Published on : 19 Apr 2020 19:09 pm

இன்றைய (19.04.2020) புகைப்பட செய்திகள்

Published on : 19 Apr 2020 19:09 pm

1 / 46
2 / 46
3 / 46
கரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக முககவசம் மற்றும் கையுறை விற்பனை தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தற்போது வேலையின்றி இருக்கும் இளைஞர்கள் பலர் சாலையோரங்களில் முககவசம், கையுறை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்- படம், தகவல்: ஜி.ஞானவேல்முருகன்.
4 / 46
5 / 46
144 தடை ஊத்தரவினால் சிறு தட்டு வண்டியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளனர் .சுட்டேரிக்கும் மதிய வெயிலில் முகத்தை மூடி பழத்தை வாங்க கூட ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் சாலையில் தட்டு வண்டியை தள்ளி செல்லும் பழ வியாபாரி -படம்: .எம்.சாம்ராஜ்
6 / 46
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவினால் மதுக் கடைகளே இல்லை. இதனால் மது பாட்டில்கள் கள்ள மார்க்கெட்டில் விற்பனை நடந்துவருகிறது. மது பாட்டில்கள் பத்து மடங்கு விலை அதிகமாக கள்ள மார்கெட்டில் விற்க்கப்படுகிறது. இதனால் அரசு கலால்துறையின் மூலம் கண்காணிப்பு அதிகாரிகளை மதுபான கடைகளுக்கு அனுப்பி கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளனர். புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள மதுபானக் கடையின் வெளியே போலீசார் பாதுகாத்து நிற்க கதவின் இடைவெளி வழியாக ஆய்வு செய்து வெளியே வரும் கலால்துறை அதிகாரி! -படம்: .எம்.சாம்ராஜ்
7 / 46
காலையில் மட்டும் மார்கெட் கடைகள் இயங்குகிறது இதையடுத்து புதுச்சேரி காந்தி வீதியில் பழ அங்காடியில் பழத்தை வாங்கிக்கொண்டு வெறிச்சோடி கிடக்கும் காந்தி வீதியில் ரிக்‌ஷாவில் பயணம் செய்யும் பெண்கள் -படம்: .எம்.சாம்ராஜ்
8 / 46
இப்போது சாலைகள் எங்களது ஓய்வு இடம்....புதுச்சேரி ஆள் நடமாட்டம் இன்றி கிடக்கும் வள்ளார் சாலையில் ஆயாக படுத்துக்கொண்டு அசைபோடும் மாடுகள். -படம்: .எம்.சாம்ராஜ்
9 / 46
10 / 46
11 / 46
புதுச்சேரியில் கள்ள மார்கெட்டில் மது பாட்டில்கள் பல ஆயிரத்திற்கும் விற்க்கப்படுகிறது இதை கட்டுப்படுத்த அரசு குடோன்களில் மது பாட்டில்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது குடோனில் குவித்து அடுக்கி வைக்கப்பட்ட மது பாட்டில் கேஸ்களை கணக்கெடுக்கும் கலால்துறை அதிகாரிகள் -படம்: .எம்.சாம்ராஜ்
12 / 46
பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்கள் அடுத்தடுத்து கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானதால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் அவசர கூட்டத்தை இன்று நடத்தியது. - படம்:கோபு
13 / 46
வேலூர் விருதம்படடு பகுதி பாலாற்று பாலம் அருகே சாலையில் கொரோனாவை ஒழிப்போம்! தனித்திரு! விலகியிரு!! வீட்டிலிரு!!! என்ற வாசகத்துடன் காவல்துறை சார்பில் வரையப்பட்டுள்ள கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம். படம்: வி.எம்.மணிநாதன்.
14 / 46
15 / 46
ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏற்காடு மலைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள குரங்குகள் மலைப்பாதை சாலைகளில் மகிழ்ச்சியாக சுற்றித் திரிகிறது. படம்: எஸ். குரு பிரசாத்
16 / 46
17 / 46
18 / 46
கரோனா வைரஸ் தொற்று: வேலூர் கொணவட்டம் பகுதியில் சில நபர்களுக்கு கண்டறியப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் முழுவதும் தடுப்பு அமைக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கொணவட்டம் பகுதி அருகே உள்ள சேண்பாக்கத்தில் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தங்களின் தெருக்களில் முட்களை போட்டு வெளிநபர்கள் உள்ளே நுழையாமல் இருக்க தடுப்பு அமைத்து கொண்டனர். படம்: வி.எம்.மணிநாதன்.
19 / 46
20 / 46
21 / 46
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள ஹார்விபட்டி சந்தை! படம்: பரத்
22 / 46
23 / 46
24 / 46
ஊரடங்கு உத்தரவை மீறி உரிய ஆவணங்கள் இன்றி, திருச்சி புதுக்கோட்டை சாலை, சுப்ரமணியபுரம் பகுதியில் பயணித்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸார். -படம்: ஜி.ஞானவேல்முருகன்.
25 / 46
26 / 46
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சி பாலக்கரை மஹல்லா குடியிருப்புவாசிகள் 'வெளிநபர்கள் உள்ளே வர அனுமதியில்லை' என்கிற தகவல் பலகையை வாசலில் வைத்து தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர். -படம்: ஜி.ஞானவேல்முருகன்.
27 / 46
28 / 46
29 / 46
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் வசிக்கும் கொணவட்டம் பகுதியில் நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாமில் காய்ச்சல், இருமல், சளி ஆகிய அறிகுறிகளுடன் வரும் பொதுமக்களுக்கு ரேபிட் கிட் மூலம் ரத்த பரிசோதனை செய்தனர். - படம்: வி.எம்.மணிநாதன்.
30 / 46
31 / 46
32 / 46
33 / 46
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் வசிக்கும் கொணவட்டம் பகுதியில் நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாமில் காய்ச்சல், இருமல், சளி ஆகிய அறிகுறிகளுடன் வரும் பொதுமக்களுக்கு ரேபிட் கிட் மூலம் ரத்த பரிசோதனை செய்தனர். - படம்: வி.எம்.மணிநாதன்.
34 / 46
35 / 46
36 / 46
கோவை மாநகர காவல்துறை மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இணைந்து புலியகுளம் விநாயகர் கோவில் முன்பு குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்தினர்! - மனோகரன்
37 / 46
38 / 46
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாட்டின் சுகாதாரத்தை காக்க தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். சேலம் நான்கு ரோடு பகுதியில் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி சென்றது. அதனை சரி செய்யும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இவர்களின் அர்ப்பணிப்பான பணிக்கு பொது மக்கள் பெரும்பாலானோர் நன்றி தெரிவித்துச் சென்றனர். படங்கள்: எஸ். குரு பிரசாத்
39 / 46
40 / 46
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாட்டின் சுகாதாரத்தை காக்க தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். சேலம் நான்கு ரோடு பகுதியில் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி சென்றது. அதனை சரி செய்யும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இவர்களின் அர்ப்பணிப்பான பணிக்கு பொது மக்கள் பெரும்பாலானோர் நன்றி தெரிவித்துச் சென்றனர். படங்கள்: எஸ். குரு பிரசாத்
41 / 46
42 / 46
43 / 46
44 / 46
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து சென்னையிலிருந்து மதுரைக்கு படுக்கைகள் மற்றும் இதர பொருள்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தன. படுக்கைகளை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது! படம் எஸ். கிருஷ்ணமூர்த்தி
45 / 46
46 / 46
மதுரை நரிமேடு பகுதியில் இறைச்சி மற்றும் மீன்களை (சுமார் 450 கிலோ) விற்பனை செய்த வியாபாரிகள் மீது சுகாதாரத்துறை அதிகாரி விஜயகுமார் பறிமுதல் செய்தார்! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி

Recently Added

More From This Category

x