காவிரி பிரச்சினைக்காக டெல்டாவில் பந்த் - தஞ்சாவூரில் தாக்கம் எப்படி? | போட்டோ ஸ்டோரி
Published on : 11 Oct 2023 19:47 pm
1 / 32
கர்நாடக அரசு உடனடியாக காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தியும், கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்புகள் மற்றும் பாஜகவைக் கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் புதன்கிழமை காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
2 / 32
இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றன. இந்தப் போராட்டத்தின்போது, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 / 32
தஞ்சாவூர் மாவட்டத்தில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் தஞ்சாவூர் தெற்கு வீதி, காந்திஜி சாலை, கீழவாசல் ஆகிய பகுதிகளில் கடைகள் திறக்கப்படாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
4 / 32
தஞ்சாவூரில் முக்கிய வணிக வீதிகளான அய்யங்கடை தெரு, பர்மா பஜார் சாலை, காமராஜர் காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுக் காணப்பட்டது.
5 / 32
தஞ்சாவூர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 / 32
தஞ்சாவூரின் பல்வேறு இடங்களில் எல்.ஐ.சி. உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
7 / 32
8 / 32
9 / 32
10 / 32
11 / 32
12 / 32
13 / 32
14 / 32
15 / 32
16 / 32
17 / 32
18 / 32
19 / 32
20 / 32
21 / 32
22 / 32
23 / 32
24 / 32
25 / 32
26 / 32
27 / 32
28 / 32
29 / 32
30 / 32
31 / 32
32 / 32