மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் முதல் வேலூர் மழை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ செப்.7, 2023
Published on : 07 Sep 2023 20:06 pm
1 / 21
வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸார் தடுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. | படங்கள்: எஸ்.குரு பிரசாத்
2 / 21
3 / 21
4 / 21
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற போராட்டம். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 21
மதுரை வடக்கமாசி வீதி இராமாயண சாவடி அருகே பானி பூரி தயாரிக்கும் வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சித்தார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 21
7 / 21
8 / 21
9 / 21
வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து பேசினார்.| படம்: வி.எம்.மணிநாதன்.
10 / 21
ராகுல் காந்தி நடைப்பயண ஓராண்டு நிறைவையொட்டி தஞ்சாவூரில் தெற்கு மாவட்டகாங்கிரஸ் கட்சியினர் நடைப் பயணம் சென்றனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
11 / 21
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை காவல்துறையினர் கைது செய்தனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
12 / 21
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை தேனி சாலை வரை நடைபெற்றது. | .படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
13 / 21
சேலம் டிஎம்எஸ் செட் பகுதி சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணி காரணமாக அவ்வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் அம்மாபேட்டை, சின்ன கடை வீதி வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் அம்மாபேட்டை , சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. | படங்கள்: எஸ். குரு பிரசாத்
14 / 21
15 / 21
16 / 21
17 / 21
சேலத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழையால் 5 ரோடு அஸ்தம்பட்டி செல்லும் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில் சென்ற வாகனங்கள். | படம்: எஸ். குரு பிரசாத்
18 / 21
19 / 21
மதுரை லேக் வியூ சாலையில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்களுக்கு மேல் சாலையில் பள்ளம் ஏற்படாமல் இருக்க போடப்பட்ட கான்கிரீட் தளம் முறையாக போடப்படாமல் சேதம் அடைந்து காணப்படுகிறது. | படம்: நா. தங்கரத்தினம்.
20 / 21
21 / 21