Published on : 23 May 2020 16:18 pm

பேசும் படங்கள்... (23.05.2020)

Published on : 23 May 2020 16:18 pm

1 / 29
கரோனா தொற்று தடுப்புப் பணிகள், குடி மராமத்துத் திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (23.5.2020) நடைபெற்றது. இதில் இத்திட்டங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். உடன் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர் உள்ளர். படம் : எஸ். குரு பிரசாத்.
2 / 29
ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், அனைத்து அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் நிவாரண நிதியாக மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, வேலூர் மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் இன்று (@3.5.2020) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்களை காவல் துறை ஆய்வாளர் அழகு ராணி ‘’144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஆடு, மாடுகளைப் போல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகத்தில் நுழைவீர்களா? உங்களை என்ன செய்கிறேன் பார்’’ என ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது . மேலும் அவர்களை மிரட்டியதுடன் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களைக் கைது செய்து சமூக இடைவெளி இல்லாமல் காவல்துறை வாகன ஏற்றி சென்றனர். இதைத் தொடர்ந்து, மனு அளித்துவிட்டு வந்த சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், நிவாரண நிதி வழங்கக் கோரியும் ஆட்சியர் அலுவலக வாசலில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர். படங்கள்: வி.எம்.மணிநாதன்
3 / 29
4 / 29
5 / 29
கோடை காலம்... சுட்டெரிக்கும் வெயில்... குடிநீர் தட்டுபாடு.. பிளாஸ்டிக் குடங்கள் விற்பனை ஜோர்... வேலூரில் பல பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு அதிகரித்து வருகிற நிலையில், வாரத்தில் ஒரு நாள் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் குழாய்களில் குடிநீர் திறந்து விடப்படுகிறது. வரும் நாட்களில் இந்த நிலை மாறி 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் திறந்துவிடப்படுக்கூடும் என்பதால் தண்ணீரை சேமித்து வைக்கும் பிளாஸ்டிக் குடங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. படம்: வி.எம்.மணிநாதன்
6 / 29
ஊரடங்கு காரணமாக இயக்கப்படாமல் இருந்த ஆட்டோக்களை சில கட்டுபாடுகளுடன் இயக்க அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து... 60 நாட்களுக்குப் பிறகு வேலூர் அண்ணா சாலையில் இயக்கப்பட்ட ஆட்டோக்கள். படம்: வி.எம்.மணிநாதன்
7 / 29
தலித் மக்களை அவமதிக்கும் விதத்தில் பேசியதாகக் கூறப்பட்ட புகாரில், திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை இன்று அவரது இல்லத்தில் போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் எழும்பூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். உடன், கனிமொழி எம்பி மற்றும் டி.ஆர்.பாலு . வழக்கறிஞர்கள் பிரிவினர், கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். படம்: ம.பிரபு
8 / 29
9 / 29
தமிழகம் முழுக்க... ஒரு பக்கம் கரோனா ஊரடங்கினால் அவதிப்பட்டோருக்கு உணவு பொருட்கள் மற்றும் உணவுகளைத் தன்னார்வலர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் வழங்கி வருகிறார்கள் .. மறுபக்கம் தற்போது புனித ரமலான் நாள் வருவதையொட்டி இஸ்லாமிய தன்னார்வலர்கள் ஏழை மக்களுக்கு அரசி உள்ளிட்ட மாளிகைப் பொருட்களை வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இன்று பாளையங்கோட்டை பிச்சவனத்தெரு பகுதியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி இளைஞர்கள் தங்களுடைய பகுதியில் உள்ள ஏழை எளியவர்களுக்கு புனித ரமலான் பித்ரா அரிசி மளிகைப் பொருட்களை வழங்கினர் . படங்கள் . மு. லெட்சுமி அருண் .
10 / 29
11 / 29
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான - ஊரடங்கு உத்தரவினால் அரசின் பல திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் அப்படியே பாதியிலேயே விடப்பட்டிருந்தன . தற்போது பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியில் உள்ள கால்வாய் பாலம் போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டன. படங்கள்: மு. லெட்சுமி அருண்
12 / 29
13 / 29
மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் நேற்று இரவு முழுவதும் மதுரை - எஸ். எஸ். காலனி மற்றும் எல்லீஸ் நகரில் உள்ள வீடுகளுக்கு கிருமிநாசினி தெளித்து நகரை சுத்தம் செய்தனர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
14 / 29
தங்களுக்கு கரோனா நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று - மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
15 / 29
ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதித்ததை அடுத்து, திருச்சி காந்தி மார்க்கெட் ஆட்டோ ஸ்டாண்டில் நேற்று ஆட்டோக்களுடன் சவாரிக்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
16 / 29
பேருந்து போக்குவரத்து இல்லாததாலும், ஒருவருக்கு மேல் ஏற்றி செல்ல அனுமதி இல்லை என்பதாலும் சவாரிக்கு யாரும் வரவில்லை எனக் கூறிய திருச்சி மத்திய பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுநர்கள்.... ஏதாவது சவாரி கிடைக்குமா என்ற நிலையில் ஆட்டோக்களில் அமர்ந்திருந்தனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
17 / 29
சென்னை - திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து காவல் துறை, தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்களுக்கு இடையிலான கலந்தாய்வு கூட்டம் மயிலாப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் மயிலாப்பூர் காவல் இணை ஆணையர் சஞ்சய் தேஷ்முக் சேகர். மயிலாப்பூர் காவல் துணை ஆய்வாளர் நெல்சன், திருவல்லிக்கேணி காவல் இணை ஆணையர் தர்மராஜ், கோட்டூர்புரம் காவல் துணை ஆய்வாளர்சுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். படம்: க.ஸ்ரீபரத்
18 / 29
சென்னை - திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து காவல் துறை, தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்களுக்கு இடையிலான கலந்தாய்வு கூட்டம் மயிலாப்பூரில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள். படம்: க.ஸ்ரீபரத்
19 / 29
சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு... இன்று மீண்டும் பணிக்குத் திரும்பிய தீயணைப்பு வீரர்களை... எக்மோர் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற விழாவில்... தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் டிஜிபி சைலேந்திர பாபு மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். படம்: க.ஸ்ரீபரத்
20 / 29
21 / 29
22 / 29
புதுச்சேரியில் தர்மாபுரி, மூகாம்பிகை நகர், மூலக்குளம், காலாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 25 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இப்பகுதியில் - கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் வழக்கத்தைவிட கடுமையாக்கப்பட்டது. புதுச்சேரி - தர்மாபுரி செட்டித் தெருவில் கரோனா தொற்று பாதித்த பகுதி தடுப்பு கட்டையால் அடைக்கப்பட்ட்து. படம்: எம்.சாம்ராஜ்
23 / 29
புதுச்சேரி தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று அந்தி சாயும் நேரம் கடலின் கரையோரத்தில்... சிறு படகில் மீன்பிடித்து... திரும்பும் மீனவர். - படம்: எம்.சாம்ராஜ்
24 / 29
25 / 29
ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதி அளித்ததையடுத்து, கோவை திருச்சி சாலை அண்ணா சிலை அருகே ஆட்டோவில் ஏறிய பயணிக்கு கையில் தடவிக்கொள்ள - கிருமி நாசினியைக் கொடுக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள். படம் : ஜெ .மனோகரன்
26 / 29
ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை கரும்புக் கடைப் பகுதியில் விற்அனைக்கு வந்துள்ள தொப்பிகள். படம் :ஜெ .மனோகரன்
27 / 29
ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை கோட்டைமேடு பகுதியில் கடைகளில் ரம்ஜான் பொருட்கள் வாங்கும் முஸ்லிம் மக்கள். படம் :ஜெ .மனோகரன்
28 / 29
கரோனா தொற்று தடுப்பு ஊரடங்ஐயொட்டி கோவை 100 அடி சாலையில் உள்ள - ராமகிருஷ்ணா டிரேடர்ஸ் பகுதியில் நலிவடைந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள், சிறு கோயில் பூசாரிகள் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு 'மோடி கிட்'-களை பாஜக சார்பில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் மற்றும் பி.எம். நாகராஜ் ஆகியோர் வழங்கினர். படம் :ஜெ .மனோகரன்
29 / 29
கோவை ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்குத் திரும்பும் வெளி மாநிலத்தோருக்கு கோவைப் பகுதி முஸ்லிம் அமைப்பினர் ரொட்டிகளை கொடுத்து விடைகொடுத்துனர். படம் : ஜெ .மனோகரன்

Recently Added

More From This Category

x