Published on : 11 Aug 2023 19:30 pm

4 டன் காய்கறிகளால் அம்மனுக்கு அலங்காரம் முதல் அதிமுக மாநாடு ஏற்பாடு வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.11, 2023

Published on : 11 Aug 2023 19:30 pm

1 / 30
வேலூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதையில்லா தமிழ்நாடு குறித்த உறுதிமொழியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் ஏடிஎஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி திருநாவுக்கரசு, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஏற்றனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 30
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள முத்து மண்டபத்தை ஆய்வு செய்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் டாக்டர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். | படம்:வி.எம்.மணிநாதன்.
3 / 30
4 / 30
5 / 30
ஆடிமாதம் நான்காவது வெள்ளிக்கிழமையையொட்டி, காட்பாடி அடுத்த வஞ்சூர் பகுதியில் உள்ள ஸ்ரீ வஞ்சியம்மன் கோயிலில் வேர்க்கடலைகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
6 / 30
ஆடிமாதம் நான்காவது வெள்ளிக்கிழமையையொட்டி, வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
7 / 30
ஆடி வெள்ளியையொட்டி கோவை பெரிய கடை வீதியில் நான்கு டன் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்ட மாகாளியம்மன் | படங்கள்: ஜெ.மனோகரன்
8 / 30
9 / 30
10 / 30
11 / 30
ஆடி வெள்ளியையொட்டி ரூ 4 லட்சம் மதிப்பில் பண அலங்காரத்தில் கோவை எல்ஜி தோட்டம் முத்து மாரியம்மன் | படம்: ஜெ.மனோகரன்
12 / 30
ஆடி வெள்ளியையொட்டி கோவை ராஜ செட்டியார் வீதியில் சாமி மயில் தோகையால் அலங்காரம் செய்யப்பட்ட வன பத்ரகாளியம்மன். | படம்: ஜெ.மனோகரன்
13 / 30
ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுகவின் மாநில மாநாடு மதுரை ரிங் ரோட்டில் நடைபெற இருப்பதால் அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.| படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
14 / 30
15 / 30
16 / 30
17 / 30
137 வருடத்திற்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மதுரை ஏவி பாலம் தற்போது துணிகளால் மூடி பணிகள் நடைபெற்று வருகின்றன. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
18 / 30
19 / 30
20 / 30
போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட போக்குவரத்து துணை ஆணையாளர் குமார் உள்ளிட்டோர். | இடம்: மதுரை | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
21 / 30
மதுரை திருவிக மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜர் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.| படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
22 / 30
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு மதுரை புது ஜெயில் ரோட்டில் உள்ள கரிமேடு பகுதியில் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் 69வது ஆண்டு விழாவை முன்னிட்டு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
23 / 30
24 / 30
தஞ்சாவூர் ஆயுத படை மைதானத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தி்ற்காக அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட காவல்துறையினர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
25 / 30
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைியில் ஏழாவது ஊதிய உயர்வு, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பகோரி இரண்டு மணிநேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
26 / 30
புதுச்சேரி கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற பாஜக எம்எல்ஏ ஜான்குமாரை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யக்கோரி பிரச்சார பரப்புரையில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர். | படம்: எம்.சாம்ராஜ்
27 / 30
புதுச்சேரி சிபிஐ விசாரணை வழக்கிற்கு உட்பட்ட துணைவேந்தர் குர்மித்சிங்கை பணிநீ்க்கம் செய்யக்கோரி சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நடைபெற்ற சட்டசபையை முற்றுகை போராட்டம். | படம்: எம்.சாம்ராஜ்.
28 / 30
கடந்த ஓரு மாத காலமாக ரூ.200க்கு விற்ற தக்காளி புதுச்சேரியில் இன்று 2 கிலோ ரூ.100க்கு விற்பனையானதால் போட்டுக்கொண்டு வாங்கும் பொதுமக்கள். | இடம்: வழுதாவூர் சாலை, புதுச்சேரி. | படங்கள்: எம்.சாம்ராஜ்
29 / 30
30 / 30
ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையையொட்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.

Recently Added

More From This Category

x