Published on : 07 Aug 2023 18:58 pm

கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு முதல் ராகுல் ‘ரிட்டர்ன்ஸ்’ கொண்டாட்டம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.7, 2023

Published on : 07 Aug 2023 18:58 pm

1 / 47
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் ஏலம் விடப்பட்டன | படங்கள்: வி.எம்.மணிநாதன்
2 / 47
3 / 47
4 / 47
மணிப்பூர் வன்முறையை கண்டித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியினர். | படம்: வி.எம்.மணிநாதன்
5 / 47
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஏபிஜே அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வில்லியனூரில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையை காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். அருகில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி | படம்: எம்.சாம்ராஜ்
6 / 47
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஏபிஜே அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்ற வரவேற்பு விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. அருகில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி. | படம்: எம்.சாம்ராஜ்
7 / 47
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஏபிஜே அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் சுதந்திரப் போராட்ட வீரா் வேலு நாச்சியாரின் நாடகத்தில் நடித்தவருக்கு பாராட்டி வாள் பரிசளித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. அருகில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி. | படம்: எம்.சாம்ராஜ்
8 / 47
9 / 47
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஏபிஜே அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் சுதந்திரப் போராட்ட வீரா் வேலு நாச்சியாரின் நாடகம் நடைபெற்றது. | படங்கள்: எம்.சாம்ராஜ்
10 / 47
11 / 47
12 / 47
மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி தூய்மை தூய்மைப் பணியில் அவுட் சேசிங் விடுவதை கைவிட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கை முன்வைத்து சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
13 / 47
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை திமுக மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மேலமாசி இருந்து சிம்மக்கல் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
14 / 47
15 / 47
16 / 47
மதுரை தென்மண்டல ஐஜியாக நரேந்திர நாயர் ஐபிஎஸ் பொறுப்பேற்பு. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
17 / 47
மதுரை அழகர்கோவில் சர்வேயர் காலனி பகுதியில் பாதி மட்டும் போடப்பட்டுள்ள தார் சாலைகள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
18 / 47
19 / 47
மதுரை மாநகராட்சி பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.1.81 கோடி அளவில் நிதியுதவி அள்ளிக் கொடுத்த மதுரை அப்பள வியாபாரி ராஜேந்திரனை பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
20 / 47
21 / 47
22 / 47
23 / 47
24 / 47
திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றும் இன்றும் வெயில் வாட்டி வதைத்தது. அதிக வெப்பத்தினால் கேடிசி நகர் புறவழிச்சாலையினில் கானல் நீர் பிரதிபலிப்பு தெரிகிறது. | படம்: மு.லெட்சுமி அருண்
25 / 47
ஆடி கிருத்திகையையொட்டி கோயில்களுக்கு எடுத்துச்செல்ல வேலூர் அண்ணா பஜாரில் காவடிகள் மற்றும் பிரத்யேக ஆடைகளை வாங்கிய மக்கள் | படம்: வி.எம்.மணிநாதன்
26 / 47
கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி மேற்கொண்டனர். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. | படம்: ம.பிரபு
27 / 47
ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்ப பெற்றதையடுத்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் பட்டாசு வெடித்தும், பால் அபிஷேகம் செய்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய கட்சியினர். | படங்கள்: ம.பிரபு
28 / 47
29 / 47
30 / 47
31 / 47
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் தி.க. சார்பில் கி.வீரமணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். | படங்கள்: ம.பிரபு
32 / 47
33 / 47
34 / 47
தஞ்சாவூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. வெயில் படாமல் விளையாட, சாலையோரப் பணிகளுக்காக உள்ள ராட்சத கான்கிரீட் குழாய்களின் உள்ளே அமர்ந்து விளையாடும் சிறுமிகள். | இடம் - சூரக்கோட்டை | படம்: ஆர்.வெங்கடேஷ்
35 / 47
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் நிலையத் திட்டம் தொடக்க விழாவின்போது பேசிய திமுக எம்பியை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
36 / 47
37 / 47
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவையில் திமுகவினர் நடத்திய அமைதிப் பேரணி.
38 / 47
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்தில் 'நீலகிரி' எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து மாதவரம் நெடுஞ்சாலையை வந்தடைந்தது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. | படங்கள்: எம்.ஜோதி ராமலிங்கம்
39 / 47
40 / 47
41 / 47
42 / 47
43 / 47
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி மேற்கொண்டனர். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. | படங்கள்: ரகு
44 / 47
45 / 47
46 / 47
47 / 47

Recently Added

More From This Category

x