1 / 48
ஏப்ரல் 26 முதல் 29 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதால் கோவை வடவள்ளியில் உழவர் சந்தையில் பொருட்கள் வாங்க வரிசையாக தனிமனித இடைவெளி இல்லாமல் மக்கள்! படம்: மனோகரன்
2 / 48
3 / 48
4 / 48
5 / 48
கோவை சுங்கம் பகுதியிலுள்ள இறைச்சிக் கடையில் தனிமனித இடைவெளி இல்லாமல் காத்திருக்கும் பொதுமக்கள்! படம்: மனோகரன்
6 / 48
7 / 48
கோவை வடவள்ளி உழவர் சந்தை அருகே பொதுமக்களுக்கு சித்த மருத்துவ சங்கம் சார்பில் வழங்கப்படும் கபசுர நீர்! படம்: மனோகரன்
8 / 48
மதுரை காவல்துறை போலீசாருக்கு கரோனா தொற்றுநோய் ஏற்பட்டதால் காவல்துறை குடும்பத்தினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை பெரியார் பஸ் நிலையம் அருகே மேலவாசல் மாநகராட்சி சுகாதாரத்துறை மருத்துவமனையில் நடைபெற்றது! படம் எஸ். கிருஷ்ணமூர்த்தி
9 / 48
10 / 48
11 / 48
மூன்று நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் என அரசு ஊத்தரவு பிறப்பித்ததையடுத்து புதுச்சேரியில் உள்ள அனைத்து சாலையும் எந்த வாகனங்களும் செல்ல முடியாதவாறு மூடப்பட்டது! இதையடுத்து மூடப்பட்ட பாதையில் அமர்ந்து காய்கறிகளை விற்கும் மூதாட்டிகள் .படம்.எம்.சாம்ராஜ்
12 / 48
13 / 48
14 / 48
திருநெல்வேலியில் ஆதரவற்றோர்களுக்கு பிரியாணி கொடுத்து இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகிய சமூக நல ஆர்வலர்கள் .. ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்கள் கொஞ்சம் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் . அதில் வீதிகளில் வசிப்போர்களின் உணவு தேவை என்பது மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது . அவர்களின் உணவு தேவை பெரும்பாலும் சமூக நல ஆர்வலரின் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது . அதில் தச்சநல்லூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து திருநெல்வேலி சந்திப்பு மற்றும் அதனை சுற்றி உள்ளவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். பலரும் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர். படம் . மு. லெட்சுமி அருண்
15 / 48
16 / 48
தயார் நிலையில் பிரியாணி
17 / 48
சிக்கன் பிரியாணி வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். பலரும் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர் .
18 / 48
ஆதரவற்றோருக்காக பிரியாணி பொட்டலங்களாக தயார்நிலையில் பெட்டிகளில் அடுக்கப்படுகின்றன
19 / 48
வீதிகளில் வாழும் ஆதரவற்றோருக்கு பலர் உணவு வழங்கி வருகிறார்கள் .. அதே சமயத்தில் விலங்குகளுக்கும் உணவு வழங்கிட வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் முயற்சிசெய்து வருகிறார்கள் . அதற்கு உதவிடும் வகையில் அதிமுக மாநகர செயலாளர் தச்சை கணேசராஜா விலங்குகளின் உணவுத் தேவைக்காக பிஸ்கட் மற்றும் மூலப் பொருட்களை விலங்கு நல ஆர்வலர் மீராஷாவிடம் வழங்கினார். படம் . மு.லெட்சுமி அருண்
20 / 48
21 / 48
22 / 48
முழு ஊரடங்கு 4 நாட்கள் என முதல்வர் அறிவித்ததை அடுத்து சரியான புரிதல் இன்றி சாலையில் மக்கள் குவிந்தனர். பால் .ஏடிஎம், தள்ளுவண்டிகளில் காய்கறிகள்,மருந்து கடைகள் இருக்கும் என அரசு அறிவித்ததை புரிந்துகொள்ளாமல் காய்கறி வாங்க நீண்ட வரிசையில் தாம்பரத்திலும்,சமூக இடைவெளியின்றி சேலையூரிலும், ஜோடி ஜோடியாக வகனங்களில் மடிபாக்கம் பகுதியிலும், ஒவ்வொருவரும் 4 அல்லது 5 பாக்கெட்டுகள் பால் மற்றும் பணம் எடுக்க ஏடிஎம்களில் வரிசைகட்டி நங்கநல்லூர் பகுதிகளிலும் திரிந்தனர்.
அறிவிப்பை முழுமையாக புரிந்துகொள்ளாமல் இப்படி போட்டி போட்டுக்கொண்டு பொருட்களை வாங்கி குவித்தால் தட்டுபாடும், விலையேற்றத்தையும் தான் தூண்டும் என புலம்பியபடி போலீசார் மக்களை கட்டுபடுத்த முடியாமல் திணறினர்.
ஊரடங்கின் அர்தத்தை புரிந்துகொள்ளாமல் இப்படி கூடுவதால் கரோனா நோய் சமூக பரவலில் தான் கொண்டு போய்விடும். இவ்வளவு நாள் அரசும், மருத்துவர்களும், போலீசாரும் பட்ட கஷ்டம் வீணாகவே போய்விடும் என்பதில் ஐயமில்லை. படங்கள். தகவல்: எம்.முத்துகணேஷ்
23 / 48
24 / 48
25 / 48
26 / 48
27 / 48
கொரோனா நோய் கிருமி பரவலை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துடன் தீயணைப்பு வீரர்களும் இணைந்து இரவு பகல் பாராமல் கிருமிநாசினி தெளித்து வருகிறார்கள். பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் தீயணைப்பு வீரர் ஒருவர் தகுந்த பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு கிருமிநாசினி தெளித்த காட்சி! படம் மு. லெட்சுமி அருண்
28 / 48
29 / 48
சேலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது . இருந்தபோதிலும் அதனை பொருட்படுத்தாமல் அலட்சியத்துடன் வெளியே வந்த பொதுமக்களின் வாகனங்களுடைய சாவியை போலீசார் கைப்பற்றி வைத்துக் கொண்டு பின்னர் நீண்ட நேரம் கழித்து கண்டித்து அனுப்பினர். சேலம் அம்பேத்கர் சிலை பகுதியில் போலீசாரின் பிடியில் சிக்கிய மக்கள். படங்கள் : எஸ். குரு பிரசாத்
30 / 48
31 / 48
சேலத்தில் ஏப்ரல் 24 முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய தேவைக்காக சேலம் தற்காலிக பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த உழவர் சந்தை நடைபெறாததால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. படம் எஸ்.குரு பிரசாத்
32 / 48
33 / 48
34 / 48
மதுரை திருமங்கலத்தில் கொரோனா நோய் தாக்கப்பட்ட பாணு தியேட்டர் பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு மையத்தை பார்வையிட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பொதுமக்களுக்கு ஹோமியோபதி எதிர்ப்பு சக்கி மாத்திரைகளை வழங்கினார். படம்.க.ஸ்ரீபரத்
35 / 48
36 / 48
37 / 48
மதுரை திருமங்கலத்தில் கொரோனா நோய் தாக்கப்பட்ட பாணு தியேட்டர் பகுதிகளில் கிருமிநாசினி திரவம் தெளிக்கும் முனிசிபாலிட்டி ஊழியர்கள்! படம்.க.ஸ்ரீபரத்
38 / 48
39 / 48
வேலூரில் சுட்டெரித்த 104.4 டிகிரி வெயிலின் வெப்ப சலனம் காரணமாக நேற்று ஏப்ரல் 24, மாலை பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழையில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். படம்: வி.எம்.மணிநாதன்.
40 / 48
41 / 48
42 / 48
ஊரடங்கு உத்தவை மீறி வேலூர் பாலாற்றில் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு விளையாடுபவர்களை காவல் துறையினர் டிரோன் கேமிரா மூலம் காண்காணித்து விரட்டினாலும் அதனை பொருட்படுத்தாமல் திரும்பவும் வந்து விளையாடும் இளைஞர்கள். படம்: வி.எம்.மணிநாதன்.
43 / 48
44 / 48
கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் ஆட்டோக்கள் இயக்கப்படாமல் வருமானமின்றி உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்து முன்னணி சார்பில் வழங்கப்பட்ட அரசி, பருப்பு உட்பட மளிகை பொருட்கள். படம்: வி.எம்.மணிநாதன்.
45 / 48
46 / 48
47 / 48
வேலூர் அடுத்த திருமலைக்கோடி சாலையில் தனித்திரு! விலகியிரு! வீட்டிலிரு! என்ற வாசகத்துடன் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் சார்பில் வரையப்பட்டுள்ள கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம். படம்: வி.எம்.மணிநாதன்.
48 / 48