Published on : 21 May 2020 16:53 pm

பேசும் படங்கள்... (21.05.2020)

Published on : 21 May 2020 16:53 pm

1 / 40
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையெட்டி இன்று (21.5.2020) சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப் படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலமையில் அக்கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். படம்: க.ஸ்ரீபரத்
2 / 40
சென்னை - ராதாகிருஷ்ணன் சாலையில் நடைபெற்ற விழாவில் சென்னை சிவில் சப்ளை டிஜிபி பிரதீப் பிளிப் மற்றும் மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் போக்குவரத்து காவலர்களுக்கு உற்சாக பானம் மற்றும் கிருமிநாசினி பவுடர் கொடுத்தனர். உடன் ராயப்பேட்டை காவல் துணை ஆணையர் பாஸ்கர், தெற்கு போக்குவரத்து துணை ஆணையர் எழிலரசன் உள்ளனர். படம்: க . ஸ்ரீபரத்
3 / 40
வேலூர் - புதிய மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில்... பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியா் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதிகரிக்கக் கூடாது; மருத்துவபடியை 23 நாட்களில் இருந்து 15 நாட்களாக குறைக்கக் கூடாது; பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்க வேண்டும்; ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 10 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: வி.எம்.மணிநாதன்
4 / 40
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக 60 நாட்களாக அமலில் இருந்த - ஊரடங்கு காரணமாக வேலூர் நகர ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை இழந்திருந்தனர். இந்நிலையில் - வேலூர் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பெருந்திரளாக வந்து ’ஆட்டோக்களை இயக்க தங்களை அனுமதிக்க வேண்டும்; ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும்; நலவாரிய குளறுபடிகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். படம்: வி.எம்.மணிநாதன்
5 / 40
குற்றங்கள் மீண்டு எழுகின்றனவா: கரோனா தடுப்புக்காக அமலில் இருந்த ஊரடங்கால் தமிழகத்தில் முழுமையாக குற்ற சம்பவங்கள் இல்லாதிருந்தது. தற்போது ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ஆங்காங்கே சில குற்றச் செயல்கள் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. இன்று (21.5.2020) பெங்களூருவில் இருந்து மதுரைக்கு லாரியில் காய்கறி மூட்டைகளுக்கு மத்தியில் மறைத்து வைத்து கடத்தி செல்ல முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான 24 மூட்டை குட்காக்களை சேலம் மாநகரப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து - சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த குட்காக்களை மாநகரக் காவல் துணை ஆணையர் செந்தில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து, போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர். படம்: எஸ். குருபிரசாத்
6 / 40
மீன்களின் இனப்பெருக்கத்துக்காக மத்திய, மாநில அரசுகள் மீன்பிடித் தடைக் காலத்தை அறிவித்துள்ளன. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலையில்... தங்களுக்குக் கிடைத்த இந்த இடைப்பட்ட நேரத்தில் தங்கள் மீன்பிடி வலைகளைப் பின்னும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: எம்.சாம்ராஜ்
7 / 40
தமிழகத்தில் கரோனா தொற்று... அதிகரித்து வரும் நிலையில்... புதுச்சேரியில் இதன் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று புதுச்சேரி ஐயங்குட்டுப்பாளையத்தில் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இன்று காலை முதல் அந்தப் பகுதி முழுவதும் மூடப்பட்டு... மருத்துவர் மற்றும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. படம்: எம்.சாம்ராஜ்
8 / 40
கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில்... இன்று புதுச்சேரியில் வெயிலின் அளவு சதமடித்துள்ளது. இந்நிலையில் - புதுச்சேரி தர்மாபுரி பகுதியில் சுட்டெரிக்கும் மதிய வெயிலில் லோடு கேரியர் வாகனத்தில் தலை மற்றும் முகங்களை மூடிச் செல்லும் பெண்கள்.. படம்: எம்.சாம்ராஜ்
9 / 40
வேலூர் கோட்டை மைதானத்தில் இருந்த புல்வெளிக்கு... இன்று (21.5.2020) மர்ம நபர்கள் தீ வைத்ததால் - புல்வெளி தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகத்தில் வேகமாக பரவிய தீயை தொல்லியல் துறை ஊழியர்கள் செடிகளைக் கொண்டு அடித்து தீயை அணைத்தனர். படம்: வி.எம்.மணிநாதன்
10 / 40
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக 60 நாட்களாக அமலில் இருந்த - ஊரடங்கு காரணமாக திருநெல்வேலி நகர ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை இழந்திருந்தனர். இந்நிலையில் - நெல்லை ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பெருந்திரளாக வந்து ’ஆட்டோக்களை இயக்க தங்களை அனுமதிக்க வேண்டும்; ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும்; நலவாரிய குளறுபடிகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். படம்: மு.லெட்சுமி அருண்
11 / 40
சென்னையில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள்... அந்த நிறுவனங்களைச் சேர்ந்த வாகனங்கள் மூலம் திருநெல்வேலியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். படம்: மு.லெட்சுமி அருண்
12 / 40
திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆற்று நீரும் குடிநீரும் மஞ்சள் நிறத்தைப் போன்று கலங்கலாக காணப்படுவதால், குடிக்க பயன்படுத்த முடியவில்லை என இப்பகுதி பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில் திருநெல்வேலி - குலவணிகர்புரம் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வந்ததையடுத்து... பொதுமக்களின் குற்றச்சாட்டு உண்மையென உறுதியானது. படம். மு.லெட்சுமி அருண்
13 / 40
மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்தில் பல்வேறு பணிகள் தொடர்பாக... மதுரைக்கு வந்தோர், ஊருக்கு திரும்பிச் செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
14 / 40
கரோனா தொற்று பரவலைத் தடுக்க 55 நாட்களுக்கும் மேலாக அமலில் இருந்த ஊரடங்கால் - தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, தங்களுக்கு கரோனா கால நிவாரணமாக நிதியுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி - தமிழ்நாடு நாடக நடிகர் சங்கத்தின் சார்பாக கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி காமராஜிடம் மனு வழங்கப்பட்டது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
15 / 40
55 நாட்களுக்கு மேலாக ஆட்டோக்களை இயக்க முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தன் குடும்பத்தை காப்பாற்றவும், ஆட்டோ வாங்கிய கடனுக்கான தவணை கட்டவும் வேலூர் அண்ணா சாலைப் பகுதியில் - தனது ஆட்டோவை முகக்கவசம் விற்பனை செய்யும் கடையாக மாற்றியுள்ளார். இடம்: படம்: வி.எம்.மணிநாதன்
16 / 40
17 / 40
இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு உழைக்க வந்த வட மாநிலத்தோர் பலர் இப்போது தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். அவர்களை ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மதுரை - ரயில்வே நிலையத்துக்கு அழைத்துச் செல்ல நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நகரப் பேருந்து - கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. படம்:எஸ் கிருஷ்ணமூர்த்தி
18 / 40
இன்று மதுரையில் தனியார் கல்லூரியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மல்லிகை பூ மொத்த விற்பனை நிலையத்தை வருவாய்த்துறை பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆய்வு செய்தார். அருகில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினயன். படம் :எஸ் கிருஷ்ணமூர்த்தி
19 / 40
இன்று மதுரை ரயில் நிலையத்தில் இருந்து பிஹார் மாநிலத்துக்கு செல்வதற்காக காத்திருக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
20 / 40
பறக்க காத்திருக்கும் அலுமினியப் பறவைகள்: கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க 55 நாட்களுக்கும் மேலாக அமலில் இருக்கும் ஊரடங்கால் விமான சேவை முற்றிலும் முடங்கி போனது. வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் - அதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. நீண்ட நாட்களாக சென்னை விமான நிலையத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்கள் ஆகாயத்தில் பறக்க காத்திருக்கின்றன. படங்கள்: எம்.முத்துகணேஷ்
21 / 40
22 / 40
ஜூன் 1 -தேதி முதல் மீண்டும் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளதையடுத்து... சென்னை விமானநிலையம் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படுகிறது. படங்கள்: எம்.முத்துகணேஷ்
23 / 40
24 / 40
கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் காமராஜ் பவனில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி இன்று (21.5.2020) அக்கட்சியின் மாநிலச் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் அக்கட்சியின் தீவிரவாத ஒழிப்பு நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். படம் : ஜெ .மனோகரன்
25 / 40
அமலில் இருக்கும் ஊரடங்கால் தங்கள் பிழைப்பு நலிவடைந்ததால் - மீண்டும் ஆட்டோக்களை இயக்கவும், தங்களுக்கு நிவாரண நிதி வழங்கவும் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே எம்பி நடராஜன் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : ஜெ .மனோகரன்
26 / 40
சுத்தம் செய்யப்படும் கோயம்பேடு: கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக - மார்ச் 23-ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் - சென்னை நகர மக்களுக்கு சீராக காய்கறிகள், பழங்கள் கிடைக்கும் வகையில் கோயம்பேடு காய்கனி வணிக வளாகம் மட்டும் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சிலருக்கு கரோனா தொற்றுப் பரவியதை அடுத்து அந்த வணிக வளாகம் முழுவதுமாக மூடப்பட்டது. இந்நிலையில் 60 நாட்களாக அமலில் இருக்கும் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து... மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டும் மீண்டும் செயல்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து - தற்போது கோயம்பேடு மார்கெட் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. படங்கள் : ம.பிரபு
27 / 40
28 / 40
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் தற்போது தடை காலம் படிபடியாக இயல்பு நிலைக்கு திரும்புவதால் மார்கெட் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது படங்கள் : ம
29 / 40
பயணிகளின் கனிவான கவனத்துக்கு: கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 நாட்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவில்... சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து சென்னையில் விரைவில் பொது போக்குவரத்து தொடங்கப்படலாம் என்பதால் - அரசுப் பேருந்துகளில் பயணிகள்... சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் - 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் - 2 பயணிகளும்... 2 பேர் அமரக்கூடிய இருக்கையில் ஒரு பயணியும் அமரும் வகையில் கோயம்பேடு பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பேருந்துகளில் எண்கள் வரையப்படுகின்றன. படம்: ம.பிரபு
30 / 40
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக - அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில்... பொதுமக்களில் சிலர்... சில விதிமுறைகளை மீறும் விதமாக... சாலைகளில் வாகனங்களில் சுற்றித் திரிந்தனர். அவர்களில் சிலரது வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்த நடவடிக்கையும் ஆங்காங்கே நிகழ்ந்தன. இந்நிலையில் ஒரு சிலர் உரிமம் இல்லாமலே கூட வாகனங்களில் திரிந்ததால் - அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து... தற்போது - குறைவான ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில் - இன்று கீழ்ப்பாக்கம் அருகே உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வாகன உரிமம் (லைசென்ஸ்) எடுக்க பலர் ஆர்வமாக கூடியிருந்தனர். படங்கள்: ம.பிரபு
31 / 40
32 / 40
33 / 40
மருத்துவ சிகிச்சை பெறவும்... பல்வேறு தொழில் தொடர்பாகவும்... வடமாநிலங்களில் இருந்து வேலூருக்கு வந்த பலர் - ஊரடங்கு காரணமாக இங்கேயே முடங்கினர். ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் அவர்களை சிறப்பு ரயில் மூலம் மீண்டும் அவர்களின் சொந்த மாநிலத்துக்கு அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து இன்று - பிஹார் மாநிலத்துக்கு 1,450-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். படம்: வி.எம்.மணிநாதன்
34 / 40
35 / 40
36 / 40
37 / 40
38 / 40
ஊரடங்கால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு - பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்... மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.20 குறைக்க வேண்டும், சுங்கச்சாவடி கட்டண வசூலை 6 மாதங்களுக்கு நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த... வேலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, விஜய் கோவிந்தராஜ் ஆகியோர் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். இச்சந்திப்பின்போது அவர்கள் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு வருவதாகக் கூறி பாராட்டும் தெரிவித்தனர், படம்: வி.எம்.மணிநாதன்
39 / 40
வெப்ப சலனம் காரணமாக... இன்று மாலைவேளையில்... வேலூரில் சிறிது நேரம் பெய்த மழையினால் தேசிய நெடுஞ்சாலையில்... தேங்கிய மழைநீர். படம்: வி.எம்.மணிநாதன்
40 / 40

Recently Added

More From This Category

x