1 / 51
புதுச்சேரி - கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில்… புதுவை தமிழ்ச்சங்கம் வளாகத்தில் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உருவப்படத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம், மாநில கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் எல்லை சிவக்குமார், ஆசிரியர் சீனு மோகன்தாஸ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று (26.9.2020) மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர்.
படங்கள் : எம்.சாம்ராஜ்
2 / 51
3 / 51
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உருவப் படத்துக்கு இன்று (26.9.2020) புதுச்சேரியில் - இசை கலைஞர்கள் சங்கத்தினர் மலர்த் துாவி அஞ்சலி செலுத்தினர்.
படங்கள் :எம்.சாம்ராஜ்
4 / 51
5 / 51
புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவையொட்டி… மதுரை - எல்லீஸ் நகர் வசந்தம் குடியிருப்பு சங்கம் சார்பாக இன்று (26.9.2020) மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
படம் : எஸ் கிருஷ்ணமூர்த்தி
6 / 51
புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவையொட்டி… சென்னையில் அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு… எஸ்.பி.பி வீட்டில் வழக்கமாக பூஜைசெய்ய வரும் வேத விற்பன்னர்கள் அஞ்சலி செலுத்த நேற்று (25.9.2020) வந்திருந்தனர்.
படம் : ம.பிரபு
7 / 51
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அவரது உடல் வைக்கப்பட்டிருந்த அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்த நேற்று (25.9.2020) நீண்ட வரிசையில் கண்ணீருடன் காத்திருந்த இசை ரசிகர்கள்.
படங்கள்: ம.பிரபு
8 / 51
9 / 51
10 / 51
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நேற்று (25.9.2020) மதியம் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டிருந்தது.
படம் : ம.பிரபு
11 / 51
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நேற்று (25.9.2020) மதியம் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு அவரது இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு எடுத்து செல்வதற்காக தயார் நிலையில் இருந்த வாகனம்.
படம் : ம.பிரபு
12 / 51
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நேற்று (25.9.2020) மதியம் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களும், செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களும் அவரது இல்லத்தின் முன்பு திரண்டிருந்தனர்.
படம் : ம.பிரபு
13 / 51
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழை… நேற்று (25.9.2020) மதியம் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்துக்குள் கொண்டு செல்லப்பட்டது.
படம் : ம.பிரபு
14 / 51
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நேற்று (25.9.2020) மதியம் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களும், செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களும் அவரது இல்லத்தின் முன்பு திரண்டிருந்தனர். இந்நிலையில் அவரது இல்லத்தின் முன்பு ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
படம் : ம.பிரபு
15 / 51
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இன்று (26.9.2020) மதியம் நடைபெற்ற இறுதிச் சடங்கின்போது அவரது உடலுக்கு கங்கை நீரால் நீராட்டும் அவரது மனைவி. அருகில் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.பி.சரண்.
படம்: ம.பிரபு
16 / 51
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இன்று (26.9.2020) மதியம் நடைபெற்ற இறுதிச் சடங்கையொட்டி அவரது உடலுக்கு கங்கை நீரால் அவரது மனைவி நீராட்டியபோது… கண்ணீர் சிந்திய தங்கை பல்லவியின் தலையை கோதி ஆறுதல் தெரிவிக்கும் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.பி.சரண்.
படம் : ம.பிரபு
17 / 51
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இன்று (26.9.2020) மதியம் நடைபெற்ற இறுதிச் சடங்கையொட்டி அவரது உடலுக்கு கங்கை நீரால் நீராட்டிவிட்டு… கண்ணீர் சிந்திய தாயை அணைத்துக்கொண்டு ஆறுதல் தெரிவிக்கும் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.பி.சரண்.
படம்: ம.பிரபு
18 / 51
படம் 18
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை கவுரவிக்கும் வகையில் உரிய அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து… இன்று (26.9.2020) மாலையில் அவரது இறுதி சடங்கின்போது 24 காவலர்கள் 3 முறை 72 குண்டுகள் முழங்க… அரசு மரியாதை வழங்கப்பட்டது.
படம் : ம.பிரபு
19 / 51
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை கவுரவிக்கும் வகையில் உரிய அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து… இன்று (26.9.2020) மாலையில் அவரது இறுதி சடங்கின்போது அரசு மரியாதையுடன் காவலர்கள் புடைசூழஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
படங்கள் : ம.பிரபு
20 / 51
21 / 51
22 / 51
23 / 51
24 / 51
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இன்று (26.9.2020) மதியம் அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய், அர்ஜுன் ஸ்ரீரெட்டி, மயில்சாமி, வெங்கட்பிரபு, வைபவ், நடிகர் ரகுமான், இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோர் படங்கள் : ம.பிரபு
25 / 51
26 / 51
27 / 51
28 / 51
29 / 51
30 / 51
31 / 51
32 / 51
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு முன்பு இன்று (26.9.2020) அஞ்சலி செலுத்த திரண்டிருந்த இசை ரசிகர்கள்.
33 / 51
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு முன்பு இன்று (26.9.2020)
இரு கால்களை இழந்த இசை ரசிகர் ஒருவர் அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.
34 / 51
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு இன்று (26.9.2020) வந்த நடிகர் மயில்சாமி 1000 தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை சூட்டி அஞ்சலி செலுத்தினார்.
35 / 51
36 / 51
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு இன்று (26.9.2020) அஞ்சலி செலுத்த வந்த
பாடகர் மனோ கண்ணீர் விட்டு அழுதார்.
படங்கள் : ம.பிரபு
37 / 51
சென்னை - பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில்... மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பிபியின் உருவப் படத்துக்கு இப்பகுதி பொதுமக்கள் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர்.
38 / 51
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி-க்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று (26.9.2020) கேரள உயர் அதிகாரி அனுபி சாக்சோ ஐஏஎஸ் அஞ்சலி செலுத்தினார்.
படம்; ம.பிரபு
39 / 51
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி-க்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று (26.9.2020) ஆந்திர நீர்பாசன அமைச்சர் அனில்குமார் யாதவ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
படம் ; ம.பிரபு
40 / 51
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி-க்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று (26.9.2020) திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்தினார்.
படம் ; ம.பிரபு
41 / 51
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி-க்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று (26.9.2020) அமைச்சர் பாண்டியராஜன் அஞ்சலி செலுத்தினார்.
படம் : ம.பிரபு
42 / 51
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அவரது தாமரைப்பாக்கம் பண்ணை இல்லத்தில் இன்று (26.9.2020) இறுதிச் சடங்குகள் நடைப்பெற்றதையொட்டி... அவரது மகன் எஸ்.பி.பி சரண் கண்ணீருடன் சடங்குகளை நிறைவேற்றினார்.
படங்கள் ம.பிரபு
43 / 51
44 / 51
45 / 51
46 / 51
47 / 51
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு இன்று (26.9.2020) மாலையில்... அந்த மகா கலைஞனின் பூவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
படம் : ம.பிரபு
48 / 51
49 / 51
50 / 51
51 / 51