1 / 51
உலக செவிலியர் தினத்தையொட்டி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவ படத்துக்கு மெழுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் செவிலியர்கள்.
படம்: எம்.சாம்ராஜ்
2 / 51
3 / 51
கரோனா ஆட்டம் இந்தியாவில் செல்லவே செல்லாது என கரோனாவை எச்சரிக்கும் புதுச்சேரி அரசு மருத்துவமனை செவியர்கள்.
படம்: எம்.சாம்ராஜ்
4 / 51
புதுச்சேரியில் உள்ள சாரம் வருவாய்துறை அலுவலகத்தில் கையில் குழந்தையுடன் மூட்டை முடிச்சுகளுடன் வீட்டை காலி செய்து சொந்த ஊரான பிஹாருக்கு செல்ல இ-பாஸ் வாங்க அமர்ந்துள்ள பெண்.
படம்: எம்.சாம்ராஜ்
5 / 51
கரோனாவினால் வேலை இழப்பு உணவிற்கு கஷ்டப்படும் நிலை மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரி வருவாய்த் துறை அலுவலகத்தில் இ-பாஸ் வாங்க காத்து நிற்கும் மகாராஷ்டிரா, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்.
படம்: எம்.சாம்ராஜ்
6 / 51
புதுச்சேரி. எல்லை பிள்ளைச்சாவடி பகுதியில் இன்று வானம் காலை முதலே கரு மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன் சூறைக் காற்றும் வீசியதில் சரிந்து கிடக்கும் பொருட்கள்.
படம்: எம்.சாம்ராஜ்
7 / 51
கரோனாவோ... வெயிலோ.. மழையோ… எல்லாத்தையும் நாங்க பார்த்துக்குறோம்.. என கொட்டும் மழையில் நனைந்தபடி புதுச்சேரி. வழுதாவூர் சாலையில் குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு ஊழியர்கள்.
படம்: எம்.சாம்ராஜ்
8 / 51
புதுச்சேரி வழுதாவூர் சாலையில் பைக்கில் நனைந்தபடி தந்தை தம்பியுடன் மழையை ரசித்தபடி செல்லும் பெண்.
படம்: எம்.சாம்ராஜ்
9 / 51
புதுச்சேரி வி.வி.பி. நகரில் மழையையும் பொருட்படுத்தாமல் கரோனா தடுப்பு பணியில் கலந்து கொள்ள முகத்தில் கரோனா வேடமிட்டு செல்லும் சமூக ஆர்வலர்.சரவணன்,
10 / 51
புதுச்சேரி, விவி.நகரில் கொட்டும் மழையில் பைக்கில் தாயுடன் துப்பட்டாவால் முகத்தை மூடி செல்லும் சிறுவன்.
11 / 51
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று நோய் சம்பந்தமான செவிலியர்களுக்கு நடந்த பயிற்சி முகாமில் டாக்டர் தினகரன் பேசுகிறார்.
- படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி
12 / 51
தேசிய செவிலியர் தினத்தை முன்னிட்டு இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஆடிட்டோரியம் எதிரே உள்ள, செவிலியர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள முன்னோடி செவிவியர் நைட்டிங்கேள் அம்மையார் சிலைக்கு செவிலியர்கள் மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
படம் : எஸ் கிருஷ்ணமூர்த்தி
13 / 51
14 / 51
வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து ஊரடங்கு காரணமாக 50 நாட்களாக தங்கியிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 1,464 பேர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க - அவர்கள் அத்தனை பேரும் வேலூரில் இருந்து பேருந்துகள் மூலம் காட்பாடி ரயில் நிலையத்துக்கு நேற்று அழைத்துவரப்பட்டனர்.
படம்: வி.எம்.மணிநாதன்.
15 / 51
16 / 51
வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து ஊரடங்கு காரணமாக முடங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 1,464 பேர் நேற்று (12.5.2020) பகல் 12 அளவில் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்களின் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
படம்: வி.எம்.மணிநாதன்.
17 / 51
18 / 51
மதுரை திமுக திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் மற்றும் மதுரை தி.மு.க செயலாளர் தளபதி வேலுச்சாமி மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவி தொடர்பான கோரிக்கை மனுவை அளிக்க வந்தனர்.
படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
19 / 51
செவிலியர் தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த செவிலியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுஜாதா தலைமையில் செவிலியர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்தனர்.
படம் ; எஸ் கிருஷ்ணமூர்த்தி
20 / 51
காட்பாடி பகுதிகளில் - கோடை வெய்யிலுக்கு இதமாக சமூக இடைவெளியுடன் ஆங்காங்கே சாலையோரங்களில் உடல் சூட்டை தனிக்கும் நுங்கு விற்பனை களைகட்டுகிறது.
படம்: வி.எம்.மணிநாதன்.
21 / 51
22 / 51
திருநெல்வேலி பகுதிகளில் தங்கி உழைத்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் இன்று (!2.5.20200 முடிவு செய்துள்ளதை அடுத்து... நெல்லை ரயில் நிலையத்தில் சமூக இடைவெளி அடையாளங்களை குறிக்கும் ரயில்வே ஊழியர்கள்.
படம்: மு.லெட்சுமி அருண்
23 / 51
ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்ட நிலையில் - வேலூர் நகரத்தில் புகழ்பெற்ற நேதாஜி மார்க்கெட்டில்... நேற்று காய்கறிகளை விற்பனைக்கு வைத்து சிறு வியாபாரிகள் காத்திருந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால்... முழு ஊரடங்கு நாட்களில் காய்கறிகளை வாங்கி குவித்த மக்கள் கூட்டத்தை... ஊரடங்கு தளர்த்தப்பட்ட இன்றைய நாட்களில் (12.5.2020) காணவில்லை என்பதுதான்.
படம்: வி.எம்.மணிநாதன்.
24 / 51
25 / 51
26 / 51
மகன் தந்தைக்காற்றும் உதவி:
இனிக்கும் தேமதுர அல்வாவுக்கு அடுத்து திருநெல்வேலியில் புகழ்பெற்றது பரோட்டா சால்னா.
நெல்லை எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சிறு சிறு பரோட்டாக் கடைகளில்கூட பரோட்டோவுக்கு இரண்டு முதல் நான்கு வகையிலான சுவைகளில் குழம்பு (சால்னா) வகைகளைப் பரிமாறுவார்கள்.
இந்த பரோட்டா + சால்னாவுக்கு பல பேர் அடிமை . அந்த அளவுக்கு பேர் போன அந்த பரோட்டா கடைகள் எல்லாம்... ஊரடங்கு உத்தரவு காரணத்தால் முடங்கிப் போயிருந்தன. தற்போது மீண்டும் 50 நாட்களுக்குப் பிறகு இரண்டு நாட்களாக மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன.
பாளையங்கோட்டையில் உள்ள கடை ஒன்றில் வேறு பணியில் உள்ள மகனார் ஒருவர் தனது தந்தைக்கு உதவி செய்யும் வகையில்... பரோட்டாக்களை லாவகமாக தயார் செய்து கொடுக்க... தந்தை அதை வகையாக சுட்டு எடுக்கிறார் .
படங்கள் : மு. லெட்சுமி அருண்
27 / 51
28 / 51
உழைக்க வந்த தமிழகத்தில் ஊரடங்கு காரணத்தால் சிக்கிக் கொண்ட மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநில இளைஞர்கள்... தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கையில் காசு இல்லாத இளைஞர்கள் சிலர்... சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் ஓசி டிக்கெட்டிலாவது சென்றுவிடுவோம் என... சேலையூர் கேம்ப் ரோடு பகுதியில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி சாரை சாரையாக நடந்து சென்றனர்.
படம்: எம்.முத்துகணேஷ்
29 / 51
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் சொந்த ஊருக்கு செல்ல... சென்னை விமான நிலைய பகுதியில் தங்கியிருந்த வட மாநில இலைஞர்கள் நடந்து செல்லும் இளைஞர்கள்சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கிச், சென்றனர்.
- படம்: எம்.முத்துகணேஷ்
30 / 51
கரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்ட மக்களைக் காக்க தன்னலம்பாராமல் அல்லும் பகலும் சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள வேலூர் - பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனை செவிலியர்கள்... இன்று ( 12.5.2020) உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு - பிளாரன்ஸ் நைட்டிங்கேல் புகைப்படத்தை வைத்து மெழுகுவத்தி ஏந்தி... செவிலியர் தின உறுதிமொழியை எற்று தங்களுக்குள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
படம்: வி.எம்.மணிநாதன்.
31 / 51
32 / 51
அரசு நிகழ்ச்சிகளாகட்டும்... சுகாதார நிகழ்ச்சிகளாகட்டும்... பொதுமக்கள் கூடும் எந்த ஒரு நிகழ்ச்சிகளாகவே இருக்கட்டும் ... இந்த வெள்ளை கோடுகள் ஆஜராகிவிடும். அப்போதெல்லாம் இந்த வெள்ளைக்கோடுகளை சர்வ சாதாரணமாக நாம் கடந்து போயிருப்போம். இன்றைய கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக ஆங்காங்கே... துப்புரவு பணியாளர்களால் போடப்படும் இந்த வெள்ளைக் கோடுகள் மிக முக்கியமானவை.
3 பங்கு சுண்ணாம்பும் ஒரு பங்கு பிளீச்சிங் பவுடரும் கலந்து போடப்படும் இந்த வெள்ளைப் பவுடரானது சிறந்த கிருமி நாசினியாகும்.
படம்: மு.லெட்சுமி அருண்
33 / 51
34 / 51
இந்த நிலையும் மாறும்... மாற வேண்டும்:
கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து ஏராளமானோருக்கு... கரொனா தொற்றுப் பரவியதாக கூறப்பட்டதால்... சென்னை மக்கள் பெருத்த பீதியடைந்துள்ளனர். இதற்கு உதாரணம் - கிழக்கு தாம்பரம் பகுதியில் பள்ளி மைதானம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்.
கோயம்பேட்டில் இருந்து ஏராளமானோருக்கு கரோனா பரவிய அச்சத்தில்...
தாம்பரம் - தற்காலிக மார்க்கெட்... காய்கறிகள் வாங்க ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையும் மாறும்... மாற வேண்டும்.
படங்கள்: எம்.முத்து கணேஷ்
35 / 51
36 / 51
37 / 51
வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து திமுகவின் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் பெறப்பட்ட 858 கோரிக்கை மனுக்களை... மக்களவை உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் ஆகியோர் வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் வழங்கினர்.
படம்: வி.எம். மணிநாதன்
38 / 51
50 நாட்களாக அமலில் இருக்கும் ஊரடங்கால்... மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். வாகனங்கள் தங்கள் வாலை சுருட்டிக்கொண்டன. இந்த கெட்ட சூழலின் ஒரே நன்மையாக உலகம் முழுவதும் - சுற்றுச்சூழல் மாசு குறைந்து போனது.
இந்நிலையில் - சென்னை புறநகர் பகுதிகளில் எப்போதும் இல்லாதவாறு நேற்று மதியவேளையில்... ஆகாயம் அடர் நீல நிறத்தில் காட்சியளித்தது. அதற்குப் போட்டியாக பஞ்சுப்பொதி போல் திரண்டு வந்த மேகக்கூட்டங்கள் ஜாலம் காட்டின.
படங்கள்: எம். முத்துகணேஷ்
39 / 51
40 / 51
41 / 51
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக - ஊரடங்கு உத்தரவை.... பொதுமக்கள் மீறாமல் அல்லும் பகலும் தமிழகம் முழுதும் தன் சுகம் பாராமல் உழைத்தனர் போலீஸார். சமூக வலைதளங்களில் இப்போதும் அவர்களுக்கான பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் - போலீஸாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் சூரி... இன்று திருவல்லிக்கேணி -வாலாஜா சாலையில் உள்ள டி -1 காவல் நிலையத்துக்கு வருகை தந்து... அங்கிருந்த காவல் துறையினரிடம் ஆட்டோகிராஃப் வாங்கியதுடன்... மனம் நெகிழ்ந்து காவலர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தார். நடிகர் சூரியின் இந்தச் செயல்... அங்கிருந்த காவலர்களை நெகிழ்ச்சியுற செய்தது.
- படம்: எல்.சீனிவாசன்
42 / 51
43 / 51
சென்னையில் நாளுக்கு நாள் வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே குடி நீர் பிரச்சினை ஏற்பட்டாலும் ஏற்படலாம் என... முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக - சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் தொட்டி இல்லாத இடங்களில் ’சின்டெக்ஸ் டேங்க்’ வைக்கவுள்ளனர். இதையடுத்து சென்னை (இடம் ஒமந்துரார் அரசினர் தோட்டம் அருகில் வீதியொன்றில் சின்டெக்ஸ் டேங்க்’கை தனது 3 சக்கர வாகனத்தில் எடுத்து செல்கிறார் உழைப்பாளி ஒருவர்.
படம்: எல்.சீனிவாசன்
44 / 51
சுகமான சுமைகள்:
ஊரடங்கு காரணமாக முடங்கியிருந்த சிறு, குறு தொழில்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன்அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து... 50 நாட்களுக்குப் பிறகு... பீடி லேபிள் ஒட்டுவதற்கு... பீடி பண்டலை சுமந்து செல்லும் பெண்கள்.
படம்: வி.எம்.மணிநாதன்
45 / 51
கோவை மத்திய ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் ஒடிசாவுக்குச்
செல்ல காத்திருக்கும் பயணிகள்.
படம் :ஜெ .மனோகரன்
46 / 51
ரயில் மூலம் ஒடிசாவுக்குச்
செல்ல
கோவை ரயில் நிலையத்துக்கு
லாரிகள் மூலம் அழைத்துவரப்பட்ட
வெளிமாநிலத் தொழிலாளர்கள்.
படம் :ஜெ .மனோகரன்
47 / 51
கையில் காசு இல்லாததால்
கோவை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களில்
ஓசி டிக்கெட்டிலாவது சொந்த ஊருக்குசென்றுவிடுவோம் என கோவை ரயில் நிலையத்துக்கு...
சாரை சாரையாக நடந்து செல்லும் வட மாநில இளைஞர்கள்.
படம் :ஜெ .மனோகரன்
48 / 51
ரயில்கள் ஓடாது:
தமிழகத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் கரோனா ஊரடங்கு காரணமாக வேலை, உணவு இன்றித் தவிக்கின்றனர். இதனால் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து கோவையில் இருந்து ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு கடந்த வாரம் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
இந்நிலையில் சொந்த ஊர் செல்ல தினமும் ஆயிரக்கணக்கான அளவில்
வடமாநில தொழிலாளர்கள் வருவதால் வரும் 17-ம் தேதி வரை பயணிகள் ரயில் எதுவும் இயக்கப்படமாட்டாது எனவும் மற்றும் மத்தியஅரசு அறிவிப்பு வரும்வரை பயணிகள் ரயில் இயங்காது என கோவை ரயில் நிலையம் முன் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
படம்:ஜெ.மனோகரன்
49 / 51
கரோனா வைரஸ் தொற்று நோய்யிலிருந்து பாதுகாக்க நாகசக்தி அம்மன் அறக்கட்டளை சார்பில் கோவை ரயில்நிலைய பணிமனை ஊழியர்களுக்கு நிலைவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டது
படம் :ஜெ .மனோகரன்
50 / 51
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட வடமாநில மக்களை அவர்களின் தங்களின் சொந்த மாநிலத்துக்கு சி
றப்பு ரயில் மூலம் தமிழக அரசின் செலவில் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் குவிந்த வடமாநில மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இ-பாஸ் பதிவு செய்து தரப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்.
51 / 51
வேலூர் டவுன் ரயில் நிலையம் அருகே சிறு பாலம் கட்டுவதற்காக...
மூடப்பட்ட பெங்களூரு சாலையின் கட்டுமானப்
பணிகள் நிறைவடைந்த
நிலையில் 50 நாட்களுக்குப்
பிறகு நேற்று (மே 11) திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.
படம்: வி.எம்.மணிநாதன்.