1 / 81
‘கோவிட் 19' புற்றுநோய் தொடர்வதால் மதுரை மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் அமைந்திருக்கும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனைக்கு கிருமிநாசினி தீயணைப்பு வீரர்களால் அடிக்கப்பட்டது! படம்: எஸ் கிருஷ்ணமூர்த்தி
2 / 81
3 / 81
மதுரையில் அரசு ராஜாஜி கல்லூரி மருத்துவனை வளாகத்தில் அமைந்துள்ள ‘கோவிட்19' தடை செய்யப்பட்ட பகுதியாக வைக்கப்பட்டுள்ள பேனர்! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி
4 / 81
5 / 81
மதுரை அரசு ராஜாஜி கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வந்த செல்லூர் சேர்ந்த ஸ்வேதா மற்றும் அவர்கள் குழந்தைக்கு சளி மற்றும் இருமல் இருப்பது தெரிவித்ததால் மருத்துமனைக்கு வந்ததையடுத்து உறுப்பினர்கள் விசாரணைக்குப் பின் மருத்துவமனைக்கு உள்ளே அனுமதித்தார்கள்! படம் கிருஷ்ணமூர்த்தி
6 / 81
7 / 81
8 / 81
‘கோவிட் 19 வைரஸ் தொற்று நோய் தொடர்பான திருநங்கை பாரதிகண்ணம்மா மதுரை மீனாட்சி அம்மன் வேடத்தில் மூலம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி
9 / 81
10 / 81
11 / 81
12 / 81
இன்று உழைப்பாளர்கள் தினம்.... எங்கு பார்த்தாலும் பெருகி வரும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. அப்படியிருக்க தினக்கூலியை நம்பியே குடும்பத்தை நடத்தும் தொழிலாளர்கள் நிலைமை இன்னும் கவலைக்குரியது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி மார்க்கெட்டில் வெங்காய மூட்டைகளை முகங்களில் முகக் கவசம் அணிந்து கொண்டு தலையில் எடுத்துச் செல்லும் தொழிளார்கள். படம்.எம்.சாம்ராஜ்
13 / 81
14 / 81
கொரோனாவினால் பொதுமக்கள் அதிகம் வெளியே வரவேண்டாம் என அரசு பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. அதனை பெரும்பாலோனோர்கள் கடைபிடிப்பது கிடையாது. அதிக மக்கள் கூடும் புதுச்சேரி தட்டாஞ்வாடி மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு பிரச்சார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வலம்வரும் கொரோனா அரக்கன். படம்.எம்.சாம்ராஜ்
15 / 81
16 / 81
17 / 81
மே 1, உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கம்யூனிஸ்ட் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மே தின கொடியை ஏற்றிய கட்சியினர். படம்.எம்.சாம்ராஜ்
18 / 81
தக்காளியின் விளைச்சல் அமோகமாக இருப்பதையடுத்து தக்காளியின் விலை மிகவும் சரிய தொடங்கியது. இதையடுத்து புதுச்சேரியில் சுல்தான்பேட்டையில் உள்ள காய்கறி கடையில் மலிவு விலையினால் கடையில் மலைபோல் கொட்டி வைக்கப்பட்டுள்ள தக்காளி பழங்கள். படம்.எம்.சாம்ராஜ்
19 / 81
20 / 81
கரோனா தொற்று அச்சத்தால், ஸ்ரீரங்கம் மாம்பழ சாலையில் உள்ள இமாம்பசந்த் மாம்பழ விற்பனை கடைகள் களையிழந்து காணப்படுகிறது.
ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் விளையும் மாம்பழங்களுக்கு எப்போதும் தனிச்சுவை உண்டு. இதில் பிரபலமான தாத்தாச்சாரியார் தோட்டத்து இமாம்பசந்த் மாம்பழம் என்றாலே நாவில் எச்சில் ஊறும் அளவுக்கு சுவையானது. இதுதவிர மல்கோவா, பங்கனப்பள்ளி, நீலம், ருமேனியா, செந்தூரம் உள்ளிட்ட வகைகளும் இங்கு விளைகின்றன.
ஆண்டு தோறும் வைகாசி மாதம் தொடங்கும் மாம்பழ சீஸன் ஆடி மாதம் வரை நீடிக்கும். ஏறத்தாழ 100 ஆண்டுகளாக வாகன வசதியில்லாத காலகட்டத்தில் இருந்து தலைச்சுமையாக விற்பனை நடைபெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீரங்கம் மாம்பழ சாலை தற்போது பழங்கள் வந்தும் விற்பனையின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது.
21 / 81
இதுகுறித்து மாம்பழ வியாபாரி ஏழுமலை கூறும்போது: காவிரியாற்று நீர் மற்றும் இப்பகுதி மண்ணின் தன்மை ஆகியவற்றால் மட்டுமே இந்தளவுக்கு இமாம்பசந்த் பழம் சுவையாக இருக்கிறது.
பெரும்பாலும் ரங்கநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளை நம்பியே இந்த சீஸன் இருக்கும்.
இது தவிர சென்னை உட்பட பல பகுதிகளுக்கு கொரியர் மூலம் அனுப்பி வைப்பதும் வழக்கம். தற்போது கொரியர் செயல்பாடு இல்லாத காரணத்தாலும் விளைந்து பழுக்க வைத்த பழங்களை விற்பனை செய்ய வழியின்றி உள்ளோம். உள்ளூர் மக்களுக்கு மட்டுமே மதியம் வரை விற்பனை செய்யும் நிலை உள்ளது.
கரோனா தொற்று குறைந்து, ஊரடங்கு முடிவுக்கு வரும் போது ஏறத்தாழ சீஸன் முடிந்து விடும் என்றே தோன்றுகிறது. இது எங்களுக்கும் விவசாயிகளுக்கும் இக்கட்டான காலகட்டமே என்றார்.
படம், தகவல்:ஜி.ஞானவேல்முருகன்.
22 / 81
23 / 81
மதுரை தோப்பூரில் உள்ள தாணிய கிடங்கிற்கு தாணியங்களை எடுத்து செல்லும் லாரிகள் படம். க. ஸ்ரீபரத்
24 / 81
25 / 81
'மே தினம்' திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று அன்றாட வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள். - படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
26 / 81
27 / 81
28 / 81
29 / 81
பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். கரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வீடு வாசலற்ற பலர் பசிப் பிணியில் வாடுகின்றனர். இதைத் தொடர்ந்து ஆதரவற்ற ஒருவர் பாசக்கடையின் முன்னே இருக்கும் உணவுக் கழிவுகளை போடும் குப்பை தொட்டியில் தனக்கான உணவை தேடுகிறார். துயர்மிகு இப்பொழுது தூரப் போகும் நாள் எப்போதோ?
படம்: மு.லெட்சுமி அருண்
30 / 81
மே தினமான நேற்று ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் கோவை ராஜவீதி மார்க்கெட் பகுதியில் வண்டியில் சுமை இழுக்கும் தனது அன்றாட வேலையில் ஈடுபடும் தொழிலாளி. -படம்: ஜெ.மனோகரன்.
31 / 81
கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் நாடு முழுவதும் நேற்று மே தின கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. பாளையங்கோட்டை, சமாதானபுரத்தில் தொழிலாளி ஒருவர் தனது மூன்று சக்கர வண்டியில் அமர்ந்து செய்தித்தாளில் கவலையுடன் செய்திகளை வாசித்துக் கொண்டிருக்கிறார். - படம்: மு.லட்சுமி அருண்
32 / 81
33 / 81
கரோனா தொற்று பரவல் ஒருபுறம். இன்னொருபுறம் அடர் வெய்யிலின் உக்கிரம் என சேலம் மாவட்டம் இன்னல்களின் இருப்பிடமாகி வருகிறது. இதில் மனிதர்களே வியர்வையில் புழுங்கி தவிக்க... வாயில்லா ஜீவன்கள் என்ன செய்யும்? இந்நிலையில் சேலம் கன்னங்குறிச்சியை அடுத்த புதுஏரியில் தங்கள் குதிரைகளை குளிரக் குளிரக் குளிப்பாட்டு மகிழும் இளைஞர்கள்.
படம்: குருபிரசாத்
34 / 81
35 / 81
36 / 81
37 / 81
38 / 81
39 / 81
கோவை மாவட்டத்திலுள்ள 400 மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு தேவையான மளிகை பொருட்களை ஹிந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்கத்தின் சார்பில் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் கொரொனா தடுப்பு கண்காணிப்பாளர் ஞானசேகரன் இ ஆ ப, முதன்மை ஆணையர் பிரசாத் உத்தமன் மற்றும் மகேஷ்குமார் வட்டாட்சியர் ஆகியோர் வழங்கினர். படம் : ஜெ :மனோகரன்
40 / 81
41 / 81
42 / 81
கோவையை அடுத்த சரவணம்பட்டி சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள கடைகளை மதியம் 1 மணிக்குள் மூட வலியுறுத்தி ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யும் போலீஸார்.
படம்: ஜெ.மனோகரன்
43 / 81
44 / 81
கோவை சந்திரகாந்தி நகர் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் மாநகராட்சி ஊழியர்கள். படம் : ஜெ :மனோகரன்
45 / 81
46 / 81
ஏழை எளிய மக்களின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் பரபரப்பாக காணப்படும். தற்போது கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படும் ஏற்காடு வீதிகள். - படம்: எஸ்.குருபிரசாத்
47 / 81
48 / 81
49 / 81
திண்டிவனம் - திருச்சி நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே ஒரு விவசாய குடும்பம் நடந்து சென்றது. அவர்களிடம் நமது 'தமிழ் இந்து' செய்தியாளர் விசாரித்தபோது, அவர்கள் ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பே கள்ளக்குறிச்சிக்கு கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு சென்றதாகவும் தற்போது வேலையில்லாததால்சொந்த ஊரான விழுப்புரத்து கடந்த 2 நாட்களாக கைக்குழந்தை மற்றும் விவசாயக் கருவிகளை தூக்கி கொண்டு நீண்டதூரம் நடந்து வருவதாக கூறினர். கரும்பு வெட்டும் வேலையில் ஓர் ஆளுக்கு தினக் கூலியாக ரூ.2 நாட்கள் தொடர்ந்து உழைத்தால் 20 டன் வெட்டமுடியுமாம்.ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ரூ.300 கிடைத்து வந்த நிலையில் ஊரடங்கால் அதுவும் கிடைப்பதில்லை என வேதனை தெரிவித்தனர். அவர்களில் ஒரு இளைஞர் மாற்று திறனாளி என்பது தெரிய வந்தது. இவர்களை நமது 'தமிழ் இந்து' குழுவினர் அருகிலிருந்த சுங்க சாவடி ஊழியர்கள் மற்றும் போலீஸார் உதவியுடன், சாலையில் காலியாக வந்த சில வாகனங்களில் ஒருவர் இருவராக ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். - படங்கள் மற்றும்.தகவல்:எம்.முத்துகணேஷ்
50 / 81
51 / 81
52 / 81
53 / 81
54 / 81
55 / 81
கோவை நூறடி சாலையில் கோவை மையம் சார்பில் துப்புரவு தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
56 / 81
ஊரடங்கால் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய கோவை காந்திபுரம் பாரதியார் சாலையில் எந்த தொல்லையுமின்றி மேயும் ஆடுகள். - படம்: ஜெ.மனோகரன்
57 / 81
58 / 81
59 / 81
மதுரை திருமங்கலம் அருகில் உள்ள பசுமையான கிராமம் கரிசல்பட்டி . தற்போது கரோனா வைரஸ் தொற்று தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இக் கிராமத்தில் இருந்து வேலைக்கு செல்ல இயலாமல் இளைஞர்கள் முடங்கியுள்ளனர். தங்கள் நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமூக இடைவெளியுடன் கிராமத்தில் உள்ள ஊரணியையும் அதைச் சுற்றியுள்ள இடத்தையும் சுத்தம் செய்வது என முடிவெடுத்தனர். அதன்படி காலை மாலை இருவேளையிலும் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். சுமார் 18-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 2 வார தொடர்ந்து ஈடுபட்டதில் தற்போது அந்த ஊரணி தூர்வாரப்பட்டு தண்ணீருக்காக காத்திருக்கிறது. நேற்று மே தினத்தையொட்டி ஊரணியை சுற்றிலும் புங்கை, வேம்பு, பூவரசு, மகிளம் போன்ற மரக்கன்றுகளை அந்த இளைஞர்கள் நட்டனர். மேலும் இது கோடை காலம் என்பதால் சுழற்சி முறையில் இளைஞர் குழுவாக பிரிந்து தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகளை பாதுகாக்கவும் திட்டமிட்டுள்ளனர். தகவல் மற்றும் படம்: க.ஸ்ரீபரத்
60 / 81
61 / 81
62 / 81
63 / 81
64 / 81
65 / 81
66 / 81
ஊரடங்கு உத்தரவு காரணமாக, வெளிமாநிலங்களில் ஊர்களுக்கு செல்ல அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் லாரிகளில் மீது பதுங்கி பயணிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை பகுதி தமிழக-ஆந்திர எல்லை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அவ்வழியாக வரும் சரக்கு வாகனங்களின் மீது யாராவது பதுங்கியுள்ளார்களா என்பதை தமிழக காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். படம்: வி.எம்.மணிநாதன்.
67 / 81
68 / 81
69 / 81
வேலூரில் நாளுக்கு நாள் அதிகரித்து சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள கிணற்றில் 'டைவ்' அடித்து நீச்சல் அடிக்கும் மாணவர்கள். இடம். காட்பாடி அடுத்த அரும்பருத்தி. படம்: வி.எம்.மணிநாதன்.
70 / 81
71 / 81
72 / 81
73 / 81
முகக் கவசம் விழிப்புணர்வு: கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முகக் கவசம் அணிந்து ஆடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்லும் மேய்ப்பாளர். இடம். வேலூர் அடுத்த பூட்டுத்தாக்கு. படம்: வி.எம்.மணிநாதன்.
74 / 81
75 / 81
கரோனா வைரஸ் தொற்று காரணமாக, வேலூர் மாவட்ட எல்லை பிள்ளையார்குப்பம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் அத்தியாவாசிய தேவையின்றி வேலூர் மாவட்டத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை திருப்பி அனுப்பப்பட்டு, சென்னையிலிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளித்து, பொதுமக்கள், வாகன ஓட்டுநர்களுக்கு கரோன தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டு காவல்துறையினர், சுகாதாரத்துறையினர் காண்காணித்து வருகின்றனர். படம்: வி.எம்.மணிநாதன்.
76 / 81
77 / 81
78 / 81
79 / 81
80 / 81
81 / 81
வெயிலின் உஷ்ணத்தில் காணப்படும் காணல் நீர். இடம் தாம்பரம் ஜிஎஸ்டி சாலை! படங்கள்: ஸ்டாலின்