காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் முதல் மதுரை மெட்ரோ ரயில் மாதிரி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.25, 2023
Published on : 25 Aug 2023 19:44 pm
1 / 31
காலை உணவு திட்டம் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்பட்டது. சேலம் அருகே கன்னங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. | படங்கள்: எஸ்.குரு பிரசாத்
2 / 31
3 / 31
4 / 31
5 / 31
6 / 31
நொய்யல் பெருவிழாவையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில் ஆரத்தி எடுத்து வணங்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர். | படம்: ஜெ.மனோகரன்
7 / 31
8 / 31
38-வது தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அண்ணா நகரில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை வரை நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
9 / 31
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று தொடங்கப்பட்டது. மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேற்கு ஊராட்சி ஒன்றியம் சின்னப்பட்டி கிராமத்தில் அமைச்சர் மூர்த்தி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி உணவருந்தினார். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
10 / 31
11 / 31
12 / 31
13 / 31
14 / 31
15 / 31
மதுரை மாநகராட்சியில் திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான நிறுத்தங்கள் குறித்த மாதிரி வடிவம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.| படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
16 / 31
17 / 31
18 / 31
கோவை தெலுங்குபாளையத்தில் உள்ள நியாய விலை கடையில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக இடம்பிடித்து காத்திருந்த பொதுமக்கள். | படம்: ஜெ.மனோகரன்
19 / 31
20 / 31
புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ்போட்டியில் ஆர்வத்தோடு விளையாடும் பள்ளி மாணவ-மாணவிகள். | படம்: எம்.சாம்ராஜ்
21 / 31
22 / 31
போலி செல்போன்களை புதுச்சேரியில் விற்க முயன்ற வட மாநில கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை காண்பிக்கும் சீனியர் எஸ்.பி.சுவாதிசிங். அருகில் இன்ஸ்பெக்டர் நாகராஜ். | படம்: எம்.சாம்ராஜ்
23 / 31
தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் துரைமுருகன் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அருகில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்
24 / 31
25 / 31
26 / 31
27 / 31
மதுரை மாநகராட்சியில் மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
28 / 31
காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
29 / 31
30 / 31
31 / 31