1 / 42
மீண்டும் பேருந்து பயணம்:
50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படலாம் என அரசு அறிவித்திருந்த நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து பணிக்கு வரும் அரசு ஊழியர்களுக்காக, வேலூர் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்துக்கு அரசு சிறப்புப் பேருந்து நேற்று இயக்கப்பட்டது . பேருந்தில் தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் 20 அரசு ஊழியர்கள் அமர்ந்து பயணம் செய்தனர்.
படங்கள்: வி.எம்.மணிநாதன்
2 / 42
3 / 42
4 / 42
திருச்சி நகரில் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்கக் கோரியும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கக் கோரியும், திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர்கள்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.
5 / 42
6 / 42
மத்திய நிதி அமைச்சரின் ’கரோனா நிதியுதவி அறிவிப்பு’ தமிழக விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகக் கூறி, திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கோவனத்துடன் வந்து மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத் தலைவர் ப் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்
7 / 42
8 / 42
முடித் திருத்தும் தொழிலுக்கு அனுமதியும், உரிய நிவாரணமும் வழங்க வலியுறுத்தி, திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுக்க வந்த திருச்சி மாவட்ட மாநகர மருத்துவர் மற்றும் முடித்திருத்தும் தொழிலாளர் பாதுகாப்பு நலச் சங்கத்தினர்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.
9 / 42
கரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கைக்காக... 4-ம் கட்ட ஊரடங்கில், தமிழகத்தின் 25 மாவட்டங்களுக்கு சில புதிய தளர்வுகள் அளிக்கப்பட்டு, 50 சதவீதம் ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்.
படங்கள்: வி.எம்.மணிநாதன்
10 / 42
11 / 42
பிச்சைக்காரர் வழங்கிய ரூ.10 ஆயிரம் நிதியுதவி:
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர், ஒரு பிச்சைக்காரர். இன்று அவர் - மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கரோனா நிவாரண நிதியாக ரூபாய் 10 ஆயிரத்தை நேரில் சென்று வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ’’கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக மதுரை வந்து, நடைபாதைகளில் சாலையோரங்களில் தங்கியிருந்த என்னை... தன்னார்வலர்கள் சிலர் மீட்டு மதுரை மாநகராட்சி ஆதரவோடு தங்க வெச்சிருத்தாங்க. இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்காக என்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்று நினைச்சேன். மதுரை மாட்டுத்தாவணி சந்தை, பழ சந்தை, பூ மார்க்கெட்டு போன்ற இடங்களில் பிச்சை எடுத்து 10 ஆயிரம் ரூபாய் சேர்த்தேன். அந்தத் தொகையைத்தான் மதுரை கலெக்டரிடம் கொடுத்திருக்கிறேன்’’ என்றார்.
மேலும் அவர் கூறும்போது, ’’கடந்த 40 ஆண்டுகளாக நான் பிச்சை எடுத்த காசில் ஏகப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு நாற்காலி மேசை போன்றவை வாங்கித் தந்துள்ளேன். தற்போது கரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்படுவதை பார்த்து என்னால் இயன்ற உதவியை வழங்கினேன்’’ என்றார்.
தகவல் மற்றும் படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
12 / 42
வரும் ஜூன் முதல் வாரங்களில் 10-ம் வகுப்புக்கான அரசுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ள நிலையில், இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ) சார்பில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
13 / 42
தொழிலாளர் ஆர்ப்பாட்டம்... போலீஸார் சுற்றிவளைப்பு:
சேலத்தில் கட்டுமானப்பணிகள், வெள்ளிக்கொலுசு தயாரிப்புத் தொழில் உள்ளிட்ட சிறு தொழில்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் பலர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது கரோனா தடுப்பு ஊரடங்கால் வேலைவாய்ப்பு நிலை முற்றிலும் முடங்கிப்போனதால்... ரெட்டிப்பட்டி பகுதியில் வசிக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரான பிஹாருக்கு திரும்ப அனுமதி கேட்டு... இன்று - சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
அப்படி திரண்டு வந்த தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல்... கூட்டமாக திரண்டதால் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர். இருப்பினும் - போலீஸாரின் பேச்சுவார்த்தையை மீறி அத்தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை கைது செய்ய போலீஸார் முனைந்தனர். அப்போது அங்கிருந்து பயந்து ஓடிய தொழிலாளர்களை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
படங்கள்: எஸ்.குரு பிரசாத்
14 / 42
15 / 42
16 / 42
17 / 42
18 / 42
மதுரை பொன்னகரம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில்
மதுபான கடையை மூடச் சொல்லி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டோரை எல்லாம் போலீஸார் இழுத்துச் சென்றனர்.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
19 / 42
20 / 42
21 / 42
மின்துறை தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து தமிழக மின் வாரிய தொழிற்சங்களின் சார்பில் சென்னை அண்ணா சாலை உள்ள மின்வாரிய தலைமையகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
படம் : எல்.சீனிவாசன்
22 / 42
வேலூர் - புதிய மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியா் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில், அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யக்கூடாது, 10 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
படம்: வி.எம்.மணிநாதன்
23 / 42
வேலூர் சாரதி மாளிகை வணிக வளாகம் மற்றும் பர்மா பஜாரில் உள்ள கடைகளை திறக்க அனுமதிக்க கோரி வேலூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த வேலூர் நகர வியாபாரிகள்.
படம்: வி.எம்.மணிநாதன்
24 / 42
டெல்லியிலிருந்து சிறப்பு ரயிலில் திருநெல்வேலி வந்திறங்கிய திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை தகுந்த பாதுகாப்புடன் அந்தந்த மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் வாகனங்களில் அழைத்துச்சென்றனர்.
படம்: மு. லெட்சுமி அருண்
25 / 42
26 / 42
50 சதவீத ஊழியர்களுடன் தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள் இயங்கும் என அிறிவிப்பு வந்துள்ளதையடுத்து, 50 நாட்களுக்கு மேலாக - வேலைக்கு செல்லாமல் வீீட்டில் முடங்கியிருந்த அரசு ஊழியர்கள்... இன்று (திங்கள் கிழமை) முதல் பணிக்குத் திரும்பினர். இதையடுத்து - சென்னை தலைமைச் செயலகத்துக்கு பணிக்கு வந்த ஊழியர்கள்... தலைமைச் செயலக வாசலில் இருக்கும் நாகாத்தம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுச் சென்றனர்;
படம்: க.ஸ்ரீபரத்
27 / 42
28 / 42
முடி திருத்தும் தொழிலுக்கு அனுமதி வழங்கக் கோரி, முடித்திருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தினர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர் படம்: வி.எம்.மணிநாதன்.
29 / 42
50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள்.
படம் : ஜெ .மனோகரன்
30 / 42
கோவை மாவட்டத்தில் ஏராளமான தங்க நகைக் கடைகள் உள்ளன. இதில் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த பொற்கொல்லர்கள் 30 ஆயிரம் பேரும், வடமாநிலப் பொற்கொல்லர்கள் 15 ஆயிரம் பேரும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் - கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்க நகைக் கடைகள் மூடப்பட்டதால்... தங்க நகை வியாபாரம் முடங்கியது.
நமது நாட்டில் தங்க நகை உற்பத்தியில் 3-வது இடத்தில் உள்ள கோவை மாநகரில் - நாள் ஒன்றுக்கு 200 கிலோ வரை தங்க நகை உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளது. 50 நாள் ஊரடங்குக்குப் பிறகு - தற்போது சிறிய கடைகள் மட்டும் திறக்க அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடம் கோவை மாவட்ட தங்க நகைத் தயாரிப்பாளர் சங்கம், வியாபாரிகள் சங்கம், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பொற்கொல்லர் கூட்டமைப்பு, பெங்கால் பொற்கொல்லர் சங்கம் நிர்வாகிகள் ஆகியோர் பெரிய தங்க நகைக் கடைகளையும் திறக்க அனுமதியளிக்கக் கோரி... மனு அளிக்க வந்தனர்.
தகவல் - படம் : ஜெ .மனோகரன்
31 / 42
கரோனா தடுப்பு ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில்... 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் - சிறப்பு பேருந்துகள் மூலம் கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு பணிக்குத் திரும்பிய அரசுப்பணியாளராகள்.
படம் :ஜெ .மனோகரன்
32 / 42
கரோனா தடுப்பு ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில்... 50 நாட்களுக்குப் பிறகு கோவை ரேஸ் கோர்ஸ் நடைபாதையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் .
படம் : ஜெ .மனோகரன்
33 / 42
34 / 42
கோவை ரயில்நிலையத்தில் பிஹார் மாநிலத்துக்கு செல்ல காத்திருந்த வட மாநிலத் தொழிலாளர்கள்.
படம் : ஜெ .மனோகரன்
35 / 42
வேலூரில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் பெய்த மழையினால்... வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர்.
படம்: வி.எம்.மணிநாதன்.
36 / 42
50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் - பல நாட்கள் வேலைக்கு செல்லாமல் வீீட்டில் முடங்கியிருந்த அரசு ஊழியர்கள்... இன்று (திங்கள் கிழமை) முதல் பணிக்கு திரும்பினர். இதைத் தொடர்ந்து - சென்னை தலைமைச் செயலகத்துக்கு பணிக்கு வந்த ஊழியர்கள் தலைமைச் செயலக வாசலில் இருக்கும் நாகதேவதை அம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு பணிக்குச் சென்றனர்.
படம்: க . ஸ்ரீபரத்
37 / 42
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்துகொள்ள - பிப்ரவரி மாதம் டெல்லிக்கு சென்றிருந்தனர். அவர்களில் ஊர் திரும்பவியலாமல்... கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக - பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் .
இந்நிலையில் அவர்கள் இன்று சிறப்பு ரயில் மூலம் திருநெல்வேலிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து மருத்துவப் பரிசோதனைக்காக பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
படங்கள் : மு. லெட்சுமி அருண் .
38 / 42
இன்று (18.5.2020) முதல் அரசு அலுவலகங்கள் 50 சதவீதப் பணியாளர்களுடன் மீண்டும் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் முகக்கவசம் அணிந்துகொண்டு பாதுகாப்புடன் பணியில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள்.
படம்: எஸ்.குரு பிரசாத்
39 / 42
டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற இஸ்லாமியர்கள்... இன்று சிறப்பு ரயிலில் திருநெல்வேலி திரும்பினர் . திருநெல்வேலி ரயில் நிலையத்தில் வந்திறங்கும் அவர்களை... வரவேற்க கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் முகம்மது அபூபக்கர் பாதுகாப்பு வலையத்துக்குள் நுழைய முயன்றார்
அதை போலீஸார் தடுத்து ‘’பாதுகாப்பு கருதி யாரையும் உள்நுழைய அனுமதி இல்லை’’ என்று மறுத்தனர். அதனால் முகம்மது அபூபக்கருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து... சட்ட பேரவை உறுப்பினரின் கார் ரயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
படம்: மு.லெட்சுமி அருண்
40 / 42
கரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கான 4-ம் கட்ட ஊரடங்கில் தமிழகத்தின் 25 மாவட்டங்களுக்கு சில புதிய கட்டுப்பாடு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகத்தில் 50 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட இ-சேவை மையம்.
படம்: வி.எம்.மணிநாதன்.
41 / 42
கரோனா ஊரடங்கு உத்தரவின் பெரும்பாலான தடைகள் இன்று முதல் தளர்வு பெற்றதால்.... திருநெல்வேலி சந்திப்பில் பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது.
படம்: மு. லெட்சுமி அருண்
42 / 42
50 சதவீதப் பணியாளர்களுடன் இன்றுமுதல் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் - இன்று அரசுப் பேருந்தில் பணிக்கு வந்த தலைமைச் செயலகப் பணியாளர்கள்.
படம்: க.ஸ்ரீபரத்