Published on : 11 Sep 2023 20:15 pm

இமானுவேல் சேகரன் நினைவு தின அனுசரிப்பு முதல் சேலம் மழை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ செப்.11, 2023

Published on : 11 Sep 2023 20:15 pm

1 / 50
சனாதன தர்மத்தை ஒழிப்பதாக கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், அவரது கருத்துக்கு ஆதரவாக இருக்கும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவை பதவி விலகக்கோரியும், வேலூர் காகிதபட்டறை பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.‌ | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 50
3 / 50
4 / 50
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மதுரை மாநகர் மாவட்ட குழு சார்பாக நகர்ப்புற பெண்களுக்கான 100 நாள் வேலை திட்டத்தை மதுரை மாநகராட்சி அமல்படுத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 50
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாய்களை பிடிக்க மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ள மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
6 / 50
7 / 50
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த காட்பாடி அடுத்த மேல்பாடியை சேர்ந்த பரிமளா என்பவர் பட்டா மாறுதல் கேட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.| படம்: வி.எம்.மணிநாதன்.
8 / 50
மதுரை அழகர் இறங்கும் வைகை ஆற்றங்கரை பகுதியில் இளநீர் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
9 / 50
10 / 50
மதுரை இந்து முன்னணி கட்சி சார்பில் மதுரை எல்லீஸ் நகர் இந்து அறநிலைத்துறை அலுவலகம் முன்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
11 / 50
தமிழ் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக எண்ணும் எழுத்தும் திட்டத்தினை கைவிட வேண்டும் விடுமுறை நாட்களில் ஆசிரியருக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தக்கூடாது கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். | படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
12 / 50
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைகளில் பதாகைகளை பிடித்து கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்திய செவிலியர் கல்லுாரி மாணவிகள். | படம்: எம்.சாம்ராஜ்
13 / 50
புதுச்சேரியில் பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உருவப்படத்திற்க்கு மலர் துாவி அஞ்சலி செலுத்திய சபாநாயகர் செல்வம்,அமைச்சர்கள் லட்சுமிநாராயணன்,சாய்.சரவணக்குமார். | படம்: எம்.சாம்ராஜ்
14 / 50
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவின் பேரில் நகரப்பகுதியில் சட்டசபையை சுற்றி வைக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட டிஜிட்டல் விளம்பர பேனர்களை அப்புறப்படுத்தும் நகராட்சி துறையினர்.| படம்: எம்.சாம்ராஜ்
15 / 50
16 / 50
ஏற்காட்டில் பெய்து வரும் கன மழையால் கன்னங்குறிச்சி அடுத்துள்ள கற்பகம் தடுப்பணையில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதில் சிறுவர்கள் தங்களது பெற்றோர்களுடன் குளித்து மகிழ்ந்தனர். | படம்: எஸ்.குரு பிரசாத்.
17 / 50
18 / 50
19 / 50
சேலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மாலை பெய்த கடும் மழையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். | இடம்: சேலம், பிருந்தாவன் சாலை. | படம்: எஸ். குரு பிரசாத்
20 / 50
21 / 50
22 / 50
23 / 50
சென்னை பெரம்பூர் ரயில்வே சுரங்கபாதை பாலம் கீழ் வைக்கபட்டுள்ள செடி, பூ தொட்டிகள் சரியாக பராமரிப்பது இல்லை. செடிகள் காய்ந்திருக்கும் காட்சி. | படம்: ம.பிரபு
24 / 50
விநாயகர் சதுார்த்தியை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் மாட்டுக்காரன் சாவடி அருகே பெரிய அளவில் விநாயர் சிலைகள் தயாரிக்கப்பட்டு இறுதி கட்டமாக வண்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. | படம்: எம்.சாம்ராஜ்
25 / 50
26 / 50
27 / 50
28 / 50
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் புரசைவாக்கம் அருகே உள்ள கொசப்பேட்டையில் வீட்டில் வைத்து வழிப்படும் விநாயகர் சிலைகள் தயாரிக்கபட்டு கடைசிகட்ட டச்சப் பணிகள் நடக்கிறது | படம்: ம.பிரபு
29 / 50
30 / 50
31 / 50
மழைக்காலம் வருவதையொட்டி ஓட்டேரி பக்கிங்காம் கால்வாய்கள் தூர்வாரபட்டு வருகின்றது | படம்: ம.பிரபு
32 / 50
33 / 50
இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய புதிய தமிழகம் கிருஷ்ணசாமி. | படம்: பாலசந்தர்
34 / 50
35 / 50
இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் | படங்கள்: பாலசந்தர்
36 / 50
37 / 50
38 / 50
39 / 50
40 / 50
41 / 50
42 / 50
43 / 50
44 / 50
45 / 50
46 / 50
47 / 50
48 / 50
49 / 50
50 / 50

Recently Added

More From This Category

x