... நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து - தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள்... முழுவீச்சுடன் தீயை அணைத்ததால் பெரும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது. படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
2 / 43
மாத்தி யோசித்த ரயில்வே துறையினர்: கரோனா தொற்று பரவாமல் தடுக்க உலக நாடுகள் போராடி வரும் நிலையில்... இன்று அதிகாலை 2.30 மணியளவில்... புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வேலை பார்த்து வந்த - வட மாநிலத் தொழிலாளர்கள் 1,060 பேர் ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு செல்ல... சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களை ஏற்றிச்செல்ல வந்த சிறப்பு ரயிலில் யாரும் எச்சில் துப்பாத வகையில்... ரயில் பெட்டிகளின் ஜன்னல்களிலில் வலை அடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு ’’கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக ரயில்வே துறையின் புதிய ஏற்பாடு என்றனர். படங்கள்: எம்.சாம்ராஜ்
3 / 43
4 / 43
5 / 43
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டை... உயர்வகுப்பினருக்கு வழங்கி, மண்டல்குழு அறிக்கையை முடக்கி... துரோகம் இழைத்ததைக் கண்டித்து... ’தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ சார்பில்.. புதுச்சேரி - ராஜா தியேட்டர் சந்திப்பில் மறியல் நடைபெற்றது. படம்: எம்.சாம்ராஜ்
6 / 43
பெட்ரோல் - டீசல் மீது வரி விதித்துள்ள புதுச்சேரி அரசை கண்டித்து... சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரி - காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. படம்: எம்.சாம்ராஜ்
7 / 43
சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி: வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் பாலாற்றை பாதுகாக்கும் வகையில்... மாவட்ட நிர்வாகம் சார்பில் 'பாலாற்றைப் பாதுகாப்போம்’ என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் பாலாறு பயணிக்கும் 62 கி.மீ தூரத்தையும், பாலாற்றின் 6 துணை நதிகளையும் சீரமைத்து... ஆக்கிரமிப்புகள்மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றி... அங்கே 1 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் இன்று (மே 29) தொடங்கியது. இதன் - முதற்கட்டமாக மாவட்டத்தில் 62 கி.மீ நீளம் உள்ள பாலாற்றுப் பாதைகளில்... வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
8 / 43
9 / 43
10 / 43
கோவை - சலிவன் வீதியில் அமைந்துள்ள வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலின் முன்பாக மர்ம நபர்கள் இறைச்சியை வீசிச் சென்றதால்... இன்று காலையில் அக்கோயில் அமைந்துள்ள சலிவன் வீதி பகுதியில்... பெரும் பரபரப்பு ஏற்பட்டதையொட்டி... பாதுகாப்புக்காக அக்கோயிலின் முன்பு போலீஸார் குவிந்துள்ளனர். படம் : ஜெ .மனோகரன்
11 / 43
கோவை - சலிவன் வீதியில் அமைந்துள்ள வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலின் முன்பாக மர்ம நபர்கள் இறைச்சியை வீசிச் சென்றதால்... இன்று காலையில் அக்கோயில் அமைந்துள்ள சலிவன் வீதி பகுதியில்... பெரும் பரபரப்பு ஏற்பட்டதையொட்டி... அக்கோயிலின் முன்பு குவிந்துள்ள இந்து முன்னணியினர். படம் : ஜெ .மனோகரன்
12 / 43
கோவை - சலிவன் வீதியில் அமைந்துள்ள வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலின் முன்பாக மர்ம நபர்கள் இறைச்சியை வீசிச் சென்றதால்... இன்று காலையில் அக்கோயில் அமைந்துள்ள சலிவன் வீதி பகுதியில்... பெரும் பரபரப்பு ஏற்பட்டதையொட்டி... அக்கோயிலிள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் மாநகராட்சி ஊழியர். படம் : ஜெ .மனோகரன்
13 / 43
கரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த வட மாநிலத் தொழிலாளர்கள்... இன்று காலையில் கோவை ரயில்நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பிஹார் செல்ல காத்திருந்தனர். படம் :ஜெ .மனோகரன்
14 / 43
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் திரும்ப... கோவை ரயில் நிலையத்துக்கு வந்த வெளிமாநிலத்தோர். படம் : ஜெ .மனோகரன்
15 / 43
16 / 43
கோவை - பெரியகடை வீதியில்... உள்ள பூம்புகார் விற்பனைக் கண்காட்சி நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கைவினைப் பொருட்கள் மீது... கிருமிநாசினி தெளிக்கும் அலுவலர்கள். படம் : ஜெ .மனோகரன்
17 / 43
18 / 43
கோவை - புரூக் பாண்ட் சாலையில்... ஐன்டியுசி நூற்பாலை அருகே... சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளம். நகராட்சி நிர்வாகம் உடனடியாக கவனிக்குமா?
19 / 43
பாலம் ரெடி: மதுரை மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்த... காளவாசல் மேம்பாலம் வரும் ஜூன் 10-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதையொட்டி பாலத்தின் மீது வண்ணம் தீட்டும் பணி... தீவிரமாக நடைபெற்று வருகிறது. படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
20 / 43
21 / 43
கடைவிரித்தேன் கொள்வாரில்லை: திருமண விழாக்கள், வீட்டு விழாக்கள், விருந்துகள், உணவுச்சாலைகளின் வியாபாரம் எல்லாம் கரோனா பாதிப்பால் தடைபட்டுக் கிடப்பதால்... காலம்காலமாக வாழை இலை வியாபாரம் செய்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் - மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்டில் ‘கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ என புலம்பும் வாழை இலை வியாபாரி. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
22 / 43
ஊரடங்கு சில கட்டுபாடுகளுடன் தளர்த்தப்பட்ட நிலையில்... ’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ்... வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே, பாலாற்று பாலத்தின் நடைபாதையில்... விறு விறுப்பாக நடைப்பெற்று வரும் டைல்ஸ் வகையிலான கற்கள் பதிக்கும் பணி. படம்: வி.எம்.மணிநாதன்
23 / 43
24 / 43
’ஒருங்கிணைவோம் திட்டத்தின்’ கீழ்... பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை... திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வந்த எம்,எல்.ஏக்கள் மற்றும் அக்கட்சியினர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
25 / 43
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் வழிபாடு செய்ய அனுமதிக்கக் கோரி, நேற்று கோயில் வாசலில் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்திய இந்து மக்கள் கட்சியினர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
26 / 43
நிழல் தந்த தாவர நண்பா... நிம்மதியாய் போய் வா: கத்திரி வெயில் நிறைவடைந்த நேற்று - மாலையில் திருநெல்வேலி பகுதிகளில் சூறைக் காற்றோடு... இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் கோடை வெயிலின் கோரத்தாண்டவத்தில் இருந்து பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். ஆனால் சூறைக்காற்றினால் பல இடங்களில் மரங்கள் ஒடிந்தும் , வேரோடு பிடுங்கப்பட்டும் பெயர்ந்து விழுந்தது. திருநெல்வேலி அருகே - வெள்ளக்கோவில் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான , சுமார் 40 அடி சுற்றளவுள்ள... பழமையான கம்பீரமான மருதமரம் சூறைக்காற்றில் - முறிந்து விழுந்தது . ’சின்ன வயசிலேர்ந்து இந்த மரத்தை பார்த்துட்டு வர்றோம். .இனிமேல் இப்படி ஒரு மரத்தைப் பார்க்க முடியாது. இந்த சுற்றுவட்டாரத்துலேயே இப்படி ஒரு மரம் எங்கேயும் கிடையாது. இதில் வேடிக்கை பாருங்க... இந்த மரம் கீழே விழும்போதுகூடபொது மக்களுக்கு இடர் தரக்கூடாது என இதன் பிரம்மாண்ட கிளைகள் சாலைக்கு மறுபுரம்தான் விழுந்திருக்கு’’ என நெக்குருகினர் இந்தப் பகுதி மக்கள். படங்கள்: மு.லெட்சுமி அருண்
27 / 43
28 / 43
29 / 43
30 / 43
திருச்சி காவிரி, கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை.... கருத்தில் கொண்டு சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. திருச்சியை அடுத்த திருவளர்சோலைப் பகுதியில் தற்போது திறக்கப்பட்ட மணல் குவாரியில்... மணல் அள்ள நீண்ட வரிசையில் நிற்கும் மாட்டு வண்டிகள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
31 / 43
32 / 43
33 / 43
34 / 43
திருச்சியை அடுத்த திருவளர்சோலைப் பகுதியில் தற்போது திறக்கப்பட்ட மணல் குவாரியில்... மணலுக்கான பணத்தை ஏடிஎம் கார்டு மூலம் மட்டுமே செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதால் ஸ்வைப்பிங் மெசின் மூலம் பணம் வசூலிக்கின்றனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்.
35 / 43
திருச்சியை அடுத்த திருவளர்சோலைப் பகுதியில் தற்போது திறக்கப்பட்ட மணல் குவாரியில்... மணல் அள்ள நீண்ட வரிசையில் நிற்கும் மாட்டு வண்டிகளிடையே முறை கேடுகளை தவிர்க்க ஒவ்வொரு மாட்டு வண்டிக்கும் 'க்யூ ஆர்' கோடு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை ஸ்கேன் செய்து குவாரிக்குள் அனுப்பும் ஊழியர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
36 / 43
ஆன் லைனில் - ஆர்டர் எடுத்து... உரிய நேரத்தில் கொண்டு செல்ல சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் - வாகனங்களில் பறந்த களைப்பில்... அடுத்த பார்சல் தயாராகும் வரை... வேலூர் - கீரின் சர்க்கில் பகுதியில் ஒரு ஓட்டலின் அருகே மரத்தின் நிழலில் சிறு உறக்கம் கொள்ளும் ஊழியர் ஒருவர். படம்: வி.எம்.மணிநாதன்
37 / 43
கரோனா தொற்று தடுப்புக்காக அமலில் இருந்த ஊரடங்கால் பல நாட்களாக வியாபாரம் இல்லாமல் இருந்த அண்ணா சாலை ரேடியோ மார்கெட்டில் இப்போது வியாபாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. இருப்பினும் குறுகலான அந்த (ரிச் தெரு) சாலைக்குள் இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை. அதனால், அருகில் உள்ள காசினோ தியேட்டர் பார்க்கிங் இடமாக மாற்றப்பட்டுள்ளது. படங்கள்: க.ஸ்ரீபரத்
38 / 43
39 / 43
40 / 43
கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அமலில் இருக்கும் ஊரடங்கால்... பல நாட்களாக வியாபாரம் இல்லாமல் இருந்த அண்ணா சாலை ரேடியோ மார்கெட் கடந்த ஒரு வாரமாக செயல்பட ஆரம்பித்துள்ளது. படம்:க.ஸ்ரீபரத்
41 / 43
கோடைக்கால வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதால் - வள்ளுவர் கோட்டம் அருகில் குடிநீருக்கான மண் பாண்டவிற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. படம் க.ஸ்ரீீபரத்
42 / 43
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா... சென்னை தி.நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். படம் : எல்.சீனிவாசன்
43 / 43
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா....தியாகராய நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். உடன் அவரது கணவர் மாதவன். படம்: எல்.சீனிவாசன்

Recently Added

More From This Category

x