பேசும் படங்கள்... (02.05.2020)
Published on : 02 May 2020 22:21 pm
1 / 4
‘நீரின்றி அமையாது உலகு’ என்பது நமது அய்யன் வள்ளுவனின் வண்ண வாக்கு. சென்னை மாநகர மக்களின் தாகத்தைத் தணிக்கும் ஏரிகள் பல இருந்தாலும்… அதில் போரூர் ஏரி மிக முக்கியமானதாகும். அந்த ஏரி இந்தக் கோடைப்பொழுதிலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. எதிர்வரும் வெப்ப நாட்களிலும் தொடர்ந்து சென்னையின் ஒரு பகுதிவாழ் மக்களின் தண்ணீர்த் தேவையை போரூர் ஏரி நிறைவேற்றும் என அரசு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
படம்: எம்.முத்துகணேஷ்
2 / 4
கரோனா வைரஸ் தொற்று பரவவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் நெருக்கமாக கூடுவதை தவிர்க்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனடிப்படையில் - திருச்சி வரகனேரி பகுதியில் மே மாதத்துக்கான விலையில்லாப் பொருட்களைப் பெறவுள்ள பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று அடையாள அட்டைகளை (டோக்கன்) ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.
3 / 4
பகல் முழுவதும் பூமிப் பரப்பெங்கும் தனது வெப்ப அதிகாரத்தை பரவவிட்ட ஆதவன்... இரவும் - பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் ஒரு நெருப்போவியமாக உருமாறி அங்குலம் அங்குகலாம மறைந்த காட்சி.
இடம்: திருச்சி காவிரி ஆற்றீன் ஓடத்துறை பாலம்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.
4 / 4
பொதுமக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முடியும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால்... இந்த அறிவுறுத்தலுக்கு பெரும்பாலும் பொதுமக்களும், சிறு குறு வியாபாரிகளும் செவிமடுப்பதே இல்லை என்பதற்கு உதாரணம்தான் -
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றாத காட்சி.
இந்த சிறு வியாபாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் வகையிலும் அவர்கள் தங்கள் தவறை உணரும் வகையிலும் சிறு வியாபாரிகளின் வண்டிகளை திருச்சி நகர போலீஸார் பாலக்கரை பாலம் அருகேயுள்ள தனியார் கார் பார்க்கிங்கில் நிறுத்த வைத்தனர்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.