1 / 27
‘கால்களின் ஆல்பம்’:
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இவ்வேளையில் ... சென்னையில் பல இடங்களில் வேலை செய்யும் வட மாநிலத் தொழிலாளர்கள் சிலர், தங்கள் சொந்த மாநிலமான ஓடிசா அல்லது மத்தியப்பிரதேசம் போன்ற இடங்களுக்கு நடந்தே செல்வதென முடிவெடுத்து நேற்று நடக்க ஆரம்பித்தனர்.
சென்னையில் இருந்து 1000 , 1500 கி.மீ. தூரத்தை நடந்தே கடப்பதென்பது...வாழ்வின் துயரமாகும்.
’எண்சான் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்பது பழ(ய)மொழி... ‘எண்சான் உடம்புக்கு வயிறே பிரதானம்’ என்பது பசியின் மொழி. அதைத்தான் இந்த ’கால்களின் ஆல்பம்’ உணர்த்துகிறது.
தகவல் மற்றும் படம்: ம.பிரபு
2 / 27
யாரறிவார் பராபரமே :
கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்த 45 நாட்களுகுப் பிறகு நேற்று முதல் ஒருசில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை புறநகர்ப் பகுதிகளில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த் சாலை தடுப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. எல்லா சாலைகளின் சிக்னல்களும் இயங்கின.
மக்களுக்கு ‘கரோனா அச்சம்’ போய்விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு சாலை முழுவதும் வாகனங்களாக காட்சியளித்தன. இந்த ’தளர்வு’ என்ன நிகழ்த்தும் என்பது யாரறிவார் பராபரமே? இடம்: தாம்பரம் - குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை.
தகவல் மற்றும் படம்: எம்.முத்துகணேஷ்
3 / 27
மீண்டும் அண்ணா சாலையில்:
தமிழகத்தில் அமலில் இருந்த ஊரடங்கு 45 நாட்களுக்குப் பிறகு நேற்றுமுதல் தளத்தப்பட்டது. இதையடுத்து, நகரெங்கும் மூடப்பட்டிருந்த அனைத்து சாலைகளும் திறக்கப்பட்டன. சிக்னல்கள் கண் சிமிட்டின. அதேபோல் அண்ணா சாலையில் இருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டதால், மீண்டும் வாகனங்கள் செல்லப் தொடங்கின.
தகவல் மற்றும் படம்: ம.பிரபு
4 / 27
வெய்யிலின் வெப்பப் பிரகடனம்:
வாரத்தின் முதல் நாளான நேற்று முதல் கத்திரி வெய்யில் (அக்னி நட்சத்திரம்) உச்சி மண்டையை தொட்டுச்சுட ஆரம்பித்துவிட்டது. ஊர் முழுக்க ஆதவனின் அதிகாரப் பரவல்... வெய்யிலின் வெப்பப் பிரகடனம் தொடங்கியதையொட்டி கோவை சிங்காநல்லுர் சாலையில் வெப்பம் தாங்க முடியாத இரண்டு பெண்கள் குடை பிடித்தபடி செல்கின்றனர்.
படம்: ஜெ .மனோகரன்
5 / 27
எங்கே செல்லும் இந்தப் பாதை:
'வீட்டிலிரு... விலகியிரு...’ என்கிற எச்சரிக்கைக் குரலுக்குக் கட்டுப்பட்டு 45 நாட்கள் வீட்டங்கியிருந்த மக்களில் சிலர்... நேற்று ஆனந்தத்தில் அலையாடினர். வெளி உலகைக் காணத் துடித்தெழுந்தனர். ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்ததன் அடையாளம்தான் அந்த துள்ளலுக்குக் காரணம். இந்நிலையில் கோவை மாநகரத்தின் முக்கிய சாலையான 100 அடி சாலையில் வாகன எண்ணிக்கை பெருக்கெடுத்து ஓடி... கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .
தகவல் மற்றும் படம்: ஜெ .மனோகரன்
6 / 27
7 / 27
பச்சை நிறமே.... பச்சை நிறமே:
’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே...’ என்பது மூத்தோர் முதுமொழி. நெல்லோடும் சொல்லோடும் வாழ்ந்தவன் தமிழன் என்பதை இன்றைக்கும் ஏரோட்டி... உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்துகொண்டுள்ளனர் சிலர். இதை மெய்ப்பிக்கும் வகையில் - சென்னைக்கு மிக அருகில் உள்ள திருநீர்மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குருவை சாகுபடி ஜாம் ஜாமென்று நடந்துவருகிறது. ஆங்கே - இளம் நாற்றுகளின் பசுமையைப் போர்த்திக்கொண்ட அழகினூடே.... பூச்சிக்கொள்ளி மருந்தை தெளிக்கிறார் ஒரு விவசாயி.
தகவல் மற்றும் படம்: எம்.முத்துகணேஷ்
8 / 27
இது - இயற்கையின் குறுஞ்செய்தி:
சென்னை - திருநீர்மலை சுற்றுவட்டாரப் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள தனது நிலத்தை சாகுபடிக்காக பக்குவப்படுத்தும் பணியில் ஒரு விவசாயி ஈடுபட்ட அதேவேளையில்.... தங்கள் இரையைத் தேடுகின்றன சில மாடுகளும்... கொஞ்சம் நாரைகளும்!
படம்: எம்.முத்துகணேஷ்
9 / 27
மறுபடியும் முதல்லேர்ந்து:
தமிழகத்தில் - கரோனா தெற்று காரணமாக முடங்கியிருந்த பல தொழிற்சாலைகள் 45 நாட்களுக்குப் பிறகு... நேற்று முதல் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் - மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள சில தொழிற்சாலைகள் சமூக இடைவெளியுடன் தனது உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. இங்குள்ள அர்விந்த் இனிப்பு - காரம் தயாரிப்பு நிறுவனத்தில் புதுப்பொலிவுடன் மீண்டும் பலகாரம் தயாரிக்கும் பணியில் அதன் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து 'அர்விந்த்’ நிறுவன உரிமையாளர் திண்ணப்பன் கூறும்போது , ’’கரோனா தொற்று காரணத்தால் முடங்கி இருந்த எங்கள் தொழிலை மீண்டும் ஆர்வமுடன் தொடங்கியுள்ளோம். வாழ்வாதாரம் கெட்டுப்போயிருந்த எங்கள் தொழிலாளர்கள் மீண்டும் உற்சாகமுடன் உழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்” என்றார்.
தகவல் மற்றும் படம் : க.ஸ்ரீபரத்
10 / 27
தென் தமிழகத்தில் முதல்முறையாக:
மதுரை ரயில்வே கோட்டத்தின்கீழ் செயல்படும் மதுரை ரயில்வே மருத்துவமனையில் தென் தமிழகத்தில் முதல்முறையாக கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், தனித்தனி அறைகளில் 105 படுக்கைகளைக் கொண்ட சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சிகிச்சை மையம் அமைக்கும் பணி ஒரு வார காலத்துக்குள் முடியம் என்றும், இப்பணிகள் நிறைவடைந்தவுடன் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தகவல் மற்றும் படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 27
கூடு திரும்பும் காக்கிப் பறவைகள்:
கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த 6 காவலர்கள் சிகிச்சையில் குணமடைந்து இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ரசமணியும், நகர காவல் ஆணையாள் சுமித்சரண் பழக்கூடைகளை அன்பளித்து உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
படம்: ஜெ.மனோகரன்
12 / 27
தூய்மைத் தோழர்களுக்கு மரியாதை:
கரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதுமே அரசு சார்பில் எண்ணற்ற முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தடுப்புப் பணிகளில் தன்னலம் பாராமல் அல்லும் பகலும் அனைத்து தூய்மை பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். கை சேர்த்து வணங்கத் தகுந்த அந்த உழைப்பாளர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்... என்பதை உணர்ந்த தாம்பரம் நகராட்சியினர், அந்தத் தூய்மை தோழர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க... ’ஆர்சனிகம் ஆல்பம் 30’ என்ற ஹோமியோபதி மருந்து வழங்கிச் சிறப்பித்தனர்.
படம்: எம்.முத்து கணேஷ்
13 / 27
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று வெகுவேகமாக பரவலாகி வரும் நிலையில் - ஆசியாவின் மிகப்பெரிய சந்தை வளாகம் கோயம்பேடு மார்க்கெட்டையும் கரோனா விட்டுவைக்கவில்லை.
இரவு - பகலாக இயங்கிய வந்த அந்த வளாகம் மூடப்பட்டதால் நேற்று ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ட்ரோன் படம்: ம.பிரபு
14 / 27
மீனு புடிக்கிற எங்கள... போலீஸ் புடிக்க முடியாதுங்கோ:
“இந்த கரோனா காலத்துல வூட்டுக்குள்ள முடங்கிக் கிடக்க முடியலீங்க. சரி... கரையில் ஒக்காந்துக்கிட்டு மீன் பிடிச்சி பொழுதப் போக்கலாம்னு வந்தா.. உச்சி வெய்யிலு மண்டய பொளக்குது. என்னப் பண்ணலாம்னு யோசிச்சித்தான் இப்புடி தண்ணுக்குள்ள எறங்கி மீன் புடிக்கிறோம். அது மட்டுமில்லீங்க... தண்ணிக்குள்ள எறங்கி எங்கள போலீஸும் புடிக்க முடியாதுல்ல. ஆனாலும் ஒரு விஷயமுங்க... தண்ணிக்குள்ளயும் நாங்க சமூக எடவெளிய நல்லா ஃபாலோ பண்றோம் பாஸ்" என்கின்றனர் - சென்னைக்கு அருகே உள்ள போரூர் ஏரியில் மீன் பிடிக்கும் இந்த மீனவர்கள்.
இது இப்படி இருக்க... அதே ஏரியில் கொஞ்சம் தள்ளி... ’முகக்கவசம்’ போட்டுக்கொண்டுதான் மீன் பிடிப்பேன் என்று பொறுப்புணர்வோடு செயல்படும் மீனவர் ஒருவர் சோப்பு டப்பாவை முகக்கவசமாக கட்டியிருக்கிறார்.
தகவல் மற்றும் படங்கள்: எம்.முத்து கணேஷ்
15 / 27
16 / 27
17 / 27
18 / 27
பெருங்களத்தூர் அருகே ஆலப்பாக்கத்தில் கட்டிட வேலை பார்க்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் சுமார் 1,500 பேர் தங்கியுள்ளனர். கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள இவ்வேளையில் - வேலையும் இன்றி, ஊதியமும் இன்றி... உரிய உணவும் இன்றி தவித்த அவர்கள்... தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியதால் போலீஸார் குவிக்கப்ப ட்டனர். மீண்டும் அவர்கள் போராட்டம் செய்யக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கே போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
படங்கள்: எம்.முத்து கணேஷ்
19 / 27
20 / 27
கரோனா தடுப்பு நடவடிக்கையாக - ஊ
ரடங்கு அமலில் இருந்ததால் 45 நாட்கள் வீட்டுக்குள் முடங்கியிருந்த பல பேர்... நேற்று முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி - முத்தியால்பேட்டை பகுதியில் தண்ணீர் பிடிப்பதற்காக
காலியான தண்ணீர் கேன்களை அடுக்கி நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
படம்: எம்.சாம்ராஜ்
21 / 27
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் ஊரடங்கு விதிமுறைகள் இன்னமும் அமலில்தான் உள்ளன. புதுச்சேரி காந்தி வீதியில் - சாலைகளில் முகக்கவசம் இன்றி சுற்றித் திரிந்தவர்களை போலீஸார் பிடித்து அவர்களுக்கு இலவசமாக மூகக்கவசங்களை வழங்கி கைகளில் கரோனா விழிப்புணர்வு பதாகைகளை கொடுத்து நிற்க வைத்தனர்.
படம்: எம். சாம்ராஜ்
22 / 27
கடந்த ஆண்டு மழை இல்லாத காரணத்தினாலும் இந்த ஆண்டுக்கான - கோடை மழை இல்லாத காரணத்தினாலும் அலங்காநல்லூரை அடுத்த பாலமேடு கிராமம் அருகே உள்ள சாத்தியார் அணை வறண்டு காணப்படுகிறது. இதனால் -
வான் மழையையும் அணை தண்ணீரையும் நம்பியே சாகுபடி செய்ய காத்திருக்கும் விவசாயிகள்அதிர்ச்சி அடைந்துள்ளனர்
.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
23 / 27
24 / 27
கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், சேலத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றின் பாதிப்பு ஒருபுறம், கத்திரி வெயிலின் உக்கிரம் ஒருபுறம் என மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் - சேலம் மூக்கனேரி ஏரியில் அந்தி சாயும் வேளையில் வானில் செந்நிறத்தை பரவ விட்டு மறைந்த கதிரவன்.
படம்: எஸ்.குருபிரசாத்
25 / 27
முகக்கவசம் தைக்கும் தையல்கள்:
மதுரை திருமங்கலத்தில் உள்ளது - தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார மேலாண்மை இயக்க அலுவலகம். இங்கு மகளிர் சுய உதவிக் குழுவினர் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான உபகரணங்களை தயாரித்து வருகின்றனர். தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் ஆலோனையின்படி இயங்கும் - இந்த சுய உதவிக் குழுவினர் பல்வேறு நறுமணங்களில் கைக்கழுவும் திரவம், காட்டன் துணியால் முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கின்றனர்.
இதுகுறித்து கூறும்போது ’’வேலைவாய்ப்பற்று வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் இருந்த எங்களுக்கு இந்த தொழில் வாய்ப்பு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. சராசரியாக ஒரு பெண் 500-க்கும் மேற்பட்ட முகக்கவசங்களைத் தயாரிக்கிறோம். அதில் - போதுமான அளவு கூலி கிடைப்பதால் சந்தோஷமாகவும் இருக்கிறது’’ என்றனர் சுய உதவிக் குழுப் பெண்கள்.
மேலும் இது குறித்து - இத்திட்டத்தின் ஒருங்கினைப்பாளர் ஜெகதீஸ்வரி பேசும்போது, ‘’தங்கள் பொருளாதார சுமைகளையும் கஷ்டங்களையும் வெளியில் எவரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூட தெரியாத இந்தப் பெண்களுக்கு இந்த அரிய வாய்ப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது’” என்றார்.
தகவல் மற்றும் படங்கள்: க.ஸ்ரீபரத்
26 / 27
27 / 27