1 / 21
தமிழகத்தில் - ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தாம்பரம் ரயில் நிலையம் வண்ணமயமாக பயணிகளுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இனிவரும் எதிர்காலங்களில்... இங்கு வரும் பயணிகள் சமூக இடைவெளியோடு... டிக்கெட் பெறுவதற்கு வசதியாக - ரயில் நிலையத்துக்கு வெளியே வட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
படம்: எம்.முத்து கணேஷ்
2 / 21
40 நாட்களுக்கும் மேலான- ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு ஓரளவு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி - குறுக்குத்துறையில் உள்ள தனது உணவுக் கடையின் முன்பு ’செய்யும் தொழிலே தெய்வம்’ என்கிற எண்ணத்தில் தண்ணீர் தெளித்து கோலம்போடும் வயதான பெண்மணி.
படம்: மு.லெட்சுமி அருண்
3 / 21
தமிழகத்தில் - ஊரடங்கு ஓரளவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மதுரைப் பகுதிகளில் பல இடங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகளைத் தளர்த்தாததால் போலீஸாரைக் கண்டித்து மதுரை அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக பொதுப்பணித் துறை அலுவலகத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
4 / 21
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பாலம் செக்போஸ்ட் அருகே உள்ள அழகிரிபுரத்தில் ரேஷன் கடையொன்றில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி ‘உண்ணத் தகுதியற்றது’ எனக் கூறி அந்த அரிசியை சாலையில் கொட்டி நேற்று அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்: ஜி.ஞானவேல் முருகன்
5 / 21
45 நாட்கள் ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு மதுக்கடையை மீண்டும் திறக்க அரசு உத்தரவிட்ட நிலையில் - ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பாலம் செக்போஸ்ட் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி அழகிரிபுரம் பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்:ஜி.ஞானவேல் முருகன்
6 / 21
மதுரை செல்லூர் அடுத்த மீனாட்சிபுரத்தில் மதுபானக் கடையை மூடச் சொல்லி பொதுமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் மக்கள் மறியலைத் தடுத்து பொதுமக்கள் மீது தடியடி நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
7 / 21
பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நேற்று (மே 7) நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில்... வாகன ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு தகவல் ஆடியோ சி.டி-யை வெளியிட்டதுடன், அருகில் உள்ள கடைகளில் கரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்களை ஒட்டி ஆலோசனைகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வழங்கினார்.
படம்: மு.லெட்சுமி அருண்
8 / 21
சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் அரசு உத்தவின்படி ’டாஸ்மாக்’ மதுக்கடைகள் திறக்கப்பட்டு... 2-வது நாளாக இன்றும் (8.05.2020) மது விற்பனை நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று (7.5.2020) மட்டுமே ரூ.10 கோடியே 11 லட்சத்துக்கு மது விற்பனை ஆகியுள்ள நிலையில்... 2-வது நாளான இன்று சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு நேற்று அதிகாலையில் இருந்தே படையெடுத்த கூட்டத்தின் ஒரு பகுதி இது.
படம்: எஸ்.குரு பிரசாத்
9 / 21
சர்வதேச அளவில் செஞ்சிலுவை சங்கம் தொடங்கப்பட்ட நாளான இன்று (7.5.2020) சென்னையில் உள்ள செஞ்சிலுவை சங்க கிளை அலுவலகத்தில் தமிழ்நாடு செஞ்சிலுவை சங்கத் தலைவர் டாக்டர் ஷரீஸ் மேத்தா... ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.
படம்: க.ஸ்ரீபரத்
10 / 21
கரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் வாழும் வெளி மாநிலத்தவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப சென்னை மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதையடுத்து - நேற்று சென்னை கண்ணப்பன் திடல் பகுதியில் உள்ள முகாமில் இருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பேருந்து மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு நடைபெற்றது.
படம்: க.ஸ்ரீபரத்
11 / 21
நகர்த்த முடியாத நம்பிக்கை:
தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஓரளவுக்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி தொழில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக - தற்போது செங்கல் விற்பனையில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், இந்நிலை மாறி அதிலிருந்து மீண்டு வருவோம் என்ற தன்னம்பிக்கையுடன்
சேலம் அயோத்தியாப்பட்டிணத்தை அடுத்த முட்டக்காடு கிராமத்தில் செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். நம்பிக்கைத்தானே வாழ்க்கை!
படங்கள்: எஸ்.குரு பிரசாத்
12 / 21
13 / 21
மது வாங்க வந்த மாது:
ஊரடங்குக்குப் பிறகு மீண்டும் மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் பெண்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் - கோவை பீளமேடு ஜீ.வி ரெஜிடன்சி பகுதியில் அதிகாலையில் இருந்தே... மது பானம் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த மூதாட்டி.
படம் : ஜெ .மனோகரன்
14 / 21
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக - திருநெல்வேலி டவுண் நயினார்குளம் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு மாற்றாக 9.5.2020 முதல் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக மார்க்கெட் -செயல்பட ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து.... விற்பனைக்கு காத்திருந்த வாழைத்தார்கள்.
படம்: மு.லெட்சுமி அருண்
15 / 21
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக - திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் -செயல்பட ஆரம்பித்துள்ள தற்காலிக மார்க்கெட்டில் வியாபாரிகளுக்காக காத்திருக்கும் மூட்டை முடிச்சுகள். படம்: மு.லெட்சுமி அருண்
16 / 21
இந்த ஆண்டு பண்ருட்டியில் பலா பழங்களின் விளைச்சல் கடந்த ஆண்டை விட அதிகம் பலா பழங்கள் மிகவும் இனிப்பாக உள்ளவைக்கு பல்வேறு நாடுகளுக்கு பண்ருட்டியில் இருந்து ஏற்றுமதியாகிறது. இதையடுத்து கொரோனா பாதிப்பினால் தடை உத்தரவு பழங்களை ஏற்றுமதிக்கு தடை என பலா விவசாயிகள் பெரிதளவு பாதிப்பிற்க்கு உள்ளாகியுள்ளனர் இதனால் பழங்கள் விழுப்புரம்,கடலுார்,புதுச்சேரி பகுதிகளில் மிகவும் குறைவான விலைக்கு விற்க்கப்படுகிறது.இடம் புதுச்சேரி, மதகடிப்பட்டு.
17 / 21
கொரோனா பாதிப்பு, மீன்பிடி தடைக்காலம் என மீனவர்களுக்கு தொழில் நலிவடைந்துள்ளது. புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடிதுறைமுகத்தில் கறையோரம் மீன்களை எதிர்பார்த்து வலையை வீசும் மீனவர். படங்கள்.எம்.சாம்ராஜ்
18 / 21
கோவையில் வேலை பார்த்துவந்த பிஹார் மாநிலத் தொழிலாளர்கள் இன்று (8.7.2020) சிறப்பு ரயில் மூலம் தனது சொந்த மாநிலத்துக்கு செல்ல தங்களது பெட்டிப் படுக்கைகளுடன் புறப்பட்டனர்.
படம் : ஜெ .மனோகரன்
19 / 21
இயற்கையின் சீட்டாட்டம்:
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளையாவது நிறைவேற்றி கொள்ளலாம் என்கிற நம்பிக்கையோடு.... வட மாநிலத் தொழிலாளர்கள் பல பேர் தமிழகத்துக்கு வந்து உழைத்து... ஊதியம் பெற்று தனது அடிப்படைத் தேவைகளை மட்டும் ஓரளவுக்கு நிறைவேற்றி வந்தனர் .
எல்லாவற்றையும் சீரழித்துவிட்டது... கரோனா தொற்று. நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கால்.... அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இந்நிலையில்... கோவையில் வேலை பார்த்துவந்த பிஹார் மாநிலத் தொழிலாளர்கள் சிலர் இன்று சிறப்பு ரயில் மூலம் தனது சொந்த மாநிலத்துக்கு புறப்பட்டனர். பல சமயங்களில் - இயற்கைக்கு எளிய மக்களின் வாழ்க்கை சீட்டுக் கட்டாகிவிடுகிறது. ஆசை தீர கலைத்துப் போட்டு ஆடிவிடுகிறது.
படம் : ஜெ .மனோகரன்
20 / 21
தன் காலே தனக்குதவி:
பெருங்களத்தூர் அருகே ஆலப்பாக்கம் பகுதியில் தங்கியிருந்த ஜார்கண்ட், பிஹார், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் நேற்று வண்டலூர் பைபாஸ் சாலையில் நடந்தே அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவு, பணம், வேலையின்றி தவிக்கிறோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டதும்... உடனடியாக போலீஸார் குவிக்கப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டதும் குறிப்பிடதக்கது.
தகவல் மற்றும் படம்: எம்.முத்துகணேஷ்
21 / 21
பண்ருட்டியில் வழக்கமான விளைச்சலைவிட இந்த ஆண்டு பலாப் பழங்களின் விளைச்சல் அதிகம் எனக் கூறப்படுகிறது. மற்ற ஊர் பழங்களைவிட பண்ருட்டி பலா பழத்துக்கு ருசியும் இனிப்பும் அதிகம். இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகக் கூடிய பண்ருட்டி பலாப்பழ விற்பனை - இந்த ஆண்டு கரோனா தொற்று பாதிப்பு மற்றும் நாடு தழுவிய ஊரடங்கு போன்றவற்றால் பெரிதும் பாதித்துவிட்டது. இந்நிலையில் விழுப்புரம், கடலுார், புதுச்சேரி போன்ற பகுதிகளில் மிகவும் குறைவான விலைக்கு பண்ருட்டி பலாப்பழங்கள் விற்கப்படுகிறது.
இடம்: புதுச்சேரி, மதகடிப்பட்டு.
படம்: எம்.சாம்ராஜ்