Published on : 27 Apr 2020 21:03 pm

இன்றைய ( 27.04.2020) புகைப்பட செய்திகள்

Published on : 27 Apr 2020 21:03 pm

1 / 86
144 தடை உத்தரவை தொடர்ந்து சிலைக்கு சாத்தப்படும் பூமாலைகள் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டதால் மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பூமாலைகள் விற்பனை இல்லாமல் உள்ளன! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி
2 / 86
3 / 86
கோடை வெயில் அதிகரித்து இருப்பதால் மதுரை அழகர்கோவில் அருகே அங்குள்ள குரங்குகளுக்கு மிகவும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ஒருவர் தினமும் சிறிதாக கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் ஊற்றி செல்கிறார்! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி
4 / 86
5 / 86
மதுரை 144 தடை உத்தரவை தொடர்ந்து கோரிப்பாளையம் மற்றும் ஏவி மேம்பாலம் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 27, 2020) முதல் ( என்சிசி ) தேசிய மாணவர் படை சேர்ந்த அமெரிக்கன் திருமலை நாயக்கர் மன்னர் கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி
6 / 86
7 / 86
அடுத்த மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள் கொடுப்பதற்கு மதுரை ஆர் எம் எஸ் ரோட்டில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையில் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்கிறார்கள். படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி
8 / 86
9 / 86
144 தடை உத்தரவை தொடர்ந்து மதுரை கோரிப்பாளையத்தில் ஆயுதப்படை போலீஸாரிடம் மற்றும் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுரை அண்ணாநகர் காவல் நிலைய போலீசார்! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி
10 / 86
11 / 86
மதுரையடுத்த சாப்டூர் அருகே உள்ள அத்தி பட்டி கிராமம் இயற்கை எழில் கொஞ்சும் மலைக் கூட்டங்களுக்கு நடுவே பச்சை பசேலென கண்ணுக்கு எட்டும் தூரம் வயல்வெளிகளுக்கு மத்தியில் உள்ள கிராமம் தான் அத்திப் பட்டி. இந்த ஊர் நஞ்சை வெள்ளாமைக்கும் புஞ்சை வெள்ளாமைக்கும் பெயர் போனது. இவ்வூரில் கொளு வீற்றிருக்கும் அம்மன் இப்பகுதி மக்களுக்கு கண்கண்ட தெய்வமாகும். வருடத்தின் சித்திரை மாதத்தில் இக்கோவிலில் பத்து நாள் திருவிழா மிகவும் விமர்சையாக கிராமத்துப்பானியில் கொண்டாடப்படும். இக்கோவிலுக்கு நேத்திக்கடனாக பக்தர்கள் முளைப்பாரி, தீச்சட்டி, அலகு குத்துதல், உருண்டு கொடுத்தல், ஆயிரம் கண்பானை, கரும்பு தொட்டில், மாவிளக்கு போன்ற நேர்த்திக்கடனை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்துவர். இக்கோயில் திருவிழா 48 எட்டுப்பட்டி கிராமக்களின் பிரதான திருவிழா ஆகும். இந்த சமயத்தில் மதுரை, திருமங்களம், விருதுநகர், உசிலம்பட்டி , பேரையூர், கல்லுப்பட்டி, வத்திரா இருப்பு, சாப்டூர் போன்ற ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இது தவிர பொதுமக்கள் மாட்டுவண்டியின் மீது கூடாரம் அமைத்து வண்ண காகிதங்களால் அலங்கரித்து திருவிழாவிற்கு செல்வார்கள். இந்த திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான தீச்சட்டி செலுத்தும் நாளன்று லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு நேத்திக்கடன் செலுத்துவார்கள். வீடு தவறாமல் கிடாய் வெட்டி சொந்த பந்தங்களுடன் அன்னதானம் இடுவது வழக்கம். இப்பேர் பட்ட சிறப்புடைய அத்திபட்டி மாரியம்மன் கோவில் திருவிழா கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தமிழக அரசு அறிவித்து உள்ள 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதால் அலைகடலென மக்கள் திரண்டு திருவிழா கோலம் காட்சி அளிக்க வேண்டிய இடம் வெறிச்சோடி காணப்படுகிறது! படம் தகவல் க.ஸ்ரீபரத்
12 / 86
13 / 86
விருதுநகர் டூ மதுரை செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் கரோனா தொற்று பாதுகாப்பு முகக் கவசத்தை விற்கும் ஒருவர்! படம்: ஸ்ரீபரத்
14 / 86
15 / 86
கரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பாக பி 5 தெற்குவாசல் காவல் நிலையத்தில் போலீசார் ஒருவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதால் இன்று முதல் தெற்குவாசல் காவல் நிலையம் முற்றிலும் மூடப்பட்டது. மாற்றாக காவல் நிறுத்தம் எதிராக பந்தல் போட்டு அதிகாரிகள் செயல்படத் தொடங்கின! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி
16 / 86
17 / 86
18 / 86
19 / 86
20 / 86
144 தடை உத்தரவை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மிகக்குறைவாக காணப்பட்ட அரசு ஊழியர்கள் படம் எஸ் ; கிருஷ்ணமூர்த்தி
21 / 86
22 / 86
அரசு ஊரடங்கு உத்தரவினை கண்காணிக்க காவல்துறை மிகவும் மெனக்கெடுகிறது . அவர்களுக்கு துணையாக தன்னார்வலர் இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்துள்ளனர் . அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வுகளை கூறுவதும் , அரசு அனுமதி அட்டைகள் இருக்கிறதா , முகத்தில் மாஸ்க் அணிந்து வர அறிவுறுத்துவது , வாகனங்களை முறைப்படுத்துவது என்று காவலர்களுக்கு உதவியாக உள்ளனர் . சில பொதுமக்கள் அவர்களை உதாசீனப்படுத்தினாலும் ஏதாவது சமுதாயத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்று இந்த இக்கட்டான வேலையில் மன தைரியத்துடன் உதவி வருகிறார்கள். இவர்கள் காலையில் 7 மணிமுதல் மாலை 4 மணி வரை பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . படங்கள் : மு. லெட்சுமி அருண் .
23 / 86
24 / 86
25 / 86
26 / 86
27 / 86
சேலத்தை சேர்ந்த மணமகன் பிரவீன்குமார், வண்டலூரை சேர்ந்த சங்கீதா மணபெண்னுக்கும் கரோனா தடை காலத்திலும் நேற்று வண்டலூரில் எளிமையாக திருமணம் நடந்தது. இதில் மாப்பிள்ளை வீட்டார் காரில் டிரைவருடன் சேர்த்து 5 பேர் மட்டும் சேலத்திலிருந்து போலீஸ் அனுமதியோடு வர பெண் வீட்டார் தாய், தந்தை, தாய் மாமன், அத்தை என நெருங்கிய உறவினர் 6 பேர் கலந்துகொண்ட திருமணம் குறைந்த செலவில் சுமார் 6 ஆயிரம் சாப்பாடு செலவில் எளிமையாக நடந்தது. இதில் பெண், மாப்பிள்ளை இருவரும் மருந்தாளுனர் படித்தவர்கள். - படம்: எம்.முத்துகணேஷ்
28 / 86
29 / 86
வெளி மாநிலங்களிலிருந்து புதுச்சேரிக்கு மது பாட்டில்களை ஏற்றி வந்த 12 லாரிகள் புதுச்சேரிக்குள் செல்ல அனுமதியளிக்காததால் விழுப்புரம் மாவட்ட எல்லையில் வரிசையாக காவல்துறை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .படம்.எம்.சாம்ராஜ்
30 / 86
மது பாட்டில்களை ஏற்றி வந்த லாரிகளை புதுச்சேரிக்குள் செல்ல அனுமதியளிக்காததால் விழுப்புரம் மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரியில் மீது படுத்து உறங்கும் லாரி ஓட்டுனர்.படம்.எம்.சாம்ராஜ்
31 / 86
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு வருகின்றனர். ஜிப்பமரில் கரோனா சிகிச்சைக்கு மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்படியிருக்க நோயாளிகளை காரில் அழைத்து வந்த கார் ஓட்டுனர் சாலையோரம் உள்ள தடுப்பு சுவற்றில் அயர்ந்து தூங்குகிறார். படம்.எம்.சாம்ராஜ்
32 / 86
கரோனாவால் முழு ஊரடங்கு உத்தரவு: பல்வேறு நிகழ்ச்சிகள் ஆலய திருவிழாக்கள் என அனைத்தும் நடக்கமால் ஸ்தம்பித்து நிற்கிறது. ஒரு சிலர் மட்டும் தவிர்க்க முடியாமல் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று அதிக கூட்டம் கூடாமல் திருமணங்களை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் திருமணம் நடத்தி விழுப்புரம் மாவட்டத்திற்கு செல்லும் திருமண தம்பதியரிடம் பெற்ற முன் அனுமதியை சரி பார்த்து அனுப்பும் காவல்துறையினர். படம்.எம்.சாம்ராஜ்
33 / 86
பாளையங்கோட்டை திருச்செந்தூர் சாலையில் கரும்புச்சாறு விற்கும் தொழிலாளி... சாப்பாடு, வீட்டு வாடகை , மற்ற செலவுக்கு பணம் வேணும். அதனால வேற வழி இல்லாம கரும்புச்சாறு ஓட்ட வந்துவிட்டேன் என்று கூறினார் .படங்கள் : மு . லெட்சுமி அருண்
34 / 86
பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் தனியாக காய்கறி கடை வைத்திருக்கும் பாட்டி! படங்கள் : மு . லெட்சுமி அருண்
35 / 86
மேலப்பாளையம் பகுதி கொரோனா கண்காணிப்பில் உள்ளது . அதனால் அந்த பகுதியில் இருக்கும் மக்கள் வேறு எந்த பகுதிக்கும் வெளியே செல்ல முடிவதில்லை. கொஞ்ச நாள் சமாளிக்க முடிந்தது அதற்கு பின் கைகளில் செலவுக்கு பணம் இல்லை அதனால் எங்கள் தெரு மற்றும் அருகில் உள்ள தெருக்களில் துணி தைத்து கொடுக்க வெளியில் வந்து விட்டேன் என்று கூறினார் மேலப்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பேச்சிமுத்து! படங்கள் ..மு. லெட்சுமி அருண்
36 / 86
37 / 86
பாளையங்கோட்டை திருவனந்தபுரம் சாலையில் நெல்லிக்காய் சாறு விற்கும் ராணி! படம்: .மு. லெட்சுமி அருண்
38 / 86
சேலத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் இதை பொருட்படுத்தாமல் சிலர் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இவ்வாறு செல்பவர்களை நெத்திமேடு பகுதியில் போலீசார் பிடித்து அமர வைத்து நீண்ட நேரத்திற்கு பிறகு 'ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்போம்' என உறுதி மொழி எடுக்க வைத்து கண்டித்து அனுப்பி வைத்தனர். படங்கள்: எஸ்.குரு பிரசாத்.
39 / 86
40 / 86
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை சேலம் மாநகராட்சி தொடங்கியுள்ளது. காலை ,மதியம் , இரவு என மூன்று வேலைகளில் நாய்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே நாய்களுக்கு உணவு வழங்கும் மாநகராட்சி பணியாளர். படங்கள்: எஸ்.குரு பிரசாத்
41 / 86
42 / 86
43 / 86
முழு ஊரடங்கு உத்தரவையொட்டி கோவை லட்சுமி மில் சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு கபசுர குடிநீரை காவல்துறை உயர் அதிகாரிகள் வழங்கினர். படங்கள்: மனோகரன்
44 / 86
போத்தனுர் காவல் நிலைய காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டதையொட்டி  கோவை ரயில் நிலைய வளாகத்தில் நேற்று  போத்தனுர் மாநகர காவல்துறை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மாநகராட்சி சுகாதாரத் துறையினர் கரோனா வைரஸ் தொற்றை கண்டறிய உமிழ் நீர்  பரிசோதனை நடத்தினர்.    படம் : ஜெ.மனோகரன்.
45 / 86
46 / 86
முழு ஊரடங்கு உத்தரவையொட்டி கோவை நஞ்சப்பா சாலையோரங்களில் தங்கியுள்ளவர்களுக்கு தன் சொந்த செலவில் தினமும் 50 பேருக்கு  முகக்கவசம் மற்றும் மதிய உணவு  கொடுத்து உதவி செய்யும்  தன்னார்வலப் பெண். படம் : ஜெ.மனோகரன்.
47 / 86
48 / 86
முழு ஊரடங்கு உத்தரவையொட்டி கோவை மரக்கடை சாலையில் கடும் வெய்யிலில்  ஊரடங்கு பணியில் உள்ள  காவலர்களுக்கு இளநீர் கொடுக்கும் தன்னார்வலத் தொண்டர்கள். படம் : ஜெ.மனோகரன்
49 / 86
50 / 86
திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் ரத்ததான முகாம் திருச்சி தேசியக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று ரத்ததானம் வழங்கிய ரத்த கொடையாளர்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்.
51 / 86
52 / 86
53 / 86
திருச்சியை அடுத்த பிராட்டியூர் சுற்று வட்டார பகுதியில், ஆண்டு தோறும் கோடைக்கு உகந்த குளிச்சியை தரும் வெள்ளரி பழம் சாகுபடி செய்வது வழக்கம். ஏப்ரல், மே மாதம் முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும் வெள்ளரி பழங்களை, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிந்து, ஊரடங்கு காரணமாக நடை பயணமாக நகர் பகுதிகளுக்கு எடுத்து வரும் பெண்கள். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
54 / 86
55 / 86
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் அனாதையாக சுற்றி திரிந்த ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த 75 வயது முதியவர் சுப்பாராவை கண்ட காவலர்கள் மற்றும் சமூகநல ஆர்வலர் மில்லத் இஸ்மாயில் என்பவர் மூலம் மாநகராட்சி முகாமிற்கு அனுப்பிவைத்தனர் . அவருக்கு குடும்பம் இருப்பதாகவும் சென்னை செல்வதாக கூறி இங்கு தவறுதலாக வந்துவிட்டதாகவும் தகவல் கூறியிருக்கிறார். நெருக்கடி நிலை நீங்கியதும் அவரை அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவிடுவதாக அவருக்கு நம்பிக்கையளித்திருக்கிறார்கள். தகுந்த சமயத்தில் மனிதாபிமானத்துடன் செயல்பட்டனர் காவலர்களும் சமூக நல ஆர்வலரும் . படங்கள் மு. லெட்சுமி அருண் .
56 / 86
சேலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சாலையோரங்களில் வசிக்கும் மக்களின் பசியை போக்க மாநகராட்சி அனுமதியுடன் தன்னார்வலர்கள் உணவு வழங்கி வருகின்றனர். சேலம் திருச்சி சாலையில் சாலையோரம் வசிக்கும் குடும்பங்களுக்கு பழங்கள் உணவுகள் வழங்கப்பட்டது. பழங்கள், உணவுகளை பெற்றதும் குழந்தைகளின் முகத்தில் வெளிப்பட்ட மகிழ்ச்சி பசியின் அவசியத்தை உணர்த்துகிறது. படங்கள்: எஸ்.குரு பிரசாத்
57 / 86
58 / 86
59 / 86
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து , உணவு மற்றும் உடலில் உள்ள வெப்பநிலை மற்றும் மருத்துவ உதவிகள் செய்ய புதுச்சேரி பொறியியல் கல்லுாரி மாணவர்கள் உருவாக்கிய புதிய ரோபோ இயந்திரத்தை சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலத்தில் செயல் முறை விளக்கம் அளித்து, கொரோனோ நோயாளிகள் உள்ள ஜிப்மர் மருத்துவமனை மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு உருவாக்கிய ரோபோவை இலவசமாக வழங்க உள்ளனர். படங்கள்.எம்.சாம்ராஜ்
60 / 86
61 / 86
62 / 86
கெரோனாவால் நீதிமன்றம் அனைத்தும் மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு உத்தரவினால் சிறு வழக்குகளில் கைது செய்பவர்களை காவல் துறையினர் கைது செய்தால் அவர்களை அடைத்து வைக்க கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை தற்காலிக சிறைச்சாலையாக மாற்றியுள்ளனர். பள்ளியின் கதவுகளை மூடி அருகே துாப்பாக்கி ஏந்திய சிறைத்துறை காவலர்கள் பாதுகாப்பு பணியில் நிற்கின்றனர். படம்.எம்.சாம்ராஜ்
63 / 86
64 / 86
ஊரடங்கு உத்தரவு உள்ள இந்த நிலையில் பெருங்களத்தூர் பகுதி ட்ரோன் கேமரா மூலம் எடுத்த படம்! தொகுப்பு படம்: ஸ்டாலின்
65 / 86
66 / 86
67 / 86
68 / 86
69 / 86
70 / 86
71 / 86
வேலூரில் நேற்று (ஏப்ரல் 26) மாலை பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை. இடம். சத்துவாச்சாரி. படம்: வி.எம்.மணிநாதன்.
72 / 86
73 / 86
74 / 86
வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த தெங்கால் பகுதி தமிழக-ஆந்திர மாநில எல்லையில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்புச்சுவர் நேற்று (ஏப்ரல் 26) மாலை அகற்றப்பட்டது. இடிக்கப்பட்ட சுவற்றின் கற்கள் சாலையோரத்தில் குவிக்கப்பட்டுள்ளது. படங்கள்: விஎம்.மணிநாதன்.
75 / 86
76 / 86
77 / 86
வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை ஆட்சியர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்து முகாமில் உள்ளவர்களிடம் கரோனா அறிகுறிகள் யாருக்கேனும் உள்ளதா, அறிகுறிகள் தெரிந்தால் உடனே மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க கோரியும் மற்றும் குடிநீர்வசதி, கழிப்பிடவசதி, தெருவிளக்குகள் எரிகிறதா, மின்சாரம் தடையின்றி கிடைக்கிறதா, அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறதா எனவும் கேட்டறிந்தார். படங்கள்: மணிநாதன்
78 / 86
79 / 86
80 / 86
81 / 86
82 / 86
83 / 86
84 / 86
கரோனா வைரஸ் தொற்று காரணமாக, வேலூர் அண்ணா சாலையில் ஆங்காங்கே விற்பனை செய்யப்படும் வண்ண துணிகளால் தைக்கப்பட்ட முக கவசங்கள். படம்: வி.எம்.மணிநாதன்.
85 / 86
86 / 86

Recently Added

More From This Category

x