Published on : 29 Sep 2023 22:46 pm

காவிரி பிரச்சினையில் பந்த் - கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | போட்டோ ஸ்டோரி

Published on : 29 Sep 2023 22:46 pm

1 / 55
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதைக் கண்டித்து கர்நாடகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
2 / 55
மைசூருவில் பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ஆனால் உடுப்பு, தக்சின் கன்னடா பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
3 / 55
அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் வழக்கம்போல் இயங்குகின. தமிழகத்தை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் கன்னட அமைப்பினர், விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தினர்.
4 / 55
முழு அடைப்பு காரணமாக் தமிழக - கர்நாடகா இடையேயான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தமிழகத்துக்குச் செல்லும் வாகனங்கள் ஜூஜூவாடி, பண்ணாரி, குரங்கணி எனப் பல பகுதிகளிலும் நிறுத்தப்பட்டன.
5 / 55
இது ஒருபுறம் இருக்க, கர்நாடகாவில் இறந்துபோன நபரின் ஈமச்சடங்கில் பங்கேற்க முடியாமல், காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் தவித்த உறவினர்களை கர்நாடகாவுக்குள் செல்ல அனுமதித்தனர். புளிஞ்சூர் சோதனைச் சாவடி வரை தாளவாடி போலீஸார் அவர்களுடன் சென்று வழி அனுப்பிவைத்தனர்.
6 / 55
பெங்களூருவில் கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டனர். சாலை மறியல் நடத்தினர். இதுவரை போராட்டங்கள் அமைதியான முறையிலேயே நடைபெற்றன.
7 / 55
ஃப்ரீடம் பார்க் பகுதியில் மட்டுமே போராட்டங்கள் அனுமதிக்கப்பட்டதால் அத்தனை போராட்டக்காரர்களும் அங்கேயே குவிந்தனர். அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அங்கு வந்து போராடுபவர்கள் சில நிமிடங்களில் அப்புறப்படுத்தப்பட்டு பத்திரமாக வாகனங்களில் ஏற்றி குறிப்பிட்ட சில இடங்களில் காவலில் வைக்கப்பட்டனர். அனைவரும் மாலை 6 மணிக்கு மேல் விடுவிக்கப்பட்டனர்.
8 / 55
ஃப்ரீடம் பார்க் தவிர்த்து டவுன் ஹால், சேட்டிலைட் பஸ் நிலையம் காந்திநகரில் திறட்ட போராட்டக்காரர்கள் தடுத்து காவலில் எடுக்கப்பட்டனர். அதன்படி கர்நாடக ரக்‌ஷன வேதிகே அமைப்பில் ப்ரவீன் ஷெட்டி, ஆர்டி நகரில் போராட முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
9 / 55
முன்னதாக, நேற்று நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை வாரிய அவசரக் கூட்டத்தில், தமிழகத்துக்கு, 12,500 கன அடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம்" என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
10 / 55
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், "எங்களுடைய வாதம் ஒன்றுதான். அது காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தாலும் சரி, காவிரி ஒழுங்காற்றுக் குழுவாக இருந்தாலும் சரி, நாங்கள் கேட்பது தமிழகத்துக்கு 12500 கன அடி தண்ணீர் தேவை. ஆனால், காவிரி ஒழுங்காற்றுக் குழு 5000 கன அடி தண்ணீர் திறக்கத்தான் உத்தரவிட்டது. அந்த தண்ணீர் போதவில்லை. இதனால் பயிர்கள் காய்ந்து போகின்றன.
11 / 55
எனவே, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும், நாங்கள் 12,500 கன அடி தண்ணீர் திறக்கவே கோரிக்கை வைப்போம். இதுவரையில் காவிரியில் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஆனால், இந்த தண்ணீர் திறப்பு குறுவைக்கு போதுமானது என்று சொல்லமுடியாது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பரவாயில்லை அவ்வளவுதான்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது
12 / 55
காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின. அங்கு போக்குவரத்து, திரையரங்கம், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல செயல்பட்டன.
13 / 55
14 / 55
15 / 55
16 / 55
17 / 55
18 / 55
19 / 55
20 / 55
21 / 55
22 / 55
23 / 55
கன்னட அமைப்பினர் பெங்களூரு ரயில் நிலையம், விமான நிலையம் ஆகியவற்றில் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்த முயற்சித்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதால் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக குறைவான பயணிகளே முன்பதிவு செய்திருந்த‌தால் பெங்களூரு வழியாக செயல்படும் 44 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
24 / 55
கர்நாடக விவசாய சங்கத்தினர் மண்டியாவில் கே.ஆர்.சதுக்கம், மைசூருவில் அரண்மனை சாலை, அத்திப்பள்ளியில் சோதனை சாவடி ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தினர். மைசூரு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்திய‌ விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
25 / 55
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகவில் நடைபெற்ற முழு அடைப்பால் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் ஜூஜூவாடியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்
26 / 55
டெல்லியில் கடந்த 26-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில், தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அரசு அடுத்த 15 நாட்களுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரை செய்தது.
27 / 55
இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசில் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த 26-ம் தேதி ஒரு சில அமைப்பினர் மட்டும் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 / 55
இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை கர்நாடகா மாநிலம் முழுவதும் 1900 கன்னட அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுப்படுவதாக அறிவித்ததை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பணிகளுக்கு சென்ற பொதுமக்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் வியாழக்கிழமை மாலை ஓசூர் வழியாக தமிழகத்துக்கு திரும்பினர்.
29 / 55
அதேபோல் இரவு 8 மணி முதல் கர்நாடக மாநிலத்துக்கு பேருந்துகள் செல்லாமல் ஓசூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
30 / 55
இதனையடுத்து வெள்ளிக்கிழமை கர்நாடகவில் முழு அடைப்பையொட்டி ஓசூர் அடுத்த தமிழக எல்லையான ஜூஜூவாடியில் பாதுகாப்பு பணியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட போலீஸார் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை கர்நாடக மாநிலத்துக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஆனால், கர்நாடக மாநிலம் மற்றும் வேறு மாநில வாகனங்கள் செல்ல அனுமதி்க்கப்பட்டனர்.
31 / 55
மேலும், ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் ஜூஜூவாடி வரை பயணிகளை இறக்கிவிட்டு கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். கர்நாடக அரசு பேருந்துகள் 10 சதவீதம் மட்டும் இயக்கப்பட்டது.
32 / 55
கர்நாடக முழு அடைப்பால் ஓசூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளிலிருந்து தினமும் சுமார் 1000 டன் பூக்கள் விற்பனைக்கு செல்லாததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். அதேபோல் ஓசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் உதிரி பாக பொருட்களும் வாகனங்களில் கொண்டு செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டது.
33 / 55
34 / 55
35 / 55
36 / 55
37 / 55
முன்னதாக வாட்டாள் நாகராஜ், ''காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதால் கறுப்பு புர்கா அணிந்து வந்துள்ளேன். எங்களின் போராட்டத்தை எதிர்க்கும் சித்தராமையா, டி.கே.சிவகுமார், பரமேஷ்வர் ஆகியோருக்கு கன்னட மக்கள் பாடம் புகட்டுவார்கள். அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்'' என தெரிவித்தார்.
38 / 55
கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர்கள் நாராயண கவுடா, பிரவீன் ஷெட்டி, ராஜ்குமார் ரசிகர் மன்ற தலைவர் சாரா கோவிந்த் ஆகியோரின் தலைமையில் டவுன் ஹாலில் தொடங்கி சுதந்திர பூங்கா வரை பேரணியாக‌ சென்றனர்.
39 / 55
இந்த போராட்டத்துக்கு வாட்டாள் நாகராஜ் கறுப்பு புர்கா உடை அணிந்து வந்திருந்தார். அவர் தலைமையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் போலீஸார் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
40 / 55
பெங்களூருவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை மீறி கன்னட அமைப்பினர் நேற்று பிரதான சாலைகளில் கண்டன ஊர்வலம் நடத்தினர்.
41 / 55
42 / 55
43 / 55
44 / 55
45 / 55
46 / 55
47 / 55
48 / 55
49 / 55
50 / 55
51 / 55
52 / 55
53 / 55
54 / 55
55 / 55

Recently Added

More From This Category

x