Published on : 03 Aug 2023 18:51 pm

ஆடிப்பெருக்கு வழிபாடு முதல் ரூ.1 லட்சத்துக்கு விற்பனையான காளை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.3, 2023

Published on : 03 Aug 2023 18:51 pm

1 / 20
உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு அங்கன்வாடி ஊழியர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 20
ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாநாடு நடைபெற இருப்பதால் மதுரை சுற்றுச்சாலை உள்ள கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆர்வி உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் மனு அளித்தார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 20
ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுரை பழங்காநத்தம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வீட்டு பத்திரத்தை பதிய குவிந்த மக்கள் கூட்டம். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 20
இரண்டு மாதங்களுக்கு மேலாக மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை கண்டித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 20
6 / 20
7 / 20
வேலூர் மாவட்டம் லத்தேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினார். அருகில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்.
8 / 20
புதுச்சேரி நெல்லித்தொப்பு சாரம் பகுதியில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில செயலாளர் அன்பழகன் அருகில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரன். | படம்: எம்.சாம்ராஜ்
9 / 20
புதுச்சேரியில் 11-வது சர்வதேச ஆவணப்பட, குறும்படம் குறித்த புத்தகத்தை வெளியிட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லொரன் ஜலிகு, தமிழ்நாடு திரை இயக்கத்தின் நிர்வாகி தமிழ்மணி. | படம்: எம்.சாம்ராஜ்
10 / 20
புதுச்சேரி புதுப்பிக்கப்பட்ட கல்யாண் ஜீவல்லர்ஸ் ஷோரூம் திறப்பு விழாவில் வைர நகைகள் பிரிவை பார்வையிட்ட விளம்பர துாதர் நடிகர் பிரபு நடிகை ரெஜினா கசாண்ட்ரா. | படம்: எம்.சாம்ராஜ்
11 / 20
12 / 20
13 / 20
ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பேரூர் நொய்யலாற்று படித்துறையில் சாதம், பழங்கள் வைத்து வழிபாடு நடத்திய பொதுமக்கள். | படம்: ஜெ.மனோகரன்.
14 / 20
15 / 20
16 / 20
ஆடி பெருக்கு முன்னிட்டு சென்னை நகரில் வாழும் கிராமத்தினர் சிலர் தங்களின் வழக்கம் படி பெரியவர்கள் முன்னிலையில் கோயில்களின் மாங்கல்யம் மாற்றி கொண்டனர். | இடம்: சைதாப்பேட்டை கடும்பாடியம்மன் கோயில். | படம்: ம.பிரபு
17 / 20
18 / 20
சேலத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நீர் நிலைகளில் குலதெய்வ பூஜை பொருட்களை புனித நீருற்றி கழுவி வழிபாடு | படம்: ஸ்ரீனிவாசன்.
19 / 20
பழநி தொப்பம்பட்டியில் களைக்கட்டிய மாட்டுச்சந்தை காங்கயம் காளை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை. | படம்: நல்லசிவன்
20 / 20

Recently Added

More From This Category

x