Published on : 11 May 2020 22:28 pm

பேசும் படங்கள்... (11.05.2020)

Published on : 11 May 2020 22:28 pm

1 / 38
வெயில் நகரிலிருந்து வெளி மாநிலங்களுக்கு: வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து, ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட வடமாநிலம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 1,142 பேர் தமிழக அரசின் செலவில் நேற்று (11.5.2020) பகல் 12 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஹவுராவுக்கு அனுப்பி வைக்கபட்டனர். வேலூரின் வெயில் ஒரு பக்கம்… கரோனா பீதி ஒரு பக்கம்… என பயமுறுத்தவே நிம்மதி நோக்கி சொந்த ஊர்ப்பயணம் செய்கிறார்கள். படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 38
3 / 38
மணியில்லா மணிலா: கரோனா பாதிப்புக்குப் பின்னர் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இருந்து விவசாயப் பொருட்கள் புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனை மையத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. அங்கே எடைபோட அடுக்கி வைக்கப்பட்டுள்ள மணிலா மூட்டைகள்தான் இவை. மகசூல் குறைவாக உள்ளபோதும் கிலோ ரூ50-க்குக் குறைவாகவே விலை கிடைக்கிறது என விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர். படம்: எம்.சாம்ராஜ்
4 / 38
போலீஸுக்கே சோதனை: ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த கரோனா அச்சுறுத்தல் நாட்களில் சிறப்பாகப் பணியாற்றியதில் பெரும் பங்கு காவல் துறையினரைச் சாரும். இதுவரை குற்றவாளிகளைத் துரத்தி வந்த போலீஸை… இப்போது கரோனா துரத்துகிறது. ஆம்… அவர்கள் அச்சத்தை மறந்து பணியாற்றினாலும்… தமிழகத்தில் பல இடங்களில் போலீஸாரும் கரோனாவின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து புதுச்சேரியில் இந்த நாட்களில் பணியாற்றிய காவல் துறையின ருக்கு கோரிமேடு காவல்துறை பயிற்சி மையத்தில் சுகாதாரத் துறையின் சார்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.. படம்: எம்.சாம்ராஜ்
5 / 38
ஆவி பறக்க டீ… காபி பார்சல்: ஊரடங்கு தொடரும் நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் வேலூரில் நேற்று டீக்கடைகள் திறக்கப்பட்டு பார்சலில் மட்டும் டீ, காபி வழங்கப்பட்டது. .டீக்கடை பெஞ்சில் அமர்ந்து தினசரிகளைப் படித்து உலக விவகாரம் பேசும் டீ குடிகாரர்கள் அந்த அனுபவத்துக்காக ஏங்குகிறார்கள். படம்: வி.எம்.மணிநாதன்.
6 / 38
ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுகிறார்கள்: கடந்த 45 நாட்களுக்கும் மேல் திறக்கப்படாத டீக்கடைகள் இன்றுமுதல் திறக்கப்பட்டது . ஆனால் பார்சலில் டீ மட்டும் கொடுக்க அறிவுறுத்தப்பட்டி ருக்கிறது . அதனால் வியாபாரம் கொஞ்சம் மந்தமாக காணப்படுகிறது என்று கூறுகிறார்கள் டீக்கடையினர் . திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் டீ மாஸ்டர் ஒருவர் தனது வாடிக்கையாளருக்காக டீ ஆற்றுகிறார். படம்:. மு.லெட்சுமி அருண்
7 / 38
சாலை ஓரம் சேலை வியாபாரம்: ஊரடங்கு தொடரும் நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் வேலூரில் தேநீா், ஜவுளி உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 45 நாட்களுக்குப் பிறகு… காட்பாடியின் சாலையோரங்களில் தொடங்கிய துணி வியாபாரம். கொடி கட்டிப் பறக்குமா வண்ண வண்ணத் துணி வியாபாரம்? படம்: வி.எம்.மணிநாதன்.
8 / 38
சிறு குறு கடைகள் சுறுசுறு: இன்றுமுதல் சிறுகுறு கடைகளை திறக்கலாம் என்ற அரசு உத்தரவை அடுத்து, பாளையங்கோட்டை மார்க்கெட் உள்பகுதியில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் நொறுக்குத்தீனியான சீடை மற்றும் வற்றல் வியாபார கடைகள் திறந்திருந்தன . படம்: மு.லெட்சுமி அருண் .
9 / 38
மீண்டும் டீக்கடை பெஞ்ச்! தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் டீக்கடைகள் கட்டுப்பாடுகளுடன் செயல்படலாம் என அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து இன்று (11.5.2020) முதல் சேலத்தில் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் டீக்கடைகள் திறக்கப்பட்டன.. நீண்ட நாட்களுக்குப் பிறகு டீககடை திறக்கப்பட்ட மகிழ்ச்சியுடன் தொழிலில் ஈடுபட்டிருந்த பணியாளர். படம்: எஸ்.குரு பிரசாத்
10 / 38
எப்போ திறக்குமாம் கோயில்: ஊரடங்கு உத்தரவு தளர்வு பெற்றதால் பாளையங்கோட்டை மார்க்கெட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடைகளும் மற்றும் கோயிலுக்குத் தேவையான வெற்றிலை - பாக்கு மற்றும் சந்தானம் மற்றும் பூஜை சாமான்கள் விற்கும் சிறிய கடைகள் திறந்திருந்தன .இதனால் விரைவில் கோயில்களும் திறக்கப்படலாம் என்று பக்தர்களிடம் உற்சாகம் எழுந்துள்ளது. படம்: மு. லெட்சுமி அருண்
11 / 38
கடைவிரித்தேன் கொள்வாரில்லை: சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் நிலையில், வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் மகிழ்ச்சியுடன் பூக்கடையை திறந்து மாலைகளை கட்டுகிறார் பூ வியாபாரி.. படம். வி.எம்.மணிநாதன்
12 / 38
குடம் மட்டும் போதுமா? முகம் மூட வேண்டாமா: கரோனா வைரஸ் பிடியில் சிக்காமல் இருக்க சேலத்தில் பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர். சேலம் செவ்வாய்ப்பேட்டை தேவாங்கபுரம் பகுதியில் சமூக இடைவெளியைக் கடைபிடித்தவாறு பொது மக்கள் குடிநீர் பிடித்துச் சென்றனர். இருந்த போதிலும் இவர்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பது பாதுகாப்பற்றதே. படம் : எஸ்.குரு பிரசாத்
13 / 38
ஜவுளிக்கடையில் கிருமிநாசினிகள்! கரோனா தொற்று காரணத்தால் தமிழகத்தில் 144 அமலில் உள்ள நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது .தி.நகரில் உள்ள ஜவுளிக் கடைக்கு வருபவர்களுக்கு கிருமிநாசினி திரவம் தெளித்து அனுமதிக்கப்பட்டனர். படம்: க,ஸ்ரீபரத்
14 / 38
மீண்டும் களைகட்டுமா ரெங்கநாதன் தெரு: எப்போதும் மக்கள் கூட்டம் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு பகுதி தி.நகர் ரெங்கநாதன் தெரு. கடந்த சில தினங்களாக 144 தடை காரணத்தால் வெறிச்சோடிக் கிடந்த அந்தத் தெரு, தற்போது சற்றே மக்கள் நடமாட்டத்துடன் உள்ளது. மீண்டும் அவ்விடம் களைகட்டுமா? படம்: க,ஸ்ரீபரத்
15 / 38
மீண்டும் உயிர் பெறும் கட்டிடப் பணிகள்: ஊரடங்கு தொடரும் நிலையில், சில கட்டுப்பாடுகளுடன் சிறு, குறு தொழில்கள் மற்றும் கட்டிட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் கால்வாய் மீது கான்கிரீட் அமைக்க கம்பி கட்டும் பணியில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர். படம்: வி.எம்.மணிநாதன்.
16 / 38
17 / 38
ஆட்டோக்கள் ஆர்ப்பாட்டம்: 144 தடை உத்தரவை தொடர்ந்து சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மற்றும் ஓட்டுநர்கள் நிவாரணம் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். படம் :எஸ். கிருஷ்ணமூர்த்தி
18 / 38
பிராணிகள் மீதும் பாசம்; ஒரு பக்கம் அலோபதி மருத்துவர்கள் கரோனா நோய் தாக்குதலை கட்டுப்படுத்த போராடிக்கொண்டு இருக்கின்றனர் . அதே நேரம் விலங்குகளுக் கான சிகிச்சையில் கால்நடை மருத்துவர்கள் தங்களது பணியினை தடங்கல் இல்லாமல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . திருநெல்வேலி ராமையன்பட்டி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் காயமடைந்து எலும்பு முறிவு பெற்ற விலங்குகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்து மருத்துவம் பார்த்துள்ளனர். படம்: மு.லெட்சுமிஅருண் .
19 / 38
காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை கே.கே. நகர் பகுதியில் பணியாற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு நேற்று நிவாரண உதவிகள் வழங்கினார் . படம் :எஸ் .கிருஷ்ணமூர்த்தி
20 / 38
சென்னையில் தியாகராய நகர் பகுதியில் ஓய்வின்றி இயங்கும் ரெங்கநாதன் தெரு இதுநாள் வரை முடங்கிக்கிட ந்தது. இப்போது உயிர் பெற்றுச் சுறுசுறுப்பாகி வருகிறது. ரெங்கநாதன் தெருவில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் ஆர்வமாக துணி வாங்கும் மக்கள். படம்:க.ஸ்ரீபரத்
21 / 38
22 / 38
மஞ்சள் தெளித்து அள்ளி முடிச்சு: மதுரை கீழமாசி வீதியில் நீண்ட நாளுக்குப் பிறகு பல சரக்கு மற்றும் மளிகை கடை திறப்பதற்கு முன்பு மஞ்சள் கலந்த தண்ணீர் தெளித்து விற்பனையைத் தொடங்கினர். - .படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
23 / 38
தியாகராய நகர் கடந்த 50 நாட்களாக அமைதியின் திருவிடமாக காட்சியளித்தது. சில கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதற்கு பிறகு நேற்று முதல் சென்னை தியாகராய நகரில் சூடுபிடிக்கத் தொடங்கியது சூடான டீ. வியாபாரம்! படம் :க.ஸ்ரீபரத்
24 / 38
பிரபா… ஜெராக்ஸ் கடையிங்களா: என்னமோ பத்தாயிரம் வாடிக்கையாளர்கள் அலைபேசியில் அழைத்து… போன் மேல் போன் போட்டு ‘’பிரபா… ஜெராக்ஸ் கடையிங்களா… எப்போ சார்… கடய தொரப்பீங்க…’’ என்று வற்புறுத்தி அழைத்தது மாதிரி…. சென்னையில் அவசரம் அவசரமாக திறக்கப்பட்ட ஜெராக்ஸ் கடை ஒன்று. படம்: க.ஸ்ரீ.பரத்
25 / 38
சுழலும் சக்கரங்கள்! ’’ஏன் சார்…. பூக்கடை… புண்ணாக்குக் கடையெல்லாம் தொறக்குறப்ப…நாங்க தொறக்கக் கூடாதா…’ என்கிற எண்ணத்தில்… சென்னையில் மோட்டார் வைண்டிங் கடைகளும் நேற்றுமுதல் இயங்கத் தொடங்கின. படம்: க.ஸ்ரீபரத்
26 / 38
குடும்பப் பொறுப் ‘பூ’: தமிழகம் முழுக்க ஊரடங்கு அமலில் இருந்த கிட்டத்தட்ட 50 நாட்களுக்குப் பிறகு… தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக… வேலூர் அண்ணா சாலையில் சுட்டெரிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் மல்லிகைப் பூக்களைக் கூவிக் கூவி விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர். படம்: வி.எம்.மணிநாதன்.
27 / 38
உழைக்கத் தயார்: முழு ஊரடங்கு அமலில் இருந்த 50 நாட்களுக்குப் பிறகு… சென்னையில் - மீண்டும் கடை திறந்து… வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து தனது எலெக்ட்ரானிக் கடையை திறந்து வைத்திருக்கிறார் ஓர் உழைபாளி. படம்: க.ஸ்ரீபரத்
28 / 38
எப்படா கடையை திறந்து… சம்பாத்தியத்தை பார்ப்போம் என்று ஒவ்வொரு வியாபாரம் செய்பவர்களும் காத்துக்கிடந்தனர். ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் சென்னை தியாகராய நகர் பகுதியில் ஃபேன்ஸி ஸ்டோர் இயங்க ஆரம்பித்துள்ளது. படம்: க.ஸ்ரீபரத்
29 / 38
உழைப்பை நம்பும் ஒருவர்: கரோனா தொற்று பாதிப்பாலும்… ஊரடங்கு காரணத்தாலும் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரமே பஞ்சராகி போன நிலையில் – ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளத்தப்பட்ட நிலையில் … சென்னை அண்ணா சாலையில் தனது பஞ்சர் ஓட்டும் தொழிலை… கடவுள் மீது பாரத்தைப் போட்டு மீண்டும் தொடங்கியிருக்கிறார் உழைப்பை நம்பும் ஒருவர். படம் க.ஸ்ரீபரத்
30 / 38
திருத்துறைப்பூண்டியில் நகராட்சி ஊழியர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தாம்பரம் நகராட்சி ஊழியர்கள் நகராட்சி அலுவலகம் முன்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம்நடத்தினர். படங்கள்: எம்.முத்து கணேஷ்
31 / 38
தமிழகத்தில் இது வரையில் அமலில் இருந்த ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில் சென்னை – திருவல்லிக்கேணியில் நேற்று முதல் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற ஆரம்பித்தன. படம்: எல்.சீனிவாசன்
32 / 38
வாத்துப் பாப்பா: சென்னை - மணிமங்கலத்தை அடுத்த நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த சிறுமி நேத்ரா. 3-ம் வகுப்புதான் படிக்கிறார். தனது தந்தைக்கு துணையாக வாத்து மேய்த்துக் கொண்டிருக்கிறார். நேத்ராவிடம் பேசிய போது, ’’முழுப் பரிச்சை லீவோட… கரோனவுக்கு லீவும் சேர்ந்துடிச்சி. அதான் அப்பாவோட சேர்ந்து அப்பாவுக்கு ஒத்தாசையா.. ஜாலியா வாத்து மேச்சுட்டு இருக்கேன். ஒரு வாத்து வெலை 200 ரூவா. ஆனா வாத்தை நாங்க உரிச்சு தர மாட்டோம். அப்படியே எடுத்துக்கிட்டுப் போயிடணும். கரோனா நோவால நாங்க எங்க கையால உரிச்சித் தர கூடாதாம்’’ என இன்னமும் மழலை மாறாமல் பேசி முடித்தாள். இயற்கையோடு இணைந்த வாழவு. படம்: எம்.முத்து கணேஷ்
33 / 38
கோவை மாநகராட்சி வளாகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக முழு உடல்பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப்பொருட்களை அமைச்சர் வேலுமணி வழங்கினார். உடன் கோவை ஆட்சியர் ராஜாமணி. படம்: ஜெ .மனோகரன்
34 / 38
நிவாரணப் பொருட்களை வாங்க கோவை மாநகராட்சி வளாகத்தில் தனிமனித இடைவெளி விட்டு சாவகாசமாக அமர்ந்து இருக்கும் துப்புரவுப் பணியாளர்கள் படம்: ஜெ.மனோகரன்
35 / 38
ஊரடங்கு உத்தரவு தளர்வு பெற்ற நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பேட்டரி சர்வீஸ் கடையில் மீண்டும் உற்சககமாக தனது பணியைத் தொடங்கியிருக்கும் ஊழியர்கள். படம்: ஜெ.மனோகரன்
36 / 38
ஊரடங்கு உத்தரவு தளர்வு பெற்ற நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவை ஆவரம்பாளையம் சாலையில் உள்ள இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் உற்சாகமாக பணியாற்றும் ஊழியர் ஒருவர். படம்: ஜெ .மனோகரன்
37 / 38
கோவை டவுன் ஹால் பெரிய கடை வீதியில் உள்ள வங்கி ஒன்றில் கரோனா தொற்றுப் பரவலை தடுக்க… முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கியின் வாசலுக்கே வந்து… வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் வங்கிஉழியர்கள். படம்: ஜெ.மனோகரன்
38 / 38
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில்… தமிழகத்தில் மீண்டும் செல்போன் விற்பனை கடை மற்றும் பழுது நீக்கும் கடைகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் - சென்னை அண்ணா சாலையில் இருக்கும் ரிச் தெரு ( ரேடியோ மார்க்கெட்) இயங்காமல் வெறிச்சோடி காணப்பட்டது . படம்: க.ஸ்ரீபரத்

Recently Added

More From This Category

x