Published on : 26 Sep 2023 18:38 pm

அண்ணாமலை நடைபயணம் முதல் வேலூர் சந்தை அவலம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ செப்.26, 2023

Published on : 26 Sep 2023 18:38 pm

1 / 33
கோவை காந்திபுரம்  பகுதியில் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. உடன், வானதி சீனுவாசன் எம்எல்ஏ.,  உள்ளிட்டோர்.| படம்: ஜெ.மனோகரன்
2 / 33
3 / 33
4 / 33
5 / 33
6 / 33
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக மருத்துவமனையில் காப்பீடு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை ரயில்வே நிலையம் எதிரே உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 33
கோவை புல்லுக்காடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கப்பல் வடிவில் காணப்படும் மீன் மார்க்கெட். | படம்: ஜெ.மனோகரன்
8 / 33
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு.. விவசாயிகளை குண்டு கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்.| படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
9 / 33
10 / 33
11 / 33
12 / 33
விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாகவும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என கூறி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயத்துக்கு திதி கொடுத்த நூதனமான போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். படம் - ஆர்.வெங்கடேஷ்
13 / 33
14 / 33
15 / 33
16 / 33
வேலூர் மாவட்டம் பொய்கை கிராமத்தில் உள்ள சந்தை சேரும் சகதியுமாக உள்ளது. இதனால், கால்நடைகளை வாங்கவும், விற்கவும் வரும் விவசாயிகள், வியாபாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சந்தைக்கு வரும் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதுடன், கால்நடைகளுக்கு நோய் தொற்றால் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். படம்: வி.எம்.மணிநாதன்.
17 / 33
18 / 33
19 / 33
20 / 33
21 / 33
22 / 33
மதுரை தோப்பூரில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை. படம் ;எஸ். கிருஷ்ணமூர்த்தி
23 / 33
24 / 33
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பிஜேபிக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றும் அதிமுகவுக்கு ஆதரவாகவும் ஓட்டப்பட்ட போஸ்டர்கள். படம்; எஸ் .கிருஷ்ணமூர்த்தி
25 / 33
26 / 33
வேலூர் சத்துவாச்சாரி பேஸ் -2 பகுதியில் அசாம் மாநில அரசு சார்பில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் புதியதாக அசாம் பவன் கட்டிடத்தை அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா திறந்து வைத்து பேசினார். படம்: வி.எம்.மணிநாதன்.
27 / 33
28 / 33
புதுச்சேரி மேட்டுப்பாளையம் சரகத்தில் தடை செய்யப்பட்ட 650கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் | படம்: எம்.சாம்ராஜ்
29 / 33
புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் வலையில் அதிக அளவில் சிக்கிய கிளிச்சை,வகை மீன்களை தரம் பிரிக்கும் மீனவர்கள் இந்த வகை மீன்கள் மீன் எண்ணை,மாத்திரை,கோழி தீவனத்திற்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
30 / 33
புதுச்சேரியில் குண்டும் குழியுமாக உள்ள வேல்ராம்பட்டு சாலையை சீரமைக்ககோரி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கல்லுாரி மாணவர்கள். | படங்கள்: சாம்ராஜ்
31 / 33
32 / 33
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக கட்சி விலகிக் கொண்டதை வரவேற்கும் விதமாக மதுரை ஆழ்வார் புறம் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய பிஜேபியினர். படம் : நா.தங்கரத்தினம்.
33 / 33

Recently Added

More From This Category

x