1 / 48
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக அமலில் இருந்த ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.
இதையடுத்து - பொதுமக்கள் சில கட்டுப்பாட்டுகளுடன் பொது இடங்களுக்குச் சென்று வர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி - கடலுார் சாலையில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் (ஷாப்பிங் மால்) இன்று(22.5.2020) கண்ணாடி கதவுகளை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
படம்: எம்.சாம்ராஜ்
2 / 48
தொழிலாளர் சட்டங்களில் செய்யப்பட்ட திருத்தங்களை எதிர்த்து... புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரி உழைப்பாளர்கள் சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று (22.5.2020) தொழிற்சங்கத் தலைவர்கள் ஈடுபட்டனர்.
படம்: எம்.சாம்ராஜ்
3 / 48
புதுச்சேரி ஆளுங்கட்சி அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் தரப்பினருக்கும் எதிர் தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் ஆளுங்கட்சி எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் எதிர் தரப்பினரின் அலுவலகத்தை இன்று சூறையாடினர். இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி... பாதிக்கப்பட்டொர்... புதுச்சேரி - கடலுார் சாலை முதலியார்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
படம்: எம்.சாம்ராஜ்
4 / 48
புதுச்சேரி ஆளுங்கட்சி அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் தரப்பினருக்கும் எதிர் தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் ஆளுங்கட்சி எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் எதிர் தரப்பினரின் அலுவலகத்தை இன்று சூறையாடினர். சூறையாடப்பட்ட அலுவலகத்தின் கண்ணாடிகள் மற்றும் நாற்காலிகள் உடைக்கப்பட்டு சிதறிக் கிடக்கின்றன.
படம்: எம்.சாம்ராஜ்
5 / 48
புதுச்சேரி ஆளுங்கட்சி அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் தரப்பினருக்கும் எதிர் தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் ஆளுங்கட்சி எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் எதிர் தரப்பினரின் அலுவலகத்தை இன்று சூறையாடினர். இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி... பாதிக்கப்பட்டோர்... புதுச்சேரி - கடலுார் சாலை முதலியார்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
6 / 48
கரோனாவினால் பாதிக்கப்பட்ட சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு மட்டும் இலவச அரிசி இப்போது வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து மஞ்சள் நிற அட்டை தார்களுக்கும் இலவச அரிசியை உடனடியாக வழங்கக் கோரி பாஜக சார்பில் குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு இன்று
கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
படம்: எம்.சாம்ராஜ்
7 / 48
மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தலைமை போக்குவரத்து அலுவலகம் முன்பு ... அனைத்துக் தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
படம்: எஸ்>கிருஷ்ணமூர்த்தி
8 / 48
9 / 48
இன்று மதுரையில் அனைத்துக் கட்சி தொழிற்சங்கங்கள் சார்பில் மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் உள்ள அமைப்புசாராத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் முன்பு
தனியார் மயமாக்கப்படும் மின்சாரத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அனைத்து முறைசாராத் தொழிலாளர்களுக்கும் உடனடியாக நிவாரண நிதியும் மளிகைப் பொருட்களும் வழங்க வேண்டும், வட மாநிலத் தொழிலாளர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்துவதற் எதிர்ப்பு.. என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம்; எஸ் .கிருஷ்ணமூர்த்தி
10 / 48
மனிதாபிமானச் செயல்:
மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தின்போது... சாலையின் நடுவில் ஒரு சிறுவன் தான் செல்லமாக வளர்க்கும் நாயை அழைத்து சென்றார். திடீரென அந்த நாய்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அது நடக்க முடியாமல் சாலையிலேயே படுத்துக் கொண்டது மனிதநேயமிக்க ஒரு போலீஸார் ... அப்போது சாலையில் சென்ற 3 சக்கர சைக்கிளை அழைத்து... அந்தச் சிறுவனையும் நாயையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வைத்தார். இச்செயலால் அப்போலீஸாரை அங்கிருந்தோர் பெருமதிப்புடன் பார்த்தனர்.
படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
11 / 48
12 / 48
கரோனா ஊரடங்கு உத்தரவினால் வேலை பார்க்க முடியாமல் இருந்தது . தற்போது வேலை பார்க்க கடைவிரித்தாலும் யாரும் வரவில்லை... என ஏக்கத்துடன் வாடிக்கையாளர் வருகையை எதிர்நோக்கி... பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில்... வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார் பாதையோர
செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர்.
படம்: மு.லெட்சுமு அருண்
13 / 48
தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளில் இருந்து புலம் பெயர்ந்து வட மாநிலங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அகமதாபாத் நகரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் இன்று திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர்.
படங்கள்: ஞானவேல் முருகன்
14 / 48
15 / 48
தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளில் இருந்து புலம் பெயர்ந்து வட மாநிலங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அகமதாபாத் நகரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் இன்று திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். இதையடுத்து - திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள்
கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்து மூலம் செல்ல வரிசையாக நிற்கின்றனர்.
படங்கள்: ஞானவேல் முருகன்
16 / 48
17 / 48
தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளில் இருந்து புலம் பெயர்ந்து வட மாநிலங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அகமதாபாத் நகரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் இன்று திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். இதையடுத்து அவர்களில் சிலர் -
திருச்சியில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்ட ரயிலில் புறப்பட்டபோது--- ரயிலில்
இருந்த குழந்தையின் முகம் ஜன்னல் வழியே அனைவரும் நன்றிசொல்வது போலிருந்தது.
படம்: ஞானவேல் முருகன்
18 / 48
மாங்காய் சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஊரடங்கு காரணமாக ஆந்திர மாநிலம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வேலூர்
மாங்காய் மண்டிக்கு வரும் மாங்காய் வரத்து வழக்கத்தை காட்டிலும் குறைந்து காணப்படுகின்றது. இருப்பினும் குறைவாக வந்திருக்கும் மாங்காய்களை கைப்பார்த்து... வகைபிரிக்கும் வேலையில் மண்டி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
படங்கள்: வி.எம்.மணிநாதன்
19 / 48
20 / 48
தாகம் கொண்ட உயிரினங்கள்:
கரோனா வைரஸ் தொற்று அச்சம் ஒரு பக்கமிருக்க... சேலம் மாவட்டத்தில் கோடை வெயில் கடந்த 4 நாட்களாக 100 டிகிரியை தாண்டியவாறே உள்ளது.
இதனால் பொது மக்கள் மட்டுமின்றி விலங்குகள் , பறவைகளும் சிரமத்துக்குள்ளாகின்றன.
தற்போது ஏற்காடு மலைப் பகுதியில் நிலவி வரும் கடும் வெயிலால் தண்ணீர் மற்றும் உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான குரங்குகள் மலை அடிவாரத்தை நோக்கி வருகின்றது. இங்கும் தண்ணீர் தொட்டிகளில் முறையாக தண்ணீர் நிரப்பாமல் உள்ளதால் தாகத்தை தணித்துக்கொள்ள முடியாமல் - ல் குரங்குகள் தவித்து வருகின்றன.
வனத் துறையினர் இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படம் : எஸ்.குரு பிரசாத்
21 / 48
22 / 48
நாடுமுழுவதும் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின. ரயில்வே அறிவித்துள்ள 200 விரைவு ரயில்களில் தமிழகத்துக்கு எதுவும் இல்லாததால், சென்னை சென்ட்ரல் முன்பதிவு மையத்தில் நேற்று கூட்டம் இல்லாமல் இருந்தது.
படம்: க.ஸ்ரீபரத்
23 / 48
24 / 48
கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமலில் இருக்கும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட
ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் வசிக்கும்
பொதுமக்களுக்கு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்
தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அக்கட்சியினர் இன்று (22.5.2020)
நிவாரண பொருட்களை வழங்கினர்.
படம் : க.ஸ்ரீபரத்
25 / 48
26 / 48
திமுக கட்சியில் இருந்து விலகிய வி.பி. துரைசாமி பாஜக கட்சியின் தமிழ்நாடு தலைவர் முருகன் தலமையில் பாஜக கட்சியில் இன்று தன்னை இணைத்துக்கொண்டார்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
27 / 48
28 / 48
29 / 48
சாலைகளில் வாகனங்களின் அணிவகுப்புகளை மட்டுமே பார்த்து வந்த நம் கண்களுக்கு... இது புதிதுதானே.
கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக அமலில் உள்ள ஊரடங்கு நேரத்தில்... இந்தச் சாலைகள் எல்லாம் தங்களுக்காகவே அமைக்கப்பட்டது போல் ஹாயாக... நடைபோடும் நாட்டு மாடுகள்
இடம் : மணிமங்கலம் - ஸ்ரீபெரும்புதூர் சாலை.
படங்கள்: எம். முத்து கணேஷ்
30 / 48
31 / 48
வேலூர் மாவட்டத்தில் இருந்து கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தோட்ட வேலைக்காக சென்று ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட அணைக்கட்டு தொகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக, கேரளாவில் இருந்த வேலூர், திருவண்ணாமலையை சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் மீட்டு அழைத்து வரப்பட்டு ஒடுக்கத்தூர் அரசு பெண்கல் மேல்நிலைப் பள்ளியில் தங்க வைத்து, அனைவருக்கும் கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என பிசிஆர் பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இவர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கி அவர்களின் சொந்த மலை கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
படங்கள்: வி.எம்.மணிநாதன்.
32 / 48
33 / 48
34 / 48
35 / 48
சென்னை போயஸ் கார்டனில் உள்ள - தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற இன்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து... அந்த நிலத்தை கையகப்படுத்தும் விதமாக வருமானவரித் துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது .
படங்கள்: க.ஸ்ரீபரத்
36 / 48
37 / 48
வரும் 25-ம் தேதி முதல் உல்நாட்டு விமானச் சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில்... கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என ஸ்டிக்கர் ஓட்டும் பணி, கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்வது, இடைவெளி விட்டு உட்காருவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
படங்கள்: ஜெ .மனோகரன்
38 / 48
39 / 48
40 / 48
41 / 48
கோவை ஒப்பணக்கார வீதியில் நேற்று மாநகர காவல் துறை சார்பில் நடைபெற்ற கரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு நிழ்ச்சியில் கலந்து கொண்ட நடனக் கலைஞர்கள்.
படங்கள்: ஜெ .மனோகரன்
42 / 48
43 / 48
44 / 48
இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில்:
கரோனா தொற்று அச்சத்தில் - தமிழகம் முழுவதும் மக்கள்.. வீடுகளில் முடங்கியிருக்க, தன் பங்குக்கு வெயிலும் மக்களை வெளியில் தலைகாட்டவிடாமல் செய்து வருகிறது. இந்நிலையில் - குருதிச் சிவப்புப் பின்னணியில் மறையும் சூரிய ஒளியில்.... மிளிரும் செம்பரம்பாக்கம் ஏரியும்... அதில் நீந்தும் நீர் கோழிகளும் விழிகளுக்கு விருந்து வைத்தன.
படங்கள்: எம்.முத்து கணேஷ்
45 / 48
வேலூர் தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தில் மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மற்றும் அகில இந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் அமைப்பு சார்பில், 8 மணி நேர அலுவலகப் பணியை 12 மணி நேரமாக உயரத்தக் கூடாது, முடக்கப்பட்ட 4 சதவீத கிராக்கிப்படியை உடனே வழங்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
படம்: வி.எம்.மணிநாதன்
46 / 48
வேலூரில் நேற்று - அந்திப்பொழுதில்.... வானில் திரண்ட கருமேகக் கூட்டம்.... பலத்த காற்று வீசிட.... சின்னச் சின்ன மழைத் தூறலுடன் கலைந்துச் சென்றது.
படங்கள்: வி.எம்.மணிநாதன்
47 / 48
48 / 48