Published on : 24 Apr 2020 19:42 pm

இன்றைய ( 24.04.2020) புகைப்பட செய்திகள்

Published on : 24 Apr 2020 19:42 pm

1 / 54
144 தடை உத்தரவை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கோரி குவிந்த பொதுமக்கள் வியாபாரிகள்! படம்: எஸ் கிருஷ்ணமூர்த்தி
2 / 54
3 / 54
4 / 54
மதுரை கோரிப்பாளையத்தில் இருசக்கர வாகனங்களுக்கு மற்றும் கார் ஓட்டுனர்களுக்கு கையை உயர்த்தி உறுதிமொழி அளித்தவுடன் வாகனங்களுக்கு அனுமதி அளித்தார்! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி
5 / 54
விவசாய பணிகளுக்கு அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், மரக்காணம், சூனாம்பேடு, மாம்பாக்கம், மதுராந்தகம், பகுதிகளில் விவசாயப் பணிகள் துரிதமாக துவங்கப்பட்டன. விவசாயிகளும் விவசாய பணியாளர்களும் குதூகலமாக தங்களது பணியில் இறங்கியுள்ளனர். உழவு, களை எடுத்தல், அறுவடை போன்ற பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கிராமப் பகுதிகளில் வலம் வரும்போது இந்த கண்கொள்ளா காட்சிகள் மனதை கொள்ளைக்கொள்ள செய்கிறது. படங்கள்:எம்.முத்து கணேஷ்
6 / 54
7 / 54
8 / 54
9 / 54
10 / 54
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 144 தடை உத்தரவை முன்னிட்டு இருசக்கர வாகன அனுமதிக்கக் கோரி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்! அதன்பிறகு போலீசார் அனைவரையும் விரட்டி அனுப்பினார்கள். படம் கிருஷ்ணமூர்த்தி
11 / 54
12 / 54
13 / 54
14 / 54
கரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லுாரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரி அரசு கல்வித்துறை உத்தரவின் பேரில் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லுாரிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு கூகுள் கிளாஸ்ரூம் இணையதளம் வழியாக அந்தந்தப் பாடப்பிரிவுகளின் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்துவதை புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லுாரி மாணவிகள் முகத்தை முக கவசத்தால் மூக்கினை மூடியபடி வீட்டில் இருந்து செல்போன் மற்றும் மடிக்கணிணியில் பாடம் கற்கும் மாணவிகள்! படங்கள்.எம்.சாம்ராஜ்
15 / 54
16 / 54
17 / 54
மத்திய அரசு ஹேமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்கள் தாக்காமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரையை இலவசமாக பொது மக்களுக்கு வழங்கும் மருத்துவர்கள். இடம். பஸ் நிலையம். புதுச்சேரி. படம். எம்.சாம்ராஜ்
18 / 54
19 / 54
20 / 54
21 / 54
கொரோனா நொய் கிருமி பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வலியுறுத்தி  எமதர்மன் மற்றும் கொரோனா அரக்கன்  உருவம் அணிந்து கோவை சிங்காநல்லூர் காவல்நிலையம் அருகேயுள்ள  போக்குவரத்து சிக்னலில் வாகனத்தில் செல்பவரிடம்  விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆத்மா அறக்கட்டளை அமைப்பினர். படம். ஜெ :ஜெ .மனோகரன்
22 / 54
23 / 54
மதுரை அடுத்துள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பல ஏக்கரில் கத்தரிக்காய் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் விலையும் கத்தரிக்காய் மிகவும் சுவையுடன் இருப்பதால் மதுரை மார்கெட் மற்றும் அருகில் உள்ள வாடிப்பட்டி, பறவை, திருமங்கலம் வரை வரவேற்பு அதிகம். மிகவும் சிரமப்பட்டு கிணற்று தண்ணீர் அல்லது போர் தண்ணீர் பயிரிட்டு கலை எடுத்து கூலி கொடுத்து கத்தரிக்காயை பறித்து வியாபாரத்திற்காக மார்கெட்டுக்கு எடுத்துச் சென்றால் கிலோ 10 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்குகிறார்கள். சரி கொரோனா தொற்று காரணத்தால் கிடைத்த விலைக்கு விற்று விடலாம் என்று நினைத்து பறித்த காயை மூட்டைக் கட்டி எடுத்துச் சென்றால் சில நேரங்களில் காவல் துறையினர் அனுமதி மறுத்துவிடுகின்றனர். அப்போது என்ன செய்வதேன்றே தெரியவில்லை காயை விற்று வந்தால் தான் கூலி கொடுக்க முடியும். வீட்டில் சமைக்க முடி.யும் என்று கூறினாலும் அதை பொருட்படுத்தாமல் திருப்பி அனுப்பி விடுகின்றன் என்று அப்பகுதி விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க கூறினார். பெயர் கேட்டதற்கும் ஒரு படம் எடுத்துக் கொள்ளவா என கேட்டதற்கும் வேணாம் சார் மீண்டும் நாங்க அந்த பக்கம் தாம் போகணும் என்று கூறினார். படம்.தகவல் க.ஸ்ரீபரத்
24 / 54
25 / 54
26 / 54
27 / 54
விருதுநகர் டு மதுரை சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் முதியோர் பென்சன் மற்றும் பண வரவு பற்று வைப்பதற்காக ஏராளமானோர் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக சமூக இடைவெளி விட்டு அமர்ந்துள்ளனர். படம்.க.ஸ்ரீபரத்
28 / 54
29 / 54
30 / 54
விருதுநகர் புது பஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள மார்கெட்டில் கொடிக்காய் விற்கும் வியாபாரி துவர்ப்பு சுவையுடன் நோய் எதிர்ப்பு சக்கி அதிகமுள்ள கொடிக்காய் கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. படம்.க.ஸ்ரீபரத்
31 / 54
கோவை மாநகராட்சி, தடாகம் சாலை , பூசாரிபாளையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார் உடன் ஆட்சியர் ராஜாமணி! படம்.ஜெ :.மனோகரன் .
32 / 54
கொரானா நோய் தொற்றினை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . அதில் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாநகராட்சி பணியாளர்கள் வீதிகளிலும் சாலைகளிலும் கிருமிநாசினி திரவத்தை தெளித்து வருகிறார்கள் . வண்ணாரப்பேட்டை பகுதிகளில் நவீன கருவிகளை கொண்டு கிருமிநாசினி திரவத்தை தெளிக்கும் மாநகராட்சி ஊழியர்கள். அப்போது அதில் வானவில் போன்று நிறம் பிரிந்த காட்சி. படம் : மு. லெட்சுமி அருண்.
33 / 54
34 / 54
35 / 54
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த தம்பதிகள் பாளையங்கோட்டையில் உணவில்லாமல் அவதிப்படுகின்றனர் . சமூக நல ஆர்வலர்கள் சிலர் உதவியால் உணவருந்தும் நிலை . ஒரு சிலர் உணவு செய்யும் பாத்திரங்களை வாங்கி கொடுத்துள்ளனர் . மேலும் அரசு மூலம் உதவிகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கும் ஜெபபாமாலை செல்வி தம்பதிகள். இவர்கள் பாளையங்கோட்டையில் குழந்தை ஏசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பகுதியில் தற்போது இருக்கிறார்கள் . படம் : மு. லெட்சுமி அருண்.
36 / 54
ஊரடங்கு அமலில் உள்ளதால், முதியோர் உதவித் தொகையில் கூடுதலாக வழங்கப்படும் 500 ரூபாயை பெற, திருச்சி பாலக்கரை பாரத ஸ்டேட் வங்கி அருகே முகக் கவசம் அணிந்து வரிசையில் காத்திருந்த பெண்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்.
37 / 54
38 / 54
39 / 54
ஊரடங்கு உத்தரவை மீறியும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும், திருச்சி பெரிய கடை வீதியில் பொருட்கள் வாங்க அலை அலையாக திரளும் பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
40 / 54
41 / 54
திருச்சிக்கு சரக்கு ரயில் மூலம் வந்த மருந்து பொருட்களை எடுத்து சென்ற மருத்து மொத்த வியாபாரிகள். படம்: ஜி.ஞானவேல்முருகன்.
42 / 54
43 / 54
44 / 54
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் திருட்டு போகாமல் தடுக்க சேலம் அரசு மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் இருந்த மதுபானங்கள் போலீசார் பாதுகாப்புடன் குடோனுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதற்காக மது பாட்டில்களை லாரியில் ஏற்றும் தொழிலாளர்கள். படங்கள் எஸ்.குரு பிரசாத்.
45 / 54
46 / 54
சேலத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு முன்னெச்சரிக்கையாக கரோனா வைரஸ் உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. படங்கள் : எஸ்.குரு பிரசாத்
47 / 54
48 / 54
49 / 54
கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதால், உணவுக்கு வழியின்றி தவிக்கும் சாலையோரமாக தங்கியுள்ள மக்கள், மருத்துவத்திற்க்காக வந்து லாட்ஜ்களில் தங்கியுள்ள வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு இந்தியன் ரயில்வே கேட்டரிங் அன்ட் டூரிசம் கார்ப்ரேஷன் லிமிடெட் (ஐஆர்சிடிசி) மூலம் காட்பாடி ரயில் நிலையத்தில் தினமும் 1500 பேருக்கு உணவு தயாரித்து வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் வழங்கப்பட்டு வருகின்றது. படம்: வி.எம்.மணிநாதன்.
50 / 54
51 / 54
52 / 54
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இளைஞர்கள் வீட்டில் இல்லாமல் பொழுதைக் கழிக்க வேலூர் பாலாற்றில் தேங்கியுள்ள நீரில் தூண்டில் போட்டும் , வலை விரித்தும் மீன் பிடித்து வருகின்றனர். படம்: வி.எம்.மணிநாதன்.
53 / 54
54 / 54

Recently Added

More From This Category

x