Published on : 09 Aug 2023 18:34 pm

ஆடி கிருத்திகை வழிபாடு முதல் பழங்குடியினர் பேரணி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.9, 2023

Published on : 09 Aug 2023 18:34 pm

1 / 29
புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் ஏழாவது ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்பக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எம்.சாம்ராஜ்.
2 / 29
புதுச்சேரியில் செவிலியர்கள் போராட்டத்தால் புறநோயாளிகள் பிரிவில் காத்திருக்கும் சிகிச்சைக்கு வந்தவர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
3 / 29
4 / 29
புதுச்சேரி அரசு தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். அருகில் முதல்வர் ரங்கசாமி,சபாநாயகர் செல்வம்,அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், | படம்: எம்.சாம்ராஜ்
5 / 29
அகில உலக பழங்குடி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து பழங்குடியின மற்றும் நாடோடிகள் கூட்டமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது. பழங்குடி சமூகங்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முன்வைத்து மதுரை தமுக்கம் மைதானம் முதல் காந்தி அருங்காட்சியம் வரை பேரணி நடைபெற்றது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 29
7 / 29
8 / 29
9 / 29
10 / 29
தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சங்கம் சிஐடியு சார்பாக கடந்த 5 ஆண்டுகளாக சம்பளம் இன்றி கஷ்டப்படும் கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியருக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 29
ஒரு சில நாட்களில் சுதந்திர தினம் வர உள்ள நிலையில் மதுரை காந்தி மியூசியத்தில் தபால் துறை சார்பாக மிகக் குறைந்த விலையில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
12 / 29
பேருந்து வசதியை அதிகப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள். | படம்: ஆர்.வெங்கடேஷ்
13 / 29
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கல்லூரி சந்தையினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் திறந்து வைத்துப் பார்வையிட்டார். | படம்: ஆர்.வெங்கடேஷ்
14 / 29
ஆடி கிருத்திகையையொட்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
15 / 29
ஆடி கிருத்திகையையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோயிலுக்கு திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
16 / 29
17 / 29
18 / 29
ஆடி கிருத்திகையையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோயில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
19 / 29
வேலூரில் அனல் காற்றுடன் சுட்டெரித்த 100.9 டிகிரி வெயில் காரணமாக புதுவசூர் பகுதி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தென்பட்ட கானல் நீர். | படம்: வி.எம்.மணிநாதன்.
20 / 29
21 / 29
22 / 29
23 / 29
24 / 29
ஆடி மாதம் கிருத்திகையை முன்னிட்டு புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே உள்ள கௌசிக பால சுப்பிரமணியர் ஆயலத்தில் நீண்ட வரிகையில் நின்று வழிபட காத்திருந்த பக்தர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
25 / 29
26 / 29
27 / 29
சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோயில் ஆடிப்பண்டிகையையொட்டி குண்டம் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். | படங்கள்: எஸ்.குரு பிரசாத்
28 / 29
29 / 29

Recently Added

More From This Category

x