1 / 37
மதுரை அடுத்த திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் பாரம்பரிய டெய்லர் கடை ஒன்று உள்ளது. தலைமுறை தாண்டி இயங்கும் இந்த கடையில் ஏசி, ஆடம்பர கண்ணாடிகள் போன்றவைகள் எல்லாம் இருக்காது. வாசலில் ஒரு தையல் மிஷன் வைத்து இயற்கை காற்று வாங்கிக் கொண்டும், ஊர் கதை பேசிய படி கச்சிதமாக தைக்கும் பாலு டெய்லர் கடை தான் அது.
கொரோனா தெற்று பரவலையடுத்து கடை வாசலில் பல வண்ணங்களில் முக கவசம் கொங்க விடப்பட்டிருந்தது. அருகில் சென்று இது குறித்து அவரிடம் கேட்டபோது, 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்தால் தையில் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு என்ன செய்வதென்று வழி தெரியாமல் இருந்தபோது சிறு வயதில் என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு எனக்கு நினைவுக்கு வந்தது. அதாவது மதுரையில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் எங்கள் உறவினர்கள் யாரேனும் சிகிச்சைக்காக சேர்ந்திருந்தால் அவர்களை பார்க்க என் அப்பா என்னை அழைத்துச் செல்வார். அப்படி செல்கையில் பருத்தி துணியாலான முக கவசத்தை தைத்து அதை என் முகத்தில் கட்டி கூட்டிச் செல்வார். அப்போது அவர் கூறியதாவது தம்பி ஆஸ்பத்திரியில் நிறைய நோயாளிகள் இருப்பார்கள் அவர்களை சந்திக்கும் போது பருத்தி துணியால் மூக்கையும், வாயையும் மூடிக்கொண்டால் தொற்று அண்டாது என்று கூறினார்.
இப்போது வந்திருக்கும் கொரோனா தொற்றுக்கு பாதுகப்பு முக கவசம் அணிய வேண்டும் என்ற நிலைக்கு அனைவரும் வந்துள்ளனர். பல விதமான முக கவசங்கள் உள்ளது. ஆனால் பருத்தி துணியை நான்காக மடித்து அதில் முக கவசம் தைத்து அணித்து கொண்டால் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். இயற்கையாகவே பருத்தி துணிக்கு காற்றில் உள்ள கிருமிகளை வடிகட்டும் தன்மையுள்ளது. எனவே இந்த வகை முக கவசத்தை தயாரிக்க முடிவு செய்து அதிலும், பெரியவர் சிறியவர்கள் சைசுக்கு ஏற்ப தைக்க முடிவு செய்தோம். தற்போது வியாபாரம் மிகவும் திருப்திகரமாக இருக்கிறது என்று கூறினார். படம். தகவல் க.ஸ்ரீபரத்
2 / 37
3 / 37
4 / 37
கொரோனா வைரஸின் தாக்கம் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அட்சய திருதியை முன்னிட்டு பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் நகைக் கடைகளில் நகை வாங்குவது வழக்கம். இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள நகைக்கடை பஜாரில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி
5 / 37
6 / 37
மதுரை காவல்துறை போலீசாருக்கு கரோனா தொற்றுநோய் ஏற்பட்டதால் காவல்துறை குடும்பத்தினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை பெரியார் பஸ் நிலையம் அருகே மேலவாசல் மாநகராட்சி சுகாதாரத் துறை மருத்துவமனையில் நடைபெற்றது! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி
7 / 37
8 / 37
144 தடை உத்தரவை தொடர்ந்து மதுரையில் இருந்து சென்னை செல்லும் நான்கு வழி ஒத்தக்கடை சிட்டம்பட்டி புறவழிச்சாலை சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி
9 / 37
கோவையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதையொட்டி கோவை அவிநாசி சாலையில் ஆன்லைன் ஆர்டர்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சுவ்கி ஊழியர்கள் .படம் :ஜெ .மனோகரன்
10 / 37
கோவையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதையொட்டி உக்கடம் பஸ் நிலையம் அருகே சாலையில் தங்கியிருப்பவர்களுக்கு உணவுகளை அளிக்கும் பாய்ஸ் அமைப்பினர்! படம் :ஜெ .மனோகரன்
11 / 37
கரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து வெறிச்சோடி காணப்படும் கோவை பெரியக்கடை வீதி . படம் :ஜெ .மனோகரன்
12 / 37
13 / 37
கரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து வெறிச்சோடி காணப்படும் கோவை 100 அடி சாலை. படம் :ஜெ .மனோகரன்
14 / 37
15 / 37
கரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து வெறிச்சோடி காணப்படும் அவிநாசி சாலை! படம் :ஜெ .மனோகரன்
16 / 37
17 / 37
கோவை அம்மா உணவத்தில் காலை உணவு தனி மனித இடைவெளி இல்லாமல் சாப்பிடும் மக்கள். படம் :ஜெ .மனோகரன்
18 / 37
19 / 37
20 / 37
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஃபயர் சர்வீஸ் ஊழியர்கள் மூலமாக கிருமி நாசினி அடிக்கப்பட்டது! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி
21 / 37
22 / 37
கோவை ஒலம்பஸ் அம்மா உணவத்தில் காலை உணவு சாப்பிடும் மக்களை பார்த்து எனக்கு என்று சொல்ல முடியாத ஏங்கும் நன்றியுள்ள ஜீவன். படம் :ஜெ .மனோகரன்
23 / 37
கரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து கோவையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதையொட்டி சுங்கம் பகுதியில் வாகனங்களில் வருபவர்களை தகுந்த அடையாள அட்டையை பரிசோதிக்கும் போலீசார் .படம் :ஜெ .மனோகரன்
24 / 37
25 / 37
காரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து கோவை புளியங்குளம் பகுதியில் பூட்டு போடப்பட்டுள்ள சாலை . படம் :ஜெ .மனோகரன்
26 / 37
27 / 37
முழு ஊரடங்கு உத்தரவில் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடைக்கும் மஹாராஜநகர் , தியாகராஜநகர் மற்றும் அன்புநகர் செல்லும் சாலைகள் .
28 / 37
29 / 37
கரோனாவினால் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் துப்புறவு பணிக்கு வரும் பணியாளர்கள் வருவது சிரமம் ஏற்பட்டதையடுத்து புதுச்சேரி பிஆர்டிசி அரசு பேருந்து இயக்கி அவர்களை பல்வேறு பகுதிகளிலிருந்து ஏற்றி வந்து நகரப் பகுதியில் பணியாற்றும் இடத்தில் இறக்கி விடுகின்றனர். படம்.எம்.சாம்ராஜ்
30 / 37
31 / 37
கடந்த சில நட்களாக புதுச்சேரியில் வெயிலின் வெப்பம் 102 டிகிரியை எட்டியதையடுத்து இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் இடி, சூறை காற்றுடன் கூடிய மழை பெய்தது. கொட்டு மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள். படம்.எம்.சாம்ராஜ்
32 / 37
பலத்த மழையில் ஓருவர் தனது வீட்டில் குடையை பதம் பார்க்கும் சூறை காற்று! இடம். புதுச்சேரி வழுதாவூர் சாலை. படம்.எம்.சாம்ராஜ்
33 / 37
பெய்த திடீர் மழையில் தாழ்வான பகுதியான காந்தி நகரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர். படம்.எம்.சாம்ராஜ்
34 / 37
35 / 37
கொட்டும் மழையோ சுட்டேரிக்கும் வெயிலோ மளிகை கடையில் பொருட்கள் வாங்க வரிசையில் நிற்கும் கூட்டம். படம்.எம்.சாம்ராஜ்
36 / 37
கரோனாவினால் 144 தடை உத்தரவு பிறப்பித்தும் கூட்டம் குறையாத இறைச்சி கடை , சூறை காற்றுடன் கூடிய மழையினால் வெறிச்சோடி காணப்பட்டது. படம்.எம்.சாம்ராஜ்
37 / 37
பலத்த மழையில் தென்னை மரங்களில் கடந்து செல்லும் சூறை காற்று .படம். எம்.சாம்ராஜ்