Published on : 20 Apr 2020 19:53 pm

இன்றைய (20.04.2020) புகைப்பட செய்திகள்

Published on : 20 Apr 2020 19:53 pm

1 / 38
நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் வளாகம் இன்று முதல் செயல்பட துவங்கியுள்ளது. அங்கு பணிபுரிய வரும் ஊழியர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகு பணிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். படம்: பி.கே.பிரவீன்
2 / 38
3 / 38
சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வட இந்திய ஊழியர்களுக்கு அனுப்பப்படும் உணவின் தரம் ஆராய்ந்த பிறகே வழங்கப்பட வேண்டும் என்ற மாநகர ஆணையர் உத்தரவையடுத்து கோடம்பாக்கம் சமூக நலக்கூடத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தர சோதனையில் ஈடுபட்டார்கள். படம்: பி.கே.பிரவீன்
4 / 38
5 / 38
சென்னை வேளச்சேரி 100 அடி சாலை நியாயவிலைக் கடையில் அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரணத் தொகை இதுவரை வாங்காதவர்கள் மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வாங்குபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பெற்றுக்கொண்டனர். படம்: பி.கே.பிரவீன்
6 / 38
7 / 38
8 / 38
கரோனா தடுப்பு நடவடிக்கை: மொத்தம் 5 ஆயிரத்து 313 வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸார் அவற்றை திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். படம், தகவல்: ஜி.ஞானவேல்முருகன்.
9 / 38
10 / 38
ஊரடங்கு உத்தரவினை பொதுமக்கள் கடைபிடித்த போதிலும் , ஒரு சில இடங்களில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்கள் பயணித்த வண்ணம் இருக்கின்றனர் .. கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயணிப்பு! படம்: லஷ்மிஅருண்
11 / 38
12 / 38
13 / 38
புதுச்சேரி 144 தடை ஊத்தரவினால் உணவு கூடங்கள் ஓட்டல்கள் முழுவதும் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு மூலம் ஏழை எளிய மக்களுக்கு மிக குறைந்த விலையில் உணவினை வழங்குவதற்காக மின் இயங்கி சமையல் கூடத்தில் தயாராகும் இரவு உணவான சப்பாத்தி குருமா! படம்: எம்.சாம்ராஜ்
14 / 38
15 / 38
16 / 38
17 / 38
ஏப்ரல் மாதம் கடைசி வாரத்திலிருந்து மே 3 வரை ஊரடங்கு உத்தரவு உள்ளதை அடுத்து மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி வாகனங்களுக்கு பணம் வசூலிக்க முடியாத சூழ்நிலை இருந்ததை அடுத்து தற்போது மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது. இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் டோல்கேட்டில் புதிய கட்டணம் வசூலிக்கப்பட்டது. படம். க.ஸ்ரீபரத்
18 / 38
19 / 38
20 / 38
21 / 38
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தடை உத்தரவு நீங்கும் வரை சேலம் மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் காலை மற்றும் மதியம் பொதுமக்களுக்கு இலவசமாக முட்டையுடன் கூடிய உணவு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் அம்மா உணவகத்தில் காத்திருந்து உணவு சாப்பிட்டு சென்றனர். படம்: எஸ். குரு பிரசாத்
22 / 38
23 / 38
24 / 38
கரோனா பாதிப்பினால் 144 தடை ஊத்தரவை கடந்த ஓரு மாதத்திற்க்கு மேலாக அரசு நீடித்துள்ளது. இதனால் கள்ள சந்தையில் மது பானங்களின் விலை பத்து மடங்கிற்கு மேலாக அதிகரித்து விற்பனை செய்கின்றனர். இதையடுத்து போலீசார் மதுவை கள்ள சந்தையில் விற்பனை செய்பவர்களை பிடித்து பல்வேறு வழக்குகளை பதிவு செய்து கைது செய்து வருகின்றனர். இதையடுத்து பொதுமக்கள் கிராம புறங்களில் உள்ள பனை மரத்தில் கிடைக்கும் கள் பானத்தை வாங்க கூட்டம் கூட்டமாக கூடி வாங்கி செல்கின்றனர் என காவல்துறையினருக்கு வந்த புகாரின் பேரில் புதுச்சேரி மாநிலம் அபிஷேகப்பாக்கம் பகுதியில் ஏரிக்கரையில் உள்ள ஐநுாறுக்கும் மேற்பட்ட பனை மரத்தில் இரண்டு நாட்களாக காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் துணை ஆய்வாளர் இளங்கோ மற்றும் காவல்துறையினர் உண்டிகோலால் கள் 200 பானைகளை உடைத்து அழித்தனர். - படங்கள்.எம்.சாம்ராஜ்
25 / 38
26 / 38
27 / 38
28 / 38
சிவப்பு மூக்கு ஆள்காட்டி: நன்றாக பறக்க கூடியது ஆனால் தரையில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். எதிரிகளின் வருகையை விரைந்து சக பறவைகளுக்கு தெரிவிக்கும். படம்: எம்.முத்துகணேஷ்
29 / 38
30 / 38
பிரவுன் ஸ்ரைக்: பழுப்பு கீச்சான்:இமாலயாவை பூர்வீகமாக கொண்ட பறவை. இனப்பெருக்கத்திற்காக இங்கு வந்துள்ளது. ஏப்ரல் மாதம் மட்டும் காணப்படும். படம்: எம்.முத்துகணேஷ்
31 / 38
பெலிகன்; கூழைக்கடா: தொட்டி வாயன் என்ற பெயர்கள் உண்டு.இதன் வாய்தொட்டி போல் காணப்படும். படம்: எம்.முத்துகணேஷ்
32 / 38
33 / 38
ஸ்பூன்பில் ஸ்டார்க்: கரண்டிவாயன்: கரண்டிவாயன் இந்த பறவை நீருக்கடியில் உள்ள நத்தை, கிளிஞ்சல்களை உணவாக தேடும். இதன் மூக்கு கரண்டி போல் காணப்படுவதால் தமிழில் இந்த பெயர். படம்:எம்.முத்துகணேஷ்
34 / 38
சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் அரிதாக காணப்படும் சீல்கை சிறகி எனும் சில்லிதாரா வாத்து ஜோடி தனது 9 குஞ்சுகளுடன் சாலைக்கு அருகாமையில் வலம் வந்த அழகிய காட்சி- படம்: எம்.முத்துகணேஷ்
35 / 38
36 / 38
37 / 38
உட் சாண்ட் பைப்பர்:பழப்பு கீச்சான்: சேறு நிறைந்த பகுதியில் காணப்படும்.இது உணவாக பிடிக்கும் பூச்சிகள் தப்பிவிடாமல் இருக்க முள் மரங்களில் உள்ள முட்களில் குத்தி வைத்துவிட்டு அடுத்த இரையை தேடும். படம்:எம்.முத்துகணேஷ்
38 / 38

Recently Added

More From This Category

x