Published on : 05 Aug 2023 19:48 pm

மதுரையில் அண்ணாமலை முதல் தயாராகும் விநாயகர் சிலைகள் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.5, 2023

Published on : 05 Aug 2023 19:48 pm

1 / 31
புதுச்சேரிக்கு வருகை தடும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தை பார்வையிட உள்ளார். இதையடுத்து புதிய சாலைகள் போடப்பட்டு நடுவே உள்ள தடுப்புகளுக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.| படங்கள்: எம்.சாம்ராஜ்
2 / 31
3 / 31
புதுச்சேரிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருவதையடுத்து அதிக பொதுமக்கள் கூடும் கடற்கரை சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். | படம்: எம்.சாம்ராஜ்
4 / 31
புதுச்சேரிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆளுநர் மாளிகையில் தங்குவதையடுத்து ஓயிட் டவுண் பகுதியில் சாலைகளில் பொதுக்கள் உள்ளே வராத விதமாக தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். | படம்: எம்.சாம்ராஜ்
5 / 31
புதுச்சேரி அரசு மூலம் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக படகு குழாம் அமைய உள்ள புல்வார் பகுதியில் உள்ள பெரிய வாய்க்கால். | படம்: எம்.சாம்ராஜ்
6 / 31
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாறு பாலத்தின் கீழ் கொட்டி எரிக்கப்படும் குப்பைகளினால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூச்சு தினறலுக்கு உள்ளாகி சிரமத்திற்கு ஆளாகின்றனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
7 / 31
8 / 31
காட்பாடியில் சாலை ஓரங்களில் ஆங்காங்கே வாகனங்களில் விற்பனை குவிந்துள்ள டிராகன் பழங்கள். பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள டிராகன் பழங்கள் கிலோ ரூ.150 முதல ரூ.200-வரை விற்பனை செய்யப்படுகிறது. | படம்: வி.எம்.மணிநாதன்.
9 / 31
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒன்றரை மாதமே உள்ள நிலையில் காட்பாடி அடுத்த கிருஸ்டியான்பேட்டை பகுதியில் சாக்பீஸ் பவுடர், தேங்காய் நார்களை கொண்டு விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
10 / 31
11 / 31
12 / 31
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் இயக்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
13 / 31
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பந்த் காரணமாக இன்று காலை முதல் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மாநிலம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மாலை 4.30 மணி முதல் தமிழ்நாடு அரசு பேருந்துகள் ஆந்திராவுக்கு இயக்கப்பட்டது. | படம்:வி.எம்.மணிநாதன்.
14 / 31
மதுரை கே.கே.நகர் கிழக்கு 80 அடி சாலையில் பாதல சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலை நீண்ட நாள் ஆகியும் சரி செய்யப்படாத நிலையில் சாலையின் ஒரு பகுதியில் மட்டும் வாகனங்கள் சென்று வருவதால் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள். | படம்: நா. தங்கரத்தினம்.
15 / 31
கே.கே.நகர் வட்டார போக்குவரத்து ஆணையர் அலுவலம் அருகே உள்ள பாரதிதாசன் சாலையில் நடுவே மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. சாலையின் இரு ஓரமாக அமைக்க படாமல் சாலையின் நடுவே மழைநீர் கால்வாய் அமைக்கப்படுவதால் பழுது ஏற்பட்டாலோ அல்லது அடைப்பு ஏற்பட்டாலோ வரும் காலங்களில் சாலை முழுவதும் மூடும் சூழ்நிலை அவ்வப்போது ஏற்படும். எனவே சாலையின் ஓரம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைகின்றனர். | படம்: ம.பிரபு
16 / 31
17 / 31
18 / 31
பகல் முழுக்க அக்னி நட்சத்திரத்தை நினைவூட்டும் வகையில் விளாசுகிறது வெயில். ஆனாலும், மஞ்சள் வானில் உதிக்கும் அழகே தனி. சூரியனோடு இணைந்து, பறவைக் கூட்டங்கள் உணவு தேடி புறப்பட்ட அழகிய காட்சி. இடம்: சென்னை. | படங்கள்: ம.பிரபு
19 / 31
20 / 31
21 / 31
22 / 31
23 / 31
24 / 31
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் பல இடங்கள் அழகுப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தி.நகர் துரைசாமி சுரங்கபாதையின் இரு புறங்களிலும் உள்ள சுவர்களை அழகிய ஓவியங்கள் வரையபட்டு வருகிறது. | படம்: ம.பிரபு
25 / 31
26 / 31
27 / 31
28 / 31
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் 2வது நாளாக இன்று யாத்திரை நடத்தினர். காலையில் நரசிங்கம் கோயிலில் இருந்து ஒத்தக்கடை வரை பாத யாத்திரை நடத்தினார். | படங்கள்: ஜி.மூர்த்தி
29 / 31
30 / 31
31 / 31

Recently Added

More From This Category

x