Published on : 17 May 2020 16:36 pm

பேசும் படங்கள்... (17.05.2020)

Published on : 17 May 2020 16:36 pm

1 / 25
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 50 நாட்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவால் உழைக்க வந்த காரைக்கால் மற்றும் புதுச்சேரியில்... வசித்து வந்த வட மாநிலத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே அவர்கள் - தங்களது சொந்த ஊரான உத்திரபிரதேசம், மத்தியப்பிரதேசம், பிஹார் உள்ளிட்ட இடங்களுக்கு மத்திய - மாநில அரசுகள் ஏற்பாடு செய்திருந்த ரயிலில் இன்று அதிகாலை முட்டை முடிச்சுக்களுடன் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்றனர். படம்: எம்.சாம்ராஜ்
2 / 25
3 / 25
உழைக்க வந்த காரைக்கால் மற்றும் புதுச்சேரியில்... வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால்... வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு மத்திய - மாநில அரசுகள் ஏற்பாடு செய்திருந்த ரயிலில் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டனர். இன்று அதிகாலை 1.30 மணிக்கு உப்பளம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர்களை கைக் கூப்பி வழியனுப்பி வைத்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. படம்: எம்.சாம்ராஜ்
4 / 25
இன்று அதிகாலை 1.30 மணிக்கு புதுச்சேரி - உப்பளம் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் புறப்பட்டு சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய வட மாநிலத் தொழிலாளர்கள்... இது நாள் வரையில் வசிக்க இடமும் புசிக்க உணவும் வழங்கிய புதுச்சேரி மக்களுக்கு நன்றி தெரிவித்து கையசைத்தனர். படம்: எம்.சாம்ராஜ்
5 / 25
6 / 25
சுகாதாரப் பணியாளர்களுக்கு ராயல் சல்யூட்: மதுரை - ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அரவிந்த் தியேட்டர் பகுதி முதல் ஜீவா நகர் வரையில் 2 கி. மீ தூரமுள்ள சாலையை இன்று காலையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சுத்தம் செய்தனர். இந்நிகழ்வை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நன்மாறன் தொடங்கி வைத்தார்.​ இதில் - ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் பாலா, மாவட்டச் செயலாளர் செல்வா, பகுதிச் செயலாளர் குரோணி செந்தில் உள்ளிட்ட 50 பேர் ஈடுபட்டனர். ​ கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னலம்பாராமல் அல்லும்பகலும் உழைத்த சுகாதாரப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைப்பதற்காகத்தான் இந்தச் சாலை சுத்தப் பணியில் ஈடுபட்டதாக ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் கூறினர். ​படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 25
தமிழ் வீடுகளில் உருளும் பழம்: கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு எலுமிச்சை விளைச்சல் அமோகம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் - மதுரை பி.டி.ஆர் ராஜன் சாலையில் எலுமிச்சம் பழம் விற்பனை சூடு பிடித்துள்ளது. மேலும் நம் பாரம்பரிய தமிழ் மருத்துவர்கள் வாட்ஸ்_அப், முகநூல், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களில் எல்லாம் ‘’கரோனா பாதிப்பிலிருந்து மீள - வைட்டமின் சி அதிகம் இருக்கும் எலுமிச்சம் பழ ரசம், எலுமிச்சம் பழ ஜூஸ் போன்றவற்றை தினமும் அதிகளவில் உட்கொள்வது நல்லது’’ என்று சொல்லிவிட்டதால் - இப்போது எல்லா தமிழ் வீடுகளிலும் எலுமிச்சம் பழம் உருண்டு கொண்டிருக்கிறது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
8 / 25
தோழருக்கு அஞ்சலி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு சிறப்பு அழைப்பாளர் கே.வரதராஜன் காலமானதையொட்டி, ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி, மாவட்டச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். படம்: ஞானவேல் முருகன்
9 / 25
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு சிறப்பு அழைப்பாளர் கே.வரதராஜன் காலமானதையொட்டி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி, மாவட்டச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்.
10 / 25
காத்திருக்கும் கல்லணை: டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கல்லணை... தற்போது நீரின்றி வறண்டு கிடக்கிறது. சம்பா சாகுபடி முடிந்து... அதையடுத்து குறுவை சாகுபடிக்கு வரும் ஜுன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பில் காத்திருப்பது டெல்டா விவசாயிகள் மட்டுமில்லை; அடிக்கிற வெயிலில் வறண்டு காணப்படும் காவிரி ஆறும், கல்லணையும்தான்! படம்: ஜி.ஞானவேல்முருகன்
11 / 25
மீண்டும் பணிகள் தொடக்கம்: குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் உபரி நீர் வெளியேறுவதில் இடையூறு இல்லாமல் இருக்க புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால் நின்று போயிருந்த பாலம் கட்டும் பணிகள் மீண்டும் இப்போது துரிதமாக நடக்க ஆரம்பித்துள்ளது. படங்கள்: எம்.முத்து கணேஷ்
12 / 25
13 / 25
கோடை வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. வெயிலில் இருந்து தப்பிக்க இளைஞர்கள் சிலர் மணிமங்கலம் பகுதியில் வேப்பபிலையால் தலையை மறைத்துக்கொண்டு நடந்தனர். படம்: எம்.முத்து கணேஷ்
14 / 25
காற்றில் பறக்கிறது கட்டுப்பாடு: கரோனா தடுப்பு நடவடிக்கையாக 50 நாட்களுக்கு மேலாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் - பல இடங்களில் பல நிறுவனங்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் - ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று - சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள மீன் மார்கெட்டில் சமூக இடைவெளியை முற்றிலும் கடைபிடிக்காமல் பொதுமக்கள் மீன் வாங்க திரண்டிருந்தனர். படங்கள்: க.ஸ்ரீபரத்
15 / 25
16 / 25
17 / 25
கத்திரி வெயில் மனிதர்களை மட்டுமா வாட்டி வதைக்கிறது. வாயில்லா ஜீவன்களுக்கும் வெயில் அவதியைத்தான் தருகிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க... சென்னை மெரினாப் பகுதியில் கடலில் குதுகுலக் குளியல் போடும் நாய். படங்கள்: க.ஸ்ரீபரத்
18 / 25
19 / 25
சென்னை - மெரினா பகுதி கடலில்... இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பரித்து வரும் அலைகளின் ஆபத்தை உணராமல்... குளித்து மகிழும் இளைஞர் ஒருவர். படம்: க.ஸ்ரீபரத்
20 / 25
தச்சநல்லூர் அம்மா உணவக வாசலில் கரோனா அச்சத்தில் முகத்தை மறைத்துக் கொண்டு. உணவுக்காக காத்திருக்கிறார்... இந்த முதிய பெண்மணி, படம்: மு.லெட்சுமி அருண்
21 / 25
திருநெல்வேலி ஜங்சன் ரயில் நிலையம் முன்பாக - தன்னார்வலர்கள் வழங்கும் உணவு பொட்டலங்களை வாங்குவதற்குசமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆதரவற்றோர். படம்: மு.லெட்சுமி அருண்
22 / 25
தச்சநல்லூர் அம்மா உணவகத்தில் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை... முன் பதிவு அடையாளமாக வைத்துவிட்டு மதிய உணவுக்காக காத்திருக்கும் ஏழை எளியோர். படம்: மு.லெட்சுமி அருண்
23 / 25
கோவை கிராஸ் கட் சாலையில் இன்று மதியம் சூறைக் காற்றுடன் கோடை மழையால் விவேகானந்தா தெரு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்து பல இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டது. படம் : ஜெ..மனோகரன்
24 / 25
கோவை - காமராஜர் சாலை ரெட் ஃபீல்டு பகுதியில் இன்று மதியம் சூறைக் காற்றுடன் கோடை மழை பெய்து அனைவரையும் குளிர்வித்தது. படம் : ஜெ..மனோகரன்
25 / 25
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கடந்த 50 நாட்களாக அமலில் இருந்த ஊரடங்கில் - சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் அரசு பேருந்தில் தனி மனித இடைவெளி விட்டு அமர்ந்து பயணிக்கும் வகையில் பேருந்து இருக்கைகளில் நம்பர்கள் எழுதப்பட்டுள்ளது. படம்: வி.எம்.மணிநாதன்.

Recently Added

More From This Category

x