Published on : 14 May 2020 13:44 pm

பேசும் படங்கள்... (14.05.2020)

Published on : 14 May 2020 13:44 pm

1 / 42
சுழலும் சக்கரத்தில்...சுழலாத வாழ்க்கை! ஒரு காலத்தில் செல்வந்தர்களிடம் மட்டுமே இருந்த குதிரை வண்டிகளில் சாமான்ய மக்களையும் வலம் வர வைத்தது வாடகை குதிரை வண்டிகள். இவை மோட்டார் வாகனப் பெருக்கத்தால் மிகவும்... அரிதாகிப்போனது. சேலம் உள்ளிட்ட சில ஊர்களில் தலைமுறை தலைமுறையாக சிலர் மட்டும் குதிரை வண்டித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சேலத்தில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் சவாரி செல்வது குறைந்தாலும், வணிகப் பயன்பாட்டுக்கு உதவுவதால், இத்தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் இது வரையில் நம்பிக்கையோடு நகர்ந்துகொண்டிருந்தது. தற்போது மற்றத் தொழில் மாதிரி... குதிரை வண்டித் தொழிலும் ஊரடங்கால் முடங்கிப்போனது . ’தங்களுக்கு போதிய வருமானம் கிட்டாவிட்டாலும்... குதிரையின் பசி போக்காவாவது... கொஞ்சமேனும்... கொள்ளு வாங்கவும், புல்லு வாங்கவும் காசு கிடைத்தால் போதும்டா சாமீ...’ என்ற எதிர்பார்ப்பில் சேலம் செவ்வாய்பேட்டையில் நாட்களோடு சேர்த்து குதிரை வண்டியையும் நகர்த்துகிறார் ஒரு குதிரை வண்டிக்காரர். படங்கள் எஸ். குருபிரசாத்
2 / 42
3 / 42
4 / 42
144 தடை உத்தரவைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பொது மக்களுக்கான ரயில் சேவையைத் தொடங்குவதற்கு முன்பாக - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை ரயில்வே நிலையத்தில் பயணிகள் இடைவெளிவிட்டு நிற்பதற்காக வண்ணத்தில் கோடு மற்றும் கட்டம், வட்டம் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. படம்; எஸ் .கிருஷ்ணமூர்த்தி
5 / 42
6 / 42
இந்தியா முழுவதும் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக மாற்றும் திட்டதைக் கண்டித்து... சென்னை - பல்லவன் இல்லம் டெப்போவுக்கு முன்பாக சிஜடியு சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. படம்; க.ஸ்ரீபரத்
7 / 42
எதிர்வரும் மே 17 முதல் அழகு நிலையங்களை அரசின் விதிமுறைப்படி நடத்த அனுமதி வழங்கக் கோரி பெண்கள் அழகு கலை நிபுணர்கள் நலச்சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்க அச்சங்கத்தின் உறுப்பினர்கள் நேற்று திரண்டனர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 42
கரோனா நோய் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிடக் கோரியும், ஊரடங்கில் பாதிக்கப்பட்ட பீடி தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கிடக் கோரியும் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு-வினர். படம்: வி.எம்.மணிநாதன்.
9 / 42
புதுச்சேரியில் இயங்கக்கூடிய தொழிற்சாலைகளின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அரசு அதிகரித்துக்கொள்ள அனுமதியளித்துள்ளது. அதைக் கண்டித்து ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் பூட்டியிருந்த... புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகதினுள் சென்று கண்டன ஆர்பாட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர். படம்: எம்.சாம்ராஜ்
10 / 42
தொழிற்சாலைகளின் வேலை நேரத்தை புதுச்சேரி அரசு 12 மணி நேரமாக அதிகரித்துள்ளதைk கண்டித்து (சிபிஎம்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எம்.சாம்ராஜ்
11 / 42
வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் 3 கிலோ இலவச துவரம் பருப்பை வாங்க கையேழுத்திடும் பயனாளிகள். இடம்: புதுச்சேரி. படம்: எம்.சாம்ராஜ்
12 / 42
கரோனா பாதிப்பினால் பல தொழில்கள் முடங்கிவிட்டன. ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு... ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதியளித்தாலும் கூட... யாரும் ஆட்டோவில் அதிக அளவு பயணம் செய்வது கிடையாது. இதனால் வாழ்வாதாரம் பாதித்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் புதுச்சேரி சாலையோரம் ஆட்டோவை நிறுத்திவிட்டு பழவியாபாரம் செய்கிறார். படம்: எம்.சாம்ராஜ்
13 / 42
நாடு முழுவதும் கரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் சாதி மத பேதமின்றி ஒன்றிணைந்து இந்தக் கரோனாவை விரட்ட வேண்டும் என... மதுரையில் உள்ள தென்மண்டல பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்களின் தலைமையில் மதுரை புதூர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது, படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
14 / 42
ரயில்வே ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை ரத்து செய்துள்ளதை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ‘ DREU’ சங்கத்தினர் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலக வளாகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: க.ஸ்ரீபரத்
15 / 42
சென்னை பாரிமுனை கோவிந்தப்பா சாலையில் உள்ள கடைகளுக்கு... பல நாட்களுக்குப் பிறகு... மீண்டும் பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்காக வர ஆரம்பித்துவிட்டனர். கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக அங்குள்ள கடைகளின் முன்னால் நேற்று தீயணைப்பு துறையினர் கிருமிநாசினி திரவத்தைத் தெளிக்கின்றனர். படம்: க.ஸ்ரீபரத்
16 / 42
17 / 42
என்று தணியும் வடமாநில மக்களின் தாகம்: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்... தங்களை தங்கள் சொந்த மாநிலத்துக்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பக் கோரி இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் முன்பு திரண்டிருந்தனர். படம்: வி.எம்.மணிநாதன்.
18 / 42
ஊரடங்கு தளர்வு அறிவிப்புக்குப் பின்பு சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. அதில் பெரும்பாலோனோர் முகக்கவசம் அணிந்து சென்றாலும் சிலர் அணிவதில்லை. திருச்சி பாலக்கரை மேம்பாலம் சந்திப்பு அருகே முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களைப் பிடித்து அபராதம் விதித்த போலீஸார். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
19 / 42
20 / 42
நாளுக்கு நாள் சென்னையில் மட்டும் தீவிரமாக பரவி வரும் கரோனா நோயால் போலீஸாரும் அச்சம் அடைந்துள்ளனர். நிறைய போலீஸாருக்கும் க ரோனா தொற்றியதால் சென்னையில் சில காவல் நிலையங்கள் கூட மூடபட்டுள்ளன. அதனால் நேற்று குரோம்பேட்டை போலீஸார் நவீன முகக்கவசத்துடன் சோதனையில் ஈடுபட்டனர். படங்கள்:எம்.முத்து கணேஷ்
21 / 42
22 / 42
’’இது எங்களுக்கு போர்க்காலம் , இந்த நேரத்தில் நாங்கள் எல்லோரும் வீரர்கள். மக்களுக்கு ஆதரவாக கரோனாவை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம் ...’’ என்று தலை நிமிர்ந்து கூறும் அதே நேரத்தில் தலை குனிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்கள் ராகேஷ் பாரதி மற்றும் கண்காணிப்பாளர் வள்ளி. திருநெல்வேலி - அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு... தற்போது மற்ற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க பணிக்கு வந்துவிட்டார் ராகேஷ் பாரதி. ’’இந்த பணி எங்களுக்கு கிடைத்த அற்புத வரம்.. ஏதோ வேலை பார்த்தோம் நேரத்தை நிறைவு செய்தொம் என்று இல்லாமல் மனசுக்கு திருப்தியாக அமைந்துள்ளது. மருத்துவப் பணி எங்களுக்கு கிடைத்த வரம். கரோனா காலம் எங்களுக்கு போர்க்காலம் மாதிரி. இந்நேரத்தில் பணி செய்வதை பெருமையாகக் கருதுகிறோம்’’ என்று கூறினர் ராகேஷ் பாரதியும், கண்காணிப்பாளர் வள்ளியும். இவர்களைப் போன்ற செவிலியர்கள் இருப்பதினால்தான் மருத்துவத் துறை கடவுளின் ஆலயம் என போற்றப்படுகிறது . படம்: மு. லெட்சுமி அருண் .
23 / 42
ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து கொண்டுவரப்பட்டு... காட்பாடி சாலையோரங்களில் ‘’மருத்துவக் குணங்கள் கொண்டது, உடலுக்கு வலு சேர்க்கும்... பல்வேறு சத்துகள் அடங்கியுள்ளது’ என்று கூறி காடை முட்டைகள் விற்கின்றனர். 12 காடை முட்டைகள் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது. படம்: வி.எம்.மணிநாதன்.
24 / 42
கரோனா நோய் தொற்று பரவ ஆரம்பித்த நாளில் இருந்து மருத்துவத் துறைக்கு இணையாக சுகாதாரப் பணியாளர்கள் எதையும் எதிர்பாராமல்... தன்னலமின்றி...0 தங்களது பணிகளைச் செவ்வனே செய்து வருகிறார்கள். அரசும் அவ்வப்போது அவர்களுக்கு மரியாதை செலுத்தி வருகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள். மாநகராட்சி நிர்வாகமும் பதிலுக்கு அவர்களுக்கு கையுறை, காலணி ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வருகிறது. திருநெல்வேலி மாநகராட்சி வாயிலில் அழகான சீருடையில் படைவீரர்கள் போல காட்சியளிக்கும் சுகாதார பணியாளர்கள். படம்: மு.லெட்சுமி அருண்
25 / 42
ஊரடங்கு சில கட்டுபாடுகளுடன் தளர்த்தப்பட்டு உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளதால் 45 நாட்களுக்குப் பிறகு... காட்பாடியில் மகிழ்ச்சியுடன் வாழை இலைகளை விற்பனை செய்ய தொடங்கியுள்ள வியாபாரி. இடம்.. படம்: வி.எம்.மணிநாதன்
26 / 42
கோலி ஜாலி: ’எத்தத் தின்னாப் பித்தம் தெளியும்?’ என்று கிராமப்புறங்களில் சொலவடை சொல்வார்கள். அதே போல கடும் கோடை நாட்களில்... வெய்யிலின் அதிகாரப் பரவல் அதிகரிக்கும் இந்நாட்களில் எதை குடித்தால் தாகம் தணியும் என்று தவிப்பவர்கள் ஏராளம். இந்நிலையில் - வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக.... மக்களின் தாகம் தீர்க்கும் விதமாக... பல வண்ணங்களில் கோலி சோடா விற்பனை ஜோர். படம்: வி.எம்.மணிநாதன்
27 / 42
28 / 42
வருது வருது தண்ணீர் தட்டுப்பாடு: வேலூரில் கரோனா தொற்றுப் பரவல் அச்சத்துக்கு இடையில்.... கோடை வெய்யிலில் குடிநீர் தட்டுப்பாடும் ஆங்காங்கே தலைகாட்ட தொடங்கியுள்ளது. வேலூர் மாங்காய் மண்டி அருகே சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்து குடங்களிலில் குடிநீர் பிடித்து சைக்கிள் ரிக்‌ஷாவில் வைத்து வீட்டுக்குத் தள்ளி செல்லும் பெண்கள். படம்: வி.எம்.மணிநாதன்.
29 / 42
கரோனா தொற்றுப் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு கடந்த 40 நாட்களாக அமலில் இருந்தது. இதையடுத்து கடந்த வாரத்தில் முழு ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் சில தொழில்கள் மீண்டும் தொடங்கின. இந்நிலையில் இன்று - வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே... கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள். படம்: வி.எம்.மணிநாதன்.
30 / 42
அன்னமிட்ட கரங்கள்: கோவையில் வேலை பார்த்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த உழைப்பாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப கோவை ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது அவர்களுக்கு உணவு வழங்கும் அரசு ஊழியர்கள். படம் :ஜெ மனோகரன்
31 / 42
பாதை எப்போ திறக்குமோ: கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையேறும் பாதை, மே மாதம் முழுவதும்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களால்... நிரம்பி வழியும். இப்போது கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் - வெள்ளியங்கிரி மலையேறும் பாதை வனத் துறையினரால் மூடப்பட்டுள்ளதால்.... பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. படம்: ஜெ .மனோகரன்
32 / 42
காத்திருந்த கண்கள்: கோவையில் வேலை பார்த்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த உழைப்பாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து காத்திருந்ததால்... அவர்களை எல்லாம் ரயில் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க இன்று - கோவை ரயில் நிலையத்துக்கு 3 மணி நேரத்துக்கு முன்பே அழைத்து வந்ததால்... தன் பச்சிளங்குழந்தைக்கு நீரூட்டும் தாய் ஒருவர். படம் : ஜெ .மனோகரன்
33 / 42
காத்திருப்பு ஓர் அவஸ்தை: கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல இடங்களில்... பல நிறுவனங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகின்றன. இந்நிலையில் - வேலூர் அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கியில் கரோனா தொற்று அச்சம் காரணமாக... வாடிக்கையாளர்களை வங்கிக்கு உள்ளே அனுமதிக்காததால்... ஓய்வூதியம், முதியோர் உதவித் தொகை வாங்க வந்து.... ஏமாற்றத்துடன் வாசல் படிக்கட்டுகளில் மணிக்கணக்கில் காத்திருக்கும் முதியோர். படம்: வி.எம்.மணிநாதன்
34 / 42
35 / 42
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவால் .. வேலூரில் தங்கியிருந்த அசாமைச் சேர்ந்தவர்களை... கோயம்புத்தூரில் இருந்து காட்பாடி மார்க்கமாக கவுகாத்தி செல்லும் சிறப்பு ரயிலில்... அவர்களின் சொந்த மாநிலத்துக்கு அனுப்ப... வேலூரில் இருந்து அரசுப் பேருந்துகள் மூலம் காட்பாடி ரயில் நிலையத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று அழைத்து செல்லப்பட்டனர். படம்: வி.எம்.மணிநாதன்.
36 / 42
37 / 42
38 / 42
39 / 42
40 / 42
பூட்டு திறந்திடுச்சு: பூட்டு என்றதும் நமது ஞாபகத்தில் திறந்துகொள்ளும் ஊர் - திண்டுக்கல். ‘பாட்டுக்கு ஒரு பாகவதரு... பூட்டுக்கு ஒரு திண்டுக்கல்லு’ என்கிற கிராமிய சொல்லாடலே இருக்கிறது. அப்படி அன்றும் இன்றும்... ஏன் என்றும் பூட்டுக்களுக்கு புகழ்பெற்ற ஊரான திண்டுக்கல்லில் எங்கும் நீக்கமற நடந்தேறிக்கொண்டிருந்த அத்தொழில்... ஊரடங்கால் முடங்கிப்போயிருந்தது. ஆம்... ’திண்டுக்கல்லுக்கே பூட்டா?’ என்று எவரும் கலாய்க்க முடியாத வகையில்.... பூட்டுத் தொழிற்சாலைக்கே - பூட்டுப்போட்டுவிட்டது இந்த கரோனா. அந்நிலையை கடந்து சமீபத்தில் ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால்... மீண்டும் திண்டுக்கல் நகரில் சமூக இடைவெளியுடன் பூட்டு தயாரிக்கும் தொழிலாளர்கள். படங்கள்: பு.க.பிரவீன்
41 / 42
42 / 42

Recently Added

More From This Category

x