1 / 42
மிச்சமிருக்கிற அச்சம்:
50 நாட்களுக்கும் மேலாக - ஊரடங்கால் சென்னை நகரமே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தது. கடந்த சில நாட்களாகத்தான் இந்த மாநகரம் தனது சொந்த முகத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறது. இன்னமும் இயல்பு வாழ்க்கைக்கு முழுவதுமாக திரும்பாத நிலையில்... கரோனா அச்சம் இன்னமும் மிச்சம் இருக்கத்தான் செய்கிறது... என்பதை அடையாளப்படுத்துவது மாதிரி...
சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் - சுய சுகாதாரத்தை பேணும் வகையில் தனது வியாபார சாம்ராஜ்ஜியத்தைச் சுற்றிலும் மஞ்சள் நீர் தெளித்து... இளநீர் விற்கிறார் ஒரு பெண்மணி.
படம்: க. ஸ்ரீபரத்
2 / 42
சைக்கிளில் சொந்த ஊருக்கு:
தமிழகத்தில் பிழைப்பதற்காக வந்து.... உழைத்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர்.... ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் பாதித்ததால் - சொந்த ஊருக்கு திரும்பத் தொடங்கியுள்ளர். அப்படி சொந்த ஊருக்குத் திரும்ப போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமையால்... அவர்களில் பல பேர் சைக்கிளிலேயே சொந்த ஊருக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் சைக்கிள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள சைக்கிள் விற்பனை கடை ஒன்றில்... புதிய சைக்கிளை பிட் அப் செய்யும் ஊழியர்கள்.
தகவல்: கே.ஜெயப்பிரகாஷ்
படம்: க.ஸ்ரீபரத்
3 / 42
4 / 42
குடிக்கப் போவது அவன்... தள்ளாடப்போவது அவன் குடும்பம்:
டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதைத் தொடந்து, இன்று (16.5.2020) டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது வாங்குவதற்காக அதிகாலை முதலே நூற்றுக்கணக்கில் காத்துக்கிடக்கும் ‘குடிமகன்’களைப் பார்க்கும் போது.... கரோனா தடுப்புக்காக அமலில் இருந்து வரும் ஊரடங்கு நடவடிக்கையால் வாழ்வாதாரத்தை இழந்த பல குடும்பங்களின் நிலைதான் கண் முன்னே வந்து வந்து குவிகிறது.
படம் : எஸ்.குரு பிரசாத்
5 / 42
நாய் குட்டிகளுடன் நாளைய மன்னர்கள்:
பெரியவர்களைவிட சின்னப் பிள்ளைகளுக்குத்தான் செல்லப்பிராணிகளிடம் ஒட்டுதலும் உரசலும் அதிகம். தூக்கி வைத்துக்குக்கொண்டு மூக்கோடு மூக்கு உரசி...
கொஞ்சுவார்கள்.
கொஞ்சுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் - பிறந்து 3 மாதங்களாகும் நாய் குட்டிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம் என்கிற விழிப்புணர்வு பலருக்கு இருப்பதே இ ல்லை.
சேலம் பிரட்ஸ் ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தங்கள் செல்லக்குட்டிகளுக்கு காரோனா அச்சத்திலும்... தவறாமல் தடுப்பூசிப் போட முகக்கவசம் அணிந்து விழிப்புணர்வுடன் நடந்து செல்லும் நாளைய மன்னர்கள்.
படம் : எஸ்.குரு பிரசாத்
6 / 42
டாஸ்மாக் கடைகளைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, கொள்ளிடம் பாலம் செக்போஸ்ட் பகுதியில் நேற்று சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல்... மது வாங்க அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த மதுபானப் பிரியர்கள்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.
7 / 42
திருவனைக்காவல் டாஸ்மாக் கடை முன்பாக சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் வரிசையில் நின்றிருந்த குடிமகன்களை... வரிசையில் முறைப்படி நிற்க அறிவுறுத்திய போலீஸார்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.
8 / 42
திருவனைக்காவல் டாஸ்மாக் கடை அருகே டோக்கன் பெற வரிசையில் நிற்கும் மது பானப் பிரியர்கள்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.
9 / 42
திருச்சி புத்துார் நால்ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு கடை எப்போது திறப்பார்கள் என்ற ஏக்கத்துடன் காத்திருந்த மதுபானப் பிரியர்கள்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.
10 / 42
திருச்சி புத்துார் நால்ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு காலை 6 மணிக்கே வந்த மதுபானப் பிரியர்கள் இடை வெளிவிட்டு வரையப்பட்ட வட்டத்தில் செருப்பு, கல், அட்டை போன்றவற்றை வைத்து முன்பதிவு செய்தனர்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.
11 / 42
திருச்சி புத்துார் நால்ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் தான் வாங்கிய மது பாட்டில்களை உற்சாகமாக காட்டும் மதுபானப் பிரியர்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.
12 / 42
ஹலோ... மைக் டெஸ்டிங்... ஒன்... டூ... த்ரி:
தமிழகத்தில் மீண்டும் - மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. எனவே, மதுப்பிரியர்கள் மது வாங்க குவிவார்கள் என்கிற எண்ணத்தில் - வேலூர் நகரில்... டாஸ்மாக் கடையொன்றில்... சாமியானா பந்தல் போட்டு, மைக் செட் அமைத்து, ஒலிப் பெருக்கி கட்டி... தொடங்கியது மது விற்பனை.
இந்நிலையில் போலீஸார் கையில் மைக்கைப் பிடித்துகொண்டு ’’மதுப்பிரியர்களே... நீங்க டோக்கன் வாங்க... சமூக இடைவெளிவிட்டு வரிசையில ஒழுங்கா நின்னாதான் உங்க எல்லாருக்கும் சரக்கு கிடைக்கும். சரக்கும் வேணும்னா நாங்க சொல்றபடி வரிசையில நில்லுங்க’’ என்று முழங்கிக்கொண்டே இருந்தனர்.
படங்கள்: வி.எம்.மணிநாதன்
13 / 42
14 / 42
15 / 42
16 / 42
பனை மரத்தடியில் பால்:
மதுரை செல்லூர் ரோட்டில் உள்ள மதுபான கடை அருகே... பொதுமக்களுக்கு மதுரை நகராட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
படம்: எஸ் கிருஷ்ணமூர்த்தி
17 / 42
ஹாய் டோக்கன் கிடைச்சிருச்சு:
கிடைக்காத என்னமோ... எதுவோ... கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் - அந்த கிடைத்ததை... எடுத்துக் காட்டுகிறார் இவரென்று... நினைத்துவிடாதீர்கள். மதுரை எல்லீஸ் நகர் பைபாஸ் ரோடு அருகே உள்ள மதுக்கடையில் மது வாங்குவதற்கான டோக்கன் கிடைத்த மகிழ்ச்சியில் டோக்கனை காட்டுகிறார்.
படம்: எஸ் கிருஷ்ணமூர்த்தி
18 / 42
இந்த பாட்டில் போதுமா... இன்னும் புட்டி வேணுமா:
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி மீண்டும் மதுபான கடைகள் இன்று திறக்கப்பட்டன. மதுரை எல்லீஸ் நகர் பைபாஸ் ரோடு அருகே உள்ள மதுக்கடை ஒன்றில் கைநிறைய மதுபாட்டில்களுடன் புகைப்படத்துக்கு முகக்கவசத்துடன் முகம் காட்டினார்.
படம்: எஸ் கிருஷ்ணமூர்த்தி
19 / 42
காத்திருந்த கால்கள்:
மீண்டும் மதுபானக் கடைகள் இன்று திறக்கப்பட்டதை அடுத்து, மதுரை எல்லீஸ் நகர் பைபாஸ் ரோடு அருகே உள்ள மதுக்கடையில் மது வாங்குவதற்காக - நீண்ட வரிசையில் காத்திருக்கும் குடிமகன்கள்.
படம்: எஸ் கிருஷ்ணமூர்த்தி
20 / 42
சார் இவங்க யார்:
ஊரடங்கு காரணமாக பிழைக்க வந்த தமிழகத்தில் வாழ்வாதாரம் சீர்கெட்டதால் - மீண்டும் சொந்த மாநிலத்துக்கே திரும்ப காத்திருக்கும் தொழிலாளர்கள்தான் இவர்கள் என்று நினைத்துவிடாதீர்கள் மக்களே.
வேலூர் - ரங்காபுரத்தை அடுத்த மூலக்கொல்லைப் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்றில் மது வாங்க... டோக்கன் வாங்கிவிட்டு சமூக இடைவெளி வியுடன் அமர்ந்துள்ள மதுப்பிரியர்கள்தான் இவர்கள்
படம்: வி.எம்.மணிநாதன்.
21 / 42
22 / 42
இருக்காதா... பின்னே:
உச்சநீதிமன்ற உத்தரவுபடி டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டன. அதன்படி மதுப்பிரியர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு தகுந்த பாதுகாப்புடன் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன. மதுப்பிரியர்கள் பல பேர் தங்களின் முகங்களை மறைத்தவாறு, ஏதோ குற்றவாளிகளைப் போல் மறைந்து மறைந்து... மதுபாட்டில்களை வாங்கிச் சென்றது வேடிக்கையாக இருந்தது.
படம் : மு. லெட்சுமி அருண்
23 / 42
ஸாரி கொஞ்சம் ஓவர்:
பாளையங்கோட்டை திருவனந்தபுரம் சாலையில் உள்ள எலைட் உயர் ரக மதுக்கடையில் பணத்தை கொடுத்து பெரிய பெரிய பைகளில் மது பாட்டில்களை ஆர்வமுடன் மதுப்பிரியர்கள் வாங்கிச் சென்றனர்.
படம் : மு. லெட்சுமி அருண்
24 / 42
சிரிப்பு சிரிப்பு வருது:
''ஏல.. இங்க பாருல.... வந்திருக்க எல்லாருக்கும் சரக்கு நிச்சயம் உண்டுல. அடிச்சுக்கப் படாது... ஒவ்வொருத்தரும் மூணு மூணு அடி தள்ளி நில்லுங்கல... மாஸ்க் போடாதவங்களுக்கு கண்டிப்பா சரக்கு கிடையாதுல...’’ என்று முருகன் குறிச்சி மதுக்கடை ஒன்றில் அங்கு வேலை பார்ப்பவர் ஒருவர் மைக்கில் குடிமகன்களைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்ததை... பார்த்து அங்குள்ளவர்களுக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது.
படம்: மு. லெட்சுமி அருண் .
25 / 42
கரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்ட நிலையில்... நேற்று கோவை பூ மார்கெட்டில் சமூக இடைவெளியைக் காற்றில் பறக்கவிட்டு கூடியிருந்த கூட்டம்.
படம் :ஜெ .மனோகரன்
26 / 42
ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டதால் சொந்த மாநிலத்துக்கே திரும்ப நினத்த வட மாநிலத் தொழிலாளர்கள் சிலர்... இன்று கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் அனுமதி கேட்டு குவிந்தனர்.
படம் : ஜெ .மனோகரன்
27 / 42
கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க காத்திருக்கும் குடிமகன்கள்.
28 / 42
வெச்சி குடிப்பாராக்கும்!
டாஸ்மாக் கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடந்து... நேற்று - கோவை காந்தி பார்க் அருகில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில்.... எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாட்டில்களை வாங்கிச் செல்கிறார் பாரத பிரஜை ஒருவர். வெச்சி குடிப்பாராக்கும்!
படம் : ஜெ .மனோகரன்
29 / 42
ஆர்ப்பாட்டமே இல்லாமல் ஆர்ப்பாட்டம்:
ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசுகளின் அரசியல் செயல்பாடுகளை கண்டித்து, வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குடைகள் பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர். படம்: வி.எம்.மணிநாதன்.
30 / 42
புத்தம்புது சாலை வரும்... இந்த ஊருக்கொரு ஜோரு வரும்:
ஊரடங்கு அமலில் இருந்த 50 நாட்களுக்குப் பிறகு... சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் எல்லா இடங்களிலும் இயப்பு வாழ்க்கை தனது முகத்தை மெல்ல காட்ட ஆரம்பித்திருகிறது.
இந்நிலையில் - கோவை ஆர்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் சாலையில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியில் பொதுப்பணித் துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
படம் : ஜெ .மனோகரன்
31 / 42
கிழமைக்கு ஒரு வண்ணம்:
தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டத்தை கட்டுப்படுத்தவும், மதுப்பிரியர்களைப் பாதுகாக்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும்... 7 வண்ணங்களில் அச்சடிக்கப்பட்டுள்ள டாஸ்மாக் டோக்கன்கள்.
படம்: வி.எம்.மணிநாதன்.
32 / 42
கரோனாவைப் பயன்படுத்தி மத்திய அரசானது மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கிறது . மேலும் சிறுபான்மையினர் மேல் வெறுப்பு அரசியலை தொடர்ந்து திணிக்கிறது என்பன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை... முன்வைத்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்க குடைகளுடன் மேலப்பாளையம் சந்தைப் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர் .
படம்: மு. லெட்சுமி அருண்
33 / 42
குடிக்க குந்திக் கிடக்கும் கூட்டம்:
மனிதகுல வரலாற்றில்.... மனிதக் கூட்டம் வருடக் கணக்காக... மாதக் கணக்காக... நாள் கணக்காக... காத்து கிடந்திருக்கிறது.
வயிற்றை நிண்டும் பசிக்கு சோறு கேட்டு...
உடம்பை தீண்டும் வலிக்கு மருந்து கேட்டு...
உரிமையைப் பிறாண்டும் கெடுதலை எதிர்த்து...
உழைப்பை சுரண்டும் மேட்டிமையை எதிர்த்து...
ஆனால் - இதோ... இவர்கள் காத்துக்கிடப்பது எதற்குத் தெரியுமா?
காஞ்சிபுரம் வேடல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை க்கு முன்பு மது வாங்குவதற்காக காத்திருக்கிறார்கள். சபாஷ் சரியான போட்டி.
படம் : எல்.சீனிவாசன்
34 / 42
இன்று வேலூரின் வெய்யிலின் அளவு: 104.7 - இது கோடையின் சடுகுடு ஆட்டம்:
தமிழகமெங்கும் - கத்திரி வெய்யில் தனது கபடி ஆட்டத்தை வெற்றிகரமாக ஆடிக்கொண்டிருக்கிறது. வெப்பமும் வியர்வையும் நமது உடல் முழுக்க கூட்டணி ஆட்சி நடத்தும் இந்த வெப்பவேளையில்...
இன்று - வேலூரை அடுத்த புதுவசூர் பகுதியில் அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்தது. அப்போது - சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்ணில்பட்ட கானல்நீர். இன்று வேலூரின் வெய்யிலின் அளவு: 104.7
படம்: வி.எம்.மணிநாதன்.
35 / 42
36 / 42
உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து இன்று மீண்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் -
காஞ்சிபுரம் வேடல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையொன்றில்... மதுப்பிரியர்கள் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
படம் : எல் சீனிவாசன்
37 / 42
காஞ்சிபுரம் வேடல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையொன்றில்... மதுப்பிரியர்கள் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்த அதே வேளையில் - மதுப்பிரியர்களால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க.... அங்கே பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீஸார்
படம் : எல் சீனிவாசன்
38 / 42
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை அம்மா உணவகத்தில் நேற்றூ -
மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் திடீர் ஆய்வு செய்து... அங்கு சாப்பிட வந்தோருக்கு... உணவுகளை வழங்கினார்.
படம் : எல்.சீனிவாசன்
39 / 42
தமிழகத்துக்குப் பிழைக்க வந்த பிஹார், ஒடிசா, மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்... ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் - புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து சொந்த மாநிலத்துக்கு செல்லவிருந்த தொழிலாளர்களுக்கு - மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
படம்: எம்.சாம்ராஜ்
40 / 42
புதுச்சேரி பகுதிகளில் இதுவரையில் - தாங்கள் தங்கியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு... மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு திரும்ப கைக் குழந்தையுடன் காத்திருக்கும் வட மாநிலத் தம்பதியினர்.
படம்: எம்.சாம்ராஜ்
41 / 42
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் விடுத்த அறிவிப்பை தொடர்ந்0து இன்று - புதுச்சேரியில் முதல் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
படம்: எம்.சாம்ராஜ்
42 / 42
தமிழகத்துக்குப் பிழைக்க வந்த பிஹார், ஒடிசா, மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்... ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று - புதுச்சேரி ரயில்நிலையத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல அழைத்து வரப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வரிசையாக உட்கார வைக்கப்பட்டுள்ளனர்.
படம்: எம்.சாம்ராஜ்