Published on : 22 Apr 2020 20:54 pm

இன்றைய (22.04.2020) புகைப்பட செய்திகள்

Published on : 22 Apr 2020 20:54 pm

1 / 42
கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ள கோவை புலியகுளம் பகுதி! படம்: மனோகரன்
2 / 42
3 / 42
4 / 42
அம்மன் மற்றும் விநாயகர் வேடமணிந்து நூதன முறையில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்! படம்: மனோகரன்
5 / 42
6 / 42
வரும் ரம்ஜான் நோன்புக்காக கோவை பெரியார் நகர் பள்ளிவாசல் முன்பு ஐக்கிய ஜமாத் சார்பில் இலவசமாக வழங்கப்பட்ட 10 கிலோ அரிசி மற்றும் பொருட்கள்! படம்: மனோகரன்
7 / 42
வௌவால்களில் கரோனா பரவுகிறது என்று கடந்த சில நாட்களுக்கு முன் வதந்தி பரவியது. இதனால் குறுக்குத்துறை மற்றும் வீரராகவபுரம் பகுதிகளில் உள்ள பழந்திண்ணி வௌவால்கள் பொதுமக்களால் விரட்டப்பட்டதாக தகவல் வந்தது. அதற்க்கு தகுந்த விளக்கம் அளித்த பறவைகள் நல அமைப்பினர், குறுக்குத்துறை பகுதிகளில் வௌவால்கள் வாழ்விடங்களில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முக கவசங்களை வழங்கினர் . இதனை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தொடங்கி வைத்தார். பறவைகள் நமக்கு நல்லது செயகின்றன. அவைகளால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவுறுத்தினார். படம்: மு.லெட்சுமி அருண்
8 / 42
9 / 42
10 / 42
11 / 42
12 / 42
13 / 42
பாளையங்கோட்டையில் பொதுமக்களுக்காக சின்ன சின்ன கடைகள் திறந்திருந்தன.. அதில் வடை, பதார்த்தங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று திறந்திருந்தது. படம்: மு.லெட்சுமி அருண்
14 / 42
வரதராஜபெருமாள் கிழக்குரத வீதியில் சைக்கிளில் நொங்கு வெட்டிக்கொண்டிருக்கும் ஒருவர் | படம்: மு.லெட்சுமி அருண்
15 / 42
பாளையங்கோட்டை பகுதியில் பூக்கட்டும் பெண் ஒருவர். படம்: மு.லெட்சுமி அருண்
16 / 42
144 தடைஊரடங்கு தொடர்ந்து மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகே மதிச்சியம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு அளிக்கப்பட்டது படம் நியூஸ் கிருஷ்ணமூர்த்தி
17 / 42
18 / 42
கரோனா தொற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்கள் மதுரை மாவட்ட ஓவியர்கள் சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வரையப்பட்டன! படம்: கிருஷ்ணமூர்த்தி
19 / 42
20 / 42
பசியால் வாடும் நாய்களை தேடி சென்று உணவளிக்கும் இளைஞர் மோகன்! இடம்: திருச்சி மலைக்கோட்டை- படம்: ஜி.ஞானவேல்முருகன்
21 / 42
22 / 42
23 / 42
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு சுற்று வட்டார கிராமங்கள் முழுவதும் பல ஏக்கர் கணக்கில் இந்த கோடை காலத்தை எதிர்பார்த்து தர்பூசணி பயிர் செய்திருந்தனர். அறுவடை பருவம் நிறைவடையும் தருவாயில் கரோனா நோய் தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளும் கூலி தொழிலாளர்கலும் வேலைக்கு வர இயலாமல் ஏன் வெளியே கூட வர முடியவில்லை. இதனால் காய்த்த தர்பூசணி பழங்கள் அனைத்தும் ஒரு மாதத்தில் வெம்பிவிட்டது. அருகிலுள்ள கிராம மக்களை நீங்கள் எடுத்து பயன்படுத்தலாமே என்று கேட்டபோது 'எம்புட்டு தான் நாங்களே தின்னுவது' என சோகமாக கூறினர். ஒரு விவசாயிடம் கேட்டபோது ஒரு காய் பத்து ரூபாய் வீதம் பல லட்சம் காய்கள் விலை போகாமல் வீணாகிவிட்டது. படத்தில் காணும் ஒரு தோட்டமே 85 ஏக்கர். இதுபோல் பல ஏக்கர் நிலத்தில் பயிர்கள் நாசமாகி விட்டன அரசு உதவினால் மட்டுமின்றி கடனிலிருந்து மீள முடியாது என மனம் வெதும்பினார். படங்கள்: தகவல்:எம்.முத்து கணேஷ்
24 / 42
25 / 42
26 / 42
கரோனாவுக்கு சோப்பு எண்ணெய் தயாரிக்கும் மதுரை பெண்கள் சுய உதவிக்குழு! படம்: ஸ்ரீபரத்
27 / 42
28 / 42
29 / 42
30 / 42
கரோனா நோய் கிருமி பறவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வலியுறுத்தி கரோனா கிருமி உருவ தலைக்கவசம் அணிந்து புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் வாகனத்தில் செல்பவரிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமூக சேவை அமைப்பினர். படம்.எம்.சாம்ராஜ்
31 / 42
32 / 42
33 / 42
34 / 42
35 / 42
36 / 42
அரசு மருத்துவர்கள் பணியின்போது இறந்த மருத்துவர்களுக்கு குடும்பத்துடன் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி! படம்: மனோகரன்
37 / 42
38 / 42
சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்தில் பாதுகாப்பு உடைகளுடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்ல தயார் நிலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்! படம்: வி.எம்.மணிநாதன்.
39 / 42
40 / 42
நாற்று நடவு கரோனா விழிப்புணர்வு: சமூக இளைவெளி விட்டு நாற்று நடவு செய்யும் பெண் தொழிலாளர்கள். இடம். வேலூர் அடுத்த குப்பத்தா மோட்டூர் கிராமம். படம்: வி.எம்.மணிநாதன்
41 / 42
42 / 42

Recently Added

More From This Category

x