Published on : 20 Oct 2023 20:48 pm

பஸ் ஸ்டாண்ட் மக்கள் கூட்டம் முதல் ஆயுத பூஜை பூசணிக்காய்கள் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ அக்.20, 2023

Published on : 20 Oct 2023 20:48 pm

1 / 32
ஆயுதபூஜை தொடங்கும் நிலையில் பொள்ளாச்சி கரூர் நாமக்கல் ஆகிய ஊர்களில் இருந்து இறக்குமதியாகும் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த விலை மார்கெட்டிற்கு வந்திறங்கும் பூசணிக்காய். | படங்கள்: ஜெ மனோகரன்
2 / 32
3 / 32
பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வஉசி மைதானத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்
4 / 32
5 / 32
பால் லிட்டருக்கு 50 ரூபாய் ஆவின் நிறுவனம் வழங்க வேண்டும், பால் பதப்படுத்தும் குளிர் ஏற்றம் நிலையம் அமைத்த தர வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 32
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு குறைதீர்க்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
7 / 32
மதுரை 1986 ஆண்டு மாநகராட்சி மூலம் கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் தற்போது கரிமேடு காவல் நிலையம் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 32
9 / 32
10 / 32
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புரட்சிகர இளைஞர் முன்னணி இயக்கத்தின் சார்பாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் ராணுவ தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 32
தீபாவளி பண்டிகையை ஒட்டி குற்ற செயல்களை தடுப்பதற்காக மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 63 இருசக்கர வாகன சோர்ந்து வாகனங்களை காவல்துறை ஆணையாளர் லோகநாதன் தொடங்கி வைத்தார். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
12 / 32
13 / 32
ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி சேலம் புதிய பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக குவிந்தனர். இதனால் பயணிகள் கூட்டம் அலைமோதியது. | படங்கள்: எஸ்.குரு பிரசாத்
14 / 32
15 / 32
16 / 32
17 / 32
18 / 32
ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல கூடிய மக்கள் கூட்டம். | படங்கள்: ஜெ.மனோகரன்
19 / 32
20 / 32
ஆயுத பூஜையை முன்னிட்டு, பொள்ளாச்சி, கரூர், நாமக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்து குவிந்துள்ள பூசணிக்காய்கள். | படம்: ஜெ.மனோகரன்
21 / 32
22 / 32
புதுச்சேரி முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பிரமாண்ட அருங்காட்சியகம் திறப்பு விழா காணாமல் உள்ளதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. | படம்: எம்.சாம்ராஜ்
23 / 32
புதுச்சேரி லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மதிய உணவில் முட்டை வழங்கக்கோரியும், இலவச லேப்டாப், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பகோரி பள்ளி கல்வித்துறை அலுவலம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
24 / 32
25 / 32
புதுச்சேரியை சுற்றிபார்க்க வந்த தமிழக, அரசு பள்ளி மாணவர்கள் பிரஞ்ச் கால கட்டிடத்தில் இயங்கும் புதுச்சேரி சட்டசபையை கட்டம் முன்பு புகைப்படம் எடுத்துகொண்டனர். | படம்: சாம்ராஜ்
26 / 32
27 / 32
புதுச்சேரி முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் உள்ள சிற்பங்கள் மற்றும் புகைப்படங்களை பார்வையிட நாளுக்கு நாள் வெளிமாநிலங்களிலிருந்து அதிக வந்து பார்வையிட்டு வருகின்றனர். இதையடுத்து கைவினை கிராமத்தில் உள்ள கருங்கல்லில் பொறிக்கப்பட்ட சிற்பத்தை ஆர்வத்தோடு பார்வையிட்ட சுற்றுலாப்பயணிகள். | படம்: எம்.சாம்ராஜ்
28 / 32
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் நடுத்தெருவில் மூடப்பட்டுள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தை முதல்வர் ரங்கசாமி தலையிட்டு திறக்ககோரி சட்டசபை முன்பு முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள். | படம்.எம்.சாம்ராஜ்
29 / 32
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு அடிகளார் ஆன்மா சாந்தி அடைய வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வர் கோயில் தருமஸ்தாபனம் சார்பில் மோட்ச தீபம். ஏற்றபட்டது.| படம்: வி.எம்.மணிநாதன்.
30 / 32
வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட வள்ளலார் பேஸ்-2, பீடி தொழிலாளர் குடியிருப்பு, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கால்வாய் நீருடன் கசிந்து ஒடைபோல் ஓடும் குடிநீர். ஒருமாத காலத்திற்கு மேலாக இதுபோன்று கால்வாய் நீருடன் குடிநீர் ஓடுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இதனை சம்மந்தபட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா?. | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
31 / 32
32 / 32

Recently Added

More From This Category

x