1 / 61
50 சதவீதப் பணியாளர்களுடன் நேற்று (மே 18) முதல் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் - இன்று அரசுப் பேருந்தில் பணிக்கு வந்த தலைமைச் செயலகப் பணியாளர்கள்.
படம்: க.ஸ்ரீபரத்
2 / 61
3 / 61
4 / 61
50 நாள் ஊரடங்கு உத்தரவையடுத்து... தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில்.... புதுச்சேரியிலும் மீண்டும் மதுக்கடைகளை திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையில் நேற்று (மே 18) நடந்தது . இதைத் தொடர்ந்து புதுவையில் - காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டது.
படம்: எம்.சாம்ராஜ்
5 / 61
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்ததையடுத்து புதுச்சேரிப் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
படம்: எம்.சாம்ராஜ்
6 / 61
தமிழகத்தில் - 50 நாட்களுக்கும் மேலாக அமலில் இருந்த முழு ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் - சென்னை - தலைமைச் செயலகத்தில் இருக்கும் நாமக்கல் கவிஞர்
மாளிகையில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகம் - 50 சதவீத ஊழியர்களுடன் நேற்று (மே 18) முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
படம் கஸ்ரீபரத்
7 / 61
8 / 61
9 / 61
தமிழகத்தில் - 50 நாட்களுக்கும் மேலாக அமலில் இருந்த முழு ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், சென்னை - தலைமைச் செயலகத்துக்கு பணிக்குத் திரும்பும் அரசு ஊழியர்கள்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
10 / 61
11 / 61
12 / 61
13 / 61
சென்னை பெருநகர காவல் துறையில் - கரோனா வைரஸ் தொற்றால் முதலில் பாதிக்கப்பட்ட B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ச.அருணாசலம் சிகிச்சை பெற்று... பூரண குணமடைந்து இன்று பணிக்கு திரும்பினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் இன்று காலை எஸ்பிளனேடு காவல் நிலையத்துக்குச் சென்று, பணிக்கு திரும்பிய உதவி ஆய்வாளர் அருணாச்சலத்தை சந்தித்து வாழ்த்தினார்.
படம்: க.ஸ்ரீபரத்
14 / 61
15 / 61
மது பானங்கள் பதுக்குவதை தடுக்கும் விதமாக புதுச்சேரி கலால் துறையின் மூலம் மது விற்பனையை கண்காணிக்க புதிய செயலியின் செயல்பாட்டை புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் நேற்று (மே 18) தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் அருண்.
படம்.எம். சாம்ராஜ்
16 / 61
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக... வேலூர் கிரீன் சர்க்கில் பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளித்த மாநகராட்சி ஊழியர்கள்.
படம்: வி.எம்.மணிநாதன்.
17 / 61
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி மைதானத்தில்... தீயணைப்பு வாகனம் மூலம் நேற்று (மே 18) கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
படம்: வி.எம்.மணிநாதன்.
18 / 61
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து இன்று சிறப்பு ரயில் மூலம் உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்ல காத்திருக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள்.
படம்; எஸ் கிருஷ்ணமூர்த்தி
19 / 61
தமிழகத்தில் - ஊரடங்கு சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் தொடரும் என அரசு அறிவித்திருந்தது. இதனால் சேலத்தில் பொதுமக்கள் தங்கள் பணிக்கு செல்வதற்காக நேற்று ( மே 18) வீட்டைவிட்டு வெளியே வந்ததால்... சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
படம்: எஸ்.குரு பிரசாத்
20 / 61
கரோனா வைரஸ் தொற்றில் இiருந்து தற்காத்துக்கொள்ள முகக்கவசமும் அவசியமான ஒன்றே. இந்நிலையில் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாய் மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மூலமாக பேசிக்கொள்ள வசதியாக டிரேஸ்பரன்ட் முகக்கவசம் வழங்கப்பட்டது. முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்ட இளைஞர்கள்.
படங்கள் : எஸ்.குரு பிரசாத்.
21 / 61
22 / 61
4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் திண்டுக்கல் நகரில் இயல்பு வாழ்க்கை திரும்பியதால்... கடைவீதியில் காணப்பட்ட போக்குவரத்து நெரிசல்.
படங்கள்: பு.க.பிரவீன்
23 / 61
24 / 61
செவ்வால... தாவுடா தாவு:
ஊரடங்கு, கோடை விடுமுறை இரண்டும் சேர்ந்து கல்வி நிலையங்கள் மூடிக் கிடப்பதால் - வேலூர் அடுத்த திம்மணாச்சாரி குப்பத்தில் பச்சைக் குதிரை தாண்டி விளையாடும் கிராமத்து விளையாட்டு மன்னர்கள்.
படம்: வி.எம்.மணிநாதன்
25 / 61
26 / 61
சமூக ’குடை’வெளி:
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மதுக்கடைகளைத் திறக்காததால் - சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா அருகே ஊத்துகாடு பகுதியில் உள்ள மதுக்கடையில் 3-வது நாளான நேற்று மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக - குடையுடன் நேற்று ஆஜராயினர்.
பள்ளிப்பருவத்தில் கூட இவர்கள் - இவ்வளவு ஒழுக்கமாக இருந்திருப்பார்களா என்பது தெரியாது... அவ்வளவு ஒழுக்கம். போலீஸார் சொன்ன இடத்தில் குடைவெளியுடன்... குத்த வைத்து, நின்று, நடந்து... அமைதி காத்து... மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
27 / 61
28 / 61
வாலாஜா அருகே ஊத்துகாடு பகுதியில் வயல்வெளியில் அமைந்துள்ள மதுக்கடைக்கு போலீஸார் உத்தரவுக்கேற்ப... குடைகளுடன் பயணிக்கும் மதுப்பிரியர்கள்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
29 / 61
30 / 61
மதுரை பொன்னகரம் பகுதியில் மதுபானக் கடையை மூடச் சொல்லி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று ( மே 18) போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸார் கையைப் பிடித்துத் தூக்கி அப்புறப்படுத்தினர்.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
31 / 61
32 / 61
கரோனா தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு - முன்னெச்சரிக்கையாக...
சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் - தமிழகம் முழுக்க
ஊரடங்கு தொடரும் நிலையில் - மதுரை மாட்டுத்தாவணி பழச்சந்தையில் - அன்னாசிப் பழங்களுக்கு உரிய
விலை கிடைக்காததால்... அங்குள்ள வியாபாரிகளில் சிலர்...
அன்னாசிப் பழங்களைக் குப்பையில் கொட்டி செல்லும் அவலத்தை என்னவென்று சொல்ல!
-படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
33 / 61
தயாராகும் பள்ளிகள்:
ஜூன் 15-ம் தேதி தொடங்கவிருக்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் - கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நகராட்சியினர் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். படங்கள்: எம்.முத்து கணேஷ்
34 / 61
35 / 61
சிங்கங்கள் குளிக்கும்... அசிங்கங்கள் அகலும்:
இந்தியாவின் தேசியச் சின்னம் ‘ அசோகத் தூணில் உள்ள நான்முக சிங்கங்கள் என்பது
நமக்குத் தெரியும். இதை வடிவமைத்தவர் பிரபல ஓவியர் தீனாநாத் பார்கவா ஆவார். பல
இடங்களில் அமையப்பெற்றுள்ள - இந்தப் பெருமை மிகு சின்னத்தை இந்தியர்கள் நாம்
பெரிதும் மதிக்கிறோம். சென்னை - தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில்
இந்தப் பெருமைமிகு தேசிய சின்னம் மாணவ செல்வங்களின் பார்வைக்காக பள்ளி
முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் - கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக இப்பள்ளியை தாம்பரம்
நகராட்சி கிருமிநாசினி தெளித்து... இன்று சுத்தப்படுத்தியபோது... நகராட்சி ஊழியர்
ஒருவர் - இந்த தேசிய சின்னத்தையும் நீர் தெளித்து சுத்தம் செய்தார்.
படம்: எம்.முத்துகணேஷ்
36 / 61
கையெடுத்து கும்பிட்ட மதுப்பிரியர்:
புதுச்சேரியில் - மதுக்கடைகள் இன்று காலை முதல் திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார். இதனால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் - மதுக்கடைகள் திறப்பதற்கான ஆணையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கையெழுத்திட மறுத்ததையடுத்து, புதுச்சேரியில் இன்று மது க்கடைகள் திறக்கப்படவில்லை .
இது தெரியாமல் இன்று காலைமுதலே மதுக்கடைகள் முன்பு மதுப்பிரியர்கள் கூடிவிட்டனர். நேரமாக ஆக கடை திறக்காமல் பூட்டியிருந்த கடைகளைப் பார்த்து மதுப்பிரியர்கள் ஆவேசமடைந்தனர். ஒரு சிலர் ‘தயவுசெய்து கடைகளைத் திறங்கப்பா...;; என கையெடுத்து கும்பிட்டதையும் காணமுடிந்தது.
படம்: எம்.சாம்ராஜ்
37 / 61
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள உம்பன் புயல் காரணமாக - விழுப்புரம் மாவட்டம், பொம்மையார் பாளையம் கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து கடல் அலைகளின் ஆர்பரிப்பரிக்கும் சீற்றத்தால் கடலுக்குள் விழுந்து கிடக்கிறது சில வீடுகள்.
படம்: எம்.சாம்ராஜ்
38 / 61
39 / 61
40 / 61
இது கோடைக்காலம். தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருவதையடுத்து புதுச்சேரி வனத் துறை சார்பில் கூண்டில் வளர்க்கப்படும் புள்ளி மான்களுக்கு குளிர்ச்சியுட்டும் விதமாக... தர்பூசணி, வாழைப்பழங்கள், பப்பாளி பழங்கள் என பல்வேறு விதமான பழ வகைகள் உணவாக வழங்கப்படுகின்றன.
படம்: எம்.சாம்ராஜ்
41 / 61
ஈரவளம் இழந்த வைகை:
வைகை.... இந்தப் பெயரை கேட்டாலே ஈரத்தின் மென்குளிர்ச்சியும்... பட்டுப்பட்டரும் தண்ணீரின் ஜலதரங்கமும்... கண் முன்னால் நீர்க்கோலமிடும். ஆ..னால்
சித்திரை - வைககாசியின் கத்திரி வெயில் காரணமாக மதுரை வைகை ஆறு இப்போது வறண்ட பூமியாகக் காணப்படுகிறது.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
42 / 61
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு... ஏஐடியுசி மாவட்டத் தொழிலாளர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
43 / 61
மீண்டும் கடை திறக்க அனுமதியுங்கள்:
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... கடந்த 55 நாட்களுக்கும் மேலாக மத்திய மற்றும் மாநில அரசின் உத்தரவுப்படி தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் சில கட்டுப்பாடுகளுடன் பல்வேறு நிறுவனங்கள், கடைகள், தொழில்கள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளன. ஆனால் 55 நாட்களுக்கும் மேலாக - முடங்கிக் கிடக்கும் தாங்கள் மீண்டும் தொழிலைத் தொடங்கவும், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் - மருத்துவர் சமூக நலச் சங்கம் சார்பில் முடித்திருத்துவோர் - மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
44 / 61
கரோனா ஊரடங்கு பாதிப்பால் சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நிகழ்ந்த வேலையின்மையால் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுவந்த வடமாநிலத் தொழிலாளர்கள்.. தங்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்ப தொடங்கியிருக்கின்றனர்.
சொந்த ஊருக்குத் திரும்ப விரும்பிய வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பல்லாவரம் காவல் நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை நடைபெற்று, பிறகு பேருந்துகள் மூலமாக அவர்கள் ஊருக்கு ரயிலில் செல்ல - சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
படங்கள்: எம்.முத்து கணேஷ்
45 / 61
46 / 61
போராடினால்... கைதா?
தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கரோனா நிதி உதவியை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடக் கோரியும், எழை எளிய மக்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரியும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
படம்: வி.எம்.மணிநாதன்
47 / 61
48 / 61
ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு... மீண்டும் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்கேட்டு... வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த ஆட்டோ ஓட்டுநர்கள்.
படம்: வி.எம்.மணிநாதன்
49 / 61
மீண்டும் தலையலங்காரம்:
வேலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் முடி திருத்தும் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வேலூரை அடுத்த பொய்கை மோட்டூர் பகுதியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கடையைத் திறந்து தங்களின் வாழ்வாதாரத் தொழிலை தொடங்கிய முடிதிருத்தும் தொழிலாளி.
படம்: வி.எம்.மணிநாதன்
50 / 61
பலூன்காரர்கள் வராத தெரு ஒரு தெருவா?
தமிழகத்தில் - தஞ்சம் புகுந்து உழைத்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என அரசிடம் அனுமதிக் கேட்டுகொண்டிருக்க.. இந்நிலையில் திருநெல்வேலி ரயில்வே நிலையம் அருகில் வசிக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த சிறு வியாபாரிகள்... தன்னம்பிக்கையுடன் பலூன் விற்றுப் பிழைக்க... உற்சாகமாக முகமலர்ச்சியுடன் நேற்று புறப்பட்டனர் . ஆம்... பலூன்காரர்கள் வராத தெரு.... ஒரு தெருவா?
படம்: மு.லெட்சுமி அருண்
51 / 61
நெடுநாட்களுக்குப் பிறகு சிறு அளவிலான கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கியதால் - கட்டிட வேலையாட்களுக்கு வேலை கிடைத்துள்ளது. திருநெல்வேலி - வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணியில் ஈடுபடும் உழைப்பாளிகள்.
படம: மு .லெட்சுமி அருண்
52 / 61
வேலூரில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்று வீசியதால்... பொய்கை மோட்டூரில் விவசாய நிலங்களில் இருந்த மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், அப்பகுதியில் இன்று மின்சார விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டது.
படம்: வி.எம்.மணிநாதன்
53 / 61
54 / 61
சேற்று வயலாடி... நாற்று நட ஆசை:
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருந்தபோது - வேளாண்மைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் - வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் தனி நபர் இடைவெளியுடன் ’ஐ.ஆர் - 50’ ரக நெல் நாற்றுக்களை... நடவு செய்யும் விவசாயப் பெண்கள். வாழ்க அம்மாக்களே!
படம்: வி.எம்.மணிநாதன்
55 / 61
ஊரடங்கு அமலில் இருந்த 50 நாட்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி... கடந்த வாரம் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில்... சில ஊர் டாஸ்மாக் கடைகளின் முன்பு 3 கிலோ மீட்டர் தூரத்துக்கும் குடிமகன்கள் வரிசையில் நின்றதை... நாம் எல்லோரும் ஊடகங்களில் கண்டு களித்தோம்.
இந்நிலையில் - கோவை மாதம்பட்டி சாலையோரத்தில் தாங்கள் நெஞ்சு முட்ட முட்ட... குடித்து முடித்த மது பாட்டில்களை வீசியெறிந்துள்ள குடிமகன்கள்.
படம் :ஜெ மனோகரன்
56 / 61
57 / 61
வழக்கமாக மே மாதத்தில் கூட்டமாக காணப்படும் கோவை குற்றாலம்... ஊரடங்கு உத்தரவு காரணமாக வெறிச்சோடிக் காணப்படுகிறது. தண்ணீர்வரத்தும் குறைந்து காணப்படுகிறது.
படம் :ஜெ மனோகரன்
58 / 61
59 / 61
50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள் பணிக்கு சென்று வர, வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில்... வாலாஜா, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர் உள்ளிட்ட பல ஊர்களுக்கு வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
படம்: வி.எம்.மணிநாதன்
60 / 61
61 / 61
வேலூர் மாவட்டத்தில் பெரிய கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்கக் கோரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த வேலூர் அனைத்து வணிகர்கள் சங்கத்தினர்.
படம்: வி.எம்.மணிநாதன்