1 / 38
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு நாட்களில் - தமிழகம், புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பொது மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக - தெலங்கானாவில் இருந்து 2,600 மெட்ரிக் டன் அரிசி... புதுச்சேரி மாநிலம் சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலையத்துக்கு இன்று வந்து சேர்ந்தது. அந்த அரிசி மூட்டைகளை லோடு லாரியில் ஏற்றும் தொழிலாளர்கள்.
படம்: எம்.சாம்ராஜ்
2 / 38
3 / 38
கரோனா தொற்றுப் பரவல் ஒருபுறம் இருக்கட்டும். ’’எங்களுக்கும் குடும்பம்... பிள்ளைகள் என எதிர்பார்ப்புகளும் தேவைகளும் நிறையவே இருக்கின்றன...’’ என்று சொல்லி கடுமையாக உழைக்கும் சுமை தூக்கும் தோழர்கள்... மதிய வேளையில்... சுட்டெரிக்கும் வெயிலில் புதுச்சேரி மாநிலம் சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலையத்துக்கு இன்று
ரயிலில் வந்திறங்கிய அரிசி மூட்டைகளை இறக்கி வைத்த களைப்பில்... ரயில் பாதையில் தண்டவாளத்தையே தலையணையாக்கிக் கொண்டு சற்றே ஓய்வெடுக்கிறார்கள்.
படம்: எம்.சாம்ராஜ்
4 / 38
2019 - 2020 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக இறுதி தேர்வு குறித்து... புதுச்சேரி - கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி - உயர்கல்வித் துறைச் செயலர் அன்பரசு, மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படம்: எம்.சாம்ராஜ்
5 / 38
ரயில் நிழலில் துயில்:
சட்டென்று இந்தப் படத்தைப் பார்த்து பதற வேண்டாம்.
ரயில் நிழலில் துயில் கொள்கிறார் ஒரு தோழர்.
ஆம்... புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்க... தெலங்கானாவில் இருந்து புதுச்சேரி - சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலையத்துக்கு வந்திறங்கிய 2,600 மெட்ரிக் டன் அரிசியை மூட்டை மூட்டையாக இற்க்கி வைத்த களைப்பில் சரக்கு ரயிலுக்கு கீழே சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார் இந்தத் தோழர்.
6 / 38
பிளஸ் - 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று (மே - 27) தொடங்கியது. இதையொட்டி... காட்பாடியில் உள்ள டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வந்த ஆசிரியர்கள்... கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கை சுத்திகரிப்பான் மூலம் கைகளை சுத்தம் செய்ய வைக்கப்பட்டனர். இதையடுத்து - அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என வெப்பநிலை கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு... அதன் பின்னரே.... விடைத்தாள் திருத்தும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பங்கள்: வி.எம்.மணிநாதன்.
7 / 38
8 / 38
9 / 38
10 / 38
சுத்தமாகும் பேருந்துகள்:
பிளஸ் - 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று (மே 27) தொடங்கியது. இதையொட்டி... காட்பாடியில் உள்ள டான் பாஸ்கோ மெட்ரிக் பள்ளிக்கு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அழைத்துவரப் பயன்படுத்தும் பேருந்துகளை... கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்தனர்.
படங்கள்: வி.எம்.மணிநாதன்
11 / 38
12 / 38
13 / 38
விடைத்தாள்கள் திருத்தும் பணி:
கோவை நேரு மகா வித்யாலயா பள்ளியில் இன்று ( மே 27) காலையில் பிளஸ் - 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள்... உடல் வெப்ப நிலைப் பரிசோதனைக்குப் பிறகு விடைத்தாள் திருத்தும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
படம் : ஜெ மனோகரன்
14 / 38
15 / 38
16 / 38
அடைக்காதீங்க... அடைக்காதீங்க:
கோவை மாநகரின் குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணையில்... வறட்சிக் காலங்களில் தண்ணீர் எடுக்கப் பயன்படுத்தும் குழாய்களை... கான்கிரீட் சிமெண்ட் கொண்டு அடைப்பதைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை ஆட்சியரிடம் இன்று காலையில் - மனு அளிக்க வந்தனர்.
படம் : ஜெ மனோகரன்
17 / 38
நாங்க திருத்த தயார்:
தமிழகத்தில் - பிளஸ் - 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று (மே - 27) காலையில் தொடங்கியது. கோவை - நேரு மகா வித்யாலயா பள்ளியில்... அமைக்கப்பட்டிருந்த விடைத்தாள் திருத்தும் மையத்தில் இன்று காலையில் - விடைத்தாள்களைத் திருத்த தயாராக உள்ள ஆசிரியர்கள்.
படம் : ஜெ மனோகரன்
18 / 38
காட்பாடியில் உள்ள டான் பாஸ்கோ மெட்ரிக் பள்ளி மையத்தில் இன்று (மே - 27) தொடங்கிய பிளஸ் - 2 விடைத்தாள் திருத்தும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்த வேலூர் - மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, பள்ளி துணை ஆய்வாளர் மணிவாசகன்.
படம்: வி.எம்.மணிநாதன்
19 / 38
பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளஸ் - 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வருகை தந்த ஆசிரியர்கள் அனைவரும்.... பாதுகாப்பான முறையில் கைகளை கழுவ அறிவுறுத்தப்பட்ட பிறகு... தேர்வு விடைத்தாள் திருத்தும் அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
படங்கள்: மு. லெட்சுமி அருண்
20 / 38
21 / 38
வேலூர் - மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளின் சாலையோரங்களில் பல வண்ணத் துணிகளில் தயாரிக்கப்பட்ட முககவசங்களைக் கூவி கூவி விற்பனை செய்யும் சகோதரர்கள்.
படம்: வி.எம்.மணிநாதன்
22 / 38
23 / 38
தமிழகத்தில் பிளஸ் - 2 தேர்வுத்தாள் திருத்தும் பணி... இன்று ( மே 27) தொடங்கியதையொட்டி... மதுரை - செயிண்ட் மேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வுத்தாள் திருத்தும் மையத்தில் ஜரூராய் நடக்கும் தேர்வுத்தாள் திருத்தும் பணி.
படம்; எஸ் .கிருஷ்ணமூர்த்தி
24 / 38
வண்டி ஓடுது இப்படி:
தமிழகத்தில் வேலூரில்....எப்போதுமே கோடைக்காலத்தில் வெய்யிலின் அளவு கூடுதலாகத்தான் இருக்கும்... என்ன செய்வது? வெய்யிலைப் பார்த்தால் பிழைப்பு நடக்குமா? வேலூரின் சாலையொன்றில் இன்று உச்சிவேளையில்... குடை பிடித்துக் கொண்டு - தன் பிழைப்புக்காக... வண்டியோட்டுகிறார் இந்த உழைக்கும் தோழர்.
’’இவரிடம் எப்படிங்க வாழ்க்கை இருக்கு?” என்று கேட்டோம்...
‘’என்னமோ வண்டி ஓடுதுங்க...’’ என்றார்.
படம்: வி.எம்.மணிநாதன்
25 / 38
வேலூரில் இன்று அனல் காற்றுடன் சுட்டெரித்த வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள குடைப்பிடித்து சென்ற பெண்கள்
படம்: வி.எம்.மணிநாதன்
26 / 38
ரோஜாவின் ராஜாவுக்கு அஞ்சலி:
இந்தியாவின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான - ’சிறியன சிந்தியான்’ ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று - மதுரை தல்லாகுளத்தில் உள்ள உத்தமர் நேருவின் சிலைக்கு... விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் தாகூர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
27 / 38
28 / 38
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள திடீர் நகர் காவல் நிலையத்தில்... பணிபுரியும் காவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இன்று - கரோனா பரிசோதனை நடைபெற்றது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
29 / 38
30 / 38
கரோனா வைரஸ் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும்... வேலூர் - மாவட்ட நிர்வாகம் சார்பில்... முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகளை சுத்தம் செய்வது குறித்தும், முககவசங்களை அணிவது குறித்தும்... விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் - வேலூர் சைதாப்பேட்டைப் பகுதியில் முககவசங்கள் அணியாமல் பீடி லேபிள் ஒட்ட கூடைகளில் பீடி பண்டல்களை வாங்கிச் செல்லும் பெண்கள்.
படம்: வி.எம்.மணிநாதன்
31 / 38
ராயபுரத்தில் - இலவச கபசுரக் குடிநீர்:
சென்னை - ராயபுரம் பகுதியில்... கரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதால்... கபசுரக் குடிநீரை ஆட்டோ மூலம் எடுத்துச் சென்று... பொதுமக்களுக்கு வழங்கும் திட்டத்தை, பாரதி ஆர்ட்ஸ் கல்லூரி அருகில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் வருவாய்த் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
32 / 38
33 / 38
கோடைக் காலம்... குடிநீர் தட்டுபாடு... சூடுபிடிக்கும் கேன் குடிநீர் விற்பனை:
வேலூரை அடுத்த புதுவசூர் பகுதியில்... சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட தூரம் நடந்தே சென்று... கடைகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களை வாங்கி தலையில் சுமந்துகொண்டு வரும் பெண்கள்.
படம்: வி.எம்.மணிநாதன்
34 / 38
இப்போ... இப்படி:
கோடைக்காலம் தனது வெப்பத் திருவிளையாடலை... தமிழகம் எங்கும் நீக்கமற நிறைத்திருக்கிறது. எங்கும்... வெய்யிலின் அதிகாரப் பரவல். சூட்டின் சுறுசுறுப்பு. வேர் வரை ஊடுருவும் வியர்வை ஊற்று. மனிதர்கள் மட்டும்தானா கோடையின் தாக்கத்தில் தவிக்கின்றனர். நீர்நிலைகளும்தான் என்று சொல்வதைப் போல...
கத்தரி வெய்யிலின் தாக்கத்துக்கு... பலியான மயிலாப்பூர் குளம் இப்படி வறட்சி கோலம் பூண்டிருக்கிறது..
படங்கள்: க.ஸ்ரீபரத்
35 / 38
36 / 38
வேறு உடை பூணும் வானமகள்:
இன்று (மே - 27) காலை முதல் பிற்பகல் வரை வேலூர் பகுதியில் - வெப்ப அலை வீசி... அந்தி சாயும் பொழுதில்... வானில் வர்ணஜாலம் காட்டிய ஆதவன்.
படம்: வி.எம்.மணிநாதன்
37 / 38
38 / 38