Published on : 08 Aug 2023 08:16 am

புரட்சிப் பாடகர் கத்தர் இறுதி ஊர்வலம் - போட்டோ ஸ்டோரி

Published on : 08 Aug 2023 08:16 am

1 / 18
தெலங்கானா மாநில புரட்சி பாடகர் கத்தர் (76) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் திங்கள்கிழமை ஹைதராபாத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
2 / 18
மக்கள் பாடகர், புரட்சி பாடகர், எழுச்சி கவிஞர் என்றெல்லாம் மக்களால் புகழப்பட்டவர் கும்மடிவிட்டல் என்கிற கத்தர் (76). நுரையீரல் பிரச்சினையால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் காலமானார் | படங்கள்: ஜி.ராமகிருஷ்ணா
3 / 18
கத்தர் மறைவு செய்தி அறிந்து, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
4 / 18
மருத்துவமனையில் இருந்து கத்தரின் உடல் ஹைதராபாத் எல்.பி. ஸ்டேடியத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
5 / 18
தெலங்கானா, ஆந்திர மாநில அமைச்சர்கள், அரசியல், திரைத்துறை பிரபலங்கள், கவிஞர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
6 / 18
திங்கள்கிழமை மதியம் சுமார் 2 மணிக்கு இவரது உடல், அல்வாலில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
7 / 18
பின்னர், கத்தரின் மஹாபோதி பள்ளி வளாகத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18

Recently Added

More From This Category

x