‘ஜெயிலர்’ வெற்றிக்காக மண் சோறு முதல் பரோட்டா பயிற்சி மையம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.8, 2023
Published on : 08 Aug 2023 19:55 pm
1 / 20
சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி எற்ற வேலூர் தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடி ரூபாய் 25-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை, அஞ்சல் கண்காணிப்பாளர் இராஜகோபாலன் துவக்கி வைத்தார். | படம்:வி.எம்.மணிநாதன்.
2 / 20
3 / 20
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெற்றி பெறுவதற்காக மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள வெயில் காலத்து அம்மன் கோவிலில் ரஜினி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.| படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 20
5 / 20
6 / 20
7 / 20
மதுரை மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தின் முகப்பு தோற்றம். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 20
இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை பிபி குளத்தை சேர்ந்து இப்ராஹிம் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் பரோட்டா எப்படி செய்வது என்ற பயிற்சி பட்டரை வைத்துள்ளார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
9 / 20
10 / 20
11 / 20
12 / 20
13 / 20
கனவுகள் அடங்கிய கல்லணை கால்வாய், உழவர்களின் கனவை நினைவாக்க நெல் என்ற பொன்னை விளைவிக்க தன்னுள் தண்ணீரை நிரப்பி கொண்டு கரை ததும்பி ஓடி வந்த கல்லணை கால்வாய்... இன்று தண்ணீர் வரத்து குறைந்து முள் செடிகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் உருட்டி வருகிறது. | படம்:ஆர்.வெங்கடேஷ்
14 / 20
நித்தம், நித்தம் உழைத்தால் தான் வயிறு நிரம்பும் என்றாலும், வயதோ, உழைப்புக்கு அசதியை தேடுகிறது. இளைப்பாறும் வயதில், உழைப்பை நம்பி சாலையோரம் சிறு கடை அமைத்து வெயிலின் களைப்பால் கண்ணயர்ந்து மூதாட்டி. | இடம்: திருவையாறு. | படம்: ஆர்.வெங்கடேஷ்
15 / 20
தஞ்சாவூர் மாட்டுமேஸ்த்ரி சந்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற மாநகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் முறையாக அளவீடு செய்தும், காலஅவகாசம் வழங்க கோரியும் வாக்கு வாதம் செய்தனர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
16 / 20
பரணி காவடியையொட்டி, வேலூர் அடுத்த புதுவசூரில் பகுதி தீர்த்தகிரி மலையில் உள்ள வடிவேல் சுப்பிரமணியர் கோயிலுக்கு காவடி எடுத்து படிகள் ஏறி நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
17 / 20
18 / 20
சுதந்திர தின விழாவையொட்டி சீத்தாபழத்தில் தேசிய தலைவர்கள் நினைவூட்டும் வகையில் போராட்ட வீரர்களின் படத்தை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஓவியர் ராஜா. | படம்: ஜெ.மனோகரன்
19 / 20
20 / 20
கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவராக ரேஸ்கோர்ஸ் அலுவலகத்தில் பொறுப்பேற்ற கே.பவானீஸ்வரி. | படம்: ஜெ.மனோகரன்.