Published on : 02 Aug 2023 19:16 pm

தஞ்சை விவசாயி வேதனை முதல் புதுச்சேரி கட்டிடம் அகற்றம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.2, 2023

Published on : 02 Aug 2023 19:16 pm

1 / 25
வேலூர் மாவட்டம் சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 25
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் மனுவை பெற்று குறைகளை கேட்ட ஏடிஎஸ்பி பாஸ்கரன். | படம்:வி.எம்.மணிநாதன்.
3 / 25
ஆடிப்பெருக்கு முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்து குறைந்ததால் கூட்டம் இன்றி காணப்படுகிறது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 25
5 / 25
மதுரை வைகை ஆற்றில் செல்லூர் பகுதியில் அகற்றப்படாமல் இருக்கும் ஆகாயத்தாமரைகள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 25
7 / 25
தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் அணைக்கட்டிலிருந்து பிரியும் ஐம்புகாவிரி பாசன வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால், கடந்த 10 நாட்களாகத் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால், குறுவை நெற் பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகிறது. மேலும், வயல்கள் தண்ணீர் இல்லாமல் பாலம் பாலமாக வெடித்து இருப்பதை வேதனையாகப் பார்க்கும் விவசாயி. | இடம்: மணல்மேடு. | படம்:ஆர்.வெங்கடேஷ்
8 / 25
9 / 25
10 / 25
11 / 25
12 / 25
13 / 25
தஞ்சாவூர் கூட்டுறவு காலணியிலுள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கற்றல் திறன் மேம்பாட்டுச் சிறப்புப் பயிற்சி மற்றும் ஆங்கில மொழி மேம்பாடு திட்டம் தொடங்கப்பட்டன. | படம்: ஆர்.வெங்கடேஷ்
14 / 25
புதுச்சேரி காமாட்சியம்மன் ஆலய சொத்தை போலி பத்திரபதிவு செய்தவர்களை கைது செய்யக்கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர். | படம்: எம்.சாம்ராஜ்
15 / 25
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கிய முதல்வர் ரங்கசாமி அருகில் சபாநாயகர் செல்வம். | படம்: சாம்ராஜ்.
16 / 25
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 4.31 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வாங்க சட்டசபை வளாகத்தில் வரிசையாக வந்திருந்த மாணவ-மாணவியர். | படம்: சாம்ராஜ்
17 / 25
புதுச்சேரி பெரிய மார்கெட்டில் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கிலோ தக்காளியின் விலை 130 விற்பனையாகின. ஆனால் தக்காளியை வாங்க ஆட்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்ட அங்காடி. | படம்: சாம்ராஜ்
18 / 25
19 / 25
புதுச்சேரி குடிசை மாற்றுவாரியம் சார்பில் குமரகுருபள்ளத்தில் சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை போக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான வேலை நடைபெற்று வருகிறது.| படங்கள்.எம்.சாம்ராஜ்
20 / 25
21 / 25
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோவை டாடாபாத் மைதானத்தில் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிபிஐ (ம ) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். | படம்: ஜெ.மனோகரன்
22 / 25
ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்கும் மக்கள் கூட்டம். | படம்: ஜெ.மனோகரன்
23 / 25
24 / 25
25 / 25
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி சுதானாநகர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டி பணிகள் முடித்து பத்து வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் இன்னும் பொதுமக்கள் பயண்பாட்டுக்கு வரவில்லை. | படம்:எம்.சாம்ராஜ்

Recently Added

More From This Category

x