அண்ணா பிறந்தநாள் - அரசியல் கட்சியினர் மரியாதை | புகைப்படத் தொகுப்பு
Published on : 15 Sep 2023 18:02 pm
1 / 16
அண்ணா பிறந்தநாளையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
2 / 16
3 / 16
இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
4 / 16
5 / 16
வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் அண்ணா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அமைச்சர் துரைமுருகன். அருகில், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள். படங்கள்: வி.எம்.மணிநாதன்
6 / 16
7 / 16
வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தேமுதிகவினர். | படங்கள்: வி.எம்.மணிநாதன்
8 / 16
9 / 16
மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் பழனிவேல் தியாகராசன், மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, பொன்.முத்துராமலிங்கம். | படங்கள்: நா.தங்கரத்தினம்
10 / 16
11 / 16
அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை நெல்பேட்டை அருகே உள்ள அண்ணா சிலைக்கு தேசிய திராவிட முற்போக்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
12 / 16
13 / 16
அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நெல்பேட்டை அருகே உள்ள அவரது சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
14 / 16
15 / 16
16 / 16