1 / 47
கரோனா தொற்று பரவல்... ஊரடங்கு தடை உத்தரவு.... கட்டுப்பாடுகள் தளர்வு ஓருபுறம் இருக்க... சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு மூலம் வழங்கப்படும் 3 கிலோ துவரம் பருப்பை வாங்க... புதுச்சேரி தர்மாபுரி பகுதியில் சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் அலைமோதும் பொதுமக்கள்.
படம்: எம். சாம்ராஜ்
2 / 47
விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் புதுச்சேரி - மதகடிப்பட்டு பகுதியில் பார்ப்பதற்கே கண்களுக்கு வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது
பூத்துக் குலுங்கும் செங்கொன்றைப் பூக்கள்.
படம்: எம். சாம்ராஜ்
3 / 47
வரும் 18-ம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் இயங்கும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதையடுத்து... புதுச்சேரியில் - தமிழக அரசுப் பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளப் பேருந்துகளைத் துாய்மை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்..
படம்: எம். சாம்ராஜ்
4 / 47
கரோனா தடுப்பு முன்னெச்செரிக்கைக்காக ஊரடங்கு அமலில் இருப்பதால் - அதிகம் பாதிப்புள்ளானவர்கள்... கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள்தான். கடந்த வாரம் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் - புதுச்சேரி சுப்பையா நகரில் உள்ள ஒரு வீட்டில் கயிற்றில் தொங்கியபடி... உயிரையும் பணயம் வைத்து.... வேலை செய்யும் ஒரு கூலித் தொழிலாளி.
படம்: எம். சாம்ராஜ்
5 / 47
கோரிக்கை மனு:
நல வாரியத்தில் பதிவு செய்துகொண்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி சேலம் மாவட்டத்தில் நிவாரண உதவிப் பட்டியலில் உள்ள 30 சதவீதத் தொழிலாளர்களுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை எனக் கூறி.... தமிழ்நாடு தொழிற்சங்கக் கூட்டமைப்பு உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் இன்று கோரிக்கை அட்டைகளுடன் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
படம்: எஸ்.குரு பிரசாத்
6 / 47
வரும் 18-ம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதையடுத்து... ஊரடங்கு உத்தரவால் நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் இருந்த கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழே உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளைத் தயார்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
படம்; ஜெ .மனோகரன்
7 / 47
கோவையை அடுத்த நரசிபுரம் பகுதியில் கரோனா கட்டுபாடால் அமலில் இருக்கு ஊரடங்கு உத்தரவால் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே விடுமுறை நாளில் பயனுள்ள வேலையில் ஈடுபடும் எண்ணத்தில் - தங்கள் வயலில் பயிரிட்டுள்ள முட்டைகோஸுக்கு... உரம் தெளிக்கும் விவசாயி ஒருவரின் மகன்.
படம்: ஜெ .மனோகரன்
8 / 47
தமிழகம் முழுவதில் இருந்தும் ஆயிரக்கணக்கில் மே மாதம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழியும் கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையேறும் பாதை... கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதையொட்டி வனத் துறையினரால் மூடப்பட்டுள்ளதால்.... வெறிச்சோடிக் காணப்படுகிறது.
படம் : ஜெ .மனோகரன்
9 / 47
சொன்னா கேட்டாதானே:
சென்னை - திருவல்லிக்கேணிப் பகுதியில் கரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருந்து வருகிறது. எனவே - அங்குள்ள பொது மக்களிடம் சமூக இடைவெளியைப் பயன்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், அந்தப் பகுதியில் உள்ள மார்கெட்டில் பொதுமக்கள் சமூக இடைவெளியை துளியும் கடைபிடிக்காமல் காய்கறிகள் வாங்க குவிந்ததால் - இன்று (வெள்ளிக் கிழமை) நகராட்சி அதிகாரிகள் அந்த மார்கெட்டை மூடினர்.
படம்: க.ஸ்ரீபரத்
10 / 47
11 / 47
12 / 47
என்ன செய்கிறது அரசாங்கம்:
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில்... அதுகுறித்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் இன்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் வருவாய்த் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் இவ்விஷயத்தில் தமிழக அரசின் தற்போதைய நிலை குறித்தும் பத்திரிகையாளர்களிடம் விளக்கினர்.
படம்: க.ஸ்ரீபரத்
13 / 47
மீண்டும் தொட்டிலுக்கே:
கண்ணில் கனவுகளோடும்... நெஞ்சில் உரத்தோடும்... உழைத்து முன்னேறுவதற்காகவும்... வாழ்வாதாரத்தைத் தேடியும் தமிழக வந்து.... இங்கு பல்வேறு பகுதிகளில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் உழைத்து வந்தனர்.
அவர்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் முடக்கிப்போட்டது கரோனா தொற்றுப் பரவலும்... ஊரடங்கு உத்தரவும். இதையடுத்து வாழ்வாதாரத்தை இழந்த அவர்களில் சிலர், தங்கள் சொந்த ஊரான பிஹாருக்கே திரும்ப நேற்று சென்னை - சென்டிரல் ரயில் நிலையம் முன்பு திரண்டிருந்தனர்.
படம்: க.ஸ்ரீபரத்
14 / 47
15 / 47
16 / 47
மருத்துவப் பணியாளர்க்களுக்கு மரியாதை:
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் சுகாதாரப் பணிகளில் தங்கள் இன்னுயிரையும் துச்சமாக நினைத்து... அல்லும் பகலும் தொடர்ந்து மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும்... பணியாற்றி வருகின்றனர். இவர்களின் தன்னிகரற்ற கருணைமிக்கச் சேவையை பெரிதும் கவுரவிக்கும் விதமாக, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் முருகன், இன்று திருவல்லிகேணிப் பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் (சமூக இடைவெளியுடன்) மருத்துவப் பணியாளர்களின் பாதங்களுக்கு.... பூப் போட்டு வணங்கி... மரியாதை செலுத்தினார்.
படம்; க.ஸ்ரீபரத்
17 / 47
18 / 47
உலையும்... உழைப்பும் ரெடி:
கரோனா தொற்றுப் பரவலை தடுக்க 50 நாட்களுக்கும் மேலாக முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில்... கடந்த வாரம் சில கட்டுபாடுகளுடன் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதையடுத்து வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் தங்களின் வாழ்வாதாரத் தொழிலான இரும்புப் பட்டறையை அமைத்து... அரிவாள், கோடரி மற்றும் விவசாயப் உபகரணங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ள உழைப்பாளிகள்.
படம்: வி.எம்.மணிநாதன்.
19 / 47
20 / 47
21 / 47
ஆளில்லா கம்மாயில் ஆலோலம் பாடும் பறவைகள்:
கதிரவன் தன் கிரணக் கதிர்களால் பூமியை சூடேற்றும் கோடைக்காலம் இது.
தமிழகம் முழுக்க - கடுமையான வெயிலும் ஆங்காங்கே வறட்சியும் நிலவுகிறது. இந்நிலையில் - மதுரை அலங்காநல்லூர் செல்லும் வழியில் உள்ள அதலை கிராமத்தில் உள்ள கம்மாயில்... தண்ணீர் வற்றியதாலும்.... ஊரடங்கால் ஆள் நடமாட்டம் இல்லாததாலும்.... ஆனந்தமாக மீன்களைக் கொத்திக் கொத்தி சாப்பிட வரும் பறவைகளின் கூட்டம்.
படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
22 / 47
வெயிலுக்கு இதம்... இந்தப் பழம்:
கத்திரி வெய்யில் மண்டையைப் பொளக்கும் கோடை நாட்களில் நாம் இருக்கிறோம். இந்த வெயில் காலத்தில் மனிதர்களின் தண்ணீர் தாகத்துக்கும் உடல் குளிர்ச்சிக்கும் உத்தரவாதம் தரும் பட்டியலில் தர்ப்பூசணிப் பழங்களுக்கு முக்கிய இடம் உண்டு..
மதுரை கூடல்நகர் பகுதியில் தர்ப்பூசணிப் பழங்கள் விற்பனைக்கு ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளன.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
23 / 47
விவசாயிகளுக்கு ‘தித்திக்காத’ சேலத்து மாம்பழம்:
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மாங்காய் விளைச்சல் எப்போதும் அதிகம் இருக்கும். என்றாலும், ஏற்றுமதி ரக மாம்பழங்களையும், சுவை மிகுந்த தித்திப்பான மாம்பழ விளைச்சலையும் கொண்டிருப்பதால் சேலம் மாவட்டம் நல்ல பேரை தட்டிச் சென்றுவிடும். மேலும்... இனிப்பின் அடையாளமாகவே சேலம் மாம்பழம் திகழ்கிறது.
இவ்வளவு பேர் பெற்ற - சேலம் மாவட்ட மாம்பழ உற்பத்தி அமலில் இருக்கும் ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது - ஊரடங்கில் இருந்து வேளாண் பொருட்களின் உற்பத்திக்கும், அதன் விற்பனைக்கும் தடையில்லை என அரசு அறிவித்திருந்தாலும்கூட, போக்குவரத்து வசதியின்மையால், சேலம் மாம்பழ வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாம்பழ அறுவடை தொடங்க வேண்டிய நிலையில், சந்தை வாய்ப்பு இல்லாததால், பல தோட்டங்களில் மாம்பழ அறுவடை தடைப்பட்டுள்ளது. இந் நிலையில், சேலம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் உள்ளூர் விற்பனைக்காக மாங்காய்களை அறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் பெண் ஒருவர்.
தகவல் மற்றும் படம்: எஸ். குரு பிரசாத்
24 / 47
25 / 47
தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக, மதுரை - தொலைத்தொடர்பு அலுவலம் முன்பு... நிர்வாகத்தை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கருப்புத் துணியால் கண்களை மறைத்துக்கொண்டு... தர்ணா போராட்டம் நடைபெற்றது.
படம்; எஸ் கிருஷ்ணமூர்த்தி
26 / 47
தமிழகம் டு ஜார்கண்ட்:
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 50 நாட்களாக அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்ட.. தமிழகத்தில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்களை... தமிழக அரசின் செலவில் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலம் அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,464 பேர்கள் காட்பாடியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் இன்று ஜார்கண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
படம்: வி.எம்.மணிநாதன்.
27 / 47
28 / 47
29 / 47
தமிழகத்தில் இருந்து சொந்த மாநிலத்துக்கு செல்ல ஆன்லைனில் பதிவு செய்து எராளமான வட மாநிலத்தோர் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் ஏற்பாடு செய்துவருகிறது. இந்நிலையில்- திரிபுரா மாநிலத்துக்குச் செல்ல தாம்பரம் வட்டாட்சிய அலுவலகத்தில் குடும்பத்தோடு காத்திருக்கும் வெளி மாநிலத்தவர்கள்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
30 / 47
31 / 47
32 / 47
முகக்கவசம் விற்பனை ஜோர்:
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கியமானதாக இருப்பது முகக்கவசம். ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடபட்டுள்ளதால் மாணவர்கள் சிலரும் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியிருக்கும்
இளைஞர்கள் சிலரும் முகக்கவசம் விற்க தொடங்கியுள்ளனர். 10 ரூபாயில்
இருந்து 25 ரூபாய் வரைக்கும்
இந்த முகக்கவசங்கள் விற்கப்படுகின்றன. மக்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களை தகவமைத்துக் கொள்ள தயாராகவே இருக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது. திருநெல்வேலி - வ
ண்ணாரப்பேட்டை,
, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி , திருநெல்வேலி ஜங்சன் அருகே
வரதராஜ பெருமாள் கோயில்
கீழரத வீதி , பாளையங்கோட்டை சமாதானபுரம் போன்ற பகுதிகளில் இப்போது முகக்கவச விற்பனை ஜரூராக நடைபெற்று வருகிறது.
படங்கள்: மு.லெட்சுமி அருண்
33 / 47
34 / 47
35 / 47
சென்னையை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் தங்கி வேலைசெய்துவந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்... ஊரடங்கு காரணமாக... தங்குவதற்கு உரிய இடமின்றி... போதுமான
உணவின்றி பல நாட்களாக தவித்து வந்தனர்.அந்த தொழிலாளர்கள் அனைவரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசின் உதவியுடன் சொந்த ஊருக்கு இன்று இன்று தாம்பரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
படங்கள்:
எம்.முத்துகணேஷ்
36 / 47
37 / 47
38 / 47
39 / 47
கண்ணீர் கசியும் கலைஞர்கள்:
தமிழகத்தில் - எல்லா ஊர்களிலும் அவ்வப்போது கோயில் திருவிழாக்களும், ஊர் விழாக்களும்... பண்டிகைகளும் தொடர்து நடந்து கொண்டே இருக்கும். இத்திருவிழாக்களில் கூத்தும், கலையும் ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமாக இருக்கும். இத்திருவிழாக்களில் ஊர் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் நாட்டுப்புறக் கலைஞர்கள் தமிழகம் முழுக்க பரவிவிரவியுள்ளார்.
ஆட்டக் கலையை வாழ்வாதாரமாக கொண்டுள்ள இந்தக் கலைஞர்களின் வாழ்வை கரோனா தொற்றால் அமலில் இருந்த ஊரடங்கு முடக்கிவிட்டது. இவர்கள் ஏற்கெனவே நலிவடைந்த வாழ்வைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களை இப்போது ஊரடங்கும் முடக்கிவிட்டதால்... தங்களுக்கு அரசாங்கம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என நடனமாடியபடியே கோரிக்கை வைத்தனர். இடம்: காட்பாடி
படம்: வி.எம்.மணிநாதன்
40 / 47
41 / 47
42 / 47
43 / 47
44 / 47
45 / 47
46 / 47
வேலூர் அடுத்த அமிர்தி பகுதிகளில் பருத்தி செடிகளை
காய்ப்புழு தாக்குதலில் இருந்து பாதுகாக்க பருத்தி காய்களுக்கு மருந்துகள் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
. படம்: வி.எம்.மணிநாதன்
47 / 47